ஏழை - எளியோர் வாழும் இடத்திலேயே சிறப்பு மருத்துவ சேவை அளிக்கும் "கலைஞரின் வருமுன் காப்போம் திட்டம்"
- ஏழை எளியோர் வாழும் இடத்திலேயே சிறப்பு மருத்துவசேவை அளிக்கும் '' கலை ஞரின் வருமுன் காப்போம் '' திட்டத்தை வாழப்பாடியில் தமிழ்நாடு முதலமைச்சர் மு . க . ஸ்டாலின் தொடங்கி வைத்தார் .
- நோய்கள் வருமுன் அதனை தடுக்கும் அணுகுமுறை குறித்து மக்க ளிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி, ஆரோக்கியத்துடன் வாழவேண்டும் என்ற சிந்தனையை உருவாக்கிட, கலைஞரின் வருமுன் காப்போம் திட்டம் பயன்படும்.
- இந்த திட்டத்தின் மூலம், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கிராமங்கள், பேரூராட்சிகள், நகராட்சிகள் மற்றும் மாநகராட்சிகளில் உள்ள மக்கள் அனைவரும் மருத்துவ சிகிச்சை பெற்று பயனடைவார்கள் .
- பொதுமக்கள் அனைவருக்கும் மருத்துவ பரிசோதனை மற்றும் சிறப்பு மருத்துவ சிகிச்சை எளிதில் கிடைக்கச் செய்தல், நோய்களுக்கான பரிசோதனை மற்றும் உடல்நலம் குறித்து ஆலோசனை வழங்குதல், அதிநவீன பரிசோதனை சாதனங்களால் நோய்களை கண்டறிதல், நோய் கண்டவர்களுக்கு உடனடி சிகிச்சை அளித்தல், சுகாதார விழிப்புணர்வு கல்வி வாயிலாக உடல்நல மேம்பாடு மற்றும் தனிநபர் ஆரோக்கியத்தை உருவாக்குதல் போன்றவற்றை நோக்கமாக கொண்டு கலைஞரின் வருமுன் காப்போம் திட்டம் செயல்படும் .
- இந்தத் திட்டத்தின் மூலம் ஆண்டுக்கு 1,250 சிறப்பு முகாம்கள் நடத்தப்படும். இந்த முகாம்களில் பன்முனை மருத்துவ பரிசோதனை, கண், பல், காது - மூக்கு - தொண்டை, வயிறு சம்பந்தப்பட்ட நோய்கள், நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம், காசநோய், மூட்டு மற்றும் எலும்பு சம்பந்தமான நோய்கள், இதய நோய்கள், சிறுநீரக கோளாறு, குழந்தை நல சிறப்பு மருத்துவம், மன நல மருத்துவம், கர்ப்பிணி தாய்மார்கள் மற்றும் பெண்களுக்கான சிறப்பு மருத்துவம் மற்றும் புற்றுநோய் மருத்துவம் போன்ற சிகிச்சைகள் அளிக்கப்படும் .
மதிய உணவுத் திட்டத்துக்கு பிரதமரின் ஊட்டச்சத்து திட்டம் (PM POSHAN - PM Poshan Shakti Nirman) என்று பெயர் மாற்றம்
- மதிய உணவுத் திட்டத்துக்கு பிரதமரின் ஊட்டச்சத்து திட்டம் (PM POSHAN - PM Poshan Shakti Nirman) என்று மத்திய அமைச்சரவை பெயர் மாற்றியமைத்துள்ளது.
- மதிய உணவுத் திட்டத்தின் கீழ், ஒன்று முதல் 8ம் வகுப்பு வரை படிக்கும் அனைத்து குழந்தைகளுக்கு ஒரு முறைக்கு சமைத்த உணவு வழங்குப்பட்டு வந்தது. இதன்மூலம், நாடுமுழுவதிலும் உள்ள 11.80 கோடி மாணவர்கள் பயனடைந்து வந்தனர்.
- தற்போது, மாற்றியமைக்கப்பட்ட பிரதமரின் ஊட்டச்சத்துத் திட்டத்தின் கீழ், நடுநிலைப் பள்ளிகளில் படிக்கும் 11.80 கோடி மாணவர்களோடு, அரசு மற்றும் அரசு உதவி பெறும் ஆரம்ப பள்ளிக்கு முந்தைய வகுப்புகளில் படிக்கும் மாணவர்கள், பால்வாடி மையங்களுக்கும் விரிவுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
- இதன்மூலம், ஆரம்ப பள்ளிக்கு முந்தைய வகுப்புகளில் படிக்கும் 24 லட்சம் மாணவர்கள் கூடுதலாக இத்திட்டத்தின் கீழ் பயனடைய உள்ளனர்.
- இத்திட்டத்துக்கு 2021-22ம் ஆண்டு முதல் 2025-26ம் ஆண்டு வரை, மத்திய அரசு ரூ.54061.73 கோடியும், மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச அரசுகள் ரூ.31,733.17 கோடியும் செலவு செய்யும்.
- உணவு தானியங்களுக்கான கூடுதல் செலவான ரூ.45,000 கோடியை மத்திய அரசு ஏற்கும். ஆகையால் இத்திட்டத்துக்கான பட்ஜெட் மதிப்பு ரூ. 1,30,794.90 கோடி என்று மத்திய அமைச்சரவை தெரிவித்துள்ளது.
- முன்னதாக, 6 வயது வரையிலான குழந்தைகளின் முழுமையான வளர்ச்சிக்கு வழி வகுக்கும் வகையில் மாநிலம், யூனியன் பிரதேசங்களில் ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டுக்கான சேவை திட்டம் (ஐசிடிஎஸ்) அமல்படுத்தப்பட்டு வந்தது.
- இந்த திட்டத்தின் கீழ், அங்கன்வாடியின் மூலம் 0 முதல் 6 வயது குழந்தைகளின் ஊட்டச்சத்து , சுகாதாரம், மனம் மற்றும் சமூக வளர்ச்சியினை மேம்படுத்துதப்பட்டு வந்தது.