"வலிமை" சிமெண்ட் அறிமுகம் - துவக்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்
- தமிழ்நாடு சிமெண்ட்ஸ் கழகத்தின் கீழ் செயல்பட்டுவரும் ஆலங்குளம் சிமெண்ட் ஆலை, ஆண்டொன்றுக்கு 2 லட்சம் மெட்ரிக் டன் உற்பத்தி திறனுடன், அப்போதைய முதல்-அமைச்சர் கலைஞரால் 1970-ம் ஆண்டில் தொடங்கப்பட்டது.
- தொடர்ந்து, தமிழ்நாடு சிமெண்ட் கழகத்தால், அரியலூரில் ஆண்டொன்றுக்கு 5 லட்சம் மெட்ரிக் டன் உற்பத்தி திறனுடன் ஒரு ஆலையும், 10 லட்சம் மெட்ரிக் டன் திறன் கொண்ட மற்றொரு புதிய சிமெண்ட் ஆலையும் நிறுவப்பட்டது.
- இந்த மூன்று ஆலைகளின் மொத்த உற்பத்தித்திறன் ஆண்டொன்றுக்கு 17 லட்சம் மெட்ரிக் டன் ஆகும். தமிழ்நாடு சிமெண்ட்ஸ் கழகம் "அரசு" என்ற பெயரில் சிமெண்டை விற்பனை செய்து வருகிறது.
- 2021-22-ம் ஆண்டு தொழில் துறை மானியக்கோரிக்கையின்போது, "வலிமை" என்ற பெயரில் ஒரு புதிய ரக சிமெண்ட் அறிமுகப்படுத்தப்படும் என்று தொழில் துறை அமைச்சர் ஓர் அறிவிப்பினை வெளியிட்டார்.
- முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில், தொழில் துறை சார்பில் தமிழ்நாடு சிமெண்ட்ஸ் கழகத்தின் உயர்தர ரக சிமெண்ட் "வலிமை"யை அறிமுகப்படுத்தி, விற்பனையை துவக்கி வைத்தார்.
- இந்த புதிய ரக "வலிமை" சிமெண்ட், அதிக உறுதியும், விரைவாக உலரும் தன்மையும், அதிக வெப்பத்தை தாங்கும் தன்மையும் கொண்டது.
₹22,500 கோடி செலவில் உ.பி சுல்தான்பூரில் 341 கிமீ அதிவிரைவுச்சாலை திறப்பு - நாட்டுக்கு அர்ப்பணித்தார் பிரதமர் மோடி
- உத்தரப்பிரேதச மாநிலம் சுல்தான்பூரில் 341 கிமீ தூரத்திற்கு அமைக்கப்பட்ட பூர்வாஞ்சல் அதிவிரைவுச் சாலையை பிரதமர் மோடி நாட்டிற்கு அர்ப்பணித்தார்.
- உத்தரப்பிரேதச மாநிலத்தின் லக்னோ-காஜிபூரை இணைக்கும் விதமாக சுல்தான்பூரில் 341 கிமீ தூரத்திற்கு பூர்வாஞ்சல் அதிவிரைவுச் சாலை அமைக்கப்பட்டுள்ளது. சுமார் 3 ஆண்டில் ரூ.22,500 கோடி செலவில் இந்த விரைவுச் சாலை அமைக்கப்பட்டுள்ளது.
- இந்த சாலையில் 3.2 கிமீ தூரத்திற்கு அவசர காலங்களில் போர் விமானங்கள் தரையிறங்கக் கூடிய வகையில் விமான ஓடுபாதையும் அமைக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உத்தரவு சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக முனீஸ்வர்நாத் பண்டாரி நியமனம்
- சஞ்சிப் பானர்ஜியை மேகாலயா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக மாற்ற ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் முன்தினம் ஒப்புதல் வழங்கினார்.
- இதைத் தொடர்ந்து, முனீஸ்வர் நாத் பண்டாரியை சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக நியமித்து ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உத்தரவு பிறப்பித்தார்.
- அலகாபாத் நீதிமன்றத்தின் 2வது மூத்த நீதிபதியாக உள்ள முனீஸ்வர் நாத் பண்டாரி, சிவில், கிரிமினல், தொழிலாளர் வழக்குகளில் நிபுணத்துவம் பெற்றவர்.
மழை சேதங்களை சீரமைக்க ரூ.300 கோடி - முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
- மழை வெள்ளத்தால் சேதமடைந்த சாலைகள், வடிகால்கள் ஆகியவற்றை சீரமைக்க ரூ.300 கோடியும், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரண உதவி ஆகியவற்றை முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருக்கிறார்.
- அதில், முக்கியமாக சம்பா பருவத்தில் நடவு செய்து நீரில் மூழ்கி சேதமடைந்த பயிர்களை மறுசாகுபடி செய்ய ஏதுவாக ஹெக்டேருக்கு ரூ.6,038 மதிப்பில் இடுபொருள் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
- அதில், 25 கிலோ உரம், யூரியா 60 கிலோ மற்றும் டிஏபி உரம் 125 கிலோ ஆகியவை அடக்கம். மேலும் மழையால் முழுமையாக சேதமடைந்த பயிர்களுக்கு இழப்பீடாக ஹெக்டேர் ஒன்றுக்கு ரூ.20,000 வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
விண்வெளியில் ஏவுகணை சோதனை நடத்திய ரஷ்யா
- விண்வெளி ஆராய்ச்சியில் ஆதிக்கம் செலுத்தும் நாடுகளில் ஒன்றான ரஷ்யா, விண்வெளியில் செயற்கைக்கோள் எதிர்ப்பு ஏவுகணை ஒன்றைச் சோதனை செய்துள்ளது.
- இந்த சோதனையில் ரஷ்யா, தனது ஏவுகணையின் மூலமாகச் செயல்பாட்டை நிறுத்திக்கொண்ட தனது சொந்த செயற்கைக்கோளை அழித்துள்ளது.
லடாக்கில் உலகின் மிக உயரமான சாலை - கின்னஸ் சான்றிதழ்
- லடாக் பகுதியில் உலகிலேயே மிக உயரமான இடத்தில் சாலை அமைத்ததற்காக எல்லையோர சாலை அமைப்பிற்கு கின்னஸ் உலக சாதனைக்கான சான்றிதழ் நவ.,16 வழங்கப்பட்டது.
- லடாக்கில் கடற்பரப்பிலிருந்து 19 ஆயிரத்து 24 அடி உயரமான உம்லிங்லா பாஸ் சாலையை இந்திய ராணுவத்தின் எல்லையோர சாலை அமைப்பு சுமார் 4 மாதத்தில் கட்டியுள்ளது.
- சிசும்லேவிலிருந்து டெம்சோக் பகுதிக்கு செல்லும் 52 கிலோ மீட்டர் நீளமுள்ள சாலைக்கு நடுவே உம்லிங்லா பாஸ் அமைந்துள்ளது.
- இந்நிலையில், கின்னஸ் உலக சாதனைக்கான விருது இந்தியாவின் எல்லையோர சாலை அமைப்புக்கு அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த விருது வழங்கும் நிகழ்வு இணையவழியாக நடைபெற்றது.
நாட்டிலேயே முதன் முறையாக ஓரினச் சேர்க்கையாளர் ஐகோர்ட் நீதிபதியாக நியமனம் - சுப்ரீம் கோர்ட் கொலீஜியம் அறிவிப்பு
- உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான உச்சநீதிமன்ற கொலீஜியம், டெல்லியை சேர்ந்த வழக்கறிஞரும், ஓரின சேர்க்கையில் ஆர்வமுள்ளவருமான சவுரப் கிருபாலை டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமித்துள்ளது. இதன்மூலம், நாட்டின் முதல் ஓரினச்சேர்க்கை நீதிபதியாக சவுரப் கிருபால் இருப்பார்.
மேற்கு வங்க பேரவை பிஎஸ்எஃப் அதிகார வரம்பு விரிவாக்கத்துக்கு எதிராக தீர்மானம்
- சர்வதேச எல்லைகளில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருக்கும் எல்லைப் பாதுகாப்புப் படையின் அதிகாரவரம்பானது 15 கி.மீ. இருந்து 50 கி.மீ. ஆக அதிகரிக்கப்படுவதாக கடந்த அக்டோபர் 13ஆம் தேதி மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்தது.
- இந்நிலையில், இன்று மேற்கு வங்க சட்டப்பேரவையில் மத்திய அரசின் இந்த அறிவிப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
- இந்திய சர்வதேச அறிவியல் விழாவின் (ஐஐஎஸ்எப்) ஏழாவது அமர்வை கோவாவில் உள்ள பனாஜியில் டிசம்பர் 10 ஆம் தேதி மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் (தனிப்பொறுப்பு), புவி அறிவியல் (தனிப்பொறுப்பு), பிரதமர் அலுவலகம், பணியாளர், மக்கள் குறை தீர்வு, ஓய்வூதியம், அணுசக்தி மற்றும் விண்வெளி துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் தொடங்கி வைக்கிறார்.