கோவோவேக்ஸ் தடுப்பூசிக்கு உலக சுகாதார அமைப்பு ஒப்புதல்
- அமெரிக்காவைச் சோந்த நோவாவேக்ஸ் என்ற நிறுவனம் கோவோவேக்ஸ் கொரோனா தடுப்பூசியைத் தயாரிக்கிறது. இந்தத் தடுப்பூசியை அதிக எண்ணிக்கையில் தயாரித்து, ஏழை நாடுகளுக்கு விநியோகிக்க, இந்தியாவின் சீரம் நிறுவனத்துடன் நோவாவேக்ஸ் கடந்த ஆண்டு ஒப்பந்தம் செய்தது.
- கோவோவேக்ஸ் தடுப்பூசியை சீரம் நிறுவனம் உற்பத்தி செய்ய இந்திய மருந்துகள் தரக் கட்டுப்பாட்டு இயக்குநரகம் (டிசிஜிஐ) கடந்த மே மாதம் அனுமதி வழங்கியது.
- இந்நிலையில், இந்தத் தடுப்பூசியை அவசரகாலப் பயன்பாட்டுக்கு பயன்படுத்த உலக சுகாதார அமைப்பு அனுமதி அளித்துள்ளது
தமிழ்த்தாய் வாழ்த்து தமிழ்நாடு அரசின் மாநில பாடலாக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
- தமிழ்தாய் வாழ்த்து பாடலை தமிழ்நாடு அரசின் மாநில பாடலாக அறிவித்து முதல்வர் மு .க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். தமிழ்தாய் வாழ்த்துப் பாடும் போது இனி அனைவரும் கட்டாயம் எழுந்து நிற்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்து முதல்வர் அரசாணை வெளியிட்டுள்ளார்.
- மனோன்மணியம் சுந்தரனார் அவர்கள் எழுதிய 'நீராருங் கடலுடுத்த' என்ற பாடல் 55 வினாடிகளில் முல்லைப்பாணி ராகத்தில் 3-ம் நடையில் பாடப்பட வேண்டும் எனவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
- தமிழ்தாய் வாழ்த்து படம் போது எழுந்து நிற்பதில் இருந்து மாற்று திறனாளிகளுக்கு மட்டும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
- 1913-ம் ஆண்டு முதல் முறையாக தமிழ் சங்கத்தில் நீராருங் கடலுடுத்த என்ற பாடல் இடம்பெற்றுள்ளது. அதன் பிறகு 1914-ம் ஆண்டு முதல் கரந்தை தமிழ் சங்கத்தில் இந்த பாடலை பாடி வந்துள்ளார்கள்.
- அதை தொடர்ந்து 1970-ம் ஆண்டு அப்போதைய முதல்வர் கருணாநிதி இனி வரும் அரசு விழாக்களில் தமிழ்தாய் வாழ்த்து பாடல் நிச்சயம் இருக்கும் என தெரிவித்திருந்தார்.
- 1891-ம் ஆண்டு வெளியிடப்பட்ட புகழ்பெற்ற நாடக நூலான மனோன்மணியம் என்னும் நூலில் 'தமிழ் தெய்வ வணக்கம்' என்ற தொகுப்பின் கீழ் உள்ள ஒரு பகுதியை நாம் தமிழ் தாய் வாழ்த்தாக பாடுகிறோம் என்பது குறிப்பிடத்தக்கது.
- இந்திய பத்திரிகைகள் சங்கத்தின் (ஐஎன்எஸ்), 82வது ஆண்டு பொதுக்குழுக் கூட்டம் சென்னையில் நடந்தது. இந்த கூட்டத்தில் வீடியோ கான்பரன்சிங் முறையில் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இதில், 2021-22 ஆண்டுக்கான ஐஎன்எஸ் தலைவராக, எகனாமிக் டைம்ஸ் பத்திரிகையின் மோகித் ஜெயின் தேர்வு செய்யப்பட்டார்.
ஃபியூச்சர் நிறுவன ஒப்பந்தம் ரத்து - அமேசான் நிறுவனத்திற்கு ரூ. 202 கோடி அபராதம்
- ஃபியூச்சர் ரீடெய்ல் லிமிடெட்டின் ஒரு பிரிவான ஃபியூச்சர் கூப்பன்களுடன் அமேசான் நிறுவனம் செய்துகொண்ட 2019ஆம் ஆண்டின் ஒப்பந்தத்திற்கான அனுமதியை இந்திய வணிகப்போட்டி ஒழுங்குமுறை ஆணையம் (சிசிஐ) ரத்து செய்துள்ளது.
- மேலும், முதலீடு தொடர்பான தகவல்களை முழுமையாக அளிக்காமல் மறைத்த புகாரின் பேரில் அமேசான் நிறுவனத்திற்கு ரூ.202 கோடி அபராதமும் விதித்துள்ளது.
- ரிலையன்ஸ் ரீடெய்ல் வென்ச்சர்ஸ் லிமிடெட் (RRVL) உடனான ரூ. 24,713 கோடி ஒப்பந்தம் தொடர்பாக அமேசான் மற்றும் ஃபியூச்சர் குழுமத்திற்கு இடையே நடந்த கடுமையான சட்டப் போராட்டத்திற்கு பின்னர் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அகில இந்திய மேயர்கள் மாநாடு 2021
- உத்திரப் பிரதேசத்தின் வாரணாசியில் நகர்புற மேம்பாட்டு துறை சார்பில் அகில இந்திய மேயர்கள் மாநாடு நடைபெற்றது. புதிய நகர்புற இந்தியா என்ற பெயரில் நடைபெற்ற இந்த மாநாட்டில், இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் சேர்ந்த மேயர்கள், உத்தரபிரதேச முதல்வர் மற்றும் மத்திய நகர்ப்புற மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
- பிரதமர் நரேந்திர மோடி காணொலிக் காட்சி மூலம் அந்த அகில இந்திய மேயர்கள் மாநாட்டை தொடங்கி வைத்து உரையாற்றினார்.
சர்வதேச முன்னணி ஐ.டி. நிறுவனத்தின் சி.இ.ஓ.வாக இந்தியாவை சேர்ந்த ஆனந்த் ஈஸ்வரன் நியமனம்
- உலக அளவில் தலைசிறந்து விளங்கும் நிறுவனங்கள் சிலவற்றில், இந்தியர்கள் உச்சபட்ச தலைமை பொறுப்பை வகித்து வருகின்றனர். இது சர்வதேச அரங்கில் இந்தியாவுக்கு பெருமை சேர்ப்பதாக அமைந்துள்ளது.
- கூகுள் ஆல்பாபெட் நிறுவனத்தின் சிஇஓவாக தமிழ்நாட்டை பூர்வீகமாக கொண்ட சுந்தர் பிச்சை, மைக்ரோ சாஃப்டின் சத்யா நாதெள்ளா, ஐ.பி.எம்.-ன் அரவிந்த் கிருஷ்ணா, அடோப் இன்கார்ப்பின் சாந்தனு நாராயண், ட்விட்டரின் பராக் அகர்வால் ஆகியோர் குறிப்பிடத்தக்க சிஇஓக்களில் சிலர்.
- இந்த வரிசையில் இந்தியாவை பூர்வீகமாக கொண்ட 46 வயதாகும் ஆனந்த் ஈஸ்வரன் இணைந்துள்ளார். அவர் தகவல் தொழில் நுட்ப நிறுவனமான வீம்-ன் தலைமை செயல் அதிகாரியாக இன்று நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதற்கு முன்பாக அவர் மைக்ரோ சாஃப்ட் நிறுவனத்தின் வர்த்தக பிரிவுகளின் தலைவராக இருந்து வந்தார்.
பிரதமர் மோடிக்கு உயரிய விருது - பூட்டான் அரசு அறிவிப்பு
- பூடான் நாட்டின் 114-வது தேசிய நாள் கொண்டாடப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு அந்நாட்டு அரசு பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு விருதுகள் வழங்கி வருகிறது.
- இந்நிலையில், பிரதமர் மோடிக்கு 'நகடக் பெல் ஜி கோர்லோ' என்கிற உயரிய விருதை அளிப்பதாக பூடான் அரசு அறிவித்திருக்கிறது. இதைப் பகிர்ந்துகொண்ட அந்நாட்டு பிரதமர் லோடே ஷேரிங், மோடியின் பெயர் விருதுக்கு தேர்வானது மகிழ்ச்சி அளிக்கிறது எனத் தெரிவித்தார்.
நாகூரில் நெய்தல் பாரம்பரிய பூங்கா - நிதி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு
- நாகை மாவட்ட மக்களின் வாழ்வியல் சூழல், வாழ்க்கை முறை, உணவு, கலை, பண்பாடு, ஆகியவற்றை பறைசாற்றும் வகையில் நெய்தல் பாரம்பரிய பூங்கா அமைக்க நிதி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு அரசாணையை வெளியிட்டது.
- பண்டைய தமிழர்களின் பண்பாட்டை எடுத்துரைக்கும் வகையில் ரூ.2 கோடியில் 3.06 ஹெக்டர் பரப்பளவில் பூங்கா அமைக்கப்படும். நெய்தல் பாரம்பரிய பூங்காவில் பனைக்குடில்கள், பவளப்பாறை, முத்துச்சிற்பி மற்றும் மூங்கில் குகைகள் ஆகியவை அமைக்கப்பட உள்ளன என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
2021 பாராலிம்பிக் விளையாட்டு விருதுகள்
- 2021 பாராலிம்பிக் விளையாட்டு விருதுகள் அறிவிக்கபட்டுள்ளன. இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் இந்த விருது விழாவில், பாராலிம்பிக் விளையாட்டுகளில் சாதித்த வீரர்கள் சிறப்பிக்கபடுவார்கள்.
- இதில் ஐந்து பிரிவுகளில் விருதுகள் வழங்கபடுவது வழக்கம். இம்முறை சிறந்த அறிமுக வீராங்கனைக்கான விருதை, இந்தியாவின் 20 வயது துப்பாக்கி சுடுதல் வீராங்கனி அவனி லெகரா வென்றுள்ளார்.
- இவர் இந்தாண்டு டோக்கியோவில் நடைபெற்ற பாராலிம்பிக் துப்பாக்கிசுட்டில் ஒரு தங்கபதக்கமும் ஒரு வெண்கலப் பதக்கமும் வென்று சாதனை படைத்தார். இவர் இந்தியாவிலிருந்து பாராலிம்பிக்கில் தங்கப்பதக்கம் வென்ற முதல் பெண்.
- சிறந்த அறிமுக வீரராக (ஆண்) பாராலிம்பிக்கில் தங்க பதக்கம் வென்ற செக் குடியரசு நாட்டை சேர்ந்த அடெம் பெஸ்கா தேர்ந்தெடுக்கபட்டார். சிறந்த பெண் தடகள வீரராக நெதர்லாந்து டென்னிஸ் வீரர் டெய்டு டீ க்ரூட் தேர்ந்தெடுக்கபட்டார்.
- சிறந்த ஆண் தடகள வீரராக ஸ்விட்சர்லாந்தின் மார்சல் ஹக் தேர்ந்தெடுக்கபட்டார். இவர் இந்தாண்டு பாராலிம்பிக்கில் பங்கேற்ற நான்கு தடகளப் போட்டிகளில் நான்கு தங்கம் பதக்கம் வென்று சாதனை படைத்தவர்.
- சிறந்த அணியாக இங்கிலாந்து ரக்பி அணி தேர்ந்தெடுக்கபட்டது. இவர்களும் டோக்கியோ பாராலிப்பிக்கில் தங்கம் வென்றது குறிப்பிடத்தக்கது.
- மேலும் சிறந்த அதிகாரியாக ஜெர்மன் அணியின் மருத்துவர் அஞ்சா ஹிர்ஷ்முல்லர் தேர்ந்தெடுக்கபட்டார். பெல்ஜிய டென்னிஸ் வீரர் ஜோச்சிம் ஜெராட்டின் உயிரைக் காப்பாற்றிய தருணம் இவருக்கு இந்த விருதினை பெற்று தந்துள்ளது.
'கிம் ஜாங் உன்' தந்தையின் நினைவு நாள் - நாட்டு மக்கள் 11 நாட்கள் சிரிக்க வடகொரியா தடை
- கிம் ஜாங் இல், கடந்த 2011 டிசம்பர், 17 அன்று உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. வட கொரிய நாட்டு மக்கள் மது அருந்த, மளிகை சாமான்கள் வாங்க, ஷாப்பிங் செல்ல, பொழுதுபோக்கு சார்ந்த நடவடிக்கைகளில் ஈடுபடவும் அரசு தடை விதித்துள்ளதாம்.
- அரசின் இந்த தடையை மீறுபவர்கள் மீது தகுந்த சட்ட நடவடிக்க மேற்கொள்ளப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த காலங்களில் இது மாதிரியான தடைகள் அமலில் இருந்தபோது அதனை மீறியவர்கள் மீது கைது நடவடிக்கை பாய்ந்துள்ளதாகவும் சொல்லப்படுகிறது. அப்படி கைது செய்யப்பட்டவர்களின் நிலை என்ன என்பது கூட யாருக்கும் தெரியாதாம்.
சர்வதேச டென்னிஸ் கூட்டமைப்பின் சாம்பியன் பட்டத்தை வென்றார் ஜோகோவிச்
- டென்னிஸ் விளையாட்டு உலகை தனது ராக்கெட்டால் ஆட்சி செய்து வருபவர் ஜோகோவிச். செர்பிய நாட்டை சேர்ந்த இந்த 34 வயது வீரர், நடப்பு ஆண்டுக்கான சர்வதேச டென்னிஸ் கூட்டமைப்பின் சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளார்.
- ஒற்றையர் ஆடவர் பிரிவில் இந்த விருதை வென்று சாதனை படைத்துள்ளார் அவர். 2011, 2012, 2013, 2014, 2015, 2018, 2021 என 7 முறை ஒற்றையர் பிரிவில் இந்த விருதை வென்ற ஒரே வீரரும் அவர்தான்.
- ஒரு ஆண்டில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் வீரர்களுக்கு இந்த விருதை கடந்த 1978 முதல் ஆண்டுதோறும் சர்வதேச டென்னிஸ் கூட்டமைப்பு வழங்கி வருகிறது.
- நடப்பு ஆண்டில் மட்டும் ஆஸ்திரேலிய ஓபன், விம்பிள்டன், பிரெஞ்சு ஓபன் என மூன்று கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்றுள்ளார் ஜோகோவிச். அதன் காரணமாக அவருக்கு இந்த விருது கொடுக்கப்பட்டுள்ளது.
- மகளிர் ஒற்றையர் பிரிவில் ஆஷ்லே பார்ட்டி, ஆடவர் இரட்டையர் பிரிவில் குரோஷியா நாட்டின் நிகோலா மெக்டிக் மற்றும் மேட் பாவிக், மகளிர் இரட்டையர் பிரிவில் பார்போரா கிரெஜ்சிகோவா மற்றும் கேடரினா சினியாகோவா ஆகியோர் சாம்பியன்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.
- பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனமான டிஆர்டிஓ உருவாக்கிய உயிரி கழிவறை கீழ்காணும் 3 முக்கிய அம்சங்களைக் கொண்டது.
- ஆக்சிஜன் இல்லாத முறையில் மனிதக்கழிவுகளை பாக்டீரியா தொகுப்புகள் உட்கிரகிக்கும் முறை
- மாறுபட்ட புவி – பருவ சூழல்களில் பயன்படுத்துவதற்கு வெவ்வேறு வடிவங்களிலான உயிரி கழிவறை உருவாக்கப்பட்டுள்ளது.
- பாக்டீரியா தொகுப்பை செறிவூட்ட பசுமாட்டுச் சாணம் பயன்படுத்தப்படுகிறது. இந்தத் தொகுப்பில் கீழ்காணும் 4 வகையான பாக்டீரியாக்கள் உள்ளன :
- ஹைட்ரோலேஸ்
- அசிடோஜீனேஸ்.
- அசிட்டோஜீனேஸ்
- மீத்தோஜென்ஸ்
- இந்தத் தொழில்நுட்பத்தை நாடு முழுவதும் உள்ள சுமார் 60 தொழில் நிறுவனங்களுக்கு டிஆர்டிஓ வழங்கியுள்ளது. இந்தத் தொழிற்சாலைகள் நாடு முழுவதும் உயிரி - மட்கவைக்கும் சாதனங்களை நிறுவியுள்ளது.