Type Here to Get Search Results !

TNPSC 6th SEPTEMBER 2021 CURRENT AFFAIRS TNPSC SHOUTERS TAMIL PDF

 

இந்திய மரபுசாரா எரிசக்தி நிறுவனத்துடன் தமிழக அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம்

  • சென்னை தலைமைச் செயலகத்தில், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்திற்கும், இந்திய மரபுசாரா எரிசக்தி மேம்பாட்டு நிறுவனத்திற்கும் இடையே தமிழ்நாட்டில் மின் உற்பத்தி திறனை மேம்படுத்த புதிய திட்டங்கள் மற்றும் நவீன தொழில்நுட்ப முறைகளை கையாளுதல் குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்தானது.
  • தமிழ்நாட்டின் மின்சக்தி தேவைகளைப் பூர்த்தி செய்வதில் தன்னிறைவு பெறுவதற்கும், தனியாரிடமிருந்து மின் கொள்முதல் செய்யும் செலவைக் குறைப்பதற்கும், தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் அடுத்த 10 ஆண்டுகளில் குறைந்தபட்சம், 20 ஆயிரம் மெகாவாட் சூரிய ஒளி மின்சாரமும், 3 ஆயிரம் மெகாவாட் நீரேற்று புனல் மின்சாரமும் மற்றும் 2 ஆயிரம் மெகாவாட் எரிவாயு மின்சாரமும் என மொத்தம் 25 ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தி செய்ய திட்டமிட்டு வருகிறது. 
  • இத்திட்டங்களை செயல்படுத்துவதற்கு ரூ.1 லட்சத்து 32 ஆயிரத்து 500 கோடி நிதி தேவைப்படும் என மதிப்பீடு செய்யப்படுள்ளது.
இயல் இசை நாடக மன்ற உறுப்பினர்-செயலாளராக ராமசுவாமி நியமனம்
  • தமிழ்நாடு இயல் இசை நாடக மன்ற அமைப்பு விதிகளின் கூறு 8ன் கீழ் தற்போது மன்றத்தின் உறுப்பினர் - செயலாளராக உள்ள சோமசுந்தரத்திற்கு பதிலாக முனைவர் ராமசுவாமி தமிழ்நாடு இயல், இசை நாடக மன்றத்தின் உறுப்பினர்- செயலாளராக மூன்றாண்டுகளுக்கு நியமனம் செய்து தமிழக அரசு ஆணையிடுகிறது. 
நிறுவனங்களில் பணிபுரியும் வேலையாட்களுக்கு இருக்கை வசதி கட்டாயம் - பேரவையில் சட்ட மசோதா தாக்கல்
  • தமிழக சட்டப்பேரவையில் 1947ம் ஆண்டு தமிழ்நாடு கடைகள் மற்றும் நிறுவனங்கள் சட்டத்தை மேலும் திருத்தம் செய்வதற்கான ஒரு சட்ட முன்வடிவை தொழிலாளர் நலன் - திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் சி.வி.கணேசன் தாக்கல் செய்தார்.
  • மாநிலத்தில் உள்ள கடைகள் மற்றும் நிறுவனங்களில் பணிபுரியும் நபர்கள் அவர்களது வேலை நேரம் முழுவதுமாக நிற்க வைக்கப்படுகின்றனர். அதன் விளைவாக பல வகையான உடல்நலக்கேடுகளுக்கு ஆளாகின்றனர். 
  • தங்களது வேலை நேரம் முழுவதும் தங்கள் பாதங்களிலேயே நிற்கும் வேலையாட்களின் நிலையை கருத்தில் கொண்டு, கடைகள் மற்றும் நிறுவனங்களின் அனைத்து வேலையாட்களுக்கும் இருக்கை வசதி வழங்க வேண்டும் என்றே கருதுகிறது.
நகர்புற ஏழைகளுக்கு வீடு கட்டும் திட்டம் தமிழகத்துக்கு ரூ.1095 கோடி ஆசிய வளர்ச்சி வங்கி நிதி
  • ஆசிய வளர்ச்சி வங்கி, ஆசியா கண்டத்திலுள்ள 67 நாடுகளை உறுப்பினர்களாக கொண்டு பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் 1966ம் ஆண்டு நிறுவப்பட்டது. ஆசிய நாடுகளின் வளர்ச்சிக்கு நிதி உதவி அளிப்பதை நோக்கமாக கொண்டு இது செயல்பட்டு வருகிறது. 
  • இந்தியாவின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் 8.54 சதவீத பங்களிப்புடன், நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் தமிழகம் முக்கிய மாநிலமாக திகழ்கிறது.
  • இங்குள்ள 7.2 கோடி மக்களில், 50 சதவீதத்துக்கும் மேற்பட்டோர் நகர்புறங்களில் வசித்து வருகின்றனர். இதனால், கிராமங்களில் இருந்து நகரங்களுக்கு இடம்பெயர்வோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. 
  • எனவே, நகரமயமாதலில் இந்தியாவில் உள்ள குறிப்பிட்ட மாநிலங்களில் தமிழ்நாடும் ஒன்றாகும். எனவே, தமிழ்நாட்டில் நகர்புறங்களில் வசிக்கும் ஏழைகளுக்கு 9 வெவ்வேறு பகுதிகளில் சுற்றுச்சூழல், பேரிடர் பாதுகாப்புடன் மலிவான விலையில், வீடு கட்டி கொடுக்க தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்துக்கு ரூ.1,095 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
  • தேசிய வீடுகள் பற்றாக்குறை அளவுடன் ஒப்பிடுகையில், தமிழ்நாட்டில் வீடுகள் குறைவாக இருப்பது கண்டறியப்பட்டது. அதன் பிறகு, வருமானத்தின் அடிப்படையில் கணக்கிட்ட போது, குறைந்தளவு வருமானம் உடையவர்களே அதிகம் பேர் வீடு இல்லாமல் இருப்பது தெரியவந்தது. 
  • இது பிராந்திய தேசிய திட்டமிடல் மேம்பாட்டு ஆணையம், தமிழ்நாடு நகர இயக்குனரகத்துக்கு மாநிலத்தின் பொருளாதாரம் மற்றும் உள்கட்டமைப்பு மேம்படுத்த உதவும்.
தந்தை பெரியார் பிறந்த செப்டம்பர் 17ஆம் நாள் சமூகநீதி நாளாக கொண்டாடப்படும் - மு.க.ஸ்டாலின்

  • தந்தை பெரியார் பிறந்த செப்டம்பர் 17ம் நாள் ஆண்டுதோறும் `சமூகநீதி நாள்' ஆக கொண்டாடப்படும் என்றும், அன்றைய தினம் அனைத்து அரசு அலுவலகங்களிலும் உறுதிமொழி எடுத்துக்கொள்ளப்படும் என்றும் சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.
சர்வதேச அவைத் தலைவர்கள் மாநாடு
  • 5வது சர்வதேச அவைத் தலைவர்கள் மாநாட்டை ஆஸ்திரேலிய நாடாளுமன்றம் செப்டம்பர் 7 மற்றும் 8ஆம் தேதிகளில் நடத்துகின்றது.
  • இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக ஆஸ்திரேலியா தலைநகர் வியன்னாவிற்கு இந்திய நாடாளுமன்றத்தின் மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா மற்றும் மாநிலங்களவைத் துணைத் தலைவர் ஹரிவன்ஷ் ஆகியோர் சென்றுள்ளனர்.
அயோத்திதாசருக்கு வடசென்னையில் மணிமண்டபம்
  • 175-வது ஆண்டு விழாவின் நினைவாக அயோத்தி தாசருக்கு (1845-1914) வடசென்னையில் மணிமண்டபம் அமைக்கப்படும் என்று சட்டப்பேரவையில் தமிழக முதல்வர் அறிவித்தார். பேரவை விதி 110-ன்கீழ் அவர் அறவித்தார்.
  • தமிழன், திராவிடம் இந்த இரண்டு சொற்களையும் அரசியல் களத்தில் அடையாளச் சொல்லாக மாற்றியவர், அறிவாயுதம் ஏந்தியவர் அயோத்திதாசப் பண்டிதர். 1881-ஆம் ஆண்டே மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் "பூர்வத் தமிழர்" என்று பதியச் சொன்னவர். 
  • 1891-ல் அவர் தொடங்கிய அமைப்பின் பெயர் "திராவிட மகாஜன சபை”. 1907-ல் "ஒரு பைசாத் தமிழன்” என்ற இதழைத் தொடங்கி அதனை *தமிழன்” என்ற இதழாக நடத்தி வந்தார்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel