ராணுவ தளவாட உற்பத்தி வாரியத்தின் கீழ் 7 தொழில் நிறுவனங்கள்
- ராணுவ தளவாட உற்பத்தி வாரியத்தின் கீழ் இயங்கி வந்த தளவாட தயாரிப்பு பணிகள் இனி அரசுக்கு சொந்தமான வணிக ரீதியான 7 தொழில் நிறுவனங்களின் கீழ் நடைபெற உள்ளது.
- இதற்காக உருவாக்கப்பட்டுள்ள 7 புதிய நிறுவனங்களை விஜயதசமி நாளில் பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணித்தார்.
- இந்நிகழ்ச்சியில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தமிழ்நாட்டில் 12 பேரூராட்சிகளை நகராட்சிகளாக தரம் உயர்த்தி அரசாணை வெளியீடு
- தமிழ்நாட்டில், திருவள்ளூர், கடலூர், தஞ்சை, தூத்துக்குடி, கோவை, கரூர், திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் 12 பேரூராட்சிகளை நகராட்சிகளாக தரம் உயர்த்தி தமிழ்நாடு அரசு அரசாணையை வெளியிட்டது.
- அதன்படி, பொன்னேரி, திருநின்றவூர், திட்டக்குடி, வடலூர், அதிராம்பட்டினம், திருச்செந்தூர், கருமத்தம்பட்டி, காரமடை, கூடலூர், மதுக்கரை, பள்ளப்பட்டி, திருமுருகன்பூண்டி பேரூராட்சிகளை நகராட்சிகளாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது.
- இதுபோன்று, சிவகங்கை, திருச்சி, சேலம் மாவட்டங்களில் 5 பேரூராட்சிகளை நகராட்சிகளாக தரம் உயர்த்தி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டது. அதன்படி, மானாமதுரை, முசிறி, லால்குடி, இடங்கணசாலை, தாரமங்கலம் பேரூராட்சிகள், நகராட்சிகளாக உயர்த்தப்பட்டுள்ளது.
- உத்தேச நகராட்சிகளின் வார்டு எல்லைகளை வரையறை செய்து சாதாரண தேர்தல் நடத்தப்படும். மேலும், கும்பகோணம் சிறப்பு நிலை நகராட்சியை மாநகராட்சியாக தரம் உயர்த்தி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டது.
ஐ.நா., மனித உரிமை கவுன்சிலில் மீண்டும் உறுப்பினரானது இந்தியா
- ஐ.நா., பொதுச் சபையில் மனித உரிமைகள் கவுன்சில் தேர்தல் நடந்தது. மனித உரிமைகள் கவுன்சிலில் உறுப்பினராக தேர்வாக, பொதுச் சபையில் உள்ள 193 உறுப்பு நாடுகளில் 97 நாடுகளின் ஆதரவு தேவை.
- எனினும், இந்தியாவுக்கு பெரும்பான்மைக்கும் அதிகமாக 184 உறுப்பு நாடுகளின் ஆதரவு கிடைத்தது. இதன் வாயிலாக தொடர்ந்து ஆறாவது முறையாக மனித உரிமைகள் கவுன்சில் உறுப்பினராக இந்தியா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு ஜன., முதல், 2024ம் ஆண்டு டிச., வரை இந்தியா இந்த பதவியில் நீடிக்க உள்ளது.
- இந்தியாவுடன் அர்ஜென்டினா, பெனின், கேமரூன், எரிட்ரியா, பின்லாந்து, காம்பியா, கஜகஸ்தான், லித்துவானியா, மலேஷியா, பராகுவே, கத்தார், சோமாலியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட 18 நாடுகளும் உறுப்பினர்களாக தேர்வாகி உள்ளன.
ஐ.பி.எல் கிரிக்கெட் 4வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது சென்னை அணி
- இந்தியாவில் ஐ.பி.எல்., தொடரின் 14-வது சீசன் நடந்தது. இதில் 29 போட்டிகள் முடிந்த நிலையில் கோவிட் தொற்று காரணமாக காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டது. மீதமுள்ள 31 போட்டிகள் எமிரேட்சில் நடந்தன.
- இன்று துபாய் சர்வதேச மைதானத்தில் நடந்த இறுதி போட்டியில் தோனியின் சென்னை அணி, இயான் மார்கனின் கோல்கட்டாவை சந்தித்தது.
- இதனையடுத்து சென்னை அணி 27 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 4வது முறையாக சாம்பியன் ஐ.பி.எல். அரங்கில் 12 தொடர்களில் சென்னை அணி 9-வது முறையாக இன்று பைனலில் மோதியது.
- கடந்த 2010, 2011,2018 என மூன்று முறை கோப்பையை வென்றுள்ளது. தற்போது கோல்கட்டா அணியை வென்றதன் மூலம் 4-வது முறையாக சாம்பியன் ஆகி உள்ளது.
இந்தியா- அமெரிக்கா பொருளாதார மற்றும் நிதிக் கூட்டாண்மைக்கான அமைச்சர்கள் அளவிலான எட்டாவது கூட்டம்
- இந்தியா- அமெரிக்கா பொருளாதார மற்றும் நிதிக் கூட்டாண்மைக்கான அமைச்சர்கள் அளவிலான எட்டாவது கூட்டம் வாஷிங்டனில் இன்று நடைபெற்றது.
- மத்திய நிதி மற்றும் பெருநிறுவன விவகாரங்கள் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் அமெரிக்க நிதியமைச்சர் ஜானெட் யெல்லென் இதற்குத் தலைமையேற்றனர்.
- பரந்த பொருளாதாரக் கண்ணோட்டம், கோவிட்-19 பெருந்தொற்றில் இருந்து மீட்சி, நிதி ஒழுங்குமுறை, தொழில்நுட்ப ஒத்துழைப்பு, பலதரப்பு ஈடுபாடு, பருவநிலை நிதி, பண மோசடி எதிர்ப்பு நடவடிக்கைகள் மற்றும் தீவிரவாதத்திற்கு நிதியளித்தலைத் தடுத்தல் போன்ற பல்வேறு விஷயங்கள் குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டன.
- மத்திய நிதி மற்றும் பெருநிறுவன விவகாரங்கள் துறை அமைச்சர் மற்றும் அமெரிக்கக் கருவூலச் செயலாளரின் கூட்டு அறிக்கையை ஏற்றுக்கொண்டு கூட்டம் நிறைவடைந்தது.
- உலக மேயர் திட்டம் (இது சர்வதேச ஆராய்ச்சி சிந்தனைக் குழுவான தி சிட்டி மேயர்ஸ் ஃபவுண்டேஷனால் இயக்கப்படுகிறது) 2004 முதல் செயல்பட்டு வருகிறது. ஒவ்வொரு ஈராண்டுகளுக்கும் இந்த திட்டம், வெவ்வேறு கருப்பொருள்களை கொண்டு விருது பெறுவோரை தேர்வு செய்கிறது.
- 2016ஆம் ஆண்டில், இந்த திட்டம் அகதிகள் நெருக்கடியில் கவனம் செலுத்தியது. 2018இல், உள்ளூர் நிர்வாகப் பதவிகளில் பெண்களின் குறைவான பிரதிநிதித்துவத்தில் கவனம் செலுத்தியது. பிறகு இந்த ஆண்டு, பெருந்தொற்று நோய்களின் போது நகரங்களின் நிலைமை தொடர்பாக அறக்கட்டளை கவனம் செலுத்தியது.
- இந்த ஆண்டு, லைலா முஸ்தபாஃபா உட்பட உலகம் முழுவதிலுமிருந்து ஒன்பது மேயர்களுக்கு விருது வழங்கப்பட்டது, ஆனால் வெற்றிப் பட்டியலில் இடம் பெற்ற ஒரே பெண் இவர் மட்டுமே.