ஜனவரி 3 முதல் 15-18 வயதினர்களுக்கு தடுப்பூசி: பிரதமர் மோடி அறிவிப்பு
- இந்தியாவில் கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா வைரஸ் பாதிப்பு இருந்து வரும் நிலையில் இந்தியாவில் உள்ள மத்திய சுகாதாரத்துறை மற்றும் மாநில அரசுகளின் சுகாதாரத்துறை தடுப்பூசி செலுத்துவதன் காட்டிய வேகம் காரணமாக படிப்படியாக கொரனோ வைரஸ் பாதிப்பு குறைந்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்
- இந்த நிலையில் தற்போது மீண்டும் ஒமிக்ரான் என்ற புதிய வைரஸ் நாடு முழுவதும் பரவி வருவதை அடுத்து கூடுதல் விழிப்புணர்ச்சியுடன் இருக்க வேண்டும் என மத்திய அரசு மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
- இந்த நிலையில் பிரதமர் மோடி நாட்டு மக்களிடையே உரையாடியபோது 15 முதல் 18 வயது உடையோருக்கு ஜனவரி 3ஆம் தேதி முதல் தடுப்பு ஊசி செலுத்தப்படும் என்று தெரிவித்துள்ளார். மேலும் ஜனவரி 10 முதல் கூடுதல் தவணை தடுப்பூசி செலுத்தும் பணியும் தொடங்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
உலகின் மிகப்பெரிய தொலைநோக்கி விண்ணில் செலுத்தியது நாசா
- 'ஜேம்ஸ் வெப்' எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த விண்வெளி தொலைநோக்கி தென் அமெரிக்காவின் வடகிழக்கில் உள்ள கடலோரப் பகுதியான பிரெஞ்ச் கயானாவில் உள்ள ராக்கெட் ஏவுதளத்திலிருந்து ஐரோப்பிய ஏரியானே ராக்கெட் மூலம் செலுத்தப்பட்டது.
- 1000 கோடி டாலா் (ரூ.75,000 கோடி) செலவில் உருவாக்கப்பட்டுள்ள இந்தத் தொலைநோக்கி 16 லட்சம் கி.மீட்டா் தொலைவை கடந்து விண்வெளியில் நிலைநிறுத்தப்படும். அந்தத் தொலைவை அடைவதற்கு ஒரு மாதமாகும்.
- அதன்பிறகு தொலைநோக்கியின் அகச்சிவப்பு கதிா்கள் மூலம் பிரபஞ்சத்தை ஆய்வு செய்யத் தயாராவதற்கு மேலும் 5 மாதங்கள் ஆகும்.
- பிரபஞ்சத்தின் தொடக்கமாக கருதப்படும் பெருவெடிப்புக்கு (பிக் பாங்) பின்னா் உருவான ஆரம்பகால நட்சத்திரங்கள் குறித்து ஆய்வு செய்வதும், பிரபஞ்சம் குறித்த கூடுதல் தகவல்களை அறிந்து கொள்வதுமே ஜேம்ஸ் வெப் தொலைநோக்கியின் பிரதான நோக்கமாகும்.
இந்திய வம்சாவளியைச் சோந்தவருக்கு 'சிறந்த தென் ஆப்பிரிக்கா்' விருது
- தென் ஆப்பிரிக்காவைச் சோந்தவா் மருத்துவா் இம்தியாஸ் சூலிமான். இந்திய வம்சாவளியைச் சோந்த இவா், 'கிஃப்ட் ஆப் தி கிவா்ஸ்' (கொடுப்பவா்களின் பரிசு) என்ற தன்னாா்வ அமைப்பைத் தொடங்கி நடத்தி வருகிறாா்.
- இந்த அமைப்பின் மூலம் நிலநடுக்கம் போன்ற இயற்கைப் பேரிடா்களால் பாதிக்கப்பட்ட 44-க்கும் மேற்பட்ட நாடுகள், போரால் பாதிக்கப்பட்ட நாடுகளில் நிவாரணப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
- மத்திய கிழக்கு, கிழக்கு ஐரோப்பா, ஆப்பிரிக்க நாடுகள் மட்டுமின்றி இந்தியா, பாகிஸ்தானிலும் இயற்கைப் பேரிடா்களின்போது அந்த அமைப்பு உதவி புரிந்துள்ளது.
- இந்நிலையில் தென் ஆப்பிரிக்காவின் தினசரி இணையவழி நாளிதழான 'டெய்லி மேவ்ரிக்' இம்தியாஸ் சூலிமானுக்கு 'இந்த ஆண்டுக்கான சிறந்த தென் ஆப்பிரிக்கா்' விருது வழங்கி கெளரவித்துள்ளது.
- தென் ஆப்பிரிக்காவில் குடிமக்களுக்கு வழங்கப்படும் உயரிய விருதும் இம்தியாஸுக்கு ஏற்கெனவே வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
சிறந்த நிர்வாக வாரத்தில் 3 கோடி மனுக்களுக்கு தீர்வு
- கடந்த 2௦ம் தேதி முதல் நேற்று வரை, மத்திய - மாநில அரசுகள் இணைந்து சிறந்த நிர்வாக வாரத்தை கடைப்பிடித்தன. இந்த ஆறு நாட்களில் நில பத்திரங்கள், பிறப்பு, இறப்பு ஆவணங்கள், திருமண பதிவு உள்ளிட்ட பல சேவைகள் தொடர்பாக மக்கள் கொடுத்த மூன்று கோடிக்கும் அதிகமான மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டன.
- பொது மக்களின் ஆறு லட்சத்துக்கும் அதிகமான குறைகளுக்கு தீர்வு காணப்பட்டன. இதில் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் ஆட்சி நடக்கும் ஆந்திராவில் மட்டும் 1.3 கோடி சேவை மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டு உள்ளன.
100% முதல் டோஸ் கொரோனா தடுப்பூசி இலக்கை எட்டிய டெல்லி
- டெல்லியில் தகுதியானவர்கள் அனைவருக்கு முதல் தவணை கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். தலைநகரில் ஒரு கோடியே 48,33,000 பேர் கொரோனா தடுப்பூசி போட தகுதியானவர்கள்.
- மத்திய கல்வி அமைச்சகத்தின் கீழ் இயங்கும் தேசிய புத்தக அறக்கட்டளை , விடுதலையின் அமிர்தப் பெருவிழாவின் ஒரு பகுதியாக, பிரதம மந்திரி இளைய எழுத்தாளர் வழிகாட்டுதல் திட்டத்தின் கீழ், ‘இந்திய தேசிய இயக்கம்’ என்னும் கருப்பொருளில் நடைபெற்ற அகில இந்திய போட்டியின் முடிவுகளை இன்று அறிவித்துள்ளது.
- உதவித்தொகையுடன் கூடிய இந்த வழிகாட்டுதல் திட்டத்தின்படி, 30 வயதுக்கு குறைந்த 75 இளம் எழுத்தாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
- தேர்வு செய்யப்பட்டுள்ள 75 எழுத்தாளர்களில், 38 பேர் ஆண்கள், 37பேர் பெண்கள்.
- இரண்டு பேர் 15 வயதுக்கும் குறைவானவர்கள். 16 எழுத்தாளர்கள் 15-20 வயதுக்கு இடைப்பட்டவர்கள். 21-25 வரம்பில் 32 பேரும், 26-30 வயது வரம்பில் 25 பேரும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர. தமிழில் நூல்களை எழுதிய ஜே.யு.சுகானா, ஜி.சரவணன், கே.கீதா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.