ஐசிசி உலக கோப்பை டி20 2021 ஆஸ்திரேலியா புதிய சாம்பியன்
- துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டி இன்று நடைபெற்றது. இதில் நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதின.
- இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பவுலிங்கை தேர்வு செய்தது. முதலில் பேட் செய்த நியூசிலாந்து அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு172 ரன்களை சேர்த்தது.
- ஆஸ்திரேலிய அணி 18.5 ஓவர்களில் 173 ரன்கள் சேர்த்து 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பெற்று, கோப்பையை கைப்பற்றியது.ஆஸ்திரேலியா அணி டி20 உலக கோப்பையை கைப்பற்றியது இதுவே முதல் முறையாகும்.
29-வது தென் மண்டல முதல்வர்கள் மாநாடு
- திருப்பதியில் உள்ள தாஜ் நட்சத்திர ஓட்டலில் 29வதுதென் மண்டல முதல்வர்கள் மாநாடு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் நடந்தது.
- இக்கூட்டத்தில், தமிழக அரசு சார்பில் அமைச்சர் பொன்முடி, தலைமைச் செயலாளர் இறையன்பு, புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி, கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை, தெலங்கானா தலைமைச் செயலாளர் சோமேஷ் குமார், உள்துறை அமைச்சர் முகமது அலி, கேரள தலைமைச் செயலாளர் விஷ்வாஸ் மெஹ்தா மற்றும் அமைச்சர் சந்திரசேகரன், தெலங்கானா மற்றும் புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சவுந்தர்ராஜன், அந்தமான் - நிக்கோபார் தீவுகளின் துணைநிலை ஆளுநர் தேவேந்திர குமார் ஜோஷி, லட்சத்தீவின் அட்மினிஸ்டேடர் பிரபுல் படேல் ஆகியோர் பங்கேற்றனர்.
முதல்வரின் முகவரி என்ற புதிய துறை உருவாக்கம் - தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு
- உங்கள் தொகுதியில் முதல்வர், முதல்வர் உதவி மையம், குறைதீர்ப்பு மேலாண்மை அமைப்பு ஒருங்கிணைப்பு ஆகிய துறைகள் ஒன்றிணைந்து 'முதல்வரின் முகவரி' என்ற புதிய துறை ஏற்படுத்தப்பட்டுள்ளது.
- மேலும் முதல்வரின் முகவரி என்ற புதிய துறை சிறப்பு அலுவலராக ஷில்பா பிரபாகர் சதீஷ் அவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளதாகவும் தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
- முதல்வரின் முகவரி துறையில் மனுக்கல் தீர்வுக்காண ஒற்றை இணையதள முகப்பு பயன்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
- முதல்வரின் முகவரி துறையின் மனுக்களுக்குத் தீா்வு காண முதல்வரின் உதவி மையம் மற்றும் ஒருங்கிணைக்கப்பட்ட குறைதீா்ப்பு மேலாண்மை அமைப்பின் உதவி எண் மாநிலம் முழுவதும் ஒற்றை இணையதள முகப்பாகப் பயன்படுத்தப்படும்.
பருவநிலை மாற்ற ஒப்பந்தம் - இந்தியாவின் யோசனை ஏற்பு
- பருவநிலை மாற்றத்துக்குக் காரணமான பசுமைக் குடில் வாயுக்கள் வெளியேற்றத்தைக் கட்டுப்படுத்துவது குறித்து ஐ.நா. தலைமையில் உலக நாடுகள் ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் கூடி விவாதித்தன.
- கடந்த மாதம் 31-ஆம் தேதி தொடங்கிய இந்த மாநாட்டில், கரியமில வாயு வெளியேற்றத்தைக் கட்டுப்படுத்துவது, நிலக்கரி உள்ளிட்ட படிம எரிபொருள்களின் பயன்பாட்டைக் குறைப்பது போன்றவை குறித்த ஒப்பந்தத்தை உருவாக்க பேச்சுவாா்த்தை நடைபெற்றது.
- இதில் ஒருமித்து கருத்த எட்டப்படாத நிலையில், மாநாடு மேலும் ஒரு நாள் நீட்டிக்கப்பட்டு சனிக்கிழமை நடைபெற்றது. அந்தப் பேச்சுவாா்த்தையில், பருவநிலை மாற்ற ஒப்பந்தத்தின் இறுதிவடிவத்துக்கு சுமாா் 200 நாடுகள் ஒப்புதல் அளித்தன.
- அந்த ஒப்பந்தத்தில், 'நிலக்கரி பயன்பாட்டை படிப்படியாக நிறுத்த வேண்டும்' என்று குறிப்பிடப்பட்டிருந்தது. எனினும், அந்த வாசகத்தை 'நிலக்கரி பயன்பாட்டை படிப்படியாகக் குறைக்க வேண்டும்' என்று மாற்றுமாறு இந்தியா கோரிக்கை விடுத்தது. எனினும், இறுதியில் இந்தியாவின் யோசனை ஏற்றுக்கொள்ளப்பட்டது.
ஆட்சி நிர்வாகத்தை மேம்படுத்த ஒன்றிய அமைச்சர்கள் குழு
- வளர்ச்சி மேம்பாட்டை கருத்தில் கொண்டு 77 அமைச்சர்களை எட்டு குழுக்களாக பிரதமர் மோடி பிரித்துள்ளனர். இந்த 8 குழுக்களுடன் பிரதமர் மோடி தனித்தனியாக 5 மணி நேரம் ஆலோசனை நடத்தினார். இது வரை 5 அமர்வுகள் நடந்து முடிந்துள்ளன.
- இந்த ஆலோசனையின் போது தனிப்பட்ட செயல்திறன், திட்டங்களில் கவனம் செலுத்துதல், நடாளுமன்ற நடைமுறைகள் குறித்து கவுன்சிலிங் வழங்கப்பட்டது. எட்டு குழுக்களில் 77 அமைச்சர்களும் ஒரு பகுதியாக இருப்பர்.
- ஒவ்வொரு குழுவிலும் ஒன்பது அமைச்சர்கள் இடம்பெற்றிருப்பார். இந்த குழுக்களுக்கு ஒன்றிய அமைச்சர்கள் ஹர்தீப் சிங் பூரி, நரேந்திர சிங் தோமர், பியூஸ் கோயல், தர்மேந்திர பிரதான், ஸ்மிருதி இராணி, அனுராக் தாக்கூர் ஆகியோர் ஒருங்கிணைப்பார்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
- திரிபுரா மாநிலத்தில் பிரதம மந்திரி ஆவாஸ் கிராமிய திட்டத்தின் கீழ் 1.47 லட்சம் பயனாளிகளின் வங்கி கணக்கில் முதல் தவணையாக ரூ.709 கோடி நேரடியாக செலுத்தப்பட்டது.
அமலாக்கத்துறை, சிபிஐ இயக்குநர்களின் பதவிகாலம் நீட்டிப்பு - அவசர சட்டத்திற்கு ஒப்புதல்
- அமலாக்கத்துறை, சிபிஐ இயக்குநர்களின் பதவிகாலத்தை 5 ஆண்டுகள் நீட்டிக்கும் அவசர சட்டத்துக்கு குடியரசு தலைவர் ஒப்புதல் அளித்துள்ளார்.
- அதிகபட்சம் 2 ஆண்டுகள் என இருந்த பதவிகாலத்தை 5 ஆண்டுகள் வரை நீட்டிப்பு செய்ய அவசரச்சட்டம் இயற்றப்பட்டது.
- தில்லி மண்டலத்தில் உள்ள கர்ஹி கர்சரு, சரக்கு பெட்டக கிடங்கில், வாரத்தின் 7 நாட்களிலும் சரக்கு பெட்டகங்களை வெளியேற்றுவதற்கு சுங்கத்துறை ஒப்புதல் வழங்கும் பணியை தில்லி மண்டல சுங்கத்துறை தலைமை ஆணையர் திரு சுர்ஜித் புஜாபல் தொடங்கி வைத்தார்.