Type Here to Get Search Results !

சர்வதேச ஊழல் எதிர்ப்பு தினம் / INTERNATIONAL ANTI CORRUPTION DAY

TAMIL

  • உலகம் முழுவதும் பாரபட்சம் இன்றி பரவி இருக்கும் ஊழலை ஒழிப்பதன் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 9-ம் தேதி சர்வதேச ஊழல் எதிர்ப்பு தினம் (international Anti-Corruption Day) அனுசரிக்கப்படுகிறது.
  • ஒரு நாட்டின் நிலையான வளர்ச்சி இலக்குகளை நோக்கிய முன்னேற்றத்தை தடுப்பதில் ஊழலின் பங்கு மிக அதிகம். நமது சமூகத்தின் ஒவ்வொரு பகுதியையும் ஊழல் பாதிக்கிறது மற்றும் ஊழல் என்ற கொடூர செயல் ஜனநாயகத்திற்கு அச்சுறுத்தலாகவும் கருதப்படுகிறது. 
  • உலகளாவிய நோயாக இருந்து வரும் ஊழலை எதிர்த்துப் போராடுவதற்கான வழிகளை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும் சர்வதேச ஊழல் எதிர்ப்பு தினம் உலகளவில் அனுசரிக்கப்பட்டு வருகிறது.
சர்வதேச ஊழல் எதிர்ப்பு தினத்தின் வரலாறு மற்றும் முக்கியத்துவம்
  • கடந்த 2003-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சர்வதேச ஊழலுக்கு எதிராக ஐக்கிய நாடுகள் சபை தனது முதல் மற்றும் முக்கிய படியை எடுத்து வைத்தது. 
  • ஐக்கிய நாடுகளின் பொது சபை (UNGA) 2003-ஆம் ஆண்டு அக்டோபர் 31 அன்று ஊழலுக்கு எதிரான ஐக்கிய நாடுகளின் தீர்மானத்தை ஏற்று கொண்டது. 
  • இந்த தீர்மானம் ஏற்று கொள்ளப்பட்டு நிறைவேற்றப்பட்டதிலிருந்து, ஆண்டுதோறும் டிசம்பர் 9 அன்று சர்வதேச ஊழல் எதிர்ப்பு தினம் அனுசரிக்கப்படுகிறது.
  • ஊழலை கையாள்வதில் தனிநபர்கள், அரசு சாரா நிறுவனங்கள், சட்ட அமலாக்கங்கள், அரசாங்கங்கள் மற்றும் ஊடகவியலாளர் உட்பட சமூகத்தின் ஒவ்வொரு பகுதியினரும் தங்களின் பங்கை முன்னிலைப்படுத்த இந்த நாள் முயல்கிறது.
  • ஒவ்வொரு ஆண்டும் 'ஊழல் புலனாய்வுக் குறியீடு' என்ற அறிக்கை வெளியிடப்படுகிறது. இந்த அறிக்கை எந்தெந்த நாடுகளில் எவ்வளவு ஊழல் நடந்து வருகிறது, ஊழலை கட்டுப்படுத்த என்ன நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன என்பதை காட்டுகிறது. 
  • ஆனால் கடந்த 15 ஆண்டுகளில் எந்த நாடும் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை காணவில்லை என்பதே கசப்பான உண்மை.
  • ஒரு அன்றாட சர்வதேச நிகழ்வாக இருக்கும் ஊழலுக்கான உலகளாவிய செலவு உலகின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 5% அல்லது $2.6 டிரில்லியன் ஆகும் என ஐ.நா சபை கூறுகிறது. 
  • ஊழலை தடுப்பது சமூகத்திற்கு முக்கியமானது. ஏனெனில் இது நிலையான ஜனநாயகத்தை ஊக்குவிக்கும் அதே நேரத்தில், சுகாதாரம் மற்றும் பிற அத்தியாவசிய சேவைகளுக்கான சிறந்த அணுகலைப் பெற மக்களுக்கு உதவும். 
  • நிலையான வளர்ச்சி இலக்குகளை அடைவதில் ஊழல் மிகப்பெரிய தடையாக உள்ளது என்பதை சர்வதேச ஊழல் எதிர்ப்பு தினம் மக்களுக்கு எடுத்துரைக்கிறது.
கருப்பொருள்
  • நடப்பாண்டு சர்வதேச ஊழல் எதிர்ப்பு தினமானது ஊழலுக்கு எதிராக மாநிலங்கள், அரசு அதிகாரிகள், அரசு ஊழியர்கள், சட்ட அமலாக்க அதிகாரிகள், ஊடக பிரதிநிதிகள், தனியார் துறை, சிவில் சமூகம் மற்றும் பலவற்றை உள்ளடக்கிய ஒவ்வொரு நபரின் உரிமைகள் மற்றும் பொறுப்புகளை முன்னிலைப்படுத்துகிறது.
  • இந்த ஆண்டுக்கான சர்வதேச ஊழல் எதிர்ப்பு தினத்தின் கருப்பொருள் "உங்கள் உரிமை, உங்கள் பங்கு: ஊழலை வேண்டாம் என்று சொல்லுங்கள்" (Your right, your role: Say no to corruption) என்பதாகும்.
  • ஊழலை எதிர்த்துப் போராடுவதிலும் தடுப்பதிலும் ஒவ்வொரு தனிநபருக்கும் பங்கு உண்டு என்பதை இந்த தீம் அடிக்கோடிட்டு காட்டுகிறது.
ENGLISH
  • International Anti-Corruption Day is observed every year on December 9 to raise awareness about the importance of eradicating corruption from all over the world. The role of corruption in preventing progress towards a country's sustainable development goals is enormous. 
  • Corruption affects every part of our society and the heinous act of corruption is also seen as a threat to democracy. International Anti-Corruption Day is also observed worldwide to raise awareness about ways to combat corruption, which is a global disease.
History and significance of International Anti-Corruption Day
  • In December 2003, the United Nations took its first and foremost step against international corruption. The United Nations General Assembly (UNGA) adopted the United Nations Resolution Against Corruption on October 31, 2003.
  • International Anti-Corruption Day has been observed on December 9 every year since the resolution was adopted and passed. This day seeks to highlight the role of individuals, NGOs, law enforcement, governments and every section of society, including the media, in dealing with corruption.
  • The 'Corruption Investigation Code' report is published every year. This report shows how much corruption is going on in which countries and what steps are being taken to control corruption.
  • But the bitter truth is that no country has seen significant progress in the last 15 years. The UN estimates that the global cost of corruption, which is a daily international phenomenon, is 5% of world GDP, or $ 2.6 trillion.
  • Preventing corruption is important for the community. Because while it promotes sustainable democracy, it also helps people to have better access to health and other essential services. 
  • International Anti-Corruption Day reminds people that corruption is the biggest obstacle to achieving sustainable development goals.
Theme
  • The current International Anti-Corruption Day highlights the rights and responsibilities of every individual, including states, government officials, civil servants, law enforcement officials, media representatives, the private sector, civil society and more.
  • The theme of this year's International Anti-Corruption Day is "Your Right, Your Role: Say No to Corruption". This theme underscores the role of each individual in combating and preventing corruption.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel