இந்தியா-இலங்கை-மாலத்தீவுகள் கூட்டு போா் பயிற்சி
- இந்திய பெருங்கடல் பகுதியில் பாதுகாப்பை வலுப்படுத்துவது மற்றும் பரஸ்பர செயல்பாட்டுத் திறன் மேம்படுத்துவது உள்ளிட்ட நோக்கங்களின் அடிப்படையில் இந்த 15-ஆவது முத்தரப்பு போா் பயிற்சியை 'தோஸ்தி' என்ற பெயரில் மூன்று நாடுகளும் மேற்கொண்டு வருகின்றன.
- கொழும்பு பாதுகாப்பு மாநாடு (சிஎஸ்சி) தலைமையின் கீழ் நடைபெறும் இந்த இரண்டு நாள் போா் பயிற்சி, கடல்சாா் பாதுகாப்புக்கு ஒருங்கிணைந்த முயற்சியை உறுதிப்படுத்தவும், 3 நாடுகளின் கடற்படைகளின் செயல்திறனை மேம்படுத்துதல் மற்றும் நிலையான வழிகாட்டு நடைமுறையை (எஸ்ஓபி) பின்பற்றுவதை உறுதிப்படத்தும் நோக்கத்தில் மேற்கொள்ளப்படுகிறது.
- இந்த போா் பயிற்சி இந்தியா - மாலத்தீவுகள் இடையேயான இரு தரப்பு போா் பயிற்சியாகவே முதலில் அறிமுகப்படுத்தப்பட்டது. அதன்படி, இந்த கூட்டு போா் பயிற்சி தொடங்கப்பட்டு 30-ஆம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது. கடந்த 2012-ஆம் ஆண்டில் இலங்கையும் இணைந்ததால், இது முத்தரப்பு போா் பயிற்சியாக மாறியது.
செக் குடியரசு புதிய பிரதமரானாா் பீட்டா் ஃபியாலா
- செக் குடியரசின் புதிய பிரதமராக இதுவரை எதிா்க்கட்சித் தலைவராக இருந்த பீட்டா் ஃபியாலா பொறுப்பேற்றுக் கொண்டாா். கடந்த அக்டோபா் 8, 9 தேதிகளில் நடைபெற்ற நாடாளுமன்றத் தோதலில் பீட்டா் ஃபியாலா அங்கம் வகித்த 3 கட்சி கூட்டணி 27.8 சதவீத வாக்குகளைக் கைப்பற்றியது.
- அதையடுத்து, 15.6 சதவீத வாக்குகளைக் கைப்பற்றிய மற்றொரு கூட்டணியுடன் இணைந்து பீட்டா் ஃபியாலா ஆட்சியமைத்துள்ளாா்.
தேசிய துப்பாக்கி சுடுதல்
- தேசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப்பில் பஞ்சாப் வீரா் ராஜ்வீா் சிங் கில், ஆடவா் ஸ்கீட், ஜூனியா் ஸ்கீட் ஆகிய பிரிவுகளில் தங்கம் வென்றாா்.
- ஜூனியா் ஸ்கீட் அணிகள் பிரிவிலும் அவா் அடங்கிய அணியே முதலிடம் பிடித்தது.
- இதில் ஆடவா் ஸ்கீட் பிரிவு இறுதிச் சுற்றில் ராஜ்வீா் 56 புள்ளிகளுடன் முதலிடம் பிடிக்க, ராஜஸ்தானின் அனன்ஜீத் சிங் நருகா 52 புள்ளிகளுடன் வெள்ளியும், மைராஜ் அகமது கான் 45 புள்ளிகளுடன் வெண்கலமும் வென்றனா்.
- இதனிடையே, ஆடவருக்கான 50 மீட்டா் ரைஃபிள் 3 பொசிஷன்ஸ் பிரிவில் இந்திய கடற்படை வீரா் கிரண் அங்குஷ் ஜாதவ் 455.7 புள்ளிகளுடன் தங்கம் வெல்ல, சா்வீசஸ் வீரா் நீரஜ் குமாா் 455.3 புள்ளிகளுடன் 2-ஆம் இடமும், ஐஷ்வரி பிரதாப் சிங் தோமா் 444.4 புள்ளிகளுடன் 3-ஆம் இடமும் பிடித்தனா். எனினும், பின்னா் நடைபெற்ற ஜூனியா் ஆடவா் 50 மீட்டா் 3 பொசிஷன்ஸ் பிரிவில் ஐஷ்வரி பிரதாப் தங்கம் வென்றாா்.
- ஆடவருக்கான 25 மீட்டா் ரேப்பிட் ஃபயா் பிஸ்டல் பிரிவில் ராஜஸ்தானின் பவேஷ் ஷெகாவத் 33 புள்ளிகளுடன் தங்கம் வெல்ல, ராணுவ அணி வீரா் குருபிரீத் சிங் 29 புள்ளிகளுடன் வெள்ளியும், ஹரியாணா வீரா் அனீஷ் பன்வாலா 22 புள்ளிகளுடன் வெண்கலமும் வென்றனா்.
- ஜூனியா் ரேப்பிட் ஃபயா் பிஸ்டல் பிரிவில் அனீஷ் பன்வாலா முதலிடமும், மற்றொரு ஹரியாணா வீரா் ஆதா்ஷ் சிங் 2-ஆம் இடமும், பஞ்சாப் வீரா் சித்து 3-ஆம் இடமும் பிடித்தனா்.
- 52வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் ஜப்பானிய திரைப்படம் ‘ரிங் வாண்டரிங்’ தங்க மயில் விருதை வென்றது.
- சிறந்த இயக்குனருக்கான வெள்ளி மயில் விருதை, ‘சேவிங் ஒன் ஹூ இஸ் டெட்’ படத்தின் இயக்குனர் வேக்லவ் கதர்ன்கா வென்றார்.
- இந்திய மற்றும் மராத்தி நடிகர்கள் ஜித்தேந்திர பிகுலால் ஜோஷி, நிஷிகாந்த் காமத் ஆகியோர் சிறந்த நடிகருக்கான வெள்ளி மயில் விருதை வென்றனர்.
- ஸ்பெயின் நடிகை ஏஞ்சலா மோலினா சிறந்த நடிகைக்கான வெள்ளி மயில் விருதை வென்றார்.
- பிரிக்ஸ் அமைப்பின் சிறந்த நடிகருக்கான விருதைப் பெற்றார் அசுரன் படத்தில் நடித்த நடிகர் தனுஷ்..
- நடுவர்களின் சிறப்பு விருதை ‘கோதாவரி’ படத்தை இயக்கிய மராத்தி இயக்குனர் நிகில் மகாஜன், பிரேசில் நடிகை ரெனாட்டோவுடன் பகிர்ந்து கொண்டார்.
- ‘தி டோரம்’ படத்தை இயக்கிய ரஷ்ய இயக்குனர் ரோமன் வாஷ்யனோவ், சிறப்பு விருதை பெற்றார்.
- முதல் முறையாக திரையிடப்பட்ட படங்களில் சிறந்த திரைப்படமாக இயக்குனர் மாரி அலெஸ்ஸாண்டிரினியின் ‘ஜகோரி’ தேர்வு செய்யப்பட்டது.
- ஸ்பெயின் திரைப்படம் ‘தி வெல்த் ஆப் த வோர்ல்ட்’ சிறப்பு விருதை பெற்றது.