பிரதமரின் ரூ.100 லட்சம் கோடி கதி சக்தி திட்டம் - மத்திய அமைச்சரவை ஒப்புதல்
- உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதில் ஒருங்கிணைப்பை ஏற்படுத்தும் வகையில், பல்வேறு துறைகளை ஒன்றிணைத்து செயல்படுத்தும், 'பி.எம்., கதி சக்தி தேசிய மாஸ்டர் பிளான்' திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.
- நாட்டின் 75வது சுதந்திர தினத்தன்று ஆற்றிய உரையின்போது, 100 லட்சம் கோடி ரூபாய் செலவில், முழுமையான உட்கட்டமைப்பை மேம்படுத்துவதற்கான 'பி.எம். கதி சக்தி தேசிய மாஸ்டர் பிளான்' எனும் திட்டம் செயல்படுத்தப்படும் என, பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார்.
- இந்நிலையில் உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துவதில் வேகத்தை அதிகரிக்கும் மற்றும் பணிகளை ஒருங்கிணைக்கும் மாஸ்டர் பிளான் எனப்படும் முதன்மை திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி கடந்த 13ல் அறிமுகம் செய்து வைத்தார்.
- இந்த திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. இத்திட்டத்தை நடைமுறைப்படுத்த அமைச்சரவை செயலர்கள் தலைமையில் 18 துறைகளின் செயலர்களை உறுப்பினர்களாக உடைய அதிகாரம் பெற்ற செயலர்கள் குழு அமைக்கப்பட உள்ளது.
- பல்வேறு துறைகளைச் சேர்ந்த செயலர்களின் தலைமையில் என்.பி.ஜி., எனப்படும், 'மல்டி மாடல் நெட்வொர்க் பிளானிங் குரூப்' என்ற குழு உருவாக்கப்படும்.
- இந்த குழுவுக்கு மத்திய தொழில் மற்றும் வர்த்தகத் துறை அமைச்சகத்தைச் சேர்ந்த தொழில்நுட்ப ஒத்துழைப்பு குழு உதவி அளிக்கும்.இந்த தொழில்நுட்பக் குழுவில் விமானத் துறை, கடல், பொது போக்குவரத்து, ரயில், சாலை மற்றும் நெடுஞ்சாலை, துறைமுகம், மின்சாரம் உட்பட பல்வேறு துறைகளை சேர்ந்த நிபுணர்கள் இடம் பெறுவர். இவர்கள் நிறைவேற்றும் பணிகளை அதிகாரம் பெற்ற செயலர்கள் குழு ஆய்வு செய்வதுடன் தொடர்ந்து கண்காணித்து வரும்.
செயல்பாட்டில் முதலிடம் சேலம் ரயில்வேக்கு விருது
- தெற்கு ரயில்வேயில், 66வது ரயில்வே வார விருது வழங்கும் விழா, சென்னை, ஐ.சி.எப்.,பில் நடந்தது.ரயில்வேயில், 2020 - 21ம் ஆண்டில், அனைத்து துறைகளிலும் சிறப்பாக செயல்பட்டு முதலிடம் பிடித்த சேலம், இரண்டாம் இடம் பிடித்த திருச்சி ரயில்வே கோட்டங்களுக்கு, பொது மேலாளர் ஜான் தாமஸ் விருது வழங்கி பாராட்டினார்.
- வணிகம் மற்றும் விஜிலென்ஸ் பிரிவில் சிறந்த பணிக்கு சென்னை கோட்டம்; அறுவை சிகிச்சை, மருத்துவம், மனிதவள திட்டமிடல், மொழி பயிற்சி பிரிவுகளில் சிறப்பான செயல்பாட்டுக்கு மதுரை கோட்டம், சிக்னல் மற்றும் தொலை தொடர்பு, மின் ஆற்றல் பாதுகாப்பில் சிறப்பான செயல்பாட்டுக்கு திருவனந்தபுரம் கோட்டத்துக்கு கேடயம் வழங்கப்பட்டது
- சுற்றுச்சூழல் பாதுாப்பில் சிறப்பாக செயல்பாட்டுக்கு திருச்சி பொன்மலை ரயில்வே பணிமனைக்கும், போத்தனுாரில் உள்ள சிக்னல் தொலைத் தொடர்பு பிரிவினரின் சிறப்பான பணிக்கும் கேடயங்கள் வழங்கப்பட்டன.
100 கோடி தடுப்பூசிகள் இந்தியாவிற்கு உலக சுகாதார அமைப்பு பாராட்டு
- இந்தியாவில் கடந்த ஜனவரி மாதம் கரோனா தடுப்பூசி செலுத்தும் பணி நாடு முழுவதும் தொடங்கியது. கடந்த 9 மாதங்களில் இதுவரை நாடு முழுவதும் 100 கோடி கரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது.
- சீனாவிற்கு அடுத்தபடியாக இந்தியாதான் 100 கோடி தடுப்பூசிகளை செலுத்தி சாதனை படைத்துள்ளது. இதில் 75 சதவீதம் போ முதல் தவணை தடுப்பூசியையும், 31 சதவீதத்துக்கும் அதிகமானோர் இரண்டு தவணைகளையும் செலுத்திக் கொண்டுள்ளனா்.
- இந்நிலையில் இந்தியாவில் 100 கோடி கரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதற்கு உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இந்தியா முதலமைச்சர்களின் செல்வாக்கு குறித்து 'சி.என்.ஓ.எஸ் ஒபினியோம்'' என்ற அமைப்பு ஆய்வு
- இந்தியா முதலமைச்சர்களின் செல்வாக்கு குறித்து 'சி.என்.ஓ.எஸ் ஒபினியோம்'' என்ற அமைப்பு ஆய்வு நடத்தியுள்ளது. அந்த அமைப்பு நடத்திய ஆய்வு முடிவுகள் தற்போது வெளியாகி உள்ளன.
- அதன்படி கணக்கெடுப்பில் 67 நிகர புள்ளிகள் பெற்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நாட்டிலேயே மிகவும் மக்கள் செல்வாக்கு பெற்ற முதலமைச்சராக திகழ்கிறார்.
- தமிழகத்தில் கணக்கெடுப்பு நடத்தப்பட்டதில் 79 சதவிகிதம் பேர் ஸ்டாலின் அவர்களின் ஆட்சி திருப்தி அடைந்து இருப்பதாக தெரிவித்துள்ளனர். 12 சதவிகிதம் பேர் மட்டுமே அவருடைய செயல்பாடு திருப்தி இல்லை என்று கூறியுள்ளனர்.
- தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடுத்து மகாராஷ்டிர முதலமைச்சர் உத்தவ் தாக்கரே மக்கள் செல்வாக்கு பெற்ற சிறந்த முதலமைச்சர்களில் இரண்டாம் இடம் பிடித்துள்ளார்.
- அடுத்ததாக உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் மூன்றாவது இடமும், ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் 4வது இடமும், அசாம் முதலமைச்சர் ஹேமந்த் 5வது இடமும் பிடித்துள்ளனர்.