தேசிய காடு வளர்ப்புத் திட்டத்தின் கீழ் தமிழகத்துக்கு ரூ.127.31 கோடி நிதி
- பருவநிலை மாற்றத்துக்கான தேசிய செயல்திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படும் 8 திட்டங்களில் பசுமை இந்தியா தேசியத் திட்டமும் ஒன்று.
- நாட்டில் வனப்பகுதியை அதிகரிப்பதையும் மற்றும் பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்வதையும் இத்திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது.
- பசுமை இந்தியா திட்டத்தின் கீழ், தமிழக அரசிடமிருந்து எந்தத் திட்டத்தையும், சுற்றுச் சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம் பெறவில்லை.
- ஆனாலும் தேசிய காடு வளர்ப்புத் திட்டத்தின் கீழ் 2000-01 ஆண்டிலிருந்து தமிழகத்துக்கு ரூ.127.31 கோடி வாங்கப்பட்டுள்ளது. காடு வளர்ப்பு, மேலாண்மை, இழப்பீடு திட்டத்தின் கீழ், தமிழகத்தில் பசுமையை அதிகரிக்க 2021-22 ஆம் ஆண்டு வரை ரூ.113.42 கோடி வழங்கப்பட்டுள்ளது.
- இயற்கை விவசாயம் குறித்த தேசிய மாநாட்டில் விவசாயிகளிடம் காணொலிக் காட்சி மூலம் பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றினார். இந்நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர்கள் திரு அமித் ஷா, திரு நரேந்திர சிங் தோமர், குஜராத் ஆளுநர், குஜராத் மற்றும் உத்தரப்பிரதேச முதலமைச்சர்கள் கலந்து கொண்டனர்.
- இயற்கை வேளாண்மை குறித்த தேசிய மாநாட்டை குஜராத் அரசு நடத்தியது. மூன்றாவது உச்சி மாநாடு டிசம்பர் 14-ம் தேதி முதல் 16-ம் தேதி வரை நடத்தப்பட்டது.
- இதில் ஐந்தாயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் மற்றும் பலர், மாநிலங்களில் உள்ள இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கவுன்சில், வேளாண் அறிவியல் மையங்கள் மற்றும் வேளாண் தொழில்நுட்ப மேலாண்மை முகமை மூலம் காணொலி வாயிலாக பங்கேற்றனர்.
- துர்காபூர், சீரடி, சிந்துதுர்க், பாக்கியாங், கண்ணூர், காலாபுராகி, ஒரவாக்கல் மற்றும் குஷி நகர் ஆகிய 8 இடங்களில் பசுமை விமான நிலையங்கள் செயல்பாட்டில் உள்ளன.
- மேலும் 21 இடங்களில் பசுமை விமான நிலையங்கள் அமைக்க கொள்கை அளவிலான ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளன. இந்தத் திட்டங்களை அமல்படுத்தும் பொறுப்பு இந்திய விமான நிலைய ஆணையத்துக்கும் சம்பந்தப்பட்ட மாநில அரசுகளுக்கும் உள்ளது
- இந்தியா - வியட்நாம் இடையேயான பங்களிப்பை வலுப்படுத்த டிஜிட்டல் ஊடகத்துறையில் ஒத்துழைப்புக்கு வியட்நாம் தகவல் மற்றும் தொடர்புத்துறை அமைச்சர் திரு குயென் மான் ஹூங்குடன், மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை அமைச்சர் திரு அனுராக் தாக்கூர் பூர்வாங்க உடன்பாட்டில் கையெழுத்திட்டார்.
- டிஜிட்டல் ஊடகம் மற்றும் சமுக வலைதள கட்டமைப்புகள் குறித்த கொள்கைகளை உருவாக்குவதிலும், முறைப்படுத்துவதிலும் இருநாடுகளின் ஊடக ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு திறன் கட்டமைப்பு மற்றும் பயிற்சி திட்டங்களை நடத்துவதிலும் தகவல் மற்றும் அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள இந்தப் பூர்வாங்க உடன்பாடு வகை செய்கிறது.
"லோக்பால் இணையதளம்" தொடக்கம்
- மத்திய அரசின் பல்வேறு தரப்பு ஊழியர்கள் மீதான புகார்களை விசாரித்து வரும் லோக்பால் அமைப்பு, தற்போது புகார்களைக் கையாள வெளிப்படையான செயல்திறனுக்கு இணையதளத்தை உருவாக்கியுள்ளது.
- இந்த இணையதளத்தை முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதியும் லோக்பால் தலைவருமான பினாகி சந்திரகோஸ் தொடக்கி வைத்தார்.
- 2013-ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட லோக்பால், லோக் ஆயுக்தா சட்டத்தின்கீழ் பொது ஊழியர்களுக்கு எதிராக புகார்களைப் பதிவு செய்யும் வகையில் "லோக்பால் ஆன்லைன்" (இணையதளம்) (http://okpalonline.gov.in) இருக்கும்.
- வங்கதேசத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற சுதந்திரநின பொன்விழா கொண்டாட்டத்தில் சிறப்பு விருந்தினராக குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பங்கேற்றார்.
- வங்கதேச தலைநகர் டாக்காவில் உள்ள தேசிய மைதானத்தில் நடைபெற்ற சுதந்திர தின பொன் விழாவில், அத்தாட்டுப் பிரதமர் ஷேர்ஹனோ, அந்நாட்டு அதிபர் எம்.அப்துல் ஹமீது, அமைச்சர்கள், அரசு உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.
முப்படை தளபதிகள் குழு தலைவரானார் நரவானே
- தமிழகத்தின் குன்னூர் அருகே அண்மையில் நிகழ்ந்த ஹெலிகாப்டர் விபத்தில் நாட்டின் முதல் முப்படைத் தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மதுலிகா உட்பட 14 பேர் உயிரிழந்தனர்.
- இந்நிலையில், முப்படை தளபதிகள் குழு தலைவராக எம்.எம்.நரவானே நியமிக்கப்பட்டார். அவர் பொறுப்பேற்றுக் கொண்டார். பாதுகாப்புத் துறை தொடர்பாக பல விவகாரங்களில் முக்கிய முடிவுகள் எடுக்க வேண்டியுள்ளதால், எம்.எம். நரவானேவுக்கு இந்த பொறுப்பு வழங்கப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.
இந்து குழும தலைவர் மாலினி பார்த்தசாரதிக்கு கொலம்பியா ஜர்னலிசம் கல்வி மைய விருது
- இந்து குழுமத்தின் தலைவர் மாலினி பார்த்தசாரதிக்கு கொலம்பியா ஜர்னலிசம் கல்வி மையத்தின் உயரிய விருது வழங்கப்பட்டுள்ளது. இந்த கல்வி மையத்தின் முன்னாள் மாணவியான இவர், இதழியல் துறையில் மிகச் சிறப்பாக செயல்பட்டமைக்காக 2022-ம் ஆண்டுக்கான விருதுக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
- கொலம்பியா ஜர்னலிசம் கல்வி மையம் மற்றும் அதன் முன்னாள் மாணவர்கள் கூட்டமைப்பு மற்றும் மேம்பாட்டு மையம் சார்பில் ஆண்டுதோறும் இவ்விருதுவழங்கப்படுகிறது. இந்த மையத்தில் பயின்று, இதழியல் துறையில் சிறப்பாக செயல்படுவோரைக் கவுரவிக்கும் விதமாக இந்த விருது வழங்கப்படுகிறது.
- மாலினி பார்த்தசாரதி இதழியல்துறையின் சிறப்பான செயல்பாடுகளுக்காக ``பர்ஸ்ட் பேங்க் ஆப் இந்தியா'' 1997-ம் ஆண்டு விருதைப் பெற்றார். 2000-வது ஆண்டில் ஹல்டிகாட்டி விருதைப் பெற்றுள்ளார்.
1971 பாகிஸ்தான் போரில் வெற்றி பெற்ற 50-வது ஆண்டு - இந்திய வீரர்களுக்கு நாடாளுமன்றம் புகழாரம்
- பாகிஸ்தானுடனான போரில் இந்தியா வெற்றி பெற்றதன் 50-வதுஆண்டு தினத்தை முன்னிட்டு வங்கதேச சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கும் இந்திய ராணுவத்தினருக்கும் நாடாளுமன்றத்தில் புகழாரம் செலுத்தப்பட்டது.
- 1971-ம் ஆண்டு பாகிஸ்தானுடனான போரில் இந்தியா வெற்றி பெற்றது. இதனால், வங்கதேசம் உருவானது. இந்தப் போரின் 50-வது ஆண்டு வெற்றி தினம் கொண்டாடப்பட்டது.
- டெல்லியில் உள்ள போர் நினைவுச்சின்னத்தில் பிரதமர் மோடி மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். வெற்றி ஜோதியையும் அவர் ஏற்றினார்
சீனாவுக்கு இறக்குமதி தடை - அமெரிக்க நாடாளுமன்றம் ஒப்புதல்
- சீனாவின் ஜின்ஜியாங் மாகாணத்திலிருந்து பொருள்களை இறக்குமதி செய்வதற்கு தடை விதிக்கும் மசோதாவுக்கு அமெரிக்க நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது.
- அந்த மாகாணத்தில் உற்பத்தி செய்யப்படும் பொருள்கள் கட்டாய உழைப்பு இல்லாமல் உற்பத்தி செய்யப்பட்டவை என தொழிலகங்கள் உறுதிப்படுத்தும் வரை இந்தத் தடை நீடிக்கும்.
- அமெரிக்க நாடாளுமன்ற மேலவையான செனட் சபையில் இந்த மசோதா வியாழக்கிழமை நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதா அதிபரின் ஒப்புதலுக்காக அனுப்பிவைக்கப்படும்.
பெண்களின் குறைந்தபட்ச திருமண வயது 21 - ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல்
- ஊட்டச்சத்து குறைபாட்டில் இருந்து மகள்களை பாதுகாக்க அவர்கள் சரியான நேரத்தில் திருமணம் செய்துகொள்வது அவசியம். பெண்களின் குறைந்தபட்ச திருமண வயதை உயர்த்த திட்டமிட்டுள்ளோம் என்றார்.
- இதனை தொடர்ந்து ஜெயா ஜெட்லி தலைமையில் நிதி ஆயோக் சிறப்புக்குழு அமைக்கப்பட்டு பெண்களின் குறைந்தபட்ச திருமண வயதை மறு நிர்ணயம் செய்யும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தனர்.
- இந்த குழு பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டு பெண்களின் குறைந்தபட்ச திருமண வயதை 18-ல் இருந்து 21 ஆக உயர்த்த பரிந்துரை செய்து தங்கள் ஆய்வறிக்கையை ஒன்றிய அரசிடம் டிசம்பர் மாதம் சர்ப்பித்தது.
- இந்நிலையில், ஜெயா ஜெட்லி தலைமையிலான குழு சமர்ப்பித்த பரிந்துரையின் அடிப்படையில் பெண்களின் குறைந்தபட்ச திருமண வயதை 18-ல் இருந்து 21 ஆக உயர்த்த ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
கத்திப்பாரா நகர்புற சதுக்கம் திறப்பு
- ஆசியாவிலேயே மிகப் பெரிய க்ளோவர் இலை வடிவில் கட்டப்பட்ட இந்த பாலத்தின் கீழ் காலியாக உள்ள 5 லட்சத்து 38 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் பயணிகளுக்கான அடிப்படை வசதிகள் செய்து தர முடிவு செய்யப்பட்டது.
- அதனடிப்படையில், மெட்ரோ ரயில் நிர்வாகம் சார்பில் 14 கோடியே 50 லட்சம் ரூபாய் செலவில் நகர்ப்புற சதுக்கம் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் வடிவமைப்பு, சென்னை நகரின் அடையாளத்தையும் கலாச்சார செழுமையையும் பிரதிபலிக்கக் கூடியதாக அமைக்கப்பட்டு உள்ளது.
- நகர்ப்புற சதுக்கம் 4 மண்டலங்களாக கட்டமைக்கப்பட்டுள்ளது . கைவினைப் பொருட்கள் சந்தை, உணவகங்கள் மற்றும் குழந்தைகள் விளையாடும் இடம் உட்பட இயற்கை எழில் கொஞ்சும் நிலப்பரப்பு வசதிகளை உள்ளடக்கியுள்ளது.
- வணிக வளாகத்தில் மொத்தம் 56 கடைகள் உள்ளன. ஒவ்வொரு கடையும் 200 முதல் 400 சதுர அடியில் கட்டப்பட்டுள்ளன. இதில் 18 கடைகள் உணவு விற்பனைக்காக ஒதுக்கப்பட்டுள்ளது அத்துடன், ஒரே நேரத்தில் 128 கார்கள், 340 இரு சக்கர வாகனங்கள் நிறுத்தும் வகையில் பார்வையாளர்களுக்கு போதிய அளவு வாகன நிறுத்தும் வசதியும் செய்யப்பட்டுள்ளது.
- கத்திப்பாரா மேம்பாலத்தின் கீழ், நகர்ப்புற சதுக்கத்திற்கான பணிகள், 2018ம் ஆண்டு தொடங்கியது. இப்பணிகள் அனைத்தும் அண்மையில் முடிவடைந்த நிலையில் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
தேர்தல் சீர்திருத்த மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்
- மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ள தேர்தல் சீர்திருத்த மசோதாவில், ஆதார் எண்ணுடன் (Aadhaar Card) வாக்காளர் அடையாள அட்டையை (Voter ID) இணைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும், எனினும், இந்த இணைப்பு கட்டாயமாக்கப்படாது. இந்த இணைப்பு தனிநபர் விருப்பத்திற்கு உட்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
- ஒரே நபர் வெவ்வேறு முகவரிகளில் வாக்காளர் அடையாள அட்டையை பெறுவதை தடுக்கும் வகையில் ஆதார் எண் - வாக்காளர் அடையாள அட்டை இணைப்பு செயல்படும் என மசோதாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- வாக்குப்பதிவு தற்போது பள்ளி, கல்லூரி கட்டிடங்களில் நடைபெற்று வரும் நிலையில், இனி தேர்தல் ஆணையம், தேதலுக்கான வாக்குபதிவை நடத்த எந்த கட்டிடத்தையும் தனது கட்டுப்பாட்டில் எடுத்துக்கொள்ளலாம் என்பது இந்த மசோதாவில் உள்ள மற்றொரு முக்கிய அம்சமாகும்.
- எனவே, வணிகவளாகங்கள், திருமண மண்டபங்கள், என எந்த ஒரு கட்டிடத்தையும் தேர்தல் ஆணையம் தனது கட்டுப்பாட்டில் எடுத்துக் கொண்டு அங்கு தேர்தலை நடத்த தேர்தல் ஆணையத்திற்கு அதிகாரம் வழங்கும் வகையில் இந்த தேர்தல் சீர்திருத்த மசோதாவில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.
- 18 வயது நிரம்பிய புதிய வாக்காளர்கள் ஆண்டுக்கு ஒரே ஒரு முறை மட்டுமே தங்கள் பெயரை வாக்காளர் பட்டியலில் சேர்க்க வாய்ப்பு வழங்கப்பட்டு வரும் நிலையில், இனி 18 வயது நிரம்பிய நபர் தனது பெயரை வாக்காளர் பட்டியலில் இணைக்க ஆண்டில் 4 முறை வாய்ப்புகள் வழங்கப்படும்.