2030ம் ஆண்டுக்குள் 1.5 டிகிரி செல்சியசாக உலக வெப்பமயமாதலை கட்டுப்படுத்த இலக்கு - ஜி20 மாநாட்டில் தலைவர்கள் ஒப்புதல்
- உலகின் பொருளாதார சக்திகளாகத் திகழும் 20 நாடுகள் அங்கம் வகிக்கும் ஜி-20 அமைப்பின் 16-ஆவது உச்சிமாநாடு இத்தாலி தலைநகா் ரோமில் தொடங்கியது.
- நிகர பூஜ்ஜிய பசுமைஇல்ல வாயு உமிழ்வு அல்லது காா்பன் சமநிலை இலக்கை 205-ஆம் ஆண்டுக்குள் அடைவதற்கான நடவடிக்கைகளைத் துரிதப்படுத்துவது என மாநாட்டில் முடிவு செய்யப்பட்டது.
- வெளிநாடுகளில் நிலக்கரி மூலம் மின் உற்பத்தி செய்யும் புதிய அனல் மின் நிலையங்களுக்கான நிதியுதவியை 2021-ஆம் ஆண்டுக்குள் நிறுத்துவது என ஜி-20 தலைவா்கள் ஒப்புக்கொண்டனா்.
- பருவநிலை மாற்றத்தை எதிா்கொள்ள ஏழை நாடுகளுக்கு உதவும் வகையில் ஆண்டுதோறும் பணக்கார நாடுகள் 100 பில்லியன் டாலா் (சுமாா் ரூ.7.5 லட்சம் கோடி) நிதியைத் திரட்டிக் கொடுக்க வேண்டும் என்ற கடந்த கால உறுதிப்பாடு மீண்டும் வலியுறுத்தப்பட்டது.
- சா்வதேச சராசரி வெப்பநிலை உயா்வை 2 டிகிரி செல்சியஸுக்கும் குறைவாக வைத்திருக்க வேண்டும் என்ற பாரீஸ் பருவநிலை ஒப்பந்தத்தைப் பின்பற்றுவதற்கு ஜி-20 நாடுகளின் தலைவா்கள் மீண்டும் உறுதிபூண்டனா்.
- இதில், பங்கேற்ற தலைவர்கள், கடந்த 2015ம் ஆண்டு பாரீஸ் பருவநிலை மாநாட்டில் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தப்படி, வரும் 2030ம் ஆண்டுக்குள் உலக வெப்பமயமாதலை பாதியாக அதாவது 1.5 டிகிரி செல்சியசாக கட்டுப்படுத்த ஒப்புதல் அளித்தனர்.
- 2050ம் ஆண்டுக்குள் கார்பன் உமிழ்வை பூஜ்ய நிலைக்கு கொண்டு வரவும் நடவடிக்கை எடுக்க உறுதி அளித்துள்ளனர். கார்பன் உமிழ்வுக்கு முக்கிய காரணமே நிலக்கரி பயன்பாடுதான்.
சர்வதேச கார்ப்பரேட் வரி - 'ஜி20' நாடுகள் ஒப்புதல்
- ஒரு நாட்டில் இயங்கும் நிறுவனங்கள், வரி சலுகைகளுக்காக வேறொரு நாட்டில் தன் லாபத்தை பெரிய அளவில் முதலீடு செய்கின்றன; இதன் வாயிலாக வரி ஏய்ப்பிலும் ஈடுபடுகின்றன.
- நிறுவனங்களின் வரி ஏய்ப்பை தடுக்கவும், அதனால் கிடைக்கும் கறுப்பு பணத்தை வேறொரு நாடுகளில் முதலீடு செய்து, அதிக அளவில் லாபம் ஈட்டுவதை தடுக்கவும், புதிய நடைமுறையை உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது.
- அதன்படி, அனைத்து நாடுகளிலும் வர்த்தக நிறுவனங்களுக்கு குறைந்தபட்ச கார்ப்பரேட் வரியை விதிக்க முடிவு செய்யப்பட்டது. ஜூலையில் நடந்த ஜி - 20 நாடுகளின் நிதி அமைச்சர்கள் மாநாட்டில், அனைத்து நாடுகளிலும் குறைந்தபட்சம் 15 சதவீதம் வரி விதிக்க முடிவு செய்யப்பட்டது.
உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட போர்க்கப்பல் கடற்படையிடம் ஒப்படைப்பு
- 15பி திட்டத்தின் கீழ், 4 போர்க்கப்பல்களை, மும்பையில் உள்ள மஸ்கான் டாக்ஸ் லிமிடெட் (எம்டிஎல்) என்ற கப்பல் கட்டும் நிறுவனம் தயாரிக்க கடந்த 2011ம் ஆண்டு ஒப்பந்தம் கையெழுத்தானது. இதற்கு நாட்டின் முக்கிய நகரங்களான விசாகப்பட்டினம், மர்முகோவா, இம்பால் மற்றும் சூரத் என பெயரிடப்பட்டன.
- இதில் 127ஒய் 12704 (விசாகப்பட்டினம்) என்ற கப்பல் தயாரிக்கும் பணி முடிவடைந்து, இந்திய கடற்படையிடம் கடந்த 28ம் தேதி வழங்கப்பட்டது.
- இந்த போர்க்கப்பலின் வடிவமைப்பு, இந்திய கடற்படையின் வடிவமைப்பு இயக்குனரகத்தால் உருவாக்கப்பட்டு, மும்பை உள்ள எம்டிஎல் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டது.
- 163 மீட்டர் நீளம் கொண்ட இந்த போர்கப்பல், 30 நாட் வேகத்தில் செல்லும். இந்த கப்பலில் உள்ள 75 சதவீத பொருட்கள் உள்நாட்டில் தயாரிக்கப்பட்டவை.
- இந்த கப்பலில் பெங்களூர் பெல் நிறுவனத்தில் தயாரிக்கப்பட்ட தரையிலிருந்து வான் இலக்கை தாக்கும் ஏவுகணைகள், பிரம்மோஸ் ஏவகணைகள், மும்பை எல் அண்ட் டி நிறுவனத்தில் தயாரிக்கப்பட்ட நீர்மூழ்கி கப்பல்களை தாக்கி அழிக்கும் டார்பிடோ ரக ஏவுகணைகளை ஏவும் கருவிகள், ராக்கெட் குண்டுகள் ஏவும் கருவிகள், ஹரித்துவார் பெல் நிறுவனத்தில் தயாரிக்கப்பட்ட 76 எம்.எம் சூப்பர் ரேபிட் பீரங்கிகள் பொருத்தப்பட்டுள்ளன.
2020ம் ஆண்டுக்கான 'விளக்கு விருது'
- எழுத்தாளர் புதுமைப்பித்தன் நினைவாக ஒவ்வொரு ஆண்டும் அமெரிக்கவாழ் தமிழர்கள் பண்பாட்டு அமைப்பு சார்பில் "விளக்கு விருது" வழங்கப்பட்டு வருகிறது.
- அதன்படி 2020ம் ஆண்டுக்கான விளக்கு விருது கவிஞர் சுகிர்தராணி, எழுத்தாளர் ஸ்டாலின் ராஜாங்கம் ஆகியோருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
- இவரது 'கைப்பற்றி என் கனவு கோள்', 'இரவு மிருகம்', 'அவளை மொழிபெயர்த்தல்', 'இப்படிக்கு ஏவாள்' உள்ளிட்ட கவிதைத் தொகுப்புகள் பெண்களின் உரிமைக் குரலை பிரதிபலிக்கும்.
- அதேபோல், எழுத்தாளர் ஸ்டாலின் ராஜாங்கம் தமிழியல் ஆய்வில் மிகமுக்கியமான பங்களிப்பைச் செய்து வருகிறார். தலித் வரலாறு, தலித் பண்பாடு, தமிழ் ஆய்வுகள், அயோத்திதாசர் ஆய்வுகள், சினிமா திறனாய்வியல் உள்ளிட்ட பல களங்களில் தன்னுடைய ஆய்வுபடைப்புகளை வெளியிட்டிருக்கிறார்.