Type Here to Get Search Results !

TNPSC 26th NOVEMBER 2021 CURRENT AFFAIRS TNPSC SHOUTERS TAMIL PDF

 

ஆட்டோ சவாரிக்கு 5 சதவீதம் ஜி.எஸ்.டி - 2022 ஜனவரி முதல் அமல்
  • ஆட்டோ ரிக்ஷா டிரைவர்களுக்கும், பயணியருக்கும் இடையேயான பாலமாக 'ஓலா, ஊபர்' போன்ற நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன.
  • ஆன்லைன் வாயிலாக பதிவு செய்யப்படும் ஆட்டோ சவாரிக்கு அடுத்த ஆண்டு ஜன., 1 முதல் 5 சதவீதம் ஜி.எஸ்.டி., அமலுக்கு வருகிறது.
  • ஓலா போன்ற நிறுவனங்கள் ஆட்டோ டிரைவர்கள் வாயிலாக பயணியரிடம் இருந்து வரி வசூலித்து அரசுக்கு செலுத்தும். வழக்கமான ஆட்டோ பயணத்திற்கு வரி வசூலிக்கப்பட மாட்டாது; 
புதிய வகை வைரசின் பெயர் ''ஒமிக்ரான்'' - உலக சுகாதார அமைப்பு 
  • தென் ஆப்பிரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள புதிய கொரோனா வைரஸ், 'டெல்டா' வகை வைரசை விட மிகவும் மோசமானது' தற்போது தென் ஆப்பிரிக்காவின் போஸ்ட்வானாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள ஒரு வகை வைரஸ் திடீரென பாதிப்பு, 10 மடங்கு அதிகரித்துள்ளது. 
  • இதற்கு பி.1.1.529 என்ற புதிய கொரோனா வைரஸ் வகை தான் காரணம் என, விஞ்ஞானிகள் தெரிவித்து உள்ளனர். இந்த கொரோனா வைரஸ் வகைக்கு உலக சுகாதார நிறுவனம் பெயர் சூட்டாமல் இருந்தது. 
  • தென் ஆப்பிரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள புதிய கொரோனா வைரசிற்கு ''ஒமிக்ரான்'' என பெயர் சூட்டியுள்ளது உலக சுகாதார அமைப்பு.
உச்ச நீதிமன்றத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட அரசியலமைப்பு தின கொண்டாட்டத்தில் பிரதமர் பங்கேற்பு 
  • உச்ச நீதிமன்றத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட அரசியலமைப்பு தின கொண்டாட்டங்களில் பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றினார். 
  • உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி திரு நீதிபதி என் வி ரமணா, மத்திய அமைச்சர் திரு கிரண் ரிஜுஜு, உச்ச நீதிமன்ற மற்றும் உயர் நீதிமன்ற மூத்த நீதிபதிகள், இந்திய தலைமை வழக்கறிஞர் திரு கே கே வேணுகோபால், உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்க தலைவர் திரு விகாஸ் சிங் உள்ளிட்டோர் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
  • சுதந்திர இந்தியாவின் அரசியலமைப்பு ஏற்று கொள்ளப்பட்டதை நினைவுகூறும் வகையில், ஆண்டுதோறும் நவம்பர் 26-ஆம் தேதி (இன்று) இந்திய அரசியலமைப்பு தினம் (இந்திய அரசியல் சாசன தினம்) கொண்டாடப்பட்டு வருகிறது.
  • கடந்த 1949-ல் நவம்பர் 26-ம் தேதியான இதே நாளில், இந்திய அரசியலமைப்பு ஏற்று கொள்ளப்பட்டது மற்றும் இது ஜனவரி 26, 1950 அன்று முதல் நடைமுறைக்கு வந்தது. அரசியலமைப்பு சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்ட நாளை தான் நாம் ஆண்டுதோறும் குடியரசு தினமாக கொண்டாடி வருகிறோம்.
  • கடந்த 2015-ம் ஆண்டு இந்திய அரசியலமைப்பின் தந்தையாக குறிப்பிடப்படும் அம்பேத்கரின் சமத்துவ சிலை மற்றும் நினைவகத்தை மும்பையில் அமைக்க அடிக்கல் நாட்டும் போது பேசிய பிரதமர் மோடி, இனி நவம்பர் 26-ஆம் தேதி இந்திய அரசியலமைப்பு தினமாக அனுசரிக்கப்படும் என்று அறிவித்தார்.
சமூக-கலாச்சார மாற்றங்கள், நெகிழ்வு வேலை நேரம் மற்றும் பாலின சமத்துவ ஊதியங்கள் ஆகியவற்றின் தேவை குறித்து இந்திய-இஸ்ரேல் பெண்கள் ஸ்டெம் மாநாடு
  • நவம்பர் 24, 2021 அன்று நடைபெற்ற இந்தியா-இஸ்ரேல் பெண்கள் ஸ்டெம் (அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதம்) மாநாட்டில், மேற்கண்ட துறைகளில் பாலின சமத்துவத்தை அடைவதற்கான வழிகளைப் பற்றி விவாதித்த இந்தியா மற்றும் இஸ்ரேலைச் சேர்ந்த நிபுணர்கள், சமூக-கலாச்சார சூழலில் மாற்றங்களின் அவசியத்தை எடுத்துரைத்தனர்.
  • இந்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை மற்றும் இஸ்ரேலின் புத்தாக்கம், அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகம் ஆகியவை இணைந்து இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தன.
இந்தியாவிற்கும் ஜெர்மனிக்கும் இடையிலான கூட்டு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு திட்டங்களில் பெண் ஆராய்ச்சியாளர்கள் இணைவதற்கான திட்டம் முதல்முறையாக தொடக்கம்
  • லேட்டரல் என்ட்ரி மூலம் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத் துறையில் பெண்களை மேம்படுத்துவதற்கான முதல்-வகையான திட்டம் நேற்று தொடங்கப்பட்டது.
  • அறிவியல் மற்றும் பொறியியல் ஆராய்ச்சியில் பெண்களின் ஈடுபாடு என்ற இத்திட்டம் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுப் பணிகளில் பெண் ஆராய்ச்சியாளர்களை ஊக்குவிப்பதற்காக இந்திய-ஜெர்மன் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையத்தால் தொடங்கப்பட்டுள்ளது.
  • இந்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை மற்றும் ஜெர்மனியின் மத்திய கல்வி மற்றும் ஆராய்ச்சி அமைச்சகம் ஆகியவற்றின் கூட்டு முயற்சியான இந்த திட்டம், வழக்கமான/நீண்ட கால ஆராய்ச்சிப் பதவிகளை வகிக்கும் பெண் விஞ்ஞானிகளுக்கு ஆதரவளிக்கும்.
  • தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு அதிகபட்சமாக இந்திய தரப்பிலிருந்து ரூ 39 லட்சமும், ஜெர்மன் தரப்பிலிருந்து € 48000-ம் வழங்கப்படும்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel