சுகாதாரத் துறை செயலர் ஜெ.ராதாகிருஷ்ணனுக்கு சிறந்த சேவைக்கான 'ஸ்கோச்' அறக்கட்டளை விருது
- 'ஸ்கோச்' அறக்கட்டளை சார்பில் டெல்லியில் நேற்று நடைபெற்ற விழாவில் தமிழக சுகாதாரத் துறைச் செயலர் ஜெ.ராதாகிருஷ்ணனுக்கு சிறந்த சேவைக்கான விருந்து வழங்கப்பட்டது.
- ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி தனேந்திர குமார், 'ஸ்கோச்' அறக்கட்டளை தலைவர் சமீர் கொச்சார் ஆகியோர் ஜெ.ராதாகிருஷ்ணனுக்கு விருதை வழங்கினர்.
இன்னுயிர் காப்போம் திட்டம் & நம்மைக் காக்கும் 48 திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செங்கல்பட்டு மாவட்டம், மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் நடைபெற்ற விழாவில், சாலை விபத்தால் ஏற்படும் உயிரிழப்பைக் குறைத்திட, விபத்து ஏற்பட்ட முதல் 48 மணி நேரத்திற்குள் கட்டணமில்லா உயிர் காக்கும் அவசர சிகிச்சைக்கான நம்மைக் காக்கும் 48 திட்டத்தைத் தொடங்கி வைத்தார்.
- இன்னுயிர் காப்போம் -நம்மைக் காக்கும் 48 திட்டத்தை 609 மருத்துவமனைகளில் தொடங்குவதன் அடையாளமாக, 18 மருத்துவமனைகளின் பிரதிநிதிகளிடம் அதற்கான கடவுச் சொற்களை வழங்கி, இன்னுயிர் காப்போம் திட்டத்தின் காணொலி குறுந்தகட்டினையும் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.
- முன்னதாக, முதலமைச்சர் இன்னுயிர் காப்போம் - நம்மை காக்கும் - 48 திட்டம் குறித்த கண்காட்சி அரங்கினைத் திறந்து வைத்து பார்வையிட்டார்.
2 ஆயிரம் கிமீ பாய்ந்து தாக்கும் அக்னி-பி ஏவுகணை சோதனை வெற்றி
- அணு குண்டுகளை சுமந்து கொண்டு 2 ஆயிரம் கிமீ கண்டம் விட்டு கண்டம் கடந்து தாக்கக் கூடிய அக்னி-பி ஏவுகணையை இந்தியா வெற்றிகரமாக பரிசோதித்துள்ளது.
- அணுகுண்டுகளை சுமந்து கொண்டு 2 ஆயிரம் கிமீ வரை பாய்ந்து சென்று தாக்கும் திறன் படைத்த அக்னி-பி ஏவுகணையை, ஒடிசா மாநிலத்தில் உள்ள அப்துல் கலாம் தீவில் வெற்றிகரமாக ஏவி பரிசோதிக்கப்பட்டது.
- கண்டம் விட்டு கண்டம் பாய்ந்து தாக்கக் கூடிய இது, ஏற்கனவே பரிசோதிக்கப்பட்டுள்ள அக்னி ஏவுகணை வகைகளில் 6வது ஏவுகணையாகும்.
உத்தரப்பிரதேசம், ஷாஜஹான்பூரில் கங்கா விரைவுச்சாலைக்கு பிரதமர் அடிக்கல் நாட்டினார்
- பிரதமர் நரேந்திர மோடி, உத்தரப் பிரதேசம் ஷாஜஹான்பூரில் கங்கா விரைவுச்சாலைக்கு அடிக்கல் நாட்டினார். உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத், மத்திய அமைச்சர் பி.எல்.வர்மா ஆகியோர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
- அங்கு திரண்டிருந்தவர்கள் இடையே உரையாற்றிய பிரதமர், ககோரி சம்பவத்தில் உயிர்த்தியாகம் புரிந்த பண்டிட் ராம் பிரசாத் பிஸ்மில், அஷ்பக் உல்லா கான், தாகூர் ரோஷன் சிங் ஆகியோருக்கு மரியாதை செலுத்தினார்.
- உள்ளூர் மொழியில் பேசிய பிரதமர், விடுதலைப் போராட்ட கவிஞர்கள் தாமோதர் ஸ்வரூப் வித்ரோகி, ராஜ்பகதூர் விகால், அக்னிவேஷ் சுக்லா ஆகியோருக்கு மரியாதை செலுத்தினார்.
- புதுதில்லியில் இன்று நடைபெற்ற இந்திய தொழில் வர்த்தக சபைகளின் கூட்டமைப்பான பிக்கியின் 94-வது வருடாந்திர பொதுக்குழு கூட்டத்தில் பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் கலந்து கொண்டு ‘இந்தியா 75க்கு பின்னால்’ என்னும் பொருள் பற்றி உரையாற்றினார்.
- உலக அளவில் பாதுகாப்பு உற்பத்தியில் இந்தியாவை மையமாக மாற்ற வேண்டும் என்ற அரசின் தொலைநோக்கை அவர் விளக்கினார். பாதுகாப்பு துறையை நவீனமயமாக்குவதுடன், பாதுகாப்பு உற்பத்தியில் தற்சார்பை எட்டி நாட்டைப் பாதுகாக்க வலுவான சூழலைஉருவாக்குவதே அரசின் நோக்கம் என்று அவர் கூறினர்.
- தேசிய மாணவர் படையினரால் ( என் சி சி ) கடற்கரை தூய்மைத் திட்டம் மற்றும் பிற தூய்மைப் பணிகள் மூலம் சேகரிக்கப்பட்ட பிளாஸ்டிக் கழிவுகளைப் பயன்படுத்தி நாடு முழுவதும் சாலைகள் அமைப்பதற்காக தேசிய மாணவர் படையும் இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையமும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன
- 2021 டிசம்பர் 17 அன்று என் சி சி தலைமை இயக்குனர் லேப்டினன்ட் ஜெனரல் குர்பீர்பால் சிங், இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தின் முதன்மைப் பொது மேலாளர் திரு.சுசில் குமார் மிஸ்ரா இடையே கையெழுத்தானது.
- தங்களால் சேகரிக்கப்பட்ட பிளாஸ்டிக் கழிவுகளை மறுசுழற்சி செய்யவும் லாபகரமாக பயன்படுத்தவும் ஐ ஐ டி கள் , என் ஐ ஐ டி களை தேசிய மாணவர்படை அணுகியுள்ளது. கரக்பூர் ஐ ஐ டி இதற்கு தங்களின் தொழில்நுட்ப ஆலோசனையை வழங்க ஏற்கனவே ஒப்புக்கொண்டுள்ளது. இதைத் தவிர தொண்டு நிறுவனங்களையும் என் சி சி அணுகியுள்ளது.
- பிளாஸ்டிக் பயன்பாட்டின் கேடுகள் மற்றும் இவற்றால் இயற்கை வளங்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் பற்றி மக்களிடையே இவர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளனர்.
- கடந்த ஒரு மாதத்தில் 3.4 லட்சம் என் சி சி மாணவர்கள் 127 இடங்களில் கடற்கரையை தூய்மைப் படுத்தும் திட்டத்தில் பங்கேற்று 6 டன் பிளாஸ்டிக் கழிவுகளை சேகரித்துள்ளனர். சுமார் 17 லட்சம் மக்களிடம் பிளாஸ்டிக் கழிவுகளுக்கு எதிராக பிரச்சாரம் செய்துள்ளனர்