Type Here to Get Search Results !

TNPSC 30th DECEMBER 2021 CURRENT AFFAIRS TNPSC SHOUTERS TAMIL PDF

 

நாகாலாந்தில் மேலும் 6 மாதங்களுக்கு ஆயுத படைகள் சிறப்பு அதிகார சட்டம் நீட்டிப்பு
  • நாகாலாந்தில் ஆயுத படைகள் சிறப்பு அதிகார சட்டம், மேலும் 6 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. கடந்த 1963-ம் ஆண்டு டிசம்பரில் நாகாலாந்து மாநிலம் உருவாக்கப்பட்டது.
  • அதற்கு முன்பு 1958-ம் ஆண்டு முதலே நாகாலாந்து பகுதியில் ஆயுத படைகள் சிறப்புச் சட்டம் (ஏஎப்எஸ்பிஏ) அமலில் உள்ளது. இதன்படி, வாரன்ட் இன்றி யாரையும் கைது செய்ய முடியும். அனுமதியின்றி சோதனை நடத்த முடியும். துப்பாக்கிச்சூடு நடத்த முடியும். 
உத்தராகண்டில் ரூ.17,500 கோடியில் புதிய திட்டங்கள்- பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார்
  • உத்தராகண்ட் சட்டப்பேரவைக்கு அடுத்த ஆண்டு தேர்தல் நடக்க உள்ளது. இதனால், மாநிலத்தில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை மத்திய, மாநில அரசுகள் அறிவித்து வருகின்றன. 
  • அந்த வகையில், உத்தராகண்டில் ரூ.17,500 கோடி மதிப்பிலான புதிய திட்டங்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார்.
  • சார்தாம் பிராந்தியத்தில் உள்ள சாலையை விரிவுபடுத்துதல், நாகினா - காஷிபூர் நெடுஞ்சாலை, நமாமி கங்கை திட்டத்தின்கீழ் நீர்மின் நிலையம் மற்றும் கழிவுநீர் கால்வாய் அமைத்தல், குமோன் பகுதியில் எய்ம்ஸ், செயற்கைக்கோள் மையம் அமைத்தல், மொராதாபாத் - காஷிபூர் நாற்கர சாலை ஆகிய திட்டங்களுக்கு பிரதமர் அடிக்கல் நாட்டினார்.
ரஃபேலை எதிா்கொள்ள சீனாவிடமிருந்து 25 நவீன விமானங்கள் வாங்கியது பாகிஸ்தான்
  • பிரான்ஸிடமிருந்து அதிநவீனமான ரஃபேல் விமானங்களை இந்தியா வாங்கி வருகிறது. அதனை எதிா்கொள்ளும் வகையில் பாகிஸ்தான் விமானப் படை பலத்தைப் பெருக்கிக் கொள்வதற்காக, சீனாவிடமிருந்து 25 ஜே-10சி வகை விமானங்கள் வாங்கப்பட்டுள்ளன.
  • அந்த 25 விமானங்களும் அடுத்த ஆண்டு மாா்ச் 23-ஆம் தேதி நடைபெறவுள்ள தேசிய தின அணிவகுப்பில் பங்கேற்கும். பாகிஸ்தான் விமானப் படையில் அமெரிக்காவின் சிறந்த போா் விமானங்களான எஃப்-16 வகை விமானங்கள் உள்ளன. 
மாநில நிதி அமைச்சர்களுடன் பட்ஜெட்டுக்கு முந்தைய ஆலோசனையை மத்திய நிதி அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் நடத்தினார்
  • 2022-23 மத்திய பட்ஜெட்டுக்கு முன்னதாக மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் (சட்டமன்றத்துடன் கூடிய) நிதி அமைச்சர்களுடன் நடைபெற்ற ஆலோசனைக்கு மத்திய நிதி மற்றும் பெருநிறுவன விவகாரங்களுக்கான அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் தலைமை தாங்கினார்.
  • மத்திய நிதி இணை அமைச்சர், முதல்வர்கள், துணை முதல்வர்கள், மாநில நிதி அமைச்சர்கள், அமைச்சர்கள் மற்றும் மத்திய அரசின் மூத்த அதிகாரிகள் கூட்டத்தில் கலந்து கொண்டனர். அனைத்து பங்கேற்பாளர்களையும் வரவேற்ற மத்திய நிதி செயலாளர், இந்த ஆலோசனைக் கூட்டத்தின் முக்கியத்துவத்தை விளக்கினார்.
  • ஜிஎஸ்டி இழப்பீட்டை வரும் 2 ஆண்டுகளுக்கு நீட்டிக்க வேண்டும் என்று டெல்லியில் நடந்த கூட்டத்தில் மத்திய அரசுக்கு தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கோரிக்கை விடுத்தார்.
  • மேலும், பல்வேறு மத்திய, மாநில அரசு திட்டங்களுக்கான பங்களிப்பு நிதியில் ரூ.17 ஆயிரம் கோடி நிலுவைத் தொகையை தமிழக அரசுக்கு மத்திய அரசு வழங்க வேண்டிஉள்ளது. 
  • இதுதவிர, 14-வது நிதி ஆணையம் பரிந்துரைத்த, உள்ளாட்சி அமைப்புகளுக்கான செயல்பாட்டு மானியம் ரூ.2,029.22 கோடி மற்றும் அடிப்படை மானியம் ரூ.548.76கோடி நிலுவையில் உள்ளது. இந்த தொகைகளை மத்திய பட்ஜெட்டில் அறிவித்து வழங்க வேண்டும்.
  • 2016-ம் ஆண்டு தணிக்கை அறிக்கையின்படி, தமிழக அரசுக்கு ரூ.4,500கோடி நிலுவைத் தொகை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
  • தமிழகத்துக்கு மத்திய அரசு வழங்க வேண்டிய ஜிஎஸ்டி நிலுவை, இதரதிட்டங்களுக்கான நிலுவை, உள்ளாட்சி அமைப்புகளுக்கான மானியம்உள்ளிட்ட ரூ.40,803 கோடியை விரைவில் விடுவிக்க வேண்டும்.
ஆர்டர் ஆப் கனடா 2021
  • வட அமெரிக்க நாடான கனடாவில் பல்வேறு துறைகளில் சிறப்பான சேவை புரிந்தவர்களுக்கு 'ஆர்டர் ஆப் கனடா' என்ற விருது ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது.
  • இந்த ஆண்டுக்கான விருது பெறுவதற்க 135 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதில் மூன்று இந்தியர்களும் இடம் பெற்றுள்ளனர். சர்வதேச அளவில் பிரலமான விஞ்ஞானி டாக்டர் வைகுண்டம் அய்யர் லட்சுமணன், ரியல் எஸ்டேட் தொழிலதிபர் பாப் சில் தில்லான் எனப்படும் நவ்ஜீத் சிங் தில்லான், குழந்தைகள் மருத்துவ சிகிச்சை நிபுணர் டாக்டர் பிரதீப் மெர்ச்சன்ட் ஆகிய மூன்று இந்தியர்கள் இந்த உயரிய விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
தேங்காய் வளர்ச்சி வாரியத்தின் துணைத் தலைவராக திரு கே.நாராயணன் மாஸ்டர் நியமனம்
  • தென்னை வளர்ப்பு மற்றும் அது தொடர்பான துறைகளில் தீவிரமாக ஈடுபாடு கொண்டிருந்த கேரளாவைச் சேர்ந்த விவசாயப் பிரதிநிதியான திரு கே நாராயணன் மாஸ்டர். தென்னை வளர்ப்பு வாரியத்தின் துணைத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். 
  • 2020-ஆம் ஆண்டில் ஆகஸ்ட் மாதத்திலிருந்து வாரியத்தின் உறுப்பினராக அவர் பணியாற்றினார். மலப்புரம் மாவட்டம் ஒழுர் ஏஎம்யுபி பள்ளியின் தலைமை ஆசிரியராகவும் அவர் பணியாற்றினார்
நுகர்வோர் பாதுகாப்புக்கான (மாவட்ட ஆணையம், மாநில ஆணையம் மற்றும் தேசிய ஆணையத்தின் அதிகார வரம்பு) விதிகள், 2021-ஐ மத்திய அரசு வெளியிட்டது
  • நுகர்வோர் பாதுகாப்பு சட்டம், 2019-ன் விதிகள் வழங்கியுள்ள அதிகாரங்களை பயன்படுத்தி நுகர்வோர் பாதுகாப்புக்கான (மாவட்ட ஆணையம், மாநில ஆணையம் மற்றும் தேசிய ஆணையத்தின் அதிகார வரம்பு) விதிகள், 2021-ஐ மத்திய அரசு வெளியிட்டுள்ளது.
  • நுகர்வோர் தகராறுகளைத் தீர்ப்பதற்காக மாவட்ட ஆணையங்கள், மாநில ஆணையங்கள் மற்றும் தேசிய ஆணையம் ஆகிய மூன்றடுக்கு முறையை நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம், 2019 செயல்படுத்துகிறது. நுகர்வோர் ஆணையத்தின் ஒவ்வொரு அடுக்கின் அதிகார வரம்பும் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
  • தற்போதுள்ள சட்ட விதிகளின்படி, பரிசீலிக்கப்படும் பொருட்கள் அல்லது சேவைகளின் மதிப்பு ஒரு கோடி ரூபாய்க்கு மிகாமல் இருக்கும் புகார்களை விசாரிக்க மாவட்ட ஆணையங்களுக்கு அதிகாரம் உள்ளது.
  • பரிசீலனைக்குட்பட்ட பொருட்கள் அல்லது சேவைகளின் மதிப்பு 1 கோடி ரூபாய்க்கு மேல், ஆனால் 10 கோடி ரூபாய்க்கு மிகாமல் இருக்கும் புகார்களை விசாரிக்க மாநில ஆணையங்களுக்கு அதிகார வரம்பு உள்ளது.
  • பரிசீலனைக்குட்பட்ட பொருட்கள் அல்லது சேவைகளின் மதிப்பு 50 லட்சம் ரூபாய்க்கு மிகாமல் இருக்கும் பட்சத்தில் புகார்களை விசாரிக்க மாவட்ட ஆணையங்களுக்கு அதிகாரம் உண்டு.
  • பரிசீலனைக்குட்பட்ட பொருட்கள் அல்லது சேவைகளின் மதிப்பு 50 லட்சம் ரூபாய்க்கு மேல் ஆனால் 2 கோடி ரூபாய்க்கு மிகாமல் இருக்கும் பட்சத்தில் புகார்களை விசாரிக்கும் அதிகார வரம்பை மாநில ஆணையங்கள் கொண்டிருக்கும்.
  • பரிசீலனைக்குட்பட்ட பொருட்கள் அல்லது சேவைகளின் மதிப்பு 2 கோடி ரூபாய்க்கு மேல் இருக்கும் புகார்களை விசாரிக்கும் அதிகார வரம்பை தேசிய ஆணையம் கொண்டுள்ளது.
ஆறு மாநிலங்களுக்கு கூடுதல் மத்திய மானியமாக ரூ 3,063.21 கோடி வழங்க மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா தலைமையிலான உயர்மட்ட குழு ஒப்புதல்
  • 2021-ம் ஆண்டில் வெள்ளம், நிலச்சரிவு மற்றும் புயல்களால் பாதிக்கப்பட்ட ஆறு மாநிலங்களுக்கு தேசிய பேரிடர் நிவாரண நிதியில் இருந்து கூடுதல் மத்திய மானியமாக ரூ 3,063.21 கோடி வழங்க மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா தலைமையிலான உயர்மட்ட குழு ஒப்புதல் அளித்துள்ளது.
  • ‘டௌக்டே’ சூறாவளியால் 2021-ல் பாதிக்கப்பட்ட குஜராத்திற்கு ரூ.1,133.35 கோடி,
  • ‘யாஸ்’ சூறாவளியால் 2021-ல் பாதிக்கப்பட்ட மேற்கு வங்காளத்திற்கு ரூ.586.59 கோடி,
  • 2021 தென்மேற்கு பருவமழையின் போது ஏற்பட்ட வெள்ளம்/நிலச்சரிவுகளுக்காக அஸ்ஸாமுக்கு ரூ.51.53 கோடி, கர்நாடகாவுக்கு ரூ.504.06 கோடி, மத்தியப் பிரதேசத்திற்கு ரூ.600.50 கோடி மற்றும் உத்தரகாண்ட் மாநிலத்திற்கு ரூ 187.18 கோடி.
  • இந்த கூடுதல் உதவியானது, மாநில பேரிடர் நிவாரண நிதியில் இருந்து மத்திய அரசு ஏற்கனவே மாநிலங்களுக்கு விடுவித்த நிதிக்கு கூடுதலாகும். 
  • 2021-22ஆம் நிதியாண்டில் மாநில பேரிடர் நிவாரண நிதியில் இருந்து ரூ 17,747.20 கோடியை 28 மாநிலங்களுக்கு மத்திய அரசு வழங்கியுள்ளது. மேலும், மத்திய பேரிடர் நிவாரண நிதியில் இருந்து ரூ 3,543.54 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது.
  • ‘டௌக்டே’ மற்றும் ‘யாஸ்’ புயல்களுக்குப் பிறகு, 20.05.2021 அன்று தேசிய பேரிடர் நிவாரண நிதியில் இருந்து குஜராத்திற்கு முன்பணமாக ரூ 1,000 கோடி விடுவிக்கப்பட்டது, 29.05.2021 அன்று மேற்கு வங்காளத்திற்கு ரூ 300 கோடி வழங்கப்பட்டது..
ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் மத்தியப் பிரதேசத்தில் ரூ 15,381.72 கோடி மதிப்பிலான குடிநீர் விநியோகத் திட்டங்களுக்கு ஒப்புதல்
  • ஜல் ஜீவன் இயக்கத்தின் கீழ் மத்தியப் பிரதேச மாநிலத்தில் 15,381.72 கோடி ரூபாய் மதிப்பிலான குடிநீர் வழங்கும் திட்டங்களுக்கு மாநில அளவிலான திட்ட அனுமதிக் குழு கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.
  • ரேவா, சத்னா, செஹோர், சித்தி, அலிராஜ்பூர், பத்வானி, ஜபல்பூர், பன்னா, மாண்ட்லா, சாகர், கட்னி, தார், ஷியோபூர், உமாரியா மற்றும் கர்கோன் மாவட்டங்களில் உள்ள 9,240 கிராமங்கள் இதன் மூலம் பயனடையும். 
  • 2023ம் ஆண்டிற்குள் அனைத்து கிராமப்புற வீடுகளுக்கும் குழாய் நீர் விநியோகத்தை வழங்க மாநிலம் திட்டமிட்டுள்ளதால், இந்தத் திட்டங்களுக்கு ஒப்புதல் வழங்குவது இந்தத் தருணத்தில் மிகவும் முக்கியமானது ஆகும்.
  • இந்த கிராமங்கள் அனைத்தும் கோடை காலத்தில் குடிநீர் பிரச்சினையை எதிர்கொள்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது. இந்த 9,240 கிராமங்களில் வசிக்கும் 22 லட்சத்துக்கும் அதிகமான குடும்பங்களுக்கு அடுத்த 30-40 ஆண்டுகளுக்கு போதுமான சுத்தமான குழாய் குடிநீர் விநியோகம் சீராக கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
  • ஜல் ஜீவன் இயக்கத்தின் கீழ் கிராமப்புற வீடுகளுக்கு குழாய் குடிநீர் விநியோகத்தை வழங்குவதற்காக எடுக்கப்படும் திட்டங்களின் பரிசீலனை மற்றும் ஒப்புதலுக்காக மாநில அளவிலான திட்ட அனுமதி குழு அமைக்கப்பட்டுள்ளது.
  • 2021-22-ல் ரூ. 5,117 கோடி மத்தியப்பிரதேசத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், அதில் இருந்து ரூ 2,558 கோடி இத்திட்டத்தை செயல்படுத்துவதற்காக ஏற்கனவே விடுவிக்கப்பட்டுள்ளது. 
  • இன்றைய நிலவரப்படி, மாநிலத்தில் உள்ள 1.22 கோடி கிராமப்புற குடும்பங்களில், 45.16 லட்சம் (36.93%) வீடுகளுக்கு குழாய் நீர் விநியோகம் செய்யப்படுகிறது. 2021-22-ல் 22.1 லட்சம் வீடுகளுக்கு குழாய் குடிநீர் இணைப்புகளை வழங்க மாநிலம் திட்டமிட்டுள்ளது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel