இந்தியா மற்றும் பிரான்ஸ் இடையேயான ராணுவ உறவு தொடர்பான ஆண்டு கூட்டம்
- இந்தியா மற்றும் ஐரோப்பிய நாடான பிரான்ஸ் இடையேயான ராணுவ உறவு தொடர்பான ஆண்டு கூட்டம் பாரிசில் நடந்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரோனின் வெளிநாட்டு ஆலோசகர் இமானுவல் போன்னியை, நம் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் சந்தித்து பேசினார்.
- பிரதமர் நரேந்திர மோடியின் 'ஆத்மநிர்பர் பாரத்' எனப்படும் சுயசார்பு இந்தியா கொள்கை மற்றும் இந்தியாவின் ராணுவ தளவாடத் தொழில் உற்பத்தியை ஊக்குவிக்க அனைத்து உதவிகளையும் செய்யத் தயாராக இருப்பதாக பிரான்ஸ் கூறியுள்ளது. இதற்கு தேவையான ஆராய்ச்சி மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சியில் முழுமையாக பங்கேற்பதாக கூறியுள்ளது.
- இந்தோ - பசிபிக் பிராந்தியத்தில் அமைதியை நிலைநாட்டும் தன் உறுதியை நிறைவேற்றும் வகையில், இந்தப் பிராந்தியத்தின் மிக முக்கிய நட்பு நாடான இந்தியாவுடன் ராணுவத் துறையில் முழு ஒத்துழைப்பு அளிப்பதாகவும் பிரான்ஸ் கூறியுள்ளது.
- "உள்நாட்டு உப்பு நீர் மீன் வளர்ப்பை ஊக்குவித்தல்" குறித்த கருத்தரங்கை இந்திய அரசின் மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளம் அமைச்சகத்தின் மீன்வளத்துறை 2021 நவம்பர் 5 அன்று நடத்தியது.
- இந்திய சுதந்திரத்தின் 75-வது ஆண்டை குறிக்கும் வகையில் கொண்டாடப்பட்டு வரும் விடுதலையின் அமிர்த மகோற்சவத்தின் ஒரு பகுதியாக நடத்தப்பட்டுவரும் கருத்தரங்கு வரிசையில் இது எட்டாவது ஆகும். மத்திய மீன்வளத் துறையின் செயலாளர் திரு ஜதீந்திரநாத் ஸ்வைன் கருத்தரங்கிற்கு தலைமை வகித்தார்.
- மத்திய மீன்வளத்துறை, மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் அதிகாரிகள், ஐசிஏஆர் மீன்வள நிறுவனங்கள், கால்நடை மற்றும் மீன்வள பல்கலைக்கழகங்கள் ஆகியவற்றை சேர்ந்த ஆசிரியர்கள், தொழில் முனைவோர், மீன் விவசாயிகள் மீன் பண்ணை உரிமையாளர்கள் மற்றும் மீன்வளத்துறையை சேர்ந்த இதர நபர்கள் இதில் கலந்து கொண்டனர்.
- கோவாவில் நடைபெற உள்ள இந்திய சர்வதேச திரைப்பட விழாவின் 52வது பதிப்பில் திரையிடப்படவுள்ள படங்களின் பட்டியல் வெளியிடப்படுள்ளது.
- தேர்வான 24 திரைப்படங்களில் பி எஸ் வினோத்ராஜ், இயக்கிய ‘கூழாங்கல்’ இடம்பெற்றுள்ளது. மேலும், கதையில்லா திரைப்படங்கள் பட்டியலில் 20 படங்கள் இடம் பெற்றுள்ள நிலையில், ஜெயச்சந்திர ஹாஷ்மி இயக்கிய ‘ஸ்வீட் பிரியாணி’யும் அவற்றில் ஒன்றாகும்.
- இந்திய அரசின் தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம், கோவா மாநில அரசுடன் இணைந்து, 2021 நவம்பர் 20 முதல் 28 வரை இந்த விழாவை இந்திய திரைப்பட விழா இயக்குநரகம் ஏற்பாடு செய்துள்ளது.
- தேர்ந்தெடுக்கப்பட்ட திரைப்படங்களில் முதல் திரைப்படமாக அசாம் மற்றும் நாகலாந்தில் ஒரு குறிப்பிட்ட பிரிவினர் பேசும் திமாசா மொழியில் உருவான ‘செம்கோர்’ படம் திரையிடப்படும். கதையில்லா பிரிவில் முதல் திரைப்படமாக ‘வேத்-தி விஷனரி’ எனும் ஆங்கில மொழி படம் திரையிடப்படும்.