பாகிஸ்தான் கடற்படைக்கு அதிநவீன போர்த்திறன்கள் கொண்ட போர்க்கப்பலை உருவாக்கித் தர சீன அரசின் கப்பல் கட்டும் நிறுவனமான சிஎஸ்எஸ்சி ஒப்பந்தம்
- பாகிஸ்தான் கடற்படைக்கு அதிநவீன போர்த்திறன்கள் கொண்ட 4 டைப் 054ஏ/பி போர்க்கப்பலை உருவாக்கித் தர சீன அரசின் கப்பல் கட்டும் நிறுவனமான சிஎஸ்எஸ்சி ஒப்பந்தம் செய்துள்ளது.
- இந்த ஒப்பந்தத்தின்படி, முதல் கப்பல் சீன தலைநகர் பீஜிங்கில் நடந்த விழாவில் பாகிஸ்தானிடம் சீனா ஒப்படைத்துள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளது. இந்த கப்பலுக்கு பிஎன்ஸ் தக்ரில் என பெயரிடப்பட்டுள்ளது.
- இந்த கப்பலில் தரையிலிருந்து தரையிலும், தரையிலிருந்து வானிலும், கடலுக்கு அடியில் உள்ள இலக்கையும் தகர்க்கும் ஏவுகணைகள், அதிநவீன கண்காணிப்பு ரேடார்கள் பொருத்தப்பட்டுள்ளன. குறிப்பாக, இந்த கப்பல் எதிரிநாட்டு ரோடாரில் இருந்து தப்பிக்கக் கூடிய நவீன தொழில்நுட்ப திறன் கொண்டது.
இந்தியா முழுவதும் 17,000 EV சார்ஜிங் ஸ்டேஷன்கள், இந்தியன் ஆயில் மற்றும் பாரத் பெட்ரோலியம் முடிவு
- இந்தியன் ஆயில் மற்றும் பாரத் பெட்ரோலியம் ஆகிய நிறுவனங்களும் நாடு முழுவதும் புதிய சார்ஜிங் ஸ்டேஷன்களை அமைக்கும் முடிவில் இருக்கின்றன.
- இந்தியா முழுவதும் இந்தியன் ஆயில் நிறுவனத்துக்கு 27,500 பெட்ரோல் மற்றும் டீசல் ஸ்டேஷன்கள் மற்றும் 448 எலக்ட்ரிக் சார்ஜிங் ஸ்டேஷன்கள் இருக்கின்றன.
- அடுத்த மூன்று ஆண்டுகளில் இந்தியா முழுவதும் 10,000 எலக்ட்ரிக் சார்ஜிங் ஸ்டேஷன்களை அமைக்கும் முடிவில் இருக்கிறது இந்தியன் ஆயில்.
- இந்தத் திட்டத்திற்காக டாடா பவர், பவர் கிரிட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா, பெல், ஓலா, ஃபோர்டம், மஹிந்திரா மற்றும் ஹூண்டாய் ஆகிய நிறுவனங்களுடன் கைகோர்த்திருக்கிறது இந்தியன் ஆயில்.
நடப்பு நிதியாண்டின் வளர்ச்சி 10.5 சதவீதமாக இருக்கும்
- நாட்டின் பொருளாதார வளர்ச்சி, நடப்பு நிதியாண்டில் 10.5 சதவீதமாக இருக்கும் என, உள்நாட்டு தர நிர்ணய நிறுவனமான 'பிரிக்வொர்க் ரேட்டிங்ஸ்' தெரிவித்துள்ளது.
- இந்நிறுவனம், இதற்கு முன் பொருளாதார வளர்ச்சி 9 சதவீதமாக இருக்கும் என்று கணித்து அறிவித்திருந்த நிலையில், தற்போது 10 - 10.5 சதவீதமாக இருக்கும் என திருத்தி அறிவித்து உள்ளது.
4 ஓவர் மெய்டன் வீசி இந்திய பந்துவீச்சாளர் உலக சாதனை
- சையத் முஷ்டாக் அலி டி20 தொடர், கடந்த 4ம் தேதி துவங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மொத்தம் 38 அணிகள் பங்கேற்று இந்த தொடரில் நடந்த லீக் போட்டியில் மணிப்பூர்-விதர்பா அணிகள் மோதின.
- மணிப்பூர் பேட்ஸ்மேன்களுக்கு எதிராக 4 ஓவர்கள் வீசி ஒரு ரன்கூட விட்டுக்கொடுக்காத அவர், இரண்டு விக்கெட்களையும் கைப்பற்றி சாதித்தார். இது உலக சாதனையாக பார்க்கப்படுகிறது. இதற்கு முன், உலகின் எந்த ஒரு பந்துவீச்சாளரும் டி20 கிரிக்கெட்டில் 4 ஓவர்களையும் மெய்டன் வீசியது கிடையாது. இதனால் அக்ஷய் கர்நேவரை இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
'லாஜிஸ்டிக்ஸ்' குறியீடு 2021
- பொருட்களின் உற்பத்தியில் துவங்கி அதை பயனாளர்களிடம் கொண்டு சேர்ப்பது வரையிலான பணி, 'லாஜிஸ்டிக்ஸ்' என அழைக்கப்படுகிறது.
- இத்துறையில் மாநிலங்களின் திறனை மத்திய வர்த்தக துறை அமைச்சகம் ஆண்டுதோறும் மதிப்பிட்டு, லாஜிஸ்டிக்ஸ் குறியீட்டு பட்டியலை, 2018 முதல் வெளியிட்டு வருகிறது.
- கடந்த 2018 - 19ல் வெளியிடப்பட்ட குறியீட்டில் குஜராத் முதலிடம் வகித்தது. கொரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டுக்கான குறியீட்டு பட்டியல் வெளியிடப்படவில்லை.
- இந்நிலையில் நடப்பு ஆண்டுக்கான குறியீட்டு பட்டியலை மத்திய வர்த்தகத்துறை அமைச்சர் பியுஷ் கோயல் வெளியிட்டார். மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கான லாஜிஸ்டிக்ஸ் குறியீடு வெளியிடப்பட்டு உள்ளது.
- இதில், தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக குஜராத் முதலிடம் வகிக்கிறது. ஹரியானா, பஞ்சாப், தமிழகம் மற்றும் மஹாராஷ்டிரா முறையே அடுத்தடுத்த இடங்களை வகிக்கின்றன. யூனியன் பிரதேசங்களில் ஜம்மு - காஷ்மீர் மற்றும் டில்லி முன்னிலை வகிக்கின்றன.
- ப்ராஜக்ட்-75 திட்டத்தின் நான்காவது நீர்மூழ்கிக் கப்பலான யார்டு 11878 இந்திய கடற்படையிடம் ஒப்படைக்கப்பட்டது.
- ஸ்கார்ப்பியன் வகையைச் சேர்ந்த ஆறு நீர்மூழ்கிக் கப்பல்களை கட்டுவது ப்ராஜக்ட்-75 திட்டத்தில் அடங்கும். இந்த வகை நீர்மூழ்கிக் கப்பல்கள், பிரான்ஸ் நாட்டின், திருவாளர்கள் நேவல் குரூப் ஒத்துழைப்புடன், மும்பை மசகான் கப்பல் கட்டும் நிறுவனத்தில் தாயரிக்கப்பட்டு வருகின்றன. “
- அருணாச்சலப் பிரதேசத்தின் தொலைதூரப் பகுதியில் உள்ள கிமினில் வடகிழக்கு பழங்குடியினருக்கான புதிய உயிரி தொழில்நுட்ப (பயோடெக்னாலஜி) மையத்தை மத்திய இணை அமைச்சருமான டாக்டர் ஜிதேந்திர சிங் இன்று திறந்து வைத்தார்.
- இந்தத் திட்டத்தின் மூலம் மாணவர் பயிற்சித் திட்டம், தொழில்நுட்பப் பயிற்சித் திட்டம் (TTP), ஆசிரியப் பயிற்சித் திட்டம் மற்றும் தொழில் முனைவோர் மேம்பாட்டுத் திட்டம் உள்ளிட்ட நான்கு வெவ்வேறு வகையான பயிற்சித் திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.