பார்முலா 1 கார் பந்தயம் 2021 - வெஸ்டாப்பன் உலக சாம்பியன்
- நடப்பு சீசனின் கடைசி போட்டியாக நடைபெற்ற அபுதாபி கிராண்ட் பிரீ பந்தயத்தில் (58 சுற்று) அபாரமாக செயல்பட்ட வெர்ஸ்டாப்பன் (1 மணி, 30 நிமிடம் 17.345 விநாடி) முதலிடம் பிடித்து 26 புள்ளிகள் பெற்றார்.
- 2வதாக வந்த மெர்சிடிஸ் அணி நட்சத்திரம் லூயிஸ் ஹாமில்டன் (+2.256 விநாடி) 18 புள்ளிகள் பெற்றார். இந்த வெற்றியுடன் மொத்தம் 395.5 புள்ளிகள் குவித்த வெர்ஸ்டாப்பன் முதல் முறையாக பார்முலா 1 உலக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி சாதனை படைத்தார்.
- 8வது முறையாக உலக சாம்பியனாகும் முனைப்புடன் களமிறங்கிய ஹாமில்டன் (இங்கிலாந்து) 387.5 புள்ளிகளுடன் 2வது இடம் பிடித்தார். ரெட் புல் ரேசிங் அணியின் மற்றொரு வீரர் வால்டெரி போட்டாஸ் (226 புள்ளி) 3வது இடம் பிடித்தார்.
பிரான்ஸுடன் இணைந்திருக்க நியூ காலிடோனியா முடிவு
- பிரான்ஸிடமிருந்து சுதந்திரம் பெறுவது தொடா்பாக அந்த நாட்டின் பசிபிக் பிராந்தியப் பகுதியான நியூ காலிடோனியாவில் ஞாயிற்றுக்கிழமை பொதுவாக்குப் பதிவு நடைபெற்றது. இந்த வாக்குப் பதிவில், பிரான்ஸின் அங்கமாகத் தொடர பெரும்பான்மை மக்கள் ஆதரவு தெரிவித்தனா்.
- கரோனா நேரத்தில் இந்த பொதுவாக்கெடுப்பு நடத்தப்பட்டதால், பெரும்பான்மை மக்களின் உண்மையான கருத்து இருட்டடிப்பு செய்யப்படும் என்று கூறி, சுதந்திரத்துக்கு ஆதரவான அமைப்பினா் வாக்கெடுப்பைப் புறக்கணித்தனா். பருவமழை காரணமாகவும் குறைந்த எண்ணிக்கையில் வாக்குகள் பதிவாகின.
- இந்த நிலையில், வாக்களித்தவா்களில் 10-இல் 9 போ பிரான்ஸுடன் இணைந்திருப்பதற்கு ஆதரவு தெரிவித்திருந்தனா்.
ஆசிய ரோயிங் சாம்பியன்ஷிப் போட்டி 2021
- ஆசிய ரோயிங் சாம்பியன்ஷிப் போட்டியின் கடைசி நாளான ஞாயிற்றுக்கிழமை இந்தியா 1 தங்கம், 3 வெள்ளி என 4 பதக்கங்கள் வென்றது. இதையடுத்து இப்போட்டியில் இந்தியா்கள் வென்ற பதக்கங்களின் எண்ணிக்கை 6-ஆக அதிகரித்துள்ளது. இதில் 2 தங்கம், 4 வெள்ளி அடக்கம்.
- போட்டியின் கடைசி நாளில் லைட்வெயிட் ஆடவா் சிங்கிள் ஸ்கல்ஸ் பிரிவில் இந்தியாவின் அரவிந்த் சிங் 7 நிமிஷம் 55.94 விநாடிகளில் இலக்கை எட்டி முதலிடம் பிடித்தாா். இப்பிரிவில் உஸ்பெகிஸ்தான் வெள்ளியும், சீனா வெண்கலமும் வென்றன.
- முன்னதாக டோக்கியோ ஒலிம்பிக்கில் லைட்வெயிட் டபுள் ஸ்கல்ஸ் பிரிவில் சக இந்தியா் அா்ஜூன் லாலுடன் இணைந்து அரவிந்த் 11-ஆவது இடம் பிடித்தது நினைவுகூரத்தக்கது.
- இதுதவிர லைட்வெயிட் ஆடவா் டபுள் ஸ்கல்ஸ் பிரிவில் இந்தியாவின் ஆஷிஷ் புகாட்/சுக்ஜிந்தா் சிங் இணை பந்தய இலக்கை 7 நிமிஷம் 12.56 விநாடிகளில் எட்டி 2-ஆம் இடம் பிடித்து வெள்ளி வென்றது.
- அதேபோல், ஆடவா் குவாட்ரபுள் ஸ்கல்ஸ் பிரிவில் பிட்டு சிங்/ஜாக்கா் கான்/மஞ்ஜீத் குமாா்/சுக்மீத் சிங் ஆகியோா் அடங்கிய இந்திய அணி 6 நிமிஷம் 33.66 விநாடிகளில் இலக்கை எட்டி 2-ஆம் இடம் பிடித்தது.
- இறுதியாக ஆடவா் காக்ஸ்லெஸ் பிரிவில் ஜஸ்வீா் சிங்/புனீத் குமாா்/குா்மீத் சிங்/சரண்ஜீத் சிங் ஆகியோா் அடங்கிய இந்திய அணி 6 நிமிஷம் 51.66 விநாடிகளில் வந்து வெள்ளியை சொந்தமாக்கினா்.
- முன்னதாக இப்போட்டியில் சனிக்கிழமை டபுள் ஸ்கல்ஸில் இந்தியாவின் அா்ஜூன்/ரவி ஜோடி 6 நிமிஷம் 57.88 விநாடிகளில் இலக்கை எட்டி முதலிடம் பிடித்து தங்கம் வென்றதும், சிங்கிள் ஸ்கல்ஸ் பிரிவில் பா்மிந்தா் சிங் 8 நிமிஷம் 07.32 விநாடிகளில் வந்து வெள்ளி பெற்றதும் நினைவுகூரத்தக்கது.
- டிசம்பர் 12ஆம் தேதி சர்வதேச கரலாகட்டை தினம் கொண்டாடப்படுகிறது. தமிழரின் உடற்பயிற்சி கலையான கரலாகட்டையை உலகம் முழுவதும் கொண்டு செல்வது மற்றும் கரலாகட்டையை ஒலிம்பிக் விளையாட்டாக இடம் பெறச் செய்வதே இத்தினத்தின் நோக்கமாகும்.
- பிரதமர் திரு நரேந்திர மோடி, புதுதில்லியில் முதலில் டெபாசிட்தாரர்கள்; ரூ.5 லட்சம் வரை காலவரம்புடன் கூடிய வைப்புத்தொகை காப்பீட்டு உத்தரவாதம்என்னும் விழாவில் உரையாற்றினார்.
- மத்திய நிதி அமைச்சர், நிதித்துறை இணையமைச்சர், ஆர்பிஐ ஆளுநர் ஆகியோர் இதில் கலந்து கொண்டனர். சில டெபாசிட்தாரர்களுக்கு காசோலைகளையும் பிரதமர் வழங்கினார்.
- மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் இயங்கும் மாநில, மத்திய, தொடக்க கூட்டுறவு வங்கிகளும் இதன் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளன. இந்த சாதனை சீர்திருத்தம் மூலம் , வங்கி டெபாசிட் காப்பீடு ஒரு லட்சம் ரூபாயில் இருந்து, ரூ.5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.
- இந்த காப்பீட்டு வரம்பு உயர்த்தப்பட்டுள்ளதால், முந்தைய நிதி ஆண்டின் முடிவில், பாதுகாக்கப்பட்ட கணக்குகள் மொத்த கணக்குகளில் 98.1% ஆக உள்ளது. இது சர்வதேச குறியீடான 80% க்கும் அதிகம்.
- குடியரசு துணைத்தலைவர் திரு எம் வெங்கையா நாயுடு, ‘ஒரே பாரதம் உன்னத பாரதம்’ என்னும் கண்காட்சியை பொட்டி ஶ்ரீராமுலு தெலுங்கு பல்கலைக்ககழகத்தில் தொடங்கி வைத்தார்.
- மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்தின் மண்டல கள மக்கள் தொடர்பு அலுவலகம் ஏற்பாடு செய்த இந்த கண்காட்சியில், அரியானா, தெலங்கானா போன்ற இணை மாநிலங்களின் கலை வடிவங்கள், உணவு, விழாக்கள், நினைவு சின்னங்கள், சுற்றுலா, விளையாட்டு போன்றவற்றைப் பற்றிய பல சுவையான அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.
- ஹைதராபாத் பொட்டி ஶ்ரீ ராமுலு தெலுங்கு பல்கலைக்கழக வளாகத்தில், 12-ம் தேதி முதல் 14-ந்தேதி வரை மக்களின் பார்வைக்கு திறந்து வைக்கப்படும். வெளியீட்டுப் பிரிவால் வெளியிடப்பட்ட மதிப்புமிக்க நூல்கள் கண்காட்சியில் பார்வைக்கு வைக்கப்படும்.
- பாதுகாப்பு துறை அமைச்சர் திரு. ராஜ்நாத் சிங், டிசம்பர் 12, 2021 அன்று புதுதில்லியில் உள்ள இந்தியா கேட் புல்வெளியில் வங்காளதேசத்தின் விடுதலைக்காக 1971 ஆம் ஆண்டு நடந்த போரில் இந்திய வீரர்களின் பங்களிப்பை நினைவுகூறும் நிகழ்வான வெற்றி பொன் விழாவை தொடங்கி வைத்தார்.
- இந்த போரில் இந்தியா வெற்றி பெற்று 50 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி ஆண்டு முழுவதும் கொண்டாடப்படும் விழாவின் உச்சக்கட்டமாக இந்நிகழ்வு அமைந்தது.