Type Here to Get Search Results !

TNPSC 19th NOVEMBER 2021 CURRENT AFFAIRS TNPSC SHOUTERS TAMIL PDF

 

3 வேளாண் சட்டங்கள் வாபஸ் பிரதமர் மோடி அறிவிப்பு

  • குருநானக் ஜெயந்தியையொட்டி, பல்வேறு விவகாரங்கள் குறித்து நாட்டு மக்களுக்கு பிரதமர் நேர்ந்திரே மோடி உரையாற்றினார்.
  • அப்போது மத்திய அரசு கொண்டுவந்த சர்ச்சைக்குறிய 3 வேளாண் சட்டங்கள் திரும்பப் பெற முடிவு செய்திருப்பதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
  • வேளாண் துறைக்கு பல்வேறு புதிய நடவடிக்கைகள் மூலம் ஊக்கமளிக்க குழு அமைக்கப்படும். குழுவில் விவசாயிகள், விஞ்ஞானிகள், வல்லூர்கள் இடம்பெறுவார்கள். 
'ஆதிச்சநல்லூர் தாமிரபரணி நாகரிகம்' ஆவணப்படம் வெளியீடு
  • செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனம் சார்பில், 'ஆதிச்சநல்லுார் தாமிரபரணி நாகரிகம்' என்ற, தொல்லியல் ஆவணப்படம், நிறுவன வலைதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. நாட்டில் முதன் முதலாக, துாத்துக்குடி மாவட்டம் ஆதிச்சநல்லுாரில் தான் அகழாய்வு நடந்தது.
  • இரண்டு மணி நேர ஆவணப்படம், இரண்டு பாகங்களாக, செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் வலைதளத்தில், வெளியிடப்பட்டது. ஆவணப்படத்தை ஆர்.ஆர்.சீனிவாசன் இயக்கியுள்ளார்.
இன்னுயிர் காப்போம் உதவி செய் என்கிற திட்டம்
  • முக்கியமாக "இன்னுயிர் காப்போம்-உதவி செய்" என்கிற திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த சிறப்பான திட்டம் மூலமாக சாலையில் விபத்துக்குள்ளாகும் நபர்களுக்கு முதல் 48 மணி நேரத்திற்கான அவசர உயிர்காக்கும் சிகிச்சையை அரசே முழுமையாக ஏற்றுக்கொள்ளும். 
  • இந்த பிரத்தியேக திட்டத்திற்கு என்றே முதற்கட்டமாக 50 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் மூலம் முதலமைச்சரின் மருத்துவ காப்பீடு அட்டை இல்லாதவர்களும், வேறு மாநிலத்தை சேர்ந்தவர்களும், வேறு நாட்டை சேர்ந்தவர்களும், எவராக இருந்தாலும் இந்த திட்டத்தின் மூலம் பயனடைந்து கொள்ளலாம். விரைவில் இந்த திட்டம் முதலமைச்சரின் காப்பீடு திட்டத்துடன் இணைக்கப்பட உள்ளது.
ராணுவ வாகனங்களை தாக்கக் கூடிய ஏவுகணை கருவி தயாரிக்கும் திட்டம் - பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்
  • உத்திரப்பிரதேசத்தின் ஜான்சியில் சுதந்திர இந்தியாவின் 75ஆம் ஆண்டு கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக நவம்பர் 17-ம் தேதி முதல் 19-ம் தேதி வரை தேசிய பாதுகாப்பு அர்ப்பணிப்புத் திருவிழா நடைபெறுகிறது.
  • விழாவின் ஒருபகுதியாக பாதுகாப்புத் துறைக்கான பல்வேறு முன்னெடுப்புகளை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். பல்வேறு திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணிக்கவும் செய்தார்.
  • உத்திரப்பிரதேச பாதுகாப்பு தொழில் வழித்தடத்தின் ஜான்சி முனையத்தில் ரூ. 400 கோடி மதிப்பிலானத் திட்டத்திற்கு பிரதமர் அடிக்கல் நாட்டினார். ராணுவ வாகனங்களை தாக்கக் கூடிய ஏவுகணைகளுக்குத் தேவையான உந்துவிசை அமைப்புகளை தயாரிப்பதற்காக ஒரு தொழிற்சாலை உருவாக்கப்படும். இந்தத் திட்டத்தை பாரத் டயனமிக்ஸ் லிமிடெட் செயல்படுத்துகிறது.
  • முன்னாள் என்சிசி மாணவர்கள் சங்கத்தை பிரதமர் தொடங்கி வைத்தார். முன்னாள் என்சிசி மாணவர்கள் என்சிசி-யோடு மீண்டும் தொடர்பு கொள்வதற்கு உதவியாக இருக்கும் வகையில் முறைப்படியான ஒரு இணையதளத்தை (பிளாட்ஃபார்ம்) உருவாக்கும் நோக்கத்தோடு இந்தச் சங்கமானது தொடங்கப்படுகிறது. முன்னாள் என்சிசி மாணவரான பிரதமர் இந்தச் சங்கத்தின் முதல் உறுப்பினராக தன்னைப் பதிவு செய்து கொண்டார்.
  • என்சிசி மாணவர்களுக்கான ஊக்குவிப்புப் பயிற்சி தேசிய செயல்திட்டத்தையும் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். இந்த தேசியத் திட்டமானது என்சிசி-யின் 3 பிரிவினருக்கும் தேவையான ஊக்குவிப்புப் பயிற்சி வசதிகளை மேம்படுத்தும் நோக்கத்துடன் தொடங்கப்படுகிறது. 
  • என்சிசி-யின் ராணுவப் பிரிவினருக்கான துப்பாக்கிச் சுடுதல் கருவிகள் அமைத்தல், விமானப் பிரிவினருக்கான மைக்ரோலைட் ஃப்ளையிங் பாவிப்பு கருவிகள் அமைத்தல் மற்றும் கப்பற்படை பிரிவினருக்கான படகு வலித்தல் கருவிகள் அமைத்தல் ஆகியவை இதில் இடம் பெற்றுள்ளன.
  • தேசிய போர் நினைவகத்தில் மேம்படுத்தப்பட்ட எதார்த்த உலகம் என்பதன் அடிப்படையில் இயக்கப்படும் மின்னணு கூடங்களையும் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.
  • பாதுகாப்புத் துறையில் சுயசார்பு இந்தியா திட்டத்திற்கு முக்கியத்துவம் தரும் வகையில் உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்டு தயாரிக்கப்பட்ட போர்த்தளவாடங்களை ராணுவப் படை தளபதிகளிடம் முறைப்படி ஒப்படைத்தார்.
  • இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் (HAL) வடிவமைத்து தயாரித்த இலகுரக போர் ஹெலிகாப்டரை (LCH) விமானப் படைத்தளபதியிடம் பிரதமர் ஒப்படைத்தார். இதே போன்று இந்திய ஸ்டார்ட்-அப்புகள் வடிவமைத்து உருவாக்கிய ட்ரோன்கள் / யுஏவி-க்களை ராணுவ படைத்தளபதியிடம் ஒப்படைத்தார். 
  • டிஆர்டிஓ வடிவமைத்து பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் தயாரித்துள்ள கப்பற்படையின் கப்பல்களுக்குத் தேவையான அதிநவீன மின்னணு போர்த்தொழில் தொகுப்பினை கப்பற்படை தளபதியிடம் பிரதமர் மோடி ஒப்படைத்தார்.
இந்தியப் பட்டயக் கணக்கறிஞர்கள் கழகத்தின் கருத்தரங்கைத் தொடங்கி வைத்த முதலமைச்சர்
  • தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 19/11/2021 கோயம்புத்தூரில் நடைபெற்ற இந்தியப் பட்டயக் கணக்கறிஞர்கள் கழகத்தின் 53- ஆவது மண்டலக் கருத்தரங்கைக் காணொளி காட்சி வாயிலாகத் தொடங்கி வைத்து உரையாற்றினார்.
  • இக்கூட்டத்தில், தமிழ்நாடு நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், இந்தியப் பட்டயக் கணக்கறிஞர்கள் கழகத்தின் தலைவர் நிஹார் ஜம்புசரியா, முன்னாள் தலைவர் ஜி.ராமசாமி, தென்மண்டல கவுன்சில் தலைவர் கே.ஜலபதி கோயம்புத்தூரின் இந்தியப் பட்டயக் கணக்கறிஞர்கள் கழகத்தின் தலைவர் பிரபு, செயலாளர் டி.நாககுமார் மற்றும் இந்தியப் பட்டயக் கணக்கறிஞர்கள் கழகத்தின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
ஆசிய வில்வித்தை சாம்பியன் போட்டிகள் 2021
  • வங்கதேச தலைநகா் டாக்காவில் ஆசிய வில்வித்தை சாம்பியன் போட்டிகள் நடைபெற்று வந்தன. இறுதி நாளான வெள்ளிக்கிழமை மகளிா், ஆடவா் ரெக்கா்வ் பிரிவில் பலம் வாய்ந்த கொரிய அணியை எதிா்கொண்டது இந்தியா.
  • இறுதிச் சுற்றில் இந்திய அணிகள் தோல்வி கண்டன. ஆடவா் பிரிவில் ஒலிம்பியன் பிரவீன் ஜாதவ், தேசிய சாம்பியன் பரத் சலுன்கே, கபில் ஆகியோா் இடங்கிய இந்திய அணி 2-6 என்ற புள்ளிக் கணக்கில் கொரிய ஆடவரிடம் தோல்வி கண்டு வெள்ளியை வென்றது.
  • மகளிா் பிரிவில் அங்கிதா பகத், மதுவேத்வான், ரிதி ஆகியோா் கொண்ட இந்திய அணி 0-6 என்ற புள்ளிக் கணக்கில் கொரியாவிடம் தோற்று வெள்ளி வென்றனா்.
  • மேலும் கலப்பு ரெக்கா்வ் பிரிவில் மூன்றாம் இடத்துக்கான ஆட்டத்தில் உஸ்பெகிஸ்தான் அணியை 6-0 என்ற புள்ளிக் கணக்கில் அங்கிதா பகத்-கபில் இணை வீழ்த்தி வெண்கலம் வென்றது. இப்போட்டியில் ஜோதி சுரேகா தங்கம் வென்றாா். 1 தங்கம், 4 வெள்ளி, 2 வெண்கலப் பதக்கங்களை வென்றது இந்தியா.
  • தனிநபர் காண்பவுண்டு பிரிவு பைனலில் இந்தியாவின் அபிஷேக் வர்மா, தென் கொரியாவின் கிம் ஜோங்கோவிடம் 148-149 என ஒரு புள்ளி வித்தியாசத்தில் தோற்று வெள்ளி வென்றார். 
  • இத்தொடரில் 1 தங்கம், 4 வெள்ளி, 2 வெண்கலம் என 7 பதக்கம் வென்ற இந்தியா, பதக்கப்பட்டியலில் 2வது இடம் பிடித்தது. முதலிடத்தை தென் கொரியா (9 தங்கம், 3 வெள்ளி, 3 வெண்கலம்) தட்டிச் சென்றது. கடந்த முறை (2019) இந்தியாவுக்கு 7 பதக்கம் (ஒரு தங்கம், 2 வெள்ளி, 4 வெண்கலம்) கிடைத்தன.
தெற்காசிய கூடைப்பந்து 2021 இந்தியா சாம்பியன்
  • இந்தியா, வங்கதேசம், இலங்கை, மாலத்தீவு, நேபாளம் உள்ளிட்ட நாடுகள் பங்கேற்ற தெற்காசிய கூடைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டி (சாபா) வங்கதேச தலைநகா் டாக்காவில் நடைபெற்றது. கடந்த முறை சாம்பியன் பட்டத்தை இலங்கை வென்றது.
  • இந்நிலையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற கடைசி ஆட்டத்தில் வங்கதேசத்தை எதிா்கொண்ட இந்திய வீரா்கள் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்தி 106-41 என்ற புள்ளிக் கணக்கில் அபார வெற்றி பெற்றனா்.
  • விசேஷ் பிருகுவன்ஷி தலைமையிலான இந்திய அணி மொத்தம் 188 புள்ளிகள் கூடுதலாக பெற்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியுள்ளது. ஏற்கெனவே 2002, 2014, 2015, 2016, 2017-இல் சாம்பியன் பட்டத்தை இந்தியா வென்றிருந்தது.
உலக மகளிர் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் ஸ்பெயின் வீராங்கனை முகுருஜா சாம்பியன் பட்டம் வென்றார்
  • டாப்-8 'வீராங்கனைகள் மட்டும் பங்குபெறும் உலக மகளிர் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி மெக்சிகோவில் குவாடலஜரா நகரில் நடைபெற்று வருகிறது. இதில் கலந்துகொண்ட 8 வீராங்கனைகள் இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு லீக் சுற்றுப் போட்டிகள் நடைபெற்று வந்தது. 
  • இதில் நடந்த இறுதிப்போட்டியில் முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனையான ஸ்பெயினை சேர்ந்த கார்பின் முகுருஜா, 8-வது இடத்தில் உள்ள எஸ்தோனியாவை சேர்ந்த அனெட் கோன்டாவெய்ட்டை எதிர்த்து மோதினார்.
  • இதில் 6-3, 7-5 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்ற முகுருஜா சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றார்.இப்போட்டி சுமார் 1 மணிநேரம் 38 நிமிடம் வரை நடந்தது. 
  • இந்த வெற்றியின் மூலம் 49 வருட மகளிர் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் மகுடம் சூடிய முதல் ஸ்பெயின் வீராங்கனை என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார். 

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel