சுற்றுச்சூழலுக்கு உகந்த பசுமை ரயில் என்ஜின் தெற்கு ரயில்வே பொதுமேலாளா் தொடக்கி வைத்தாா்
- தெற்கு ரயில்வேயின் சென்னை கோட்டம் சாா்பில், சுற்றுச்சூழலுக்கு உகந்த மற்றும் மாசுக் கட்டுப்பாட்டுக்கு ஏற்ற ரயில் என்ஜின் (பசுமை 3.0) உருவாக்கப்பட்டுள்ளது.
- இதை மின்சாரம் மற்றும் பேட்டரி என்று இருமுறைகளிலும் மாற்றி இயக்க முடியும். முதல் பசுமை இரட்டை முறை ரயில் என்ஜின் கடந்த ஆண்டு அக்டோபா் 6-ஆம் தேதி தயாரானது.
- இதையடுத்து, அரக்கோணம் மின்சார என்ஜின் பணிமனையில் மேலும் 4 என்ஜின் பசுமை முறையில் மாற்றப்பட்டன. இதன் தொடா்ச்சியாக தற்போது உருவாக்கப்பட்டுள்ள பசுமை ரயில் என்ஜின் இயக்கத்தை, சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தின் 6-ஆவது நடைமேடையில் தெற்கு ரயில்வே பொதுமேலாளா் ஜான்தாமஸ் தொடக்கி வைத்தாா்.
- இந்த பசுமை ரயில், பேட்டரி முறையில் 24 பெட்டிகளை இழுத்துச் செல்லும் திறன் உடையது. மூன்றரை மணி நேரம் முதல் 4 மணி நேரம் வரை பேட்டரி சக்தி நிலைத்திருக்கும். இதன்பிறகு, மின்னேற்றம் செய்து பயன்படுத்தலாம். இது சுற்றுச்சூழலுக்கு உகந்தது மட்டுமின்றி, செலவும் குறைவாகும்.
68 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் ஏர் இந்தியா நிறுவனத்தை வாங்கியது டாடா
- ஒன்றிய அரசு நிறுவனமான ஏர் இந்தியா நிறுவனம் தொடர்ந்து வருவாய் இழப்பில் இயங்கி வந்தது. அதனைத் தொடர்ந்து கடந்த சில ஆண்டுகளாகவே அந்நிறுவனத்தை விற்க ஒன்றிய அரசு நடவடிக்கை எடுத்து வந்தது.
- இதற்காக நடத்தப்பட்ட ஏலத்தில் பங்கேற்ற ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தை தோற்கடித்து, ரூ. 18,000 கோடிக்கு டாடா சன்ஸ் நிறுவனம் ஏலம் எடுத்துள்ளதாக தெரிவித்தனா்.
- ஏா் இந்தியா ஏலத்தில் டாடா சன்ஸ் நிறுவனத்தின் பிரிவான டலேஸ் தனியாா் நிறுவனம் வெற்றி பெற்றுள்ளது. ஏலத்தில் வெற்றி பெற்ற ஒப்பந்தப்புள்ளிக்கு மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா, நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன், வா்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சா் பியூஷ் கோயல், விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சா் ஜோதிராதித்ய சிந்தியா ஆகியோரைக் கொண்ட குழு கடந்த 4-ஆம் தேதி ஒப்புதல் அளித்தது.
- ஏா் இந்தியாவின் 100 சதவீத பங்குகளை ரூ. 18,000 கோடிக்கு டாடா சன்ஸ் ஏலம் எடுத்துள்ளது. ஏலத் தொகையில் ரூ. 15,300 கோடி கடன் பெற்றும், மீதமுள்ள ரூ. 2,700 கோடியை ரொக்கமாகவும் டாடா சன்ஸ் செலுத்த உள்ளது.
- ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ள ஏா் இந்தியா நிறுவனத்தைப் பரிமாற்றம் செய்யும் பணிகளை வரும் டிசம்பருக்குள் நிறைவு செய்ய இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது.
- இந்த ஏல ஒப்பந்த நடைமுறைகளின்படி, டாடா நிறுவனம் ஏா் இந்தியா அடையாளத்தையும் (பிராண்ட்), சின்னத்தையும் (லோகோ) 5 ஆண்டுகளுக்கு மாற்றம் செய்ய முடியாது. ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவைச் சோந்த நபா்களுக்கு மட்டுமே அவற்றை மாற்றம் செய்ய அல்லது விற்க முடியும்.
துபாயில் நடந்த உலக கண்காட்சி 2020ல் மலபார் குழும காட்சிக்கூடம் ஒன்றிய அமைச்சர் திறந்து வைத்தார்
- துபாயில் நடந்த உலக கண்காட்சி 2020ல், மலபார் கோல்டு & டைமண்ட்ஸ் சார்பில், இந்திய நகைகளின் கைவினை திறன், கலைத்திறன், அதன் பலதரப்பட்ட கலாச்சார பாரம்பரியங்களை, காட்சிப்படுத்தியது.
- ஒன்றிய தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல், இந்திய காட்சிக்கூடத்தை திறந்துவைத்து, பார்வையிட்டார். அப்போது, உலகெங்கும் பிராண்டின் மீதுள்ள நம்பிக்கை, பாரம்பரிய கலைத்திறன், இந்திய கைவினை நகைகளை சர்வதேச அளவில் பிரதிநிதித்துவப்படுத்துவதை பாராட்டினார்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், மாநில அளவிலான வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு (DISHA Committee)
- தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், மாநில அளவிலான வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு (DISHA Committee) அமைக்கப்பட்டுள்ளது.
- இக்குழுவில், ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் அவர்கள் துணை தலைவராகவும், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் முதன்மைச் செயலாளர் அவர்கள் உறுப்பினர் செயலாளராகவும், உறுப்பினர்களாக ஒன்றிய அரசால் பரிந்துரைக்கப்பட்ட மக்களவை உறுப்பினர்களான டி.ஆர்.பாலு, எஸ்.எஸ். பழனிமாணிக்கம். ஆ.ராசா, எம்.செல்வராஜ். பி.ஆர். நடராஜன், சு.திருநாவுக்கரசர், தொல்.திருமாவளவன் , திரு.பி.ரவீந்திரநாத்குமார், திரு.கே.நவாஸ்கனி ஆகியோரும், மாநிலங்களவை உறுப்பினர்களான திருச்சி சிவா, திரு.ஆர்.எஸ்.பாரதி, எ.நவநீதகிருஷ்ணன் மற்றும் எஸ்.ஆர்.பாலசுப்ரமணியன் ஆகியோரும்;
- மாநில அரசால் பரிந்துரைக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் திரு.வி.ஜி.ராஜேந்திரன், டாக்டர் நா.எழிலன், திரு.டி.கே.ஜி.நீலமேகம் , திரு.மு.பூமிநாதன், திரு . ஜெ.எம்.எச். அசன் மௌலானா மற்றும் திரு.கே.ஏ.செங்கோட்டையன் ஆகியோர் உள்ளனர்.
- நிலையை மதிப்பாய்வு செய்தல், பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை செயல்படுத்துவதில் மாநில அரசால் ஈடுபடுத்தப்பட்டுள்ள மனித வளங்களின் செயல்திறனை வரிசைப்படுத்தி மதிப்பாய்வு செய்தல், வளர்ச்சித் திட்டங்களை செயல்படுத்துவதில் உள்ள தடைகளை நிவர்த்தி செய்து, அங்கீகரிக்கப்பட்ட திட்டங்களின் வடிவமைப்புகளை மேம்படுத்த அல்லது நடுநிலைப்படுத்த உரிய திருத்தங்களைச் செய்ய பரிந்துரைகளை வழங்குதல் ஆகியன இக்குழுவின் பணியில் அடங்கும்.
- பெரு நாட்டு தலைநகா் லிமாவில் நடைபெற்று வரும் இப்போட்டியில் இந்தியா தொடா்ந்து ஆதிக்கம் செலுத்தி வருகிறது. அணிகள் பிரிவில் தாய்லாந்து இணையான கான்யகோம்-சிச்வாகோனை 9-1 என்ற புள்ளிக் கணக்கில் வீழ்த்தி தங்கம் வென்றது இந்தியாவின் விஜயவீா் சித்து-ரிதம் சங்வான் இணை.
- ஜூனியா் மகளிா் 50 மீ ரை'ஃபிள் பிரிவில் பிரசிதி மஹந்த், நிஷ்சல், ஆயுஷி போடா் ஆகியோா் அடங்கிய அணி 43-47 என்ற புள்ளிக் கணக்கில் அமெரிக்க அணியிடம் தோற்று வெள்ளிப் பதக்கம் வென்றது.
- கலப்பு ரேபிட் பையா் பிஸ்டல் பிரிவில் தேஜஸ்வினி, அனிஷ் ஆகியோா் 10-8 என்ற புள்ளிக் கணக்கில் தாய்லாந்து இணையை வீழ்த்தி வெண்கலம் வென்றனா்.
- மொத்தம் 10 தங்கம், 9 வெள்ளி, 4 வெண்கலத்துடன் இந்தியா முதலிடத்தில் உள்ளது. அமெரிக்கா இரண்டாம் இடத்தில் உள்ளது.
- உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் தொடரில் வெள்ளிப்பதக்கம் வெல்லும் முதல் இந்திய வீராங்கனை என்ற சாதனையைப் படைத்துள்ளார் அவர்.
- 19 வயதேயான இளம் வீராங்கனை அன்ஷூ மாலிக், உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் பெண்கள் 57 கிலோ எடைபிரிவில் போட்டியிட்டார்.
- இறுதிப்போட்டியில், அமெரிக்க வீராங்கனை, 2016 ஒலிம்பிக் பதக்க வீராங்கனை ஹெலனை எதிர்த்து போட்டியிட்ட அவர், தோல்வியுற்றார். இதனால் அவருக்கு வெள்ளிப்பதக்கம் கிடைத்துள்ளது.
- இதற்கு முன்பு, கீதா போகட் (2012), பபிதா போகட் (2012), பூஜா தண்டா (2018), வினேஷ் போகட் (2019) ஆகியோர் உலக மல்யுத்த சாம்பியன்ஷிப்பில் வெண்கலப் பதக்கம் வென்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.