14 துறைகளுக்கு ரூ.300 கோடி ஒதுக்கீடு - தமிழக அரசு அரசாணை வெளியீடு
- மழை வெள்ள பாதிப்புகளை மத்திய உள்துறை இணைச் செயலாளர் ராஜீவ் சர்மா தலைமையிலான 7 பேர் கொண்ட குழு தமிழகம் வந்து ஆய்வு மேற்கொண்டனர்.
- தமிழக அரசு சார்பில் மத்திய அரசிடம் வெள்ள நிவாரணம் வழங்க கோரிக்கையும் வைத்துள்ளது. இந்நிலையில், மழை வெள்ள பாதிப்பை சரி செய்ய 14 துறைகளுக்கு ரூ.300 கோடி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிட்டது.
- தமிழ்நாடு அரசு சென்னை மாநகராட்சிக்கு ரூ.132 கோடி ஒதுக்கீடு செய்து உத்தரவு பிறப்பித்துள்ளது.
2 பல்கலைக்கழகத்திற்கு புதிய துணைவேந்தர்களை நியமித்து ஆளுநர் உத்தரவு
- தஞ்சை தமிழ்ப் பல்கழைக்கழகம், தமிழ்நாடு உடற்கல்வி மற்றும் விளையாட்டு பல்கலைக்கழகத்திற்கு புதிய துணைவேந்தர்களை நியமித்து ஆளுநர் ஆர்.என்.ரவி உத்தரவிட்டுள்ளார்.
- அதன்படி, தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழக துணைவேந்தராக வி.திருவள்ளுவன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவர் அடுத்த 3 ஆண்டுகளுக்கு தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக திருவள்ளுவன் இருப்பார்.
- அதேபோல தமிழ்நாடு உடற்கல்வி & விளையாட்டு பல்கலைக்கழக துணைவேந்தராக எம்.சுந்தர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவரும் அடுத்த 3 ஆண்டுகளுக்கு தமிழ்நாடு உடற்கல்வி & விளையாட்டு பல்கலைக்கழக துணைவேந்தராக எம்.சுந்தர் இருப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நமக்கு நாமே திட்டம் மற்றும் நகர்புற வேலை வாய்ப்புத் திட்டத்தை தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்
- தமிழகத்தில் அனைத்து மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் 'நமக்கு நாமே' திட்டத்தினை ரூ.300 கோடி மதிப்பில் முதலமைச்சர் ஸ்டாலின் சேலத்தில் தொடங்கி வைத்திருக்கிறார்.
- இதன் மூலம், சென்னை மாநகராட்சி, சேலம், மதுரை, கோவை, நெல்லை உள்பட அனைத்து 14 மாநகராட்சிகள், அனைத்து 121 நகராட்சிகள் மற்றும் அனைத்து 528 டவுன் பஞ்சாயத்துகளிலும் நமக்கு நாமே திட்டம் செயல்படுத்தப்படும்.
- இதேபோல், இந்த நிகழ்ச்சியில் தமிழகத்தில் ரூ.100 கோடியில் நகர்ப்புற வேலைவாய்ப்பு திட்டத்தையும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் துவக்கி வைத்தார்.
- நடப்பாண்டில் சென்னை மாநகராட்சியின் 2 மண்டலங்கள், இதர மாநகராட்சிகளில் தலா ஒரு மண்டலம், 7 நகராட்சிகள், 37 பேரூராட்சிகளில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
- இந்த திட்டத்துக்காக, ஒவ்வொரு குடும்பத்திலும் உள்ள வேலைதேடுவோர் பதிவு செய்யப்பட்டு, அவர்களுக்கு பணியாளர் அட்டை வழங்கப்பட உள்ளது.
மேம்படுத்தப்பட்ட புதிய வகை பினாகா ராக்கெட் சோதனை வெற்றி
- பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (டிஆர்டிஓ) மேம்படுத்தப்பட்ட பினாகா ராக்கெட் அமைப்பை தனியார் நிறுவனத்துடன் இணைந்து தயாரித்துள்ளது. இந்த ராக்கெட் அமைப்பின் சோதனை கடந்த 3 நாட்கள் ராஜஸ்தானின் பொக்ரானில் நடந்துள்ளது.
- இதில் பல்வேறு தூரங்களுக்கு 24 பினாகா ராக்கெட்டுகள் ஏவி சோதிக்கப்பட்டன. பினாகா ராக்கெட் தரையில் இருந்து ஏவக் கூடியதாகும். ஏற்கனவே உள்ள பினாகா எம்கே-1 ராக்கெட் அமைப்பு 40 கிமீ தூர இலக்கையும், பினாகா 2 வகை 60 கிமீ தூர இலக்கையும் தகர்க்கும்.
ரூ.9800 கோடி மதிப்பில் சர்யு நஹர் தேசிய திட்டத்தை தொடங்கி வைத்த பிரதமர் மோடி
- பிரதமர் நரேந்திர மோடி ரூ.9,800 கோடி மதிப்பிலான "சர்யு நஹர் தேசிய திட்டம்"(நீர் கால்வாய் திட்டத்தை) உத்தரபிரதேச மாநிலம் பல்ராம்பூரில் தொடங்கி வைத்தார்.
- இந்த திட்டத்தின் மொத்த செலவு ரூ. 9800 கோடி, கடந்த 4 ஆண்டுகளில் மட்டும் இதற்காக ரூ.4600 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் ககாரா, சரயு, ரப்தி, பங்கங்கா மற்றும் ரோகினி ஆகிய ஐந்து நதிகளை இணைக்கும் திட்டம் இதில் அடங்கும். இந்த திட்டம் 14 லட்சம் ஹெக்டேர் நிலங்களுக்கு பாசனத்திற்கு தண்ணீர் கிடைக்கும்.
ஜனநாயகத்திற்கான உச்சி மாநாட்டில் உத்திரமேரூர் கல்வெட்டை சுட்டிக்காட்டிய பிரதமர்
- அமெரிக்காவில் நடந்த ஜனநாயகத்திற்கான காணொலி உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பேசுகையில், 'உலகின் மிகப்பெரிய ஜனநாயகத்தைப் பிரதிநிதித்துவம் செய்வதற்காக நான் பெருமிதம் கொள்கிறேன்.
- லிச்சாவி, சாக்யா போன்ற நகரங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களாட்சி அரசுகள் 2,500 ஆண்டுகளுக்கு முன்பே மலர்ந்துள்ளன. இதே ஜனநாயக உணர்வை 10ம் நூற்றாண்டின் 'உத்திரமேரூர்' கல்வெட்டில் காணமுடியும்.
ஆசிய ரோயிங் சாம்பியன்ஷிப் 20221
- தாய்லாந்தில் நடைபெறும் இந்தப் போட்டியில் டபுள் ஸ்கஸ்லில் அா்ஜூன்/ரவி ஜோடி 6 நிமிஷம் 57.88 விநாடிகளில் இலக்கை எட்டி முதலிடம் பிடித்தது.
- சீனாவின் கிங் லி/லுடோங் ஜாங் இணை 7 நிமிஷம் 02.37 விநாடிகளில் வந்து 2-ஆம் இடமும், உஸ்பெகிஸ்தானின் டாவ்ஜோன் டாவ்ரோனோவ்/அப்துல்லா முகமதியேவ் இணை 7 நிமிஷம் 07.73 விநாடிகளில் வந்து 3-ஆம் இடமும் பிடித்தன.
- இதற்கு முன் இந்த சாம்பியன்ஷிப்பில் கடந்த 2019-இல் இந்திய ஜோடி வெண்கலம் வென்றதே அதிகபட்சமாக இருந்தது.
- மறுபுறம், சிங்கிள் ஸ்கல்ஸ் பிரிவில் பிரிவில் பா்மிந்தா் சிங் 8 நிமிஷம் 07.32 விநாடிகளில் வந்து 2-ஆவது இடம் பிடித்தாா். உஸ்பெகிஸ்தானின் கொல்முா்ஸேவ் ஷக்போஸ் 7 நிமிஷம் 56.30 விநாடிகளில் இலக்கை எட்டி தங்கமும், இந்தோனேசியாவின் மிமோ 8 நிமிஷம் 10.05 விநாடிகளில் வந்து வெண்கலமும் பெற்றனா்.
64-வது தேசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டி
- 64-வது தேசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டி மத்தியபிரதேச மாநிலத்தில் போபாலில் நடைபெற்றது. இதில் நடைபெற்ற ஆடவருக்கான 10 மீட்டர் ஏர்ரைபிள் பிரிவில் முன்னாள் நம்பர் ஒன் வீரராக ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த திவ்யனாஷ் சிங் பன்வார்(வயது 19) இறுதிச்சுற்றில் 250 புள்ளிகள் எடுத்து தங்கப்பதக்கத்தை வென்றார்.
- இதையடுத்து மராட்டிய வீரர் ருத்ராங்ஸ் பட்டீல் 249.3 புள்ளிகள் எடுத்து வெள்ளிப்பதக்கமும், அசாம் வீரரான ஹிரிடா ஹசாரிகா 228.2 புள்ளிகள் எடுத்து வெண்கலப்பதக்கமும் வென்றுள்ளனர்.
- இதைதொடர்ந்து ஜூனியர் பிரிவு போட்டியிலும் திவ்யனாஷ் சிங் பன்வார் 252.2 புள்ளிகள் பெற்று தங்கப் பதக்கத்தை வென்றுள்ளார். இதன்மூலம் ஒரே நாளில் அவர் 2 தங்க பதக்கங்களை வென்றுள்ளார்.
- தேசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டியில் ஷாட் கன் பிரிவில் ஓஎன்ஜிசி வீரா் அங்குா் மிட்டல் தங்கப் பதக்கம் வென்றாா்.
- அந்தப் பிரிவில் அவா் 43 புள்ளிகளுடன் முதலிடம் பிடிக்க, ராஜஸ்தான் வீரா் ஆதித்யா பரத்வாஜ் 40 புள்ளிகளுடன் வெள்ளியும், உத்தர பிரதேசத்தின் ரயான் ரிஸ்வி 33 புள்ளிகளுடன் வெண்கலமும் வென்றனா்.
- இதனிடையே, போபாலில் நடைபெறும் ரைஃபிள் பிரிவு போட்டியில் மத்திய பிரதேசத்தின் பாந்த்வி சிங் 50 மீட்டா் புரோன் பிரிவில் 626 புள்ளிகளுடன் தங்கம் வென்றாா். அவா் சீனியா், ஜூனியா் என இரு பிரிவுகளிலுமே முதலிடம் பிடித்தாா்.
- அதே போட்டியில் ஆடவா் 10 மீட்டா் ஏா் ரைஃபிள் பிரிவில் திவ்யான்ஷ் பன்வாா் 250 புள்ளிகளுடன் தங்கம் வென்றாா். மகாராஷ்டிரத்தின் ருத்ராங்க்ஷ் பாலாசாஹேப் 249.3 புள்ளிகளுடன் 2-ஆம் இடமும், அஸ்ஸாமின் ஹிருதய் ஹஸாரிகா 228.2 புள்ளிகளுடன் 3-ஆம் இடமும் பிடித்தனா். ஜூனியா் பிரிவிலும் திவ்யான்ஷ் முதலிடமும், ருத்ராங்க்ஷ் 2-ஆம் இடமும், தில்லியின் பாா்த் மகிஜா 3-ஆம் இடமும் பிடித்தனா்.
- கலப்பு அணிகள் டிராப் பிரிவில் மத்திய பிரதேசம் தங்கமும், ஹரியாணா வெள்ளியும், தமிழகம் வெண்கலமும் வென்றது.
உலக செஸ் சாம்பியன்ஷிப் 5வது முறையாக வென்றார் கார்ல்சென்
- துபாய் எக்ஸ்போவில் ஒரு பகுதியாக நடந்த இந்த நிகழ்ச்சியில் நடப்பு உலக சாம்பியனான நார்வேவை சேர்ந்த மேக்னஸ் கார்ல்சென் மற்றும் ரஷ்யாவை சேர்ந்த நேப்போமோனியச்சி ஆகியோர் மோதினர்
- எப்போதும் 12 சுற்றுகளுடன் நடைபெறும் இந்த தொடர் முதல் முறையாக 14 சுற்றுகளுடன் போட்டிகள் நடைபெற்றன
- இந்த வெற்றியின் மூலம் கார்ல்சென் ஏழரை புள்ளிகளும், நேப்போ மூன்றரை புள்ளிகளும் பெற்றனர். கார்ல்செனுக்கு 1.2 மில்லியன் யூரோ பரிசுத் தொகையாக வழங்கப்பட்டது.
தேசிய பளுதூக்குதல் சாம்பியன்ஷிப்
- ஆடவருக்கான 67 கிலோ பிரிவில் ஜெரிமி லால்ரினுன்கா, ஸ்னாட்ச் பிரிவில் 141 கிலோ, கிளீன் & ஜொக் பிரிவில் 164 கிலோ என மொத்தமாக 305 கிலோ எடையைத் தூக்கி முதலிடம் பிடித்தாா். ஸ்னாட்ச் பிரிவில் அவா் தூக்கிய எடை தேசிய சாதனையாகும்.
- ஆடவா் 61 கிலோ பிரிவில் குருராஜா 265 கிலோ எடையைத் தூக்கி வெள்ளிப் பதக்கம் வென்றாா்.
- மகளிருக்கான 55 கிலோ எடைப் பிரிவில் வித்யாராணி தேவி ஸ்னாட்ச் பிரிவில் 84 கிலோ, கிளீன் & ஜொக் பிரிவில் 114 கிலோ என மொத்தமாக 198 கிலோ எடையைத் தூக்கி 2-ஆம் இடம் பிடித்தாா். நைஜீரியாவின் அதிஜத் ஒலாரினோயே 203 கிலோ எடையை (90+113) தூக்கி தங்கம் வென்றாா்.
சீனியா் மகளிா் தேசிய கால்பந்து சாம்பியன்ஷிப் மணிப்பூா் சாம்பியன்
- சீனியா் மகளிா் தேசிய கால்பந்து சாம்பியன்ஷிப் கேரள மாநிலம், கோழிக்கோட்டில் நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் நிா்ணயிக்கப்பட்ட நேரத்தில் இரு அணிகள் தரப்பிலுமே கோல் அடிக்கப்படவில்லை.
- பின்னா் வெற்றியாளரை தீா்மானிக்க நடத்தப்பட்ட பெனால்டி ஷூட் அவுட்டில் மணிப்பூா் 2-1 என்ற கோல் கணக்கில் ரயில்வேஸை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை தக்க வைத்துக் கொண்டது.
- இந்த ஒட்டுமொத்த போட்டியிலும் சிறந்த கோல் கீப்பராக மணிப்பூா் அணியின் ஓக்ரம் ரோஷினி தேவி தோவாகினாா். அதிக கோல் அடித்தவராக தமிழக வீராங்கனை சந்தியாவும், மதிப்பு மிக்க வீராங்கனையாக மணிப்பூரின் ஐரோம் பரமேஷ்வரியும் தோவாகினா். அவா்கள் மூவருக்கும் தலா ரூ.25,000 ரொக்கப் பரிசு வழங்கப்பட்டது.
பிரதமரின் கரீப் கல்யாண் அன்ன யோஜனா திட்டத்தின் கீழ் தமிழகத்திற்கு 34,35,163.56 மெட்ரிக் டன் உணவு தானியம் ஒதுக்கீடு
- பிரதமரின் கரீப் கல்யாண் அன்ன யோஜனா திட்டத்தின் 5-வது கட்டம் 2022-ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரை 4 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
- இத்திட்டத்தின் கீழ், 2020-21 மற்றும் 2021-22ஆம் நிதியாண்டில், டிசம்பர் 6ம் தேதி வரை மொத்தம் ரூ.1,72,358.13 கோடி செலவிடப்பட்டுள்ளது.
- இத்திட்டத்தின் கீழ் மொத்தம் 75987138.23 மெட்ரிக் டன் உணவு தானியம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்திற்கு 34,35,163.56 மெட்ரிக் டன் உணவு தானியம் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
- அதில் 22,05,638 மெட்ரிக் டன் தானியங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளது. இதற்காக 10, 283.81 கோடி செலவு செய்யப்பட்டது. இதன்மூலம் மொத்தம் 364.69 லட்சம் பேர் பயனடைந்துள்ளனர்.
புதிய உணவுப் பதப்படுத்துதல் கொள்கை
- உணவுப் பதப்படுத்துதல் துறை இந்திய பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. இருப்பினும், சில முக்கிய சவால்களை அத்துறை எதிர்கொண்டு வருகிறது.
- விநியோகச் சங்கிலி, உள்கட்டமைப்பு, குறைந்த அளவு பதப்படுத்துதல் தொழில்நுட்ப இடைவெளி, உள்ளிட்ட இந்த சவால்களை சமாளிக்கும் வகையில், வரைவு தேசிய உணவுப் பதப்படுத்துதல் கொள்கை உத்திகளை வகுத்துள்ளது. பல்வேறு அமைச்சகங்கள், துறைகள் வழங்கும் சேவைகளை ஒருங்கிணைக்க இந்தக் கொள்கை வழிவகுக்கிறது.
- விநியோகச் சங்கிலி உள்கட்டமைப்பை வலுப்படுத்த கணிசமான அளவுக்கு முதலீட்டை அதிகரித்தல், அழுகும் பொருட்களை பதப்படுத்தல் திறனை விரிவாக்குதல் போன்றவை இந்தக் கொள்கையின் முக்கிய அம்சங்களாகும்.
தேசிய சுகாதார திட்டத்தின் கீழ் உள்ள சுகாதார திட்டங்கள் - 2021ம் ஆண்டில் தமிழகத்துக்கு ரூ.1522.71 கோடி வழங்கியது மத்திய அரசு
- தேசிய சுகாதார திட்டத்தின் கீழ் மத்திய அரசு, மருத்துவமனைகளை வலுப்படுத்த நிதி மற்றும் தொழில்நுட்ப ஆதரவுகளை வழங்குகிறது.
- மகப்பேறு சுகாதாரம், குழந்தை ஆரோக்கியம், பதின்வயதினரின் சுகாதாரம், குடும்ப கட்டுப்பாடு, உலகளாவிய நோய் தடுப்பு திட்டம், காசநோய் போன்ற முக்கிய நோய்கள், மலேரியா, டெங்கு, காலா அசார், தொழுநோய் போன்றவற்றுக்கு தேசிய சுகாதார திட்டத்தின் கீழ் உதவி அளிக்கப்படுகிறது.
- ஜனனி சிசு சுரக்ஷா திட்டம், ராஷ்ட்ரிய பால் ஸ்வஸ்த்யா திட்டம், இலவச மருந்துகள் திட்டம், இலவச பரிசோதனை சேவைகள், நடமாடும் மருத்துவ வசதிகள், தொலைதூர மருந்துவ சேவைகள், ஆம்புலன்ஸ் சேவைகள், தேசிய டையாலிசிஸ் திட்டம் போன்றவையும், தேசிய சுகாதார திட்டம் ஆதரவுடன் அனைத்து மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களில் செயல்படுத்தப்படுகிறது. உள்ள மருத்துவமனைகளில் அமல்படுத்தப்பட்டுள்ளது.
- ஆயுஷ்மான் பாரத் சுகாதார திட்டம் மூலம் நாடு முழுவதும் 80,000-க்கும் மேற்பட்ட சுகாதார மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. தேசிய சுகாதார திட்டத்தின் கீழ், தமிழகத்துக்கு 2020-21ம் நிதியாண்டில் மத்திய அரசு ரூ.1522.71 கோடியை வழங்கியுள்ளது.
உணவு பாதுகாப்பு உதவியாக மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு ரூ.12,882.11 கோடி
- கொரோனா காலத்தில், நாடு முழுவதும் அங்கன்வாடி மையங்கள் மூடப்பட்டிருந்ததால், ஊட்டசத்து ஆதரவு தொடர்ந்து கிடைப்பதை உறுதி செய்ய பயனாளிகளுக்கு, அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் உதவியாளர்கள் மூலம் துணை ஊட்டசத்து உணவு பொருட்கள் 15 நாட்களுக்கு ஒரு முறை வீடுகளுக்கே சென்று வழங்கப்பட்டது.
- மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுக்கு உணவுப் பாதுகாப்பு உதவித் தொகை வழங்க, ரூ.12882.11 கோடியை மத்திய அரசு வழங்கியது. மேலும் 34.45 மெட்ரிக் டன் உணவு தானியங்களும் ஒதுக்கீடு செய்யப்பட்டன.
- இதோடு, மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் தங்கள் குறைந்த பட்ச கட்டாயப் பங்காக ரூ.5826.96 கோடியை வழங்கின. இதன் மூலம் 2020-21ம் ஆண்டில் 11.20 லட்சம் பள்ளிகளில் பயிலும் 11.80 கோடி குழந்தைகள் பயனடைந்தனர்.