Type Here to Get Search Results !

TNPSC 12th OCTOBER 2021 CURRENT AFFAIRS TNPSC SHOUTERS TAMIL PDF

 

இந்தியாவின் பொருளாதார வளா்ச்சி 9.5 சதவீதமாக இருக்கும் - ஐ.எம்.எஃப். கணிப்பு

  • உலக வங்கி (world bank), சர்வதேச நிதியம் (International Monetary Fund) ஆகியவற்றின் வருடாந்திர கூட்டம் விரைவில் நடைபெறவுள்ள நிலையில் , உலக பொருளாதார நிலை குறித்து சர்வதேச நிதியம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
  • அதில், கொரோனா பெருந்தொற்று காரணமாக, 2020இல் இந்தியாவின் பொருளாதார வளா்ச்சி 7.3 சதவீதமாக சரிவடைந்தது. 2021இல் இந்தியாவின் பொருளாதார வளா்ச்சி 9.5 சதவீதமாகவும், 2022இல் 8.5 சதவீதமாகவும் இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.
  • அமெரிக்காவின் பொருளாதார வளா்ச்சி 2021இல் 6 சதவீதமாகவும், 2022இல் 5.2 சதவீதமாகவும் இருக்கும். இதேபோல், சீனாவின் பொருளாதார வளா்ச்சி 2021இல் 8 சதவீதமாகவும், 2022இல் 5.6 சதவீதமாகவும் இருக்கும். ஒட்டுமொத்தமாக உலகளாவிய பொருளாதார வளா்ச்சி 2021இல் 5.9 சதவீதமாகவும், 2022இல் 4.9 சதவீதமாகவும் இருக்கும் என்று சர்வதேச நிதியம் தெரிவித்துள்ளது.
ஆசிய வெளியுறவு அமைச்சர்கள் மாநாடு 2021
  • கஜகஸ்தான் தலைநகர் நுர் - சுல்தானில் ஆசிய வெளியுறவு அமைச்சர்கள் மாநாட்டில் பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது: அமைதி மற்றும் வளர்ச்சி தான் நம் பொதுவான கொள்கை என்றால், பயங்கரவாதம் என்ற மிகப் பெரிய எதிரியை நாம் வெல்ல வேண்டும்.
  • ஒரு நாட்டிற்கு எதிராக மற்றொரு நாடு பயங்கரவாதத்தை ஊக்குவிப்பதை அனுமதிக்கக் கூடாது. எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை துாண்டுவது ஒரு நாட்டிற்கு அழகு அல்ல; அது பயங்கரவாதத்தின் மற்றொரு வடிவம்.
  • இந்த மாநாட்டில் பயங்கரவாதத்தை துாண்டும் பாக்., குறித்தும், பாக்., ஆக்ரமிப்பு காஷ்மீர் வழியாக பொருளாதார வழித் தடம் அமைக்கும் சீனா பற்றியும் பெயர் குறிப்பிடாமல் ஜெய்சங்கர் பேசினார்.
பிரதமர் மோடியின் ஆலோசகராக ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி அமித் கரே நியமனம்
  • ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரி அமித் கரேவை, பிரதமரின் ஆலோசகராக நியமிக்க மத்திய அமைச்சரவை குழு ஒப்புதல் அளித்துள்ளது. ஒன்றிய செயலாளர் அந்தஸ்து வழங்கப்படும். அடுத்த 2 ஆண்டுகளுக்கு அல்லது மறு உத்தரவு வரும் வரை அமித் காரே அப்பதவியில் இருப்பார்.
  • ஒன்றிய அரசின் உயர் கல்வித் துறைச் செயலராக பணியாற்றி, கடந்த மாதம் ஓய்வு பெற்றவர் ஐ.ஏ.எஸ். அதிகாரி அமித் கரே. அதற்கு முன் மனிதவள மேம்பாடு மற்றும் தகவல் ஒளிபரப்புத் துறைகளின் செயலராகவும் இருந்துள்ளார். 
சா்வதேச நிறுவனங்களுடன் நிதியமைச்சா் நிா்மலா ஆலோசனை
  • உலக வங்கி-சா்வதேச நிதியத்தின் (ஐஎம்எஃப்) ஆண்டுக் கூட்டம், ஜி20 நாடுகளின் நிதியமைச்சா்கள்-மத்திய வங்கிகளின் தலைவா்கள் கூட்டம் உள்ளிட்டவற்றில் பங்கேற்பதற்காக அமைச்சா் நிா்மலா சீதாராமன் திங்கள்கிழமை அமெரிக்கா சென்றடைந்தாா்.
  • இந்நிலையில், சா்வதேச நிறுவனங்களின் தலைவா்களை பாஸ்டன் நகரில் அவா் சந்தித்துப் பேசினாா். அப்போது, முதலீடுகளை மேற்கொள்வது தொடா்பாக இந்தியாவில் காணப்படும் வாய்ப்புகள் குறித்து அவா் ஆலோசனை நடத்தினாா். 
ரூ.1,200 கோடியில் மப்பேட்டில் பல்முனைய போக்குவரத்து பூங்கா
  • திருவள்ளூர் மாவட்டம் மப்பேட்டில், 1,200 கோடி ரூபாய் முதலீட்டில், 'பல்முனைய சரக்கு போக்குவரத்து பூங்கா' துவங்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம், மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி, கப்பல் போக்குவரத்து துறை அமைச்சர் சர்பானந்த சோனாவால், மத்திய இணை அமைச்சர் வி.கே.சிங், முதல்வர் ஸ்டாலின் ஆகியோர் முன்னிலையில், 'வீடியோ கான்பரன்ஸ்' வழியே ஒப்பந்தம் கையெழுத்தானது.
  • இதன்படி, தமிழக அரசின் தொழில் வளர்ச்சி நிறுவனம், தேசிய நெடுஞ்சாலை சரக்கு மேலாண்மை நிறுவனம், சென்னை துறைமுகம் ஆகியவை இணைந்து, பொது மற்றும் தனியார் பங்களிப்புடன், மப்பேட்டில் 1,200 கோடி ரூபாய் முதலீட்டில், 'பல்முனைய சரக்கு போக்குவரத்து பூங்கா' துவக்க உள்ளன.
100 சைனிக் பள்ளிகள் அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்
  • நாடு முழுதும் தற்போது 33 சைனிக் பள்ளிகள் உள்ளன. ராணுவ அமைச்சகத்தின் சைனிக் பள்ளிகள் சொசைட்டியின் கீழ் இவை இயங்குகின்றன. 
  • ராணுவத்தில் அதிகாரிகளாக சேருவதற்கான பயிற்சி அளிக்கும் வகையில் நாடு முழுதும் சைனிக் இணைப்பு பள்ளிகள் திறக்கப்படும் என, மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது.
  • அதன்படி முதல் கட்டமாக மாநில அரசுகள், அரசு சாரா அமைப்புகள் மற்றும் தனியாருடன் இணைந்து, 100 சைனிக் இணைப்பு பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. 
  • 'ஸ்வச் பாரத்' எனப்படும் தூய்மை இந்தியா இயக்கத்தின் இரண்டாம் கட்டத்தை 2025 - 2026 ஆண்டு வரை செயல்படுத்தவும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
  • திடக்கழிவு மேலாண்மை, கழிவுநீர் சுத்திகரிப்பு போன்றவற்றை மேற்கொள்ள 1.41 லட்சம் கோடி ரூபாய் செலவிலான இந்த இரண்டாம் கட்டத்தில் மத்திய அரசு தன் பங்காக 36 ஆயிரத்து 465 கோடி ரூபாய் செலவிடும்.
  • பெரு நகரங்களில் குடிநீர் பாதுகாப்பை உறுதி செய்யும் திட்டத்தின் கீழ், வரும் 2025 - 2026 ஆண்டு வரை, 2.77 லட்சம் கோடி ரூபாய் செலவிடவும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
  • இதில் மத்திய அரசின் பங்கு 76 ஆயிரத்து 760 கோடி ரூபாய்.இதைத் தவிர ஊட்டச்சத்து அதிகம் உள்ள உரங்களுக்கு 28 ஆயிரத்து 655 கோடி ரூபாய் மானியம் வழங்கவும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
பல்லுயிர் பாதுகாப்புக்கு சீனா ரூ.1700 கோடி நிதி - அதிபர் ஜின்பிங் அறிவிப்பு
  • சீன அதிபர் ஜின்பிங், வளரும் நாடுகளில் பல்லுயிர் பாதுகாப்புக்கான நடவடிக்கைகளுக்கு ரூ.1700 கோடி நிதி வழங்குவதாக ஐநா கூட்டத்தில் அறிவித்தார்.
  • உயிரியல் பன்முகத்தன்மை குறித்து ஐநாவின் 15வது தலைவர்கள் உச்சி மாநாடு நடந்து வருகிறது. இதில் சீன அதிபர் ஜி ஜின்பிங் வீடியோ கான்பரன்ஸ் மூலம் பங்கேற்றார்.
சென்னை உயர் நீதிமன்றத்திற்கு 4 புதிய நீதிபதிகள் நியமனம் - குடியரசுத் தலைவர் உத்தரவு
  • உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான கொலீஜியம் அமைப்பு அளித்த பரிந்துரையை ஏற்று, சென்னை உயர் நீதிமன்றத்திற்கு 4 புதிய நீதிபதிகள் நியமனம் செய்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டுள்ளார்.
  • வழக்கறிஞர்கள் சுந்தரம் ஸ்ரீமதி, பரத சக்ரவர்த்தி, விஜயகுமார், முகமது ஷபிக் ஆகியோரை நீதிபதிகளாக நியமனம் செய்ய கொலீஜியம் அமைப்பு பரிந்துரை அளித்திருந்தது. அதை ஏற்றுக் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டுள்ளார்.
  • சென்னை அதிகபட்சமாக உயர்நீதிமன்றத்தின் அனுமதிக்கப்பட்ட நீதிபதிகள் எண்ணிக்கை 75 ஆகும். தற்போது நியமிக்கப்பட்ட 4 நீதிபதிகளின் எண்ணிக்கையும் சேர்ந்து மொத்த நீதிபதிகளின் எண்ணிக்கை 55ஆக உயர்ந்துள்ளது.
சிறிய நிதி வங்கிக்கான உரிமத்தை சென்ட்ரம், பாரத்பேவிற்கு வழங்கியது ரிசர்வ் வங்கி
  • பாரத் பே மற்றும் சென்ட்ரம் கூட்டமைப்பிற்கு சிறிய நிதி வங்கி (Small Finance Bank) அமைப்பதற்கான உரிமத்தை வழங்கியுள்ளது ரிசர்வ் வங்கி.
  • இந்த வங்கி யுனைட்டி வங்கி என்ற பெயரில் செயல்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முதல் முறையாக இந்த இரண்டு நிறுவனங்களும் இணைந்து வங்கி அமைக்கின்றனர். இந்தியாவின் முதல் டிஜிட்டல் வங்கியாக இது இருக்கும்
ஜி20 மாநாட்டில் பிரதமர் மோடி
  • ஆப்கானிஸ்தானில் தற்போது நிலவும் நிலை குறித்த ஜி20 நாடுகளின் ஆலோசனைக் கூட்டம் ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் நடைபெற்றது. அதில் பிரதமர் மோடி காணொலி காட்சி வாயிலாகக் கலந்து கொண்டார்.
  • இதில் பேசிய பிரதமர் மோடி, ஆப்கானிஸ்தான் பயங்கரவாதிகளின் புகலிடமாக மாறுவதைச் சர்வதேச சமூகம் தடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்,

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel