‘யுனிகார்ன்’ நிறுவனங்களின் பட்டியலில் பிரிட்டனை பின்னுக்குத் தள்ளிய இந்தியா
- ஸ்டார்ட்அப் உலகில் 100 கோடி டாலர் மதிப்பைக் கொண்ட (இந்திய மதிப்பில் சுமார் ரூ.7,500 கோடி) நிறுவனங்களைத்தான் ‘யுனிகார்ன்’ நிறுவனங்கள் என்று அழைக்கின்றனர்.
- இந்திய நகரங்களில் அதிக யுனிகார்ன் நிறுவனங்களைக் கொண்ட நக ரமாக பெங்களூரு உள்ளது. அதற்கு அடுத்தபடியாக, மும்பை, புணே, தாணே, தில்லி அருகே உள்ள குருகிராம் ஆகியவை உள்ளன.
- யுனிகார்ன் பட்டியலில் ஒரே ஆண்டில் 33 நிறுவனங்கள் இடம் பிடித்த தையடுத்து பிரிட்டனை இந்தியா பின்னுக்குத் தள்ளி மூன்றாவது இடத் துக்கு முன்னேறியுள்ளது. கடந்த ஆண்டில் யுனிகார்ன் நிறுவனங்களின் எண்ணிக்கையில் இந்தியா நான்காவது இடத்தில் இருந்தது.
- இந்திய யுனிகார்ன் நிறுவனங்களின் பட்டியலில் கல்விச் சேவையில் ஈடுபட்டு வரும் ஸ்டார்ட் அப் நிறுவனமான பைஜூஸ் 2,100 கோடி டாலர் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.1.58 லட்சம் கோடி முதலிடத்தில் உள்ளது. இதைத் தொடர்ந்து, இன்மொபி (1,200 கோடி டாலர்), ஒயோ (950 கோடிடாலர்), ரேஸர்பே 750 கோடி டாலர்) ஆகியவை உள்ளன.
- யுனிகார்ன் பட்டியலில் முதல், இரண்டாவது இடங்களை முறையே அமெரிக்கா,சீனா ஆகியவை தக்கவைத்துக் கொண்டுள்ளன.
சென்னை வீரர் சபரி "WBC இந்தியா"சாம்பியன்
- உலக குத்துச்சண்டை கவுன்சில் (World Boxing Council's (WBC) India welterweight title) முதல் முறையாக நடத்திய WBC இந்தியா வெல்டர்வெயிட் சாம்பியன் போட்டியில் இறுதிச் சுற்றில் சண்டீகரைச் சேர்ந்த ஆகாஷ்தீப் சிங்கை வீழ்த்தி, சென்னை வீரர் சபரி சாம்பியன் ஆனார்.
நடு வானில் பாதையை மாற்றி செல்லும் ஏவுகணையை இந்தியா வெற்றிகரமாக பரிசோதனை
- நடு வானில் பாதையை மாற்றி செல்லும் திறன் கொண்ட 'ப்ரலே' என்ற ஏவுகணையை இந்தியா வெற்றிகரமாக பரிசோதித்தது. ஒடிசாவில் உள்ள ஏபிஜே அப்துல் கலாம் தீவில் இருந்து காலை 10.30 மணியளவில் இந்த ஏவுகணை ஏவி பரிசோதனை செய்யப்பட்டது.
- இந்த ஏவுகணை நிர்ணையிக்கப்பட்ட இலக்கை துல்லியமாக தாக்கியது. அதிநவீன ஏவுணையான ப்ரலே இடைமறிக்கும் ஏவுகணைகளை முறியடிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.
- குறிப்பிட்ட தொலைவு சென்ற பிறகு நடுவானில் தனது பாதையை மாற்றி செல்லும் திறன் கொண்டது இந்த பாலிஸ்டிக் ரக ஏவுகணை என இந்திய ராணுவ ஆராய்ச்சி மேம்பாட்டு அமைப்பு வட்டாரங்கள் தெரிவித்தன.
ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி பாகிஸ்தானை வீழ்த்தி வெண்கலம் வென்றது இந்தியா
- வங்கதேசத்தில் நடைபெற்று வந்த இத்தொடரில், நடப்பு சாம்பியனான இந்தியா அரையிறுதியில் ஜப்பானிடம் 3-5 என்ற கோல் கணக்கில் அதிர்ச்சி தோல்வியை சந்தித்தது. இதையடுத்து, 3வது இடத்துக்காக பாகிஸ்தானுடன் மோதியது.
- மிகவும் விறுவிறுப்பாக அமைந்த இப்போட்டியில் இந்தியா 4-3 என்ற கோல் கணக்கில் த்ரில் வெற்றியை வசப்படுத்தி வெண்கலப் பதக்கத்தை முத்தமிட்டது. இந்தியா சார்பில் ஹர்மான்பிரீத் (1வது நிமிடம்), சுமித் (45'), வருண் குமார் (53'), அக்ஷ்தீப் (57') கோல் அடித்தனர்.
ஆசிய கோப்பை ஹாக்கி - ஜப்பானை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது தென் கொரியா
- 6-வது ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டி வங்காளதேசத்தில் தலைநகர் டாக்காவில் நடைபெற்று வந்தது .இதில் நடந்த இறுதிப் போட்டியில் ஜப்பான்- தென் கொரியா அணிகள் மோதின.
- பரபரப்பான ஆட்டத்தில் கடைசி நிமிடத்தில் பெனால்டி கார்னர் வாய்ப்பை பயன்படுத்திய தென்கொரிய அணியில் ஜோங்யுன் ஜாங் கோல் அடித்தார்.
- இதனால் 3-3 என்ற கணக்கில் சமனில் முடிந்தது .இதையடுத்து நடந்த பெனால்டி ஷூட் அவுட்டில் 4-2 என்ற கோல் கணக்கில் தென் கொரியா அணி அபார வெற்றி பெற்று முதல் முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது. ஜப்பான் வெள்ளிப் பதக்கம் பெற்றது.
தென்னிந்திய ரோல்பால் போட்டி - தமிழக பெண்கள் அணி சாம்பியன்
- தமிழ்நாடு ரோல்பால் அசோசியேசன் சார்பில் தென்னிந்திய அளவிலான இரண்டாவது ஜீனியர் மற்றும் சீனியர்களுக்கான ரோல்பால் சாம்பியன்சிப் போட்டி, திண்டுக்கல் மாவட்டம், சின்னாளபட்டி பிரிவில் உள்ள இராஜன் உள் விளையாட்டரங்கில் நடந்தது.
- போட்டியில் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, புதுச்சேரி, ஆந்திரா ஐந்து மாநிலங்களைச் சேர்ந்த ஏராளமான அணிகள் கலந்து கொண்டன.
- இரண்டு நாட்கள் நந்த போட்டிகளில் சீனியர் மற்றும் ஜீனியர் பிரிவுகளில் தமிழ்நாடு பெண்கள் அணி முதலிடத்தை பெற்று சாம்பியன் பட்டத்தை தட்டி சென்றது.
- கேரள அணி இரண்டாம் இடத்தையும், புதுச்சேரி அணி மூன்றாம் இடத்தையும் பெற்றது. ஆண்கள் ஜீனியர் பிரிவில் தமிழ்நாடு அணி முதலிடம் பிடித்தது. கேரளா அணி இரண்டாம் இடங்களையும் பிடித்தது.
சீனியா் ஹாக்கி பஞ்சாப் அணி சாம்பியன்
- மகாராஷ்டிர மாநிலம், புணேவில் நடைபெற்ற இப்போட்டியில் இவ்விரு அணிகள் மோதிய இறுதி ஆட்டம் முதலில் கோலின்றி டிராவில் முடிந்தது.
- இதையடுத்து வெற்றியாளரை தீா்மானிக்க நடத்தப்பட்ட 'ஷூட் அவுட்' வாய்ப்பில் பஞ்சாப் 2-1 என்ற கோல் கணக்கில் வென்று சாம்பியன் ஆனது. உத்தர பிரதேசம் 2-ஆம் இடம் பிடித்தது.
- இதனிடையே, 3 மற்றும் 4-ஆம் இடத்துக்கான மோதலில் கா்நாடகம் - மகாராஷ்டிரம் அணிகள் களம் கண்டன. இதில் கா்நாடகம் 5-2 என்ற கோல் கணக்கில் மகாராஷ்டிரத்தை வீழ்த்தி 3-ஆம் இடம் பிடித்தது.
இந்திய பட்டயக் கணக்காளர்கள் கல்விக் கழகத்திற்கும், போலந்தின் சட்ட அங்கீகாரம் பெற்ற கணக்கு தணிக்கையாளர்கள் சங்கத்திற்கும் இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு அமைச்சரவை ஒப்புதல்
- இந்திய பட்டயக் கணக்காளர்கள் கல்விக் கழகத்திற்கும், போலந்தின் சட்ட அங்கீகாரம் பெற்ற கணக்கு தணிக்கையாளர்கள் சங்கத்திற்கும் இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்தது.
- உறுப்பினர் நிர்வாகம், தொழில் நெறிமுறை, தொழில்நுட்ப ஆராய்ச்சி, தொடர்ச்சியான தொழில் முறை மேம்பாடு, தொழில் முறை கணக்குக்கான பயிற்சி, தணிக்கைத் தரத்தைக் கண்காணித்தல், கணக்கிடுதல் அறிவில் முன்னேற்றம், தொழில் முறை மற்றும் அறிவுசார் மேம்பாடு ஆகியவற்றில் பரஸ்பரம் ஒத்துழைப்பை ஏற்படுத்த இந்த ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.
- குறுகிய காலம் முதல் நீண்ட காலம் வரையிலான சிறப்பு அம்சத்தில் இந்திய பட்டயக் கணக்காளர்கள், கல்விக் கழகத்தைச் சேர்ந்தவர்களுக்கு நவீனப் பயிற்சி வழங்க போலந்தில் வாய்ப்புகளை ஏற்படுத்த இந்த ஒப்பந்தம் வகை செய்கிறது.
- ஐரோப்பாவில் தடம் பதிப்பதை இது வலுப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருஅமைப்புகளின் உறுப்பினர்களுக்கு பரஸ்பரம் பயன்தரும் உறவை மேம்படுத்துவதற்கு இணைந்து பணியாற்றுவதையும் இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் நோக்கமாக கொண்டுள்ளது.
இந்தியாவின் போட்டி ஆணையத்திற்கும், மொரீசியஸின் போட்டி ஆணையத்திற்கும் இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு அமைச்சரவை ஒப்புதல்
- ஏகபோகத்திற்கு எதிரான சட்டம் மற்றும் கொள்கை மேம்படுத்துவதற்கும், வலுப்படுத்துவதற்குமான ஒத்துழைப்பு தொடர்பான இந்தியாவின் போட்டி ஆணையத்திற்கும், மொரீசியஸின் போட்டி ஆணையத்திற்கும் இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
- சர்வதேச வர்த்தகத்தை பாதிக்கும் போட்டிக்கு எதிரான கட்டுப்பாடுகளுக்குத் தீர்வு காண்பதும், இந்திய போட்டி ஆணையத்தால் போட்டிச்சட்டம் 2002-ன் அமலாக்கத்தை மேம்படுத்தவும், போட்டிக் கொள்கை பற்றிய புரிதலை அதிகப்படுத்தவும், திறன் கட்டமைப்புக்கும், தூதரக ரீதியிலான பயன்களைக் கொண்டு வரவும் இந்த ஒப்பந்தம் பயன்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
2022 பருவத்திற்கான கொப்பரை கொள்முதலுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்
- பிரதமர் திரு.நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழு கூட்டத்தில், 2022 கொள்முதல் பருவத்தில் கொப்பரை தேங்காய்க்கான குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
- 2021 பருவத்தில் ஒரு குவிண்டாலுக்கு ரூ.10,335 ஆக இருந்த அரவைக் கொப்பரைக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை 2022 பருவத்தில் குவிண்டாலுக்கு ரூ.10,590 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதே போன்று பந்து கொப்பரைக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை ரூ.10,600-லிருந்து ரூ.11,000 ஆயிரமாகவும் உயர்த்தப்பட்டுள்ளது.
- வேளாண் செலவினங்கள் மற்றும் விலை நிர்ணய ஆணையத்தின் பரிந்துரைக்கேற்ப இம்முடிவு மேற்கொள்ளப்பட்டுள்ளது. 2022 ஆம் ஆண்டுக்குள் விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவதற்கான முக்கியமான மற்றும் முன்னேற்றகரமான ஒரு நடவடிக்கையாக 50% லாபம் கிடைப்பதை இது உறுதி செய்யும்.
“வாசனைத் திரவிய புள்ளி விவரங்கள் ஒரு பார்வை 2021” என்ற நூலை மத்திய வேளாண் துறை அமைச்சர் திரு.நரேந்திர சிங் தோமர் வெளியிட்டார்
- வாசனைத் திரவிய புள்ளி விவரங்கள் ஒரு பார்வை 2021” என்ற நூலை மத்திய வேளாண் துறை அமைச்சர் திரு.நரேந்திர சிங் தோமர் 21 டிசம்பர் 2021 அன்று வெளியிட்டார். இந்த நூலில் வாசனைத் திரவியங்கள் சாகுபடி செய்யப்படும் இடம், அவற்றின் உற்பத்தி, ஏற்றுமதி, இறக்குமதி, விலை மற்றும் நாட்டில் உற்பத்தி செய்யப்படும் பல்வேறு வாசனைத் திரவியங்களின் மதிப்பு பற்றிய விவரங்கள் இடம் பெற்றுள்ளன.
- மத்திய வேளாண் & விவசாயிகள் நலத்துறையின் கட்டுப்பாட்டில் இயங்கும் பாக்கு மற்றும் வாசனைத் திரவிய வளர்ச்சித்துறை இயக்ககம் இந்த நூலை வெளியிட்டுள்ளது.
- 2014-15 முதல் 2020-21 வரையிலான கடந்த 7 ஆண்டு காலத்தில் நாட்டில் வாசனைத் திரவியத் துறையின் வளர்ச்சிப் பற்றிய முக்கிய அம்சங்கள் இந்த நூலில் இடம் பெற்றுள்ளன.
- நாட்டில், 2014-15-ல் 67.64 லட்சம் டன்னாக இருந்த வாசனைத் திரவியப் பொருட்கள் உற்பத்தி 2020-21-ல் 106.79 லட்சம் டன்னாகவும், சாகுபடி பரப்பளவு 32.24 லட்சம் ஹெக்டேரிலிருந்து 45.28 லட்சம் ஹெக்டேராகவும் அதிகரித்துள்ளது.
- சீரகம், பூண்டு, இஞ்சி, சோம்பு, வெந்தயம், மல்லி, மிளகாய் மற்றும் மஞ்சள் ஆகிய முக்கிய வாசனைத் திரவியங்களின் உற்பத்தி கணிசமாக அதிகரித்துள்ளது. அதே போன்று வாசனைத் திரவிய ஏற்றுமதியும் ரூ.14,900 கோடியிலிருந்து ரூ.29,535 கோடியாக அதிகரித்துள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேசிய ஆக்ஸிஜன் மேற்பார்வை திட்டத்தை டாக்டர் பாரதி பிரவீன் பவார் தொடங்கி வைத்தார்
- உயிர்காக்கும் பொது சுகாதாரப் பொருள் என்ற நிலையில், மருத்துவ ஆக்ஸிஜனின் பங்களிப்பையும், மருத்துவ ஆக்ஸிஜனைக் கையாளுவதில் சுகாதாரப் பணியாளர்களின் திறனை அதிகரிப்பதன் அவசியத்தையும் கருத்தில் கொண்டு மத்திய சுகாதார அமைச்சகத்தின் தேசிய ஆக்ஸிஜன் மேற்பார்வை திட்டத்தைப் புதுதில்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநல அமைச்சகத்தின் இணையமைச்சர் டாக்டர் பாரதி பிரவீன் பவார் இன்று தொடங்கி வைத்தார்.
- மருத்துவ ஆக்ஸிஜன் வீணாவதைத் தவிர்க்கவும், சீரான பயன்பாட்டை உறுதி செய்யவும் தேவையான அறிவு மற்றும் திறன்களுடன் ஆக்ஸிஜனைக் கையாள்வதில் சுகாதாரப் பணியாளர்களை ஈடுபடுத்துவது, அவர்களுக்கு அதிகாரமளிப்பதை நோக்கமாக கொண்டது இந்தத் திட்டம்.