நிறைவு பெற்றது பாராலிம்பிக்
- டோக்கியோ பாராலிம்பிக் போட்டியில் நேற்றுடன் நிறைவு பெற்றது இந்த போட்டியில் 5 தங்கம், 8 வெள்ளி, 6 வெண்கலம் என்று மொத்தம் 19 பதக்கங்களுடன் இந்தியா சாதனை படைத்துள்ளது.
- மேலும் பாராலிம்பிக்ஸ் வரலாற்றில் முதல்முறையாக அதிக பதக்கங்களை வென்று இந்தியா சாதனை படைத்துள்ளது. அதன்படி பதக்கப்பட்டியலில் 207 பதக்கங்களுடன் சீனா முதலிடமும், 19 பதக்கங்களுடன் இந்தியா 24வது இடமும் பெற்றுள்ளன.
- தங்கம் மற்றும் வெண்கலப் பதக்கங்களை வென்ற 19 வயது துப்பாக்கி சுடும் ஆவணி லேகாரா, விளையாட்டுப் போட்டியின் நிறைவு விழாவின்போது இந்திய அணிக்கு தலைமை தாங்கினார்.
பாரா பேட்மின்டன் தங்கம் வென்றார் கிருஷ்ணா நாகர்
- பாரா ஒலிம்பிக் போட்டியின் ஆண்கள் பேட்மின்டன் ஒற்றையர் எஸ்எச்6 பிரிவில், இந்திய வீரர் கிருஷ்ணா நாகர் (22 வயது, ஜெய்ப்பூர்) தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்தார்.
- இறுதிப் போட்டியில் ஹாங்காங் வீரர் சு மான் கெய்யுடன் மோதிய நாகர் 21-17, 16-21, 21-17 என்ற செட் கணக்கில் 43 நிமிடம் போராடி வென்று முதலிடம் பிடித்தார். பாரா பேட்மின்டனில் இந்தியாவுக்கு கிடைத்த 2வது தங்கம் இது. முன்னதாக, பிரமோத் பகத் எஸ்எல்3 பிரிவில் தங்கம் வென்றிருந்தார்.
பாரா ஒலிம்பிக் ஆண்கள் பேட்மின்டன் ஒற்றையர் எஸ்எல்4 பிரிவு யதிராஜுக்கு வெள்ளி
- பாரா ஒலிம்பிக் ஆண்கள் பேட்மின்டன் ஒற்றையர் எஸ்எல்4 பிரிவு பைனலில் நேற்று களமிறங்கிய இந்திய வீரர் சுஹாஸ் யதிராஜ் (38 வயது) 2வது இடம் பிடித்து வெள்ளிப் பதக்கத்தை முத்தமிட்டார்.
- இறுதிப் போட்டியில் பிரான்சின் லூகாஸ் மஸூர் (23 வயது) 15-21, 21-17, 21-15 என்ற செட் கணக்கில் யதிராஜை வீழ்த்தி தங்கப் பதக்கத்தை தட்டிச் சென்றார். விறுவிறுப்பான இப்போட்டி 1 மணி, 2 நிமிடத்துக்கு நீடித்தது. சுஹாஸ் யதிராஜ், உத்தரப்பிரதேச மாநிலத்தின், கவுதம் புத்தா நகர் (நொய்டா) மாவட்ட கலெக்டர் என்பது குறிப்பிடத்தக்கது.
- ரஷ்யாவில் 17 நாடுகள் இணைந்து மேற்கொள்ள உள்ள கூட்டு ராணுவப் பயிற்சியில் இந்தியா பங்கேற்கவுள்ளது. ரஷ்யாவில் உள்ள நீஸ்நி (Nizhniy) நகரில் செப்டம்பர் 03-16 வரை "சபாட்" (Multi Nation Exercise "ZAPAD 2021") கூட்டு ராணுவப் பயிற்சி நடைபெறவுள்ளது.
- இதில் இந்திய ராணுவ வீரர்கள் சுமார் 200 பேர் பங்கேற்கவுள்ளனர். அவர்களில் பெரும்பாலானோர் நாகா படைப்பிரிவைச் சேர்ந்தவர்கள்.