பாகிஸ்தானுக்கு சவுதி அரேபியா ரூ.31 ஆயிரத்து 500 கோடி நிதியுதவி
- கொரோனா பரவல், இந்த நெருக்கடியை மேலும் அதிகப்படுத்தியுள்ளது. கடும் கடன் சுமை ஒருபுறம், பொருளாதார வீழ்ச்சி மறுபுறம் என, இரட்டை சிக்கல்களில் மாட்டி பாகிஸ்தான் தவிக்கிறது.
- நிதி நெருக்கடியால் பாகிஸ்தானில் பல ஆலைகளில் உற்பத்தி பாதிக்கப்பட்டு, பலர் வேலையிழந்துள்ளனர்.
- இந்நிலையில், சவுதி அரேபியாவின் ரியாத் நகரில் நடந்த, மத்திய கிழக்கு பசுமை முன்முயற்சி மாநாட்டில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் பங்கேற்றார்.
- அங்கு சவுதி அரேபியா இளவரசர் முகமது பின் சல்மான் பின் அப்துல் அசிஸ் அல் சவுத்தை சந்தித்தார். பாகிஸ்தானுக்கு, மேற்காசிய நாடான சவுதி அரேபியா, 31ஆயிரத்து 500 கோடி ரூபாய் நிதியுதவி செய்வதாக உறுதியளித்துள்ளது.
- Intercontinental Ballistic Missile என்று அழைக்கப்படும் கண்டம் விட்டு கண்டம் தாண்டி தாக்க கூடிய ஏவுகணையான அக்னி-5 ஏவுகணையை இந்தியா வெற்றிகரமாக ஒடிசாவில் சோதனை செய்துள்ளது.
- ஒடிசா அருகே கடல் பகுதியில் இருக்கும் அப்துல் கலாம் தீவில் இந்த ஏவுகணை சோதனை செய்யப்பட்டது. இந்த ஏவுகணை வெற்றிகரமாக சென்று இலக்கை தாக்கியது. துல்லியமாக இலக்கை தாக்கி அழித்ததாக டிஆர்டிஓ தெரிவித்துள்ளது.
- இந்த ஏவுகணையில் 3 கட்ட திட எரிபொருள் எஞ்சின்கள் உள்ளது. இந்தியாவின் மற்ற ஏவுகணைகளை விட இது அதிகம் துல்லியம் கொண்டது என்பதும் குறிப்பிடத்தக்கது. இது 17 மீட்டர் நீளம் மற்றும் 2 மீட்டர் அகலம் கொண்டது.அணு ஆயுதங்களை சுமந்து சென்று தாக்க கூடிய திறன் கொண்டது.
பழங்குடியின மக்களின் அடிப்படை வசதிக்காக ஆதிதிராவிடர் நலத்துறை மூலம் ரூ254 கோடி ஒதுக்கீடு
- பழங்குடியினர் மக்களுக்கு அடிப்படை வசதிகளை செய்வதற்காக ஆதிதிராவிடர் நலத்துறை மூலம் இந்த ஆண்டு ரூ130 கோடியும், அடுத்த ஆண்டுக்கு ரூ. 124 கோடியும் நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
- பழங்குடியின மக்கள் வசிக்கும் பகுதிகளில் ரூ394 கோடியே 69 லட்சத்து 17 ஆயிரம் செலவில் சாலை வசதிகள், குடிநீர் வசதிகள், தெரு விளக்குகள் மற்றும் சூரிய மின் விளக்குகள் போன்றவைகளை மாநில நிதியில் இருந்து மூன்று ஆண்டுகளில் மேற்கொள்ள நிர்வாக அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
- அதில் முதல்கட்டமாக முன்னுரிமை அடிப்படையில் 2020-21ம் நிதியாண்டில் ரூ129 கோடியே 99 லட்சத்து 77 ஆயிரம் நிதி ஒப்பளிப்பு வழங்கி அரசு ஆணை வெளியிடப்பட்டுள்ளது.
- இந்த பணிகள் முன்னுரிமை அடிப்படையில் மேற்கொள்ளப்படும். 2வது கட்டமாக 2021-22ம் நிதியாண்டில் ரூ123 கோடியே 85 லட்சத்து 83 ஆயிரம் நிதி ஒப்பளிப்பு வழங்கி அரசு ஆணையிடுகிறது.
'பெகாசஸ்' விவகாரத்தை விசாரிக்க நிபுணர் குழு - உச்ச நீதிமன்றம்
- மேற்காசிய நாடான இஸ்ரேலைச் சேர்ந்த, என்.எஸ்.ஓ., என்ற நிறுவனம் தயாரிக்கும் பெகாசஸ் உளவு மென்பொருள் மூலமாக, உலகெங்கும் பலருடைய மொபைல் போன்கள் ஒட்டு கேட்கப்பட்டதாக செய்திகள் வெளியாகின.
- இந்தியாவில் 300 க்கும் மேற்பட்ட அரசியல்வாதிகள், பத்திரிகையாளர், சமூக ஆர்வலர்களின் மொபைல் போன்களும் ஒட்டு கேட்கப்பட்டதாக தெரிய வந்தது.
- உண்மையா, இல்லையாபோன் ஒட்டு கேட்கப் பட்ட விவகாரம் தொடர்பாக நீதிமன்றக் கண்காணிப்பில் விசாரணை நடத்தக் கோரி, 'எடிட்டர்ஸ் கில்ட்' எனப்படும் பத்திரிகை ஆசிரியர்கள் சங்கம் உள்ளிட்டோர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
- அரசு அமைப்புகளின் ஒத்துழைப்பு தேவை என பல அம்சங்களை கருத்தில் கொண்டு, இந்த நிபுணர் குழு அமைக்கப்பட்டுள்ளது.அறிக்கை தாக்கல்சைபர் பாதுகாப்பு, 'டிஜிட்டல்' தடயவியல், கம்ப்யூட்டர் நிபுணர் என தேடித் தேடி இந்தக் குழு அமைக்கப்பட்டுள்ளது.
- குஜராத் காந்தி நகரில் உள்ள தேசிய தடயவியல் அறிவியல் பல்கலையின், 'டீன்' நவீன்குமார் சவுத்ரி, கேரளாவில் உள்ள அமிர்தா விஷ்வ வித்யாபீட பேராசிரியர் பி.பிரபாகரன், மும்பை ஐ.ஐ.டி., எனப்படும் இந்திய தொழில்நுட்ப மைய பேராசிரியர் அஸ்வின் அனில் குமாஸ்தே ஆகிய நிபுணர்கள் இந்தக் குழுவில் இடம் பெறுகின்றனர்.
- முன்னாள் ஐ.பி.எஸ்., அதிகாரி அலோக் ஜோஷி, சைபர் பாதுகாப்பு நிபுணர் சந்தீப் ஓபராய் ஆகியோர் நீதிபதி ரவீந்திரனுக்கு உதவி செய்வர். இந்தக் குழு மிக விரைவாக விசாரணை நடத்தி, தன் அறிக்கையை தாக்கல் செய்யும்.
இல்லம் தேடிக் கல்வித் திட்டம் முதல்வர் தொடக்கி வைப்பு
- ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களின் கற்றல் இடைவெளியை ஈடுசெய்யும் நோக்கத்தில் ரூ. 200 கோடி செலவில் 'இல்லம் தேடிக் கல்வி' திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.
- இந்தத் திட்டத்தை முதல்வர் மு.க. ஸ்டாலின் விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் வட்டம், முதலியார்குப்பத்தில் புதன்கிழமை தொடக்கி வைத்து, திட்டக் கையேட்டினை வெளியிட்டார்.
- இத்திட்டம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த மாணவ, மாணவியரின் சைக்கிள் பேரணியை முதல்வர் கொடியசைத்து தொடக்கி வைத்தார்.
முசிறி திருவாசி கோயிலில் முதலாம் ராஜராஜர் கால கல்வெட்டு கண்டுபிடிப்பு
- திருச்சி மாவட்டம் முசிறி அருகே உள்ள திருவாசி மாற்றுரை வரதீசுவரர் கோயிலில் எஸ்ஆர்சி கல்லூரி வரலாற்று துறை தலைவர் நளினி மற்றும் முசிறி அண்ணா அரசு கலைக்கல்லூரி வரலாற்று துறை உதவி பேராசிரியை அகிலா ஆகியோர் ஆய்வு செய்தனர்.
- இதில், 297 வரிகளில் பொறிக்கப்பட்டுள்ள முதலாம் ராஜராஜர் கால (பொதுக்காலம் 996) கல்வெட்டு ஒன்றை கண்டறிந்தனர். இதை, டாக்டர் ராசமாணிக்கனார் வரலாற்றாய்வு மைய இயக்குநர் கலைக்கோவன் ஆராய்ந்தார்.
- முதலாம் ராஜராஜரின் அரண்மனை பெரிய வேளத்து பணிப்பெண்ணாக இருந்த நக்கன் கற்பகவல்லி, தம்மை திருவாசி கோயில் இறைவனின் மகளாக எண்ணி வாழ்ந்தவர். தம் ஊதிய சேகரிப்பிலிருந்து 201 கழஞ்சு பொன்னை இக்கோயிலுக்கு வழங்கிய கற்பகவல்லி, ஆண்டுக்கு 16 கலம் நெல் விளையக்கூடிய இரு நிலத்துண்டுகளையும் சேர்த்தளித்துள்ளார்.
- இந்திய அரசின் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் அமைச்சகம் ஏற்பாடு செய்துள்ள சம்பவ் எனும் தேசிய அளவிலான விழிப்புணர்வு திட்டம் 2021ஐ புதுதில்லியில் தொடங்கிவைத்த அவர், வளரும் தொழில்முனைவோர்களால் உருவாக்கப்பட்ட புதிய தயாரிப்புகள் மற்றும் சேவைகள் அவை தொடர்புடைய துறைகளில் தொடர் நேர்மறை தாக்கத்தை ஏற்படுத்த முடியும்.
- சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்கள் அமைச்சகத்தின் கீழ் மக்களை சென்றடைவதற்கான ஒரு மாத கால முயற்சியாக இத்திட்டம் இருக்கும். நாட்டின் அனைத்துப் பகுதிகளில் உள்ள கல்லூரிகள்/ஐடிஐக்களை சேர்ந்த மாணவர்கள், அமைச்சகத்தின் 130 களஅலுவலகங்களால் தொழில்முனைவோராக ஊக்குவிக்கப்படுவார்கள்.
- பிரச்சாரத்தின் போது அமைச்சகத்தால் செயல்படுத்தப்படும் பல்வேறு திட்டங்கள் குறித்து ஒலி/ஒளி விளக்கக்காட்சிகள் மூலம் கல்லூரி மாணவர்களுக்கு தெரியப்படுத்தப்படும்.
- நாடு முழுவதும் உள்ள 1,300-க்கும் மேற்பட்ட கல்லூரிகளில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படும். சுமார் 1,50,000 மாணவர்கள் இதில் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- மகாராஷ்டிரா மாநிலத்தில் விவசாய வருமானத்தை அதிகரிக்கவும் உணவு இழப்பைக் குறைக்கவும் வேளாண் வணிக நெட்வொர்க்கை மேம்படுத்துவதற்காக ஆசிய வளர்ச்சி வங்கியும் (ADB) இந்திய அரசாங்கமும் $100 மில்லியன் கடனில் கையெழுத்திட்டன.
- ஸ்ரீ ரஜத் குமார் மிஸ்ரா, நிதி அமைச்சகத்தின் பொருளாதார விவகாரங்கள் துறை கூடுதல் செயலாளர், மகாராஷ்டிரா வேளாண் வணிக நெட்வொர்க் (MAGNET) திட்டத்திற்கான ஒப்பந்தத்தில் இந்திய அரசாங்கத்திற்காக கையெழுத்திட்டார்.
- 16வது கிழக்கு ஆசிய உச்சி மாநாட்டில் பிரதமர் திரு நரேந்திர மோடி காணொலிக் காட்சி மூலம் பங்கேற்றார். 16வது கிழக்கு ஆசிய உச்சி மாநாட்டை புருனே ஈஏஎஸ் மற்றும் ஆசியான் தலைவராக நடத்தியது.
- இதில் ஆசியான் நாடுகள் மற்றும் ஆஸ்திரேலியா, சீனா, ஜப்பான், தென் கொரியா, ரஷ்யா, அமெரிக்கா மற்றும் இந்தியா உள்ளிட்ட பிற EAS பங்கேற்கும் நாடுகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர். EASல் இந்தியா தீவிரமாகப் பங்கேற்று வருகிறது. இது பிரதமரின் 7வது கிழக்கு ஆசிய உச்சி மாநாடு ஆகும்.
- “மருந்துகள் மற்றும் மருத்துவ சாதனங்கள் துறையில் வாய்ப்புகள் மற்றும் கூட்டுகள்” குறித்த முதலீட்டாளர்கள் உச்சி மாநாட்டை மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா காணொலி மூலம் தொடங்கி வைத்து உரையாற்றினார்.
- மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் துறையில் சர்வதேச அளவில் இந்தியாவின் இடத்தை மேலும் வலுப்படுத்தும் லட்சியத்தின் ஒரு பகுதியாக, இந்த முதலீட்டாளர்கள் மாநாட்டை இன்வெஸ்ட் இந்தியாவுடன் இணைந்து மருந்துகள் துறை நடத்தியது.
- கிரிஷி உடான் 2.0-வை மத்திய விமான போக்குவரத்து அமைச்சர் திரு ஜோதிராதித்ய சிந்தியா, விமான போக்குவரத்து அமைச்சகத்தின் இணை செயலாளர் திருமதி உஷா பதி, வேளாண் மற்றும் விவசாயிகள் நல அமைச்சகத்தின் இணை செயலாளர் திரு ராஜ்பீர் சிங், இந்திய விமான நிலைய ஆணைய சரக்கு போக்குவரத்து மற்றும் துணைச் சேவைகள் நிறுவன தலைமை செயல் அதிகாரி திரு கேகு கஸ்தர் மற்றும் இந்திய தொழில் மற்றும் வர்த்தக கூட்டமைப்பின் (ஃபிக்கி) தலைமைச் செயலாளர் திரு திலீப் செனாய் ஆகியோர் இணைந்து வெளியிட்டனர்.
- வேளாண் விளைபொருட்களின் மதிப்பை விமான போக்குவரத்து மூலம் மேம்படுத்தி வேளாண் மதிப்பு சங்கிலிக்கு பங்களிப்பதை கிரிஷி உடான் 2.0 நோக்கமாகக் கொண்டுள்ளது. வேளாண் விளைபொருட்கள் விமானம் மூலம் எடுத்து செல்லப்படுவதற்கு இது ஊக்கம் அளிக்கும்.
- முழுமையான இரட்டை இளநிலை படிப்புகளான பி ஏ பி எட், பி எஸ் சி பி எட் மற்றும் பிகாம் பி எட் ஆகியவற்றை உள்ளடக்கிய நான்கு வருட ஒருங்கிணைந்த ஆசிரியர் கல்வி திட்டத்தை கல்வி அமைச்சகம் அறிவித்துள்ளது. ஆசிரியர் கல்வி தொடர்பாக தேசிய கல்வி கொள்கை 2020 வழங்கியுள்ள முக்கிய அறிவுறுத்தல்களில் இது ஒன்றாகும்.
- தேசிய கல்வி கொள்கை 2020-ன் படி, ஒருங்கிணைந்த ஆசிரியர் கல்வி திட்டத்தின் மூலமாக மட்டுமே 2030-ம் ஆண்டில் இருந்து ஆசிரியர் செயல்பாடுகள் இருக்கும். நாடு முழுவதும் உள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட 50 பல்முனை கல்வி நிறுவனங்களில் ஆரம்பத்தில் இது செயல்படுத்தப்படும்.
- கல்வி துறைக்கான பட்ட படிப்போடு வரலாறு, கணிதம், அறிவியல், கலை, பொருளாதாரம் அல்லது வணிக பிரிவுகளிலும் பட்டப்படிப்பை இத்திட்டம் வழங்கும். இதற்கான பாடத் திட்டத்தை கல்வி அமைச்சகத்தின் கீழ் செயல்படும் தேசிய ஆசிரியர் கல்விக் குழு வடிவமைத்துள்ளது.
- ஆரம்ப குழந்தை பராமரிப்பு மற்றும் கல்வி, அடிப்படை எண்ணறிவு மற்றும் எழுத்தறிவு, ஒருங்கிணைந்த கல்வி, இந்தியா மற்றும் அதன் விழுமியங்கள், கலைகள், கலாச்சாரங்கள் குறித்த புரிதல் உள்ளிட்டவற்றை ஒருங்கிணைந்த ஆசிரியர் கல்வி திட்டம் வழங்கும்.
- தற்போதுள்ள 5 வருட திட்டத்துடன் ஒப்பிடும் போது நான்கு வருடங்களிலேயே இந்த கல்வி நிறைவடைவதால் மாணவர்களுக்கு ஒரு வருடம் மிச்சமாகும்.
- 2022-23-ம் கல்வி ஆண்டில் இருந்து நான்கு வருட ஒருங்கிணைந்த ஆசிரியர் கல்வி திட்டம் தொடங்கும். தேசிய தேர்வு முகமை மூலம் தேசிய பொது நுழைவுத்தேர்வு நடத்தப்பட்டு இதற்கான சேர்க்கை நடைபெறும்.