உஸ்பெகிஸ்தானின் அதிபர் தேர்தலுக்கான சர்வதேச பார்வையாளராக இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர் சுஷில் சந்திரா
- உஸ்பெகிஸ்தானின் மத்திய தேர்தல் ஆணைய தலைவரின் அழைப்பின் பேரில், 2021 அக்டோபர் 24 நடைபெற்ற அதிபர் தேர்தலை கண்காணிப்பதற்காக இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர் சுஷில் சந்திரா தலைமையிலான மூன்று பேர் குழு அந்நாட்டுக்கு சென்றது.
- இந்தியாவின் தலைமைத் தேர்தல் ஆணையர் மற்றும் உஸ்பெகிஸ்தானின் மத்திய தேர்தல் ஆணைய தலைவர் திரு. ஜைனிடின் எம் நிஜாம்கோட்ஜேவ் தேர்தல் ஒத்துழைப்பு குறித்த இருதரப்பு கூட்டத்தை 2021 அக்டோபர் 21 அன்று நடத்தினர்.
- உஸ்பெகிஸ்தான் தேர்தல் சட்டத்தின் கீழ், நாடு முழுவதும் நடைபெறும் தேர்தலின் வாயிலாக ஐந்தாண்டு காலத்திற்கு அதிபர் தேர்ந்தெடுக்கப்படுகிறார்.
- பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகள் மட்டுமே தேர்தலில் போட்டியிட வேட்பாளர்களை பரிந்துரைக்க முடியும். ஐந்து வேட்பாளர்கள் - நான்கு ஆண்கள் மற்றும் ஒரு பெண் வேட்பாளர் உஸ்பெகிஸ்தான் அதிபர் தேர்தலில் போட்டியிட்டனர்.
- தாஷ்கண்டில் உள்ள இந்தியாவின் இரண்டாவது பிரதமர் திரு லால் பகதூர் சாஸ்திரி அவர்களின் நினைவிடத்தில் இருக்கும் அவரது மார்பளவு சிலைக்கு தலைமைத் தேர்தல் ஆணையர் அஞ்சலி செலுத்தினார்.
- தேசத்தின் கடல்சார் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பிற்கு குறிப்பிடத்தக்க ஊக்கத்தை அளிக்கும் வகையில், உள்நாட்டிலேயே கட்டப்பட்ட இந்திய கடலோர காவல்படை கப்பலான 'சர்தக்' அக்டோபர் 28, 2021 அன்று கோவாவில் இந்திய கடலோர காவல்படையின் இயக்குநர் ஜெனரல் கே.நடராஜனால் பணியமர்த்தப்பட்டு நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டது.
- ICGS சார்தக் குஜராத்தில் உள்ள போர்பந்தரை மையமாகக் கொண்டு, இந்தியாவின் மேற்குக் கடற்பரப்பில் கமாண்டர், கடலோர காவல்படை பிராந்தியத்தின் (வடமேற்கு) செயல்பாட்டு மற்றும் நிர்வாகக் கட்டுப்பாட்டின் கீழ் செயல்படும்.
- ICGS சார்த்தக் துணை இன்ஸ்பெக்டர் ஜெனரல் எம்.எம். சையத் தலைமையில் 11 அதிகாரிகள் மற்றும் 110 பணியாளர்களைக் கொண்டுள்ளது.
- ICG க்காக கோவா ஷிப்யார்ட் லிமிடெட் கட்டமைக்கும் ஐந்து OPVகளின் தொடரில் ICGS சார்தக் 4 வது இடத்தைப் பிடித்துள்ளது. இந்த OPVகள் ஒரே நேரத்தில் செயல்படும் திறன் கொண்ட பல பணி தளங்களாகும்.
- 2,450 டன் எடையுள்ள 105 மீட்டர் நீளமுள்ள கப்பல், அதிகபட்சமாக 26 நாட் வேகத்தை எட்டும் வகையில் வடிவமைக்கப்பட்ட இரண்டு 9,100 கிலோவாட் டீசல் என்ஜின்களால் இயக்கப்படுகிறது.
- இந்த கப்பலில் அதிநவீன கருவிகள், இயந்திரங்கள், சென்சார்கள் மற்றும் ஆயுதங்கள் பொருத்தப்பட்டுள்ளன சூழல். இந்திய கடலோர காவல்படையானது உள்நாட்டு தளங்களை அறிமுகப்படுத்துவதில் முன்னோடியாக உள்ளது மற்றும் ICGS சார்தக் 'ஆத்மநிர்பர் பாரத்' என்பதற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு.
- தரவு சார்ந்த ஆளுகைக்காக செயற்கை நுண்ணறிவு” எனும் தலைப்பிலான கலந்துரையாடலை மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் தேசிய மின் ஆளுகை பிரிவு 2021 அக்டோபர் 28 அன்று நடத்துகிறது.
- சர்வதேச சிறந்த நடைமுறைகளுடன் தரவு சார்ந்த செயற்கை நுண்ணறிவுடன் கூடிய ஆளுகையின் முக்கியத்துவம் குறித்து இந்த கூட்டம் வலியுறுத்துகிறது.
- ‘ஏஐ பே சர்ச்சா’ எனும் முன்முயற்சியின் கீழ் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தால் நடத்தப்படும் கலந்துரையாடல் வரிசையில் அரசு, தொழில்துறை, ஆராய்ச்சி துறை மற்றும் கல்வி துறையில் இருந்து உள்ளூர் மற்றும் சர்வதேச நிபுணர்கள் கலந்து கொண்டு தங்களது அனுபவங்கள், ஆய்வுகள் மற்றும் கருத்துகளை தெரிவிக்கிறார்கள்.
- சென்னை கொசஸ்தலையாறு படுகையில், சென்னை மாநகரின் வெள்ளத்தைத் தாங்கும் திறனை வலுப்படுத்துவதற்காக இந்திய அரசும், ஆசிய வளர்ச்சி வங்கியும் (ADB) காலநிலைக்கு ஏற்ப, ஒருங்கிணைந்த நகர்ப்புற வெள்ளப் பாதுகாப்பு மற்றும் மேலாண்மைக்காக $251 மில்லியன் கடனில் கையெழுத்திட்டன.
- நிதியமைச்சகத்தின் பொருளாதார விவகாரங்கள் துறையின் கூடுதல் செயலாளர் ஸ்ரீ ரஜத் குமார் மிஸ்ரா, சென்னை-கொசஸ்தலையாறு ஆற்றுப்படுகை திட்டத்திற்கான ஒருங்கிணைந்த நகர்ப்புற வெள்ள மேலாண்மைக்கான ஒப்பந்தத்தில் இந்திய அரசாங்கத்திற்காக கையெழுத்திட்டார்.
மத்திய புவி அறிவியல் அமைச்சகத்தின் செயலராக தமிழகத்தை சேர்ந்த எம்.ரவிச்சந்திரன் நியமனம்
- இயற்கை பேரிடர்களான மழை,வெள்ளம், புயல், சுனாமி, அதிகவெப்பத்தை கண்காணித்து மாநில அரசுகளுக்கு தெரிவித்து, இப்பாதிப்புகளில் இருந்து மக்களை காக்கும் பணிகளில் மத்திய புவிஅறிவியல் அமைச்சகம் முக்கிய பங்கு வகிக்கிறது.
- இந்த அமைச்சகத்தின் செயலராக, தமிழகத்தைச் சேர்ந்த எம்.ரவிச்சந்திரனை மத்திய அரசு நியமித்துள்ளது.
தமிழ்நாடு மீன் வளர்ச்சிக் கழகத்தின் தலைவராக ந.கௌதமன் நியமனம்: முதல்வர் ஸ்டாலின்
- தமிழ்நாடு மீன் வளர்ச்சிக் கழகம் 1974 ஆம் ஆண்டு கருணாநிதியால் மீனவர்களின் மேம்பாட்டிற்காகத் தொடங்கப்பட்டு, இயங்கி வருகிறது. இக்கழகம் சாத்தனூர், பவானிசாகர், ஆழியார், அமராவதி, திருமூர்த்தி மற்றும் உப்பார் நீர்த்தேக்கங்களில் மீன்வள மேலாண்மையையும், மீன் குஞ்சுகளை உற்பத்தி செய்யும் பணிகளையும் மேற்கொண்டு வருகிறது.
- அதோடு மட்டுமல்லாமல், சென்னை உள்ளிட்ட பெருநகரங்களில் நடமாடும் கடல் மீன் உணவகங்கள், மதிப்புக் கூட்டப்பட்ட மீன் உணவு தயாரிப்புகள் உற்பத்தி மற்றும் விற்பனைக்காக சென்னை இராயபுரத்தில் பயிற்சி மைய வசதி, சேத்துப்பட்டில் அமைந்துள்ள மீன்பிடி விளையாட்டுடன் கூடிய பசுமைப் பூங்கா பராமரிப்பு மேலாண்மை உள்ளிட்ட முக்கியப் பணிகளையும் நிர்வகித்து வருகிறது.
- இக்கழகத்தின் தலைவராக ந.கௌதமனை நியமித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆணையிட்டுள்ளார்.