Type Here to Get Search Results !

TNPSC 15th NOVEMBER 2021 CURRENT AFFAIRS TNPSC SHOUTERS TAMIL PDF

சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி மேகாலயாவுக்கு மாற்றம் - குடியரசுத் தலைவர் உத்தரவு
  • கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் மூத்த நீதிபதியாகப் பதவி வகித்த சஞ்ஜிப் பானர்ஜி, கடந்த ஜன.4-ம் தேதி சென்னை உயர் நீதிமன்றத்தின் 50-வது தலைமை நீதிபதியாகப் பொறுப்பேற்றார்.
  • இந்நிலையில், இவரை மேகாலயா உயர் நீதிமன்றத்துக்கு தலைமை நீதிபதியாக இடமாற்றம் செய்ய, உச்ச நீதிமன்ற தலைமைநீதிபதி அடங்கிய கொலீஜியம் மத்திய அரசுக்கு பரிந்துரை செய்தது. 
  • இந்நிலையில், உச்ச நீதிமன்ற கொலீஜியத்தின் பரிந்துரையை ஏற்று, தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜியை மேகாலயா உயர் நீதிமன்றத்துக்கு இடமாற்றம் செய்து குடியரசுத் தலைவர் ராம்நாத்கோவிந்த், நேற்று உத்தரவிட்டார்.
பாதுகாப்பு கல்வி, ஆய்வு நிறுவனத்துக்கு மனோகா் பாரிக்கா் பெயா்
  • தில்லியில் உள்ள பாதுகாப்பு கல்வி மற்றும் ஆய்வு நிறுவனத்துக்கு மறைந்த முன்னாள் பாதுகாப்பு அமைச்சா் மனோகா் பாரிக்கா் பெயரை சூட்டப்பட்டது. இதற்கான கல்வெட்டை பாதுகாப்பு அமைச்சா் ராஜ்நாத் சிங் திங்கள்கிழமை திறந்து வைத்தாா்.
  • நாட்டின் பாதுகாப்பு, வெளியுறவுக் கொள்கை மற்றும் திட்டங்கள் தொடா்பான புத்தகங்களையும் ராஜ்நாத் சிங் இந்த நிகழ்ச்சியின்போது வெளியிட்டாா்.
பிர்ஸா முண்டா அருங்காட்சியகத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார்
  • பழங்குடியின தலைவரும், சுதந்திர போராட்ட வீரருமான மறைந்த பிர்ஸா முண்டாவின் பிறந்த நாள் கொண்டாடப்பட்டது. இந்த தினம், பழங்குடியின மக்களை கவுரவிக்கும் தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 
  • இதையொட்டி, ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் பிர்ஸா முண்டா அருங்காட்சியகத்தை, 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக பிரதமர் மோடி திறந்து வைத்தார்.
மத்திய பிரதேசத்திற்கு வந்துள்ள பிரதமர் மோடி அங்கு பல்வேறு திட்டங்களைத் தொடங்கி வைத்தார்
  • மத்திய பிரதேசத்திற்கு வந்துள்ள பிரதமர் மோடி அங்கு பல்வேறு திட்டங்களைத் தொடங்கி வைத்தார். மத்தியப் பிரதேச தலைநகர் போபால் நகருக்குச் சென்றுள்ள பிரதமர் மோடி, நாட்டிலேயே முதல் ஐஎஸ்ஓ-9001 தரச்சான்றிதழ் பெற்ற ரயில் நிலையமான ராணி கமலாபதி ரயில் நிலையத்தை திறந்து வைத்தார். 
  • 1979ஆம் ஆண்டு கட்டப்பட்ட இந்த ரயில் நிலையத்தை நவீனமயமாக்க 2016ஆம் ஆண்டு ஒப்பந்தம் போடப்பட்டது. இங்குக் கட்டப்பட்டு வந்த பணிகள் தற்போது முடிந்துள்ள நிலையில், ரயில் நிலையத்தைப் பிரதமர் மோடி திறந்து வைத்தார்.
கிராம சுற்றுலா - மத்திய பிரதேச மாநிலத்துக்கு சர்வதேச விருது
  • மத்திய பிரதேச சுற்றுலா வாரியத்தின் "கிராமப்புற சுற்றுலாத் திட்டத்துக்கு" "வேர்ல்ட் டிராவல் மார்ட்" (World Travel Mart (WTM) World Responsible Tourism Awards-2021) அமைப்பின் சிறந்த சுற்றுலாத் திட்டத்துக்கான விருது கிடைத்துள்ளது. 
  • கரோனாவுக்கு பின் சுற்றுலா மேம்படுத்தப்பட்ட இடங்களைக் கணக்கில் கொண்டு (“Best Post-Covid Tourism Destination Development") இந்த விருது அளிக்கப்பட்டது. இதே கிராம சுற்றுலா பிரிவில் "பிராந்திய அளவிலான” "ஸ்வர்ண புரஸ்கார் விருதும்" (Swarn Puraskar) மத்திய பிரதேச சுற்றுலாத் துறைக்கு கிடைத்துள்ளது.
  • இதுதவிர பெண்களுக்கு பாதுகாப்பான சுற்றுலா தலங்கள் ("safe tourism for women" project) பிரிவிலும் மத்திய பிரதேசத்துக்கு விருது கிடைத்துள்ளது.
பழங்குடியினர் கௌரவ தின மகா சம்மேளனத்தில் பழங்குடியின சமுதாய நலனுக்கான பல்வேறு முக்கிய திட்டங்களை பிரதமர் தொடங்கி வைத்தார்
  • பிரதமர் திரு நரேந்திர மோடி பழங்குடியினர் கௌரவ தின மகா சம்மேளனத்தில் பழங்குடியின சமுதாய நலனுக்கான பல்வேறு முக்கிய திட்டங்களை தொடங்கி வைத்தார். 
  • மத்தியப் பிரதேசத்தில் “ரேஷன் ஆப்கே கிராம்” திட்டத்தை அவர் தொடங்கி வைத்தார். மத்தியப் பிரதேச சிகப்பணு சோகை தடுப்பு திட்டத்தையும் பிரதமர் தொடங்கி வைத்தார். 
  • நாடு முழுவதும் 50 ஏகலைவா மாதிரி உண்டு, உறைவிடப்பள்ளிகளுக்கு பிரதமர் அடிக்கல் நாட்டினார். இந்த நிகழ்ச்சியில், மத்தியப்பிரதேச ஆளுநர், முதலமைச்சர், மத்திய அமைச்சர்கள் டாக்டர் வீரேந்திர குமார், திரு நரேந்திர சிங் தோமர், திரு ஜோதிர் ஆதித்ய சிந்தியா, மத்திய இணை அமைச்சர்கள் திரு பிரகலாத் பட்டேல், திரு பக்கான் சிங் குலஸ்தே, டாக்டர் எல்.முருகன் ஆகியோர் கலந்து கொண்டனர்
அகர்தலா நகரில் நகர்ப்புற சேவைகளை மேம்படுத்த 61 மில்லியன் டாலர் கடன் ஒப்பந்தத்தில் இந்தியா, ஆசிய வளர்ச்சி வங்கி கையெழுத்து
  • அகர்தலா நகரத்தில் அதிகரித்து வரும் மக்கள் தொகைக்கு ஏற்ற வகையில் வாழ்வாதாரத்தை முன்னேற்றவும் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி புதிய மேம்பாட்டுத் திட்டங்களை செயல்படுத்தவும் 61 மில்லியன் டாலர் கடன் ஒப்பந்த்த்தில் இந்திய அரசும் ஆசிய வளர்ச்சி வங்கியும் கையெழுத்திட்டுள்ளன.
  • இந்திய அரசின் சார்பில் நிதி அமைச்சகத்தின் பொருளாதார விவகாரத்துறை கூடுதல் செயலர் திரு. ரஜத் குமார் மிஸ்ரா ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். ஆசிய வளர்ச்சி வங்கியின் இந்தியாவுக்கான இயக்குநர் திரு டேக்கியோ கொனிஷி கையெழுத்திட்டார்.
  • 48 கி.மீ. தூரத்துக்கு புதிய மழைநீர் வடிகால்கள் அமைக்கவும் தற்போதுள்ள வடிகால்களை சீரமைக்கவும், பருவ நிலையை சமாளிக்கும் வகையில் 23 கி.மீ. தூரத்துக்கு நகர்ப்புற சாலைகளை உருவாக்கவும் இத்திட்டம் வழி வகுக்கும்

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel