வடகிழக்கு மாநிலங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதி குறித்த தகவல்கள்
- வடகிழக்கு பகுதிக்கு அதிக நிதி வளங்கள் சென்று சேர்வதை உறுதி செய்யும் வகையில், மத்திய துறை திட்டங்கள் மற்றும் மத்திய அரசு ஆதரவு பெற்ற திட்டங்களுக்கான தங்களது மொத்த பட்ஜெட்டில் 10 சதவீதத்தை வடகிழக்கு பிராந்தியத்திற்கு மத்திய அமைச்சகங்கள் மற்றும் துறைகள் ஒதுக்குகின்றன.
- பட்ஜெட் ஆவணங்களில் உள்ள தகவல்களின் படி, 2014-15 முதல் 2020-21 வரையிலான மத்திய அமைச்சகங்கள் மற்றும் துறைகளின் வடகிழக்கு பிராந்தியத்திற்கான செலவு ரூ 2,65,766.67 கோடி ஆகும்.
- அசாமிற்காக மொத்தம் 101 சிறப்பு தொகுப்புகளுக்கு 2003 முதல் 2020 வரை ஒப்புதல் அளிக்கப்பட்டு ரூ 979.38 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. கடந்த 2 வருடங்களில் மட்டும் ரூ 99.24 கோடி ஒதுக்கப்படுள்ளது.
- அருணாச்சலப் பிரதேசம், அசாம், மணிப்பூர், மேகாலயா, மிசோராம், நாகாலாந்து, சிக்கிம் மற்றும் திரிபுரா ஆகிய வடகிழக்கு மாநிலங்களில் உள்ள நிறுவனங்கள்/தனிநபர்களுக்கு வடகிழக்கு வளர்ச்சி நிதி நிறுவனத்தால் 2019-20-ம் ஆண்டு ரூ 319.43 கோடியும், 2020-21-ம் ஆண்டு ரூ 311.29 கோடியும் கடனாக வழங்கப்பட்டுள்ளது.
- வடகிழக்கு மாநிலங்களில் 21 ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் இதுவரை முதலீடு செய்துள்ளன. இம்மாநிலங்களில் முதலீடு செய்யும் ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு வடகிழக்கு நிறுவன நிதியில் இருந்து நிதியுதவி வழங்கப்படுகிறது. 21 நிறுவனங்களுக்கு இதுவரை நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது.
- மேலும், 2017-18 முதல் 2021-22 வரை வடகிழக்கு மாநிலங்களில் 3875 வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன.
- நவம்பர் 29-ந் தேதி நடந்த மாநில அளவிலான திட்ட அனுமதி குழுவில் ராஜஸ்தானுக்கு ரூ.1,816 கோடி மதிப்பிலான குடிநீர் விநியோக திட்டங்களுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
- இந்த திட்டத்தின் மூலம் மாநிலத்தின் 20 மாவட்டங்களைச் சேர்ந்த 2,348 கிராமங்களுக்கு குடிநீர் இணைப்பு வழங்கப்படும். ஊரகப்பகுதிகளில் உள்ள 3.8 லட்சம் வீடுகளுக்கு குழாய் மூலம் குடிநீர் வழங்கப்படும்.
- நீர் மாசால் பாதிக்கப்பட்டுள்ள 16 மாவட்டங்களுக்கு தரமான குடிநீர் வழங்க முன்னுரிமை அடிப்படையில் சிறப்பு கவனம் செலுத்தப்படும்.
- ஜல்ஜீவன் இயக்கத்தின் கீழ் ஊரகப்பகுதி குடிநீர் திட்டங்களுக்கு மாநில அளவிலான திட்ட அனுமதி குழுக்கள் அமைக்கப்பட்டு ஒப்புதல் வழங்கப்பட்டு வருகிறது.
- கிராமப்பகுதிகளில் உள்ள ஒவ்வொரு வீட்டிற்கும் குழாய் மூலம் சுத்தமான தண்ணீரை வழங்க வேண்டும் என்ற பிரதமர் திரு. நரேந்திர மோடியின் தொலைநோக்கை உறுதி செய்யும் வகையில், ராஜஸ்தானுக்கு 2021-22- ஆண்டில் ரூ.10,180.50 கோடி மானியத்துக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
- பெண்கள் மற்றும் பெண் குழந்தைகள் நீண்ட தூரம் நடந்து சென்று தண்ணீர் கொண்டு வரும் அவல நிலையைப் போக்க மத்திய அரசு, மாநிலத்தில் ஜல்ஜீவன் இயக்கத்தை அமல்படுத்துவதற்காக ரூ.2,522.03 கோடியை கடந்த ஆண்டு ஒதுக்கியது.
- இந்த ஆண்டு மத்திய அமைச்சர் திரு.கஜேந்திர சிங் ஷெகாவத் மத்திய ஒதுக்கீட்டை நான்கு மடங்காக அதிகரித்துள்ளார். 2024-ம் ஆண்டுக்குள் ஒவ்வொரு கிராமப்புற வீட்டிலும் குழாய் மூலம் குடிநீர் வழங்க முழு உதவி வழங்கப்படும்
- 2019- ஆம் ஆண்டில் இத்திட்டம் தொடங்கப்பட்ட போது 3.23 கோடி (17%) குழாய் இணைப்புகள் மட்டுமே வழங்கப்பட்டிருந்தன. கடந்த 27 மாதங்களில் கொவிட் பெருந்தொற்று, ஊரடங்கு இடையூறுகளுக்கிடையிலும் ஜல்ஜீவன் இயக்கம் வேகமாக செயல்படுத்தப்பட்டு 5.35 கோடி ஊரகப்பகுதி வீடுகளுக்கு குடிநீர் குழாய் இணைப்பு தரப்பட்டுள்ளது.
- தற்போது நாடு முழுவதும் 8.59 கோடி (44.6%) இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. கோவா, தெலங்கானா. அரியானா மாநிலங்கள் மற்றும் அந்தமான் நிக்கோபார் தீவுகள், புதுச்சேரி, தாத்ரா நாகர்ஹவேலி, டையூ அண்ட் டாமன் யூனியன் பிரதேசங்களில் 100 சதவீத குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. தற்போது 83 மாவட்டங்களில் 1.25 லட்சத்திற்கு மேற்பட்ட கிராமங்களில் ஒவ்வொரு வீட்டிலும் குழாய் மூலம் குடிநீர் பெறப்பட்டு வருகிறது.
நடப்பு நிதியாண்டின் 2வது காலாண்டில் இந்திய பொருளாதாரம் 8.4% வளர்ச்சி - ஒன்றிய அரசு அறிவிப்பு
- 2021-2022 நிதியாண்டில் ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான காலாண்டில் ஜிடிபி எனப்படும் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதம் 8.4%ஆக அதிகரித்துள்ளதாக ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது.
- நடப்பு நிதியாண்டின் ஜூன் காலாண்டில் 20.1 என்ற அபரிவிதிமான வளர்ச்சி இல்லாவிட்டாலும் தொடர்ந்து 4வது காலாண்டாக ஒட்டு மொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதம் வளர்ச்சி பாதையில் சென்று வருகிறது.
- விவசாயம், சுரங்கம், உற்பத்தி, மின்சாரம் மற்றும் நீர் வழங்கல், போக்குவரத்து, தகவல் தொடர்பு மற்றும் ரியல் எஸ்டேட் போன்ற முக்கிய துறைகளில் காணப்பட்ட நேர்மறை வளர்ச்சியே ஜிடிபி உயர்வுக்கு காரணம் என்று கூறப்படுகிறது.
இந்திய கடற்படையின் புதிய தளபதியாக அட்மிரல் ஆர். ஹரி குமார் பொறுப்பேற்பு
- 41 வருடங்களாக கடற்படை சேவையில் இருந்த அட்மிரல் கரம்பீர் சிங் கடற்படை தளபதியாக பதவிக்காலம் முடிவுறுவதை அடுத்து துணை அட்மிரல் ஹரிகுமார் புதிய தளபதியாக நியமனம் செய்யப்பட்டார்.
- கடற்படை தளபதியாக பொறுப்பேற்கும் முன்பு மேற்கு கடற்படைப் பிராந்திய தளபதியாக ஹரி குமார் பணியாற்றி வந்தார்.
- இவர் இந்திய கடற்படையின் 25-வது தளபதி ஆவார். அமெரிக்காவில் உள்ள நேவல் வார் கல்லூரி, மத்தியபிரதேசத்தில் உள்ள ஆர்மி வார் கல்லூரி, பிரிட்டனில் உள்ள ராயல் காலேஜ் ஆஃப் டிபன்ஸ் ஸ்டடீஸ் ஆகியவற்றில் பல்வேறு படிப்புகளை முடித்துள்ளார் ஹரி குமார்.
இந்திய ராணுவத்தில் சேர்க்கப்பட்டது இஸ்ரேலின் ஹெரோன் அதிநவீன உளவு விமானம்
- இந்திய ராணுவத்தில் இஸ்ரேலின் ஹெரோன் உளவு விமானங்கள் ஏற்கெனவே பயன்பாட்டில் உள்ளன. இவை லடாக் எல்லையில் உளவு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளன.
- இந்த சூழலில் மேம்படுத்தப்பட்ட அதிநவீன ஹெரோன் உளவு விமானங்களை இஸ்ரேலிடம் இருந்து மத்திய பாதுகாப்பு அமைச்சகம் வாங்கியுள்ளது.
- இதன்படி 4 ஹெரோன்கள் இந்திய ராணுவத்தில் சேர்க்கப்பட்டுள்ளன. சீனராணுவ அச்சுறுத்தல் அதிகரித்து வரும் நிலையில் இவை லடாக் எல்லையில் பறக்க விடப்படவுள்ளன.
- நவீன ஹெரோன் உளவு விமானங்கள் 35,000 அடி உயரத்தில் தொடர்ந்து 52 மணி நேரம் பறக்கும் தன்மை கொண்டவை. தற்போது இவை உளவு பணிக்காக மட்டுமே பயன்படுத்தப்பட உள்ளன.
பார்படோஸ் - புதிய குடியரசு நாடு உதயம்
- கரீபியன் கடலில் மேற்கு இந்தியத் தீவுப் பிராந்தியத்தில் அமைந்துள்ள பார்படோஸ், பிரிட்டன் அரசியின் ஆளுகையிலிருந்து விலகி புதிய குடியரசு நாடாக அறிவித்துள்ளது. இதன் மூலம், உலகின் மிகச் சமீபத்திய குடியரசு நாடாக பார்படோஸ் ஆகியுள்ளது.
- குடியரசு நாடாக மாறினாலும், காமன்வெல்த் அமைப்பில் பார்படோஸ் தொடர்ந்து அங்கம் வகிக்கும். அந்தத் தீவு மக்கள்தொகையில் 91 சதவீதம் கருப்பினத்தவர்கள் ஆவர். வெள்ளை இனத்தவர்கள் 4 சதவீதமும் இந்தியர்கள் 1 சதவீதமும் அங்கம் வகிக்கின்றனர்.
முதலமைச்சரின் சாலை மேம்பாட்டு திட்டத்திற்கு அனுமதி
- மாவட்ட தலைமையிடங்கள் மற்றும் தாலுக்கா தலைமையிடங்களை இணைக்கும் விதமாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
- இதற்காக 2 ஆயிரத்து 200 கிலோ மீட்டர் மாநில நெடுஞ்சாலைகள் நான்கு வழிச்சாலைகளாக மாற்றும் முதலமைச்சரின் சாலை மேம்பாட்டு திட்டத்திற்கு தமிழ்நாடு அரசு அனுமதி வழங்கி வழங்கப்பட்டுள்ளது.
- இதேபோன்று 6 ஆயிரத்து 700 கிலோமீட்டர் நீளமுள்ள சாலைகள், இரண்டு வழிச்சாலைகளாக மாற்றப்பட்டு அகலப்படுத்தப்படும் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- விரிவாக்கம் செய்ய திட்டமிட்ட சாலைகளில் ஏற்கனவே தரைப்பாலம் இருந்தால் அவைகள் உயர்மட்ட பாலமாக மாற்றப்படும் எனவும் அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது