TAMIL
- தேசிய குடும்ப நல ஆய்வு 2019-2021ம் ஆண்டுகளுக்கான புள்ளிவிவரங்களை வெளியிட்டுள்ளது. இதில் இந்த தகவல்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.
- கடந்த 2015-16ம் ஆண்டு 1,000 ஆண்களுக்கு 991 என இருந்த பெண்களின் எண்ணிக்கையானது 2019-2021ம் ஆண்டில் 1,020 ஆக அதிகரித்துள்ளது. ஆண்களின் எண்ணிக்கையை விட பெண்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது இதுவே முதல்முறையாகும்.
- 1,000 ஆண்களுக்கு கிராமப்புறங்களில் 1,037 பெண்களும், நகர்ப்புறங்களில் 985 பெண்களும் உள்ளனர் என ஆய்வு முடிவு தெரிவித்துள்ளது. ஆனால், மறுபுறம் கடந்த 5 ஆண்டுகளில் 1,000 ஆண் குழந்தைகளுக்கு 929 பெண் குழந்தைகள் மட்டுமே பிறந்துள்ளன.
- 1,000 ஆண் குழந்தைகள் பிறந்த நகரங்களில் 924 பெண் குழந்தைகளும், கிராமங்களில் 931 பெண் குழந்தைகளும் பிறந்துள்ளன. இது கடந்த 2015-2016 புள்ளிவிவரங்களைவிட அதிகமாகும். ஆனாலும், இது சமூகத்தில் ஓரளவு தாக்கத்தை ஏற்படுத்தும் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
- தமிழ்நாட்டை பொறுத்த அளவில், 1,000 ஆண்களுக்கு நகர்ப்புறங்களில் 1,062 பெண்களும், கிராமப்புறங்களுக்கு 1,113 பெண்கள் என மொத்தமாக சராசரியாக 1,000 ஆண்களுக்கு 1,088 பெண்கள் உள்ளனர்.
- கடந்த 5 ஆண்டுகளில் பிறந்த பெண்குழந்தைகள் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளது. 2015-16 ஆண்டுகளில் 1,000 ஆண்களுக்கு 954 என இருந்த பெண் குழந்தைகளின் எண்ணிக்கை 2020-21ம் ஆண்டுகளில் 878 என குறைந்துள்ளது.
- தமிழ்நாடு மட்டுமல்லாது கேரளாவிலும் இந்த பெண் குழந்தைகள் விகிதாச்சாரம் வெகுவாக குறைந்துள்ளது. ஆனால் ஆந்திரப் பிரதேசத்தில் இந்த எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
- 2015-16ல் 1,000 ஆண் குழந்தைகளுக்கு 914 என இருந்த பெண் குழந்தைகளின் எண்ணிக்கை 2019-20ம் ஆண்டுகளில் 934 என அதிகரித்துள்ளது.
- ஹரியானாவில் அதிகப்பட்சமாக இதுவரை இல்லாத அளவில் வளர்ந்த பெண்கள் எண்ணிக்கை மற்றும், கடந்த 5 ஆண்டுகளில் பிறந்த பெண் குழந்தைகளின் எண்ணிக்கை என இரண்டும் கணிசமாக அதிகரித்துள்ளன.
- 2015-16ல் 1,000 ஆண் குழந்தைகளுக்கு 836 என இருந்த பெண் குழந்தைகளின் எண்ணிக்கையானது 2020-2021ல் 893 ஆக அதிகரித்துள்ளன.
- The National Family Health Survey has released statistics for 2019-2021. In which this information is mentioned. The number of women has increased from 991 per 1,000 men in 2015-16 to 1,020 in 2019-2021. This is the first time that the number of women has increased more than the number of men.
- The study found that there were 1,037 females per 1,000 males in rural areas and 985 females in urban areas. But, on the other hand, in the last 5 years, only 929 girls per 1,000 boys have been born.
- 924 girls were born in cities where 93 boys were born and 931 girls in villages. This is higher than the last 2015-2016 figures. However, researchers say that this could have some effect on the community.
- As far as Tamil Nadu is concerned, there are 1,062 females per 1,000 males in urban areas and 1,113 females in rural areas for an average of 1,088 females per 1,000 males. The number of girls born has dropped significantly in the last 5 years. The number of girls has dropped from 954 per 1,000 men in 2015-16 to 878 in 2020-21.
- Not only in Tamil Nadu but also in Kerala the proportion of these girls has come down drastically. But in Andhra Pradesh the number has increased. The number of girls has increased from 914 per 1,000 boys in 2015-16 to 934 in 2019-20.
- Haryana has seen a significant increase in the number of women growing up to an all-time high and the number of girls born in the last 5 years. The number of girls has increased from 836 per 1,000 boys in 2015-16 to 893 in 2020-2021.