வருவாய் பற்றாக்குறை மானியம் தமிழகத்துக்கு ரூ.183 கோடி ஒன்றிய அரசு ஒதுக்கீடு
- தமிழ்நாடு உள்ளிட்ட 17 மாநிலங்களுக்கு 2021-22ம் ஆண்டுக்கான வருவாய் பற்றாக்குறை மானியத் தவணைத் தொகையாக ரூ.9,871 கோடியை ஒன்றிய நிதியமைச்சகத்தின் செலவினத்துறை வழங்கி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதில் குறிப்பாக தமிழகத்துக்கு மட்டும் ரூ.183.67 கோடி கொடுக்கப்படுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
- மேலும் தற்போது வரையில் மொத்தம் ரூ.69,097 கோடி இந்த நிதியாண்டில் வருவாய் பற்றாக்குறை மானியமாக மாநிலங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
- இதில் மாநிலங்களின் வருவாய் கணக்கில் உள்ள இடைவெளியை போக்கும் விதமாக நிதி ஆணையத்தின் பரிந்துரைப்படி இந்த மானியங்கள் மாதத் தவணைகளாக வழங்கப்பட்டு வரப்படுகிறது.
- 17 மாநிலங்களுக்கு பகிர்வுக்கு பிந்தைய வருவாய் பற்றாக்குறை மானியத்தை வழங்க 15வது நிதி ஆணையம் முன்னதாக பரிந்துரைத்துள்ளது.
- இதில் தமிழகம் ஆந்திரா, அசாம், அரியானா, இமாச்சல், கர்நாடகா, கேரளா, மணிப்பூர் ஆகிய மாநிலங்களும் அடங்கும். இதில் தற்போது வழங்கப்பட்டுள்ள ரூ.183.67 கோடி தொகையுடன் சேர்த்து இதுவரை மொத்தம் ரூ.1,285.67 கோடி தமிழகத்திற்கு வழங்கப்பட்டுள்ளது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
கிர்கிஸ்தானுக்கு ரூ.1,500 கோடி கடன் உறுதிக்கு இந்தியா ஒப்புதல்
- பிஷ்கேக்-கிர்கிஸ்தான் நாட்டின் வளர்ச்சி திட்டங்களுக்காக 1,500 கோடி ரூபாய் கடன் உறுதி வழங்க இந்தியா ஒப்புதல் அளித்துள்ளது.
- வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கர் நான்கு நாள் அரசு முறை பயணமாக மத்திய ஆசியாவைச் சேர்ந்த கிர்கிஸ்தான், கசகஸ்தான், ஆர்மினியா நாடுகளுக்குச் சென்றுள்ளார்.
- கிர்கிஸ்தான் அதிபர் சதிர் ஜபரோவை சந்தித்து பேசிய ஜெய்சங்கர், பிஷ்கேக்கில் உள்ள மனஸ் - மகாத்மா காந்தி நுாலகத்திற்கு இந்திய இதிகாச நுால்களை பரிசளித்தார்.
யு-17 மகளிர் உலக கோப்பை சின்னம் இபா அறிமுகம்
- இந்தியாவில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள யு-17 மகளிர் உலக கோப்பை கால்பந்து போட்டித் தொடருக்கான சின்னத்தை, சர்வதேச கால்பந்து சங்கங்களின் கூட்டமைப்பு பிபா அறிமுகம் செய்துள்ளது.
- சர்வதேச பெண் குழந்தைகள் தினத்தையொட்டி வெளியான இந்த சின்னம், ஆசிய பெண் சிங்கத்தின் உருவில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
- மன உறுதி, பிறரிடம் அன்பு செலுத்துவது மற்றும் குழுவாக ஒருங்கிணைந்து செயல்படுவதன் மூலமாக மகளிர் மற்றும் சிறுமிகளுக்கு உணர்வூட்டி ஊக்கமளிப்பதை குறிக்கும் வகையில் இந்த சின்னத்திற்கு 'இபா' என பெயரிட்டுள்ளதாக பிபா தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் தகவல் பதிந்துள்ளது. இந்த தொடர் இந்தியாவில் 2022 அக். 11ம் தேதி தொடங்கி 30ம் தேதி வரை நடைபெறும்.
இந்திய விண்வெளி சங்கத்தை (இஸ்பா) பிரதமர் நரேந்திர மோடி காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார்
- இந்திய விண்வெளி சங்கத்தை (இஸ்பா) பிரதமர் நரேந்திர மோடி காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்வில் பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது: இந்தியாவில் இன்று இருப்பது போல் உறுதியான அரசு ஒருபோதும் இருந்ததில்லை.
- இதற்கு விண்வெளித் துறையிலும், விண்வெளி தொழில்நுட்பத்திலும் செய்யப்பட்டுள்ள பெரும் சீர்த்திருத்தங்கள் உதாரணமாகும்.
- விண்வெளித் ஃபசல் பீமா திட்டத்தின் உரிமைக் கோரல்களை பைசல் செய்வதற்கு தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது, 'நேவிக்' முறை மீனவர்களுக்கு உதவுகிறது. இந்தத் தொழில்நுட்பத்தின் மூலம் பேரிடர் மேலாண்மையும் திட்டமிடப்படுகிறது.