‘ஃபோர்ஸ் இன் ஸ்டேட்கிராப்ஃட்’ புத்தகம் - பாதுகாப்புத்துறைச் செயலாளர் வெளியீடு
- ஃபோர்ஸ் இன் ஸ்டேட்கிராப்ஃட்’ என்ற புத்தகத்தை பாதுகாப்புத்துறைச் செயலாளர் டாக்டர் அஜய் குமார் வெளியிட்டார். இந்த புத்தகத்தை தேசிய பாதுகாப்புக் கல்லூரியின் கமாண்டன்ட், ஏர் மார்ஷல் திப்தேந்து சவுத்திரி மற்றும் தேசிய பாதுகாப்பு கல்லூரியின் தலைவர் ஏர் வைஸ் மார்ஷல் டாக்டர் அர்ஜூன் சுப்பிரமணியன்(ஓய்வு) ஆகியோர் எழுதியுள்ளனர்.
- இந்தப் புத்தகத்தில் தீவிரவாத எதிர்ப்பு நடவடிக்கைகள், வடகிழக்கு மாநிலங்களில் உள்ள மோதல் பிரச்சனை, வான் சக்தி, அணு ஆயுத சக்தி போன்ற இந்திய பாதுகாப்பு அம்சங்கள் தொடர்பான கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன.
- மத்திய சுகாதாரத் துறையின் செலவுத் துறை 15-வது நிதிக் குழு, 2021-22 நிதி ஆண்டு முதல் 2025-26 வரையிலான காலத்தில் மொத்தம் ரூ.4,27,911 கோடியை மாநில அரசுகளுக்கு விடுவிக்குமாறு பரிந்துரைத்துள்ளது.
- இதில் சுகாதாரத் துறைக்கான ஒதுக்கீடு ரூ.70,051 கோடியாகும். இதில் கிராமப்புறங்களில் உள்ள ஆரம்ப சுகாதாரத் துறைக்கான ஒதுக்கீடு ரூ.42,928 கோடியாகும். நகர்ப் புறங்களுக்கான ஒதுக்கீடு ரூ.26,123 கோடியாகும்.
- இதில் ஆந்திர மாநிலத்துக்கான ஒதுக்கீடு ரூ.488 கோடி, அருணாச்சலுக்கு ரூ.272.25 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. பிஹார் ரூ. 1,116.30 கோடி, சத்தீஸ்கர் ரூ.338.79 கோடி, இமாச்சல் ரூ.98 கோடி, ஜார்க்கண்ட் ரூ.444.39 கோடி, கர்நாடகா ரூ.551.53 கோடி, மத்தியப் பிரதேசம் ரூ.922.79 கோடி, மகாராஷ்டிரா ரூ.778 கோடி, மணிப்பூர், ரூ.42.87 கோடி, மிசோரம் ரூ.31.19 கோடி, ஒடிசா ரூ.461.76 கோடி, பஞ்சாப் ரூ.399.65 கோடி, ராஜஸ்தான் ரூ. 656.17 கோடி, சிக்கிம் ரூ.20.97 கோடி, தமிழ்நாடு ரூ.805.92 கோடி, உத்தராகண்ட் ரூ.150 கோடி, மேற்கு வங்கத்துக்கு ரூ.828 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
- மொத்த ஒதுக்கீட்டில் ஆரம்ப சுகாதார நிலையங்களில் நோய் கண்டறிவதற்கான கட்டமைப்பு வசதிகளுக்கான ஒதுக்கீடு ரூ.16,377 கோடியாகும். வட்டார அளவிலான சுகாதார நிலையங்களுக்கான ஒதுக்கீடு ரூ.5,279 கோடியாகும்.
- ரூ.7,167 கோடி தொகை கட்டிடங்கள் கட்டுவதற்காக ஒதுக்கப்பட்டுள்ளது. ஆரம்ப சுகாதார நிலையங்கள் (பிஹெச்சி, சமுதாய சுகாதார மையங்கள் (சிஹெச்சி) ஆகியவற்றுக்கு ரூ.15,105 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
- நகர்ப்புற ஆரம்ப சுகாதார மையங்களில் நோய் கண்டறியும் வசதிகளை உருவாக்க ரூ.2,095 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. நலவாழ்வு மையங்களுக்கான ஒதுக்கீடு ரூ.24,028 கோடியாகும்.
- சுகாதார அமைச்சகத்தின் நல வாழ்வுத்துறைக்கான ஒதுக்கீடு 2021-22க்காக அனுமதிக்கப்பட்ட தொகை ரூ.13,192 கோடி. இதில் இதில் ரூ.8,273 கோடிதொகை கிராமப் பகுதிகளுக்காகவும், ரூ.4,919 கோடி நகர்ப்பகுதிகளுக்காகவும் ஒதுக்கப்பட்டுஉள்ளது.
5 முக்கிய சேவைகளின் அடிப்படையில் உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற்றது திருப்பதி தேவஸ்தானம்
- 'வேர்ல்ட் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ்' நிறுவனம் லண்டனை தலைமையகமாகக் கொண்டு செயல்படுகிறது. இந்தப் புத்தகத்தில் திருமலை திருப்பதி தேவஸ்தானம் இடம்பெற்றுள்ளது.
- இந்நிறுவனத்தின் இந்திய பிரிவு தலைவர்சந்தோஷ் சுக்லா சார்பில், அதன் துணைச் செயலாளர் உல்லா ஜிஇதற்கான சான்றிதழை திருமலையில் தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் ஒய்.வி.சுப்பா ரெட்டியிடம் வழங்கினார்.
- திருமலை திருப்பதியில் அதிகமானோர் தலை முடி காணிக்கை செலுத்துவது, அதிக லட்டு பிரசாதம் விநியோகம், தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு இலவசமாக அன்ன பிரசாதம் வழங்கல், பக்தர்களுக்காக நெருக்கடி இல்லாத வரிசைகளை ஏற்பாடு செய்தது, திருப்பதியிலிருந்து திருமலைக்கு அமைக்கப்பட்டிருக்கும் நடைபாதை மற்றும் பக்தர்களுக்கு செய்யும் சேவை ஆகியவற்றால் தேவஸ்தானம், இந்த சாதனை புத்தகத்தில் இடம்பெற்று உள்ளது.
சர்வதேச சட்டக் கமிஷன் உறுப்பினராக இந்தியர் தேர்வு
- சர்வதேச அளவிலான சட்ட வரையறைகள் உருவாக்குவது உள்ளிட்டவற்றுக்காக 1947ல் அமைக்கப்பட்டது சர்வதேச சட்டக் கமிஷன்.
- இந்தத் தேர்தலில் 192 உறுப்பினர்களில், 163 ஓட்டுகள் பெற்று இந்தியாவின் சார்பில் பேராசிரியர் பிமல் படேல் தேர்வு செய்யப்பட்டுள்ளார். தாய்லாந்துக்கு 162 ஓட்டுகள், ஜப்பானுக்கு 154, வியட்நாமுக்கு 145, சீனாவுக்கு 142 ஓட்டுகள் கிடைத்தன.
- வரும் 2023 ஜன., 1 முதல், ஐந்து ஆண்டுகளுக்கு சர்வதேச சட்டக் கமிஷன் உறுப்பினராக, பேராசிரியர் பிமல் படேல் இருப்பார். ராஷ்ட்ரீய ரக் ஷா பல்கலை துணை வேந்தராகவும், இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசனை வாரியத்தின் உறுப்பினராகவும் அவர் உள்ளார்.