இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மையத்தின் புதிய இயக்குநராக வெங்கட்ராமன் நியமனம்
- செங்கல்பட்டு மாவட்டம், கல்பாக்கத்தில் இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மையத்தின் இயக்குநராக பணிபுரிந்து வந்த அருண்குமார் பாதுரி பணி ஓய்வு பெற்றதையடுத்து, மேன்மையுறு விஞ்ஞானியாக பணியாற்றி வந்த பா.வெங்கட்ராமன், புதிய இயக்குநராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
- இந்திய அணு ஆராய்ச்சி துறையின் உயரிய விருதான ஹோமி பாபா அறிவியல் மற்றும் தொழில்நுட்ப விருதை 2007-ம் ஆண்டு பெற்றுள்ளார். இதுதவிர சாதனை குழுவுக்கான பரிசுகளையும் பெற்றுள்ளார். இவர் எழுதிய பல்வேறு ஆராய்ச்சி கட்டுரைகள் சிறந்த கட்டுரைக்கான விருதுகளையும் பெற்றுள்ளன.
ஆப்கனில் பயங்கரவாதத்துக்கு ஆதரவு கூடாது - ஐ.நா.,வில் தீர்மானம் நிறைவேற்றம்
- இந்தியா தலைமையில் நடந்த ஐ.நா., பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் அமெரிக்கா, பிரான்ஸ், பிரிட்டன் ஆகிய நாடுகள் ஆப்கன் தொடர்பான தீர்மானத்தை தாக்கல் செய்தன. இந்த தீர்மானத்திற்கு ஆதரவாக 15 உறுப்பு நாடுகளில் 13 நாடுகள் ஓட்டு போட்டன.
- இதையடுத்து தீர்மானம் நிறைவேறியதாக அறிவிக்கப்பட்டது. தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளதாவது: பிற நாடுகளை அச்சுறுத்தவோ அல்லது தாக்கவோ ஆப்கன் பிராந்தியத்தை தலிபான் பயன்படுத்தக் கூடாது.
- பயங்கரவாதிகளுக்கு புகலிடம் அளிப்பது, பயிற்சி அளிப்பது, பயங்கரவாத செயல்களுக்கு திட்டமிடுவது, நிதி திரட்டுவது போன்ற செயல்பாடுகளுக்கும் ஆப்கனில் இடமளிக்கக் கூடாது.
3 தீா்மானங்களின் நீட்டிப்புக்கு ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் ஒப்புதல்
- ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் ஆகஸ்ட் மாதத்துக்கான தலைமைப் பொறுப்பை இந்தியா ஏற்றது. கடல்சாா் பாதுகாப்பு, அமைதிப்படை, பயங்கரவாத எதிா்ப்பு ஆகிய தலைப்புகளில் முக்கியக் கூட்டங்களை இந்தியா நடத்தியது. இந்தியா தலைமையிலான கடைசி கூட்டம் நடைபெற்றது.
- அக்கூட்டத்துக்கு வெளியுறவுத் துறைச் செயலா் ஹா்ஷ்வா்தன் ஷ்ரிங்லா தலைமை வகித்தாா். ஆப்கானிஸ்தான் விவகாரம் தொடா்பாக அக்கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும், 3 முக்கிய தீா்மானங்களுக்கான நீட்டிப்புக்கும் கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டது.
- லெபனானில் ஐ.நா. அமைதிப் படையை மேலும் ஓராண்டுக்கு நிறுத்திவைப்பதற்கான தீா்மானத்துக்குக் கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டது. அந்நாட்டில் உள்ள அமைதிப் படையில் 862 இந்திய வீரா்கள் பணியாற்றி வருகின்றனா்.
- ஆப்பிரிக்க நாடான மாலியில் அமைதியான சூழலை ஏற்படுத்தத் தடையாக இருப்போருக்கு விதிக்கப்பட்டுள்ள பயணத் தடையையும், அவா்களது சொத்துகள் முடக்க நடவடிக்கையையும் 2022-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 31-ஆம் தேதி வரை நீட்டிப்பதற்கான தீா்மானத்துக்கும் அனுமதி அளிக்கப்பட்டது.
- சோமாலியாவில் அமைதியை நிலைநாட்டுவதற்காக அந்நாட்டுக்கு ஐ.நா. அளித்து வரும் ஆதரவை அடுத்த ஆண்டு மே 31-ஆம் தேதி வரை நீட்டிக்கும் தீா்மானத்துக்கும் கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டது.
ஜிடிபி - முதல் காலாண்டில் 20.1% அதிகரிப்பு
- கடந்த நிதியாண்டின் முதல் காலாண்டில் 24.4 சதவிகிதம் எதிர்மறையாக இருந்த நிலையில், நடப்பாண்டின் முதல் காலாண்டில் அதீத வளர்ச்சியை அடைந்துள்ளது.
- மத்திய பொருளியியல் மற்றும் புள்ளியியல் துறை வெளியிட்டுள்ள தரவுகளின் படி, 2021-22 ஆண்டின் ஏப்ரல்-ஜூன் வரையிலான முதல் காலாண்டில் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 20.1 சதவிகிதமாக உயர்ந்துள்ளது.
ஜெயலலிதா பல்கலைக்கழகம் இணைப்பு மசோதா - குரல் வாக்கெடுப்பு மூலம் பேரவையில் நிறைவேற்றம்
- ஜெயலலிதா பல்கலைக்கழக இணைப்புக்கு தமிழக சட்டப்பேரவையில் குரல் வாக்கெடுப்பு மூலம் இந்த சட்டமுன்வடிவு நிறைவேற்றப்பட்டது.
துப்பாக்கி சுடுதல் - வெண்கலம் வென்றாா் சிங்ராஜ் அதானா
- டோக்கியோ பாராலிம்பிக்கில் ஆடவா் (பி1) 10 மீட்டா் ஏா் பிஸ்டல் எஸ்ஹெச்1-இல் இந்தியாவின் சிங்ராஜ் அதானா (39) வெண்கலப் பதக்கம் வென்றாா்.
- அவா் தனது முதல் பாராலிம்பிக் போட்டியிலேயே பதக்கம் வென்றிருக்கிறாா். இந்த டோக்கியோ பாராலிம்பிக்கில் துப்பாக்கி சுடுதலில் இந்தியாவுக்கு இது 2-ஆவது பதக்கமாகும்.
- முன்னதாக மகளிா் (ஆா்-2) 10 மீட்டா் ரைஃபிள் ஸ்டான்டிங் எஸ்ஹெச்1-இல் அவனி லெகாரா தங்கம் வென்றுள்ளாா்.
அல்ஜீரியாவுடன் இந்தியக் கடற்படையின் முதல் கூட்டுப்பயிற்சி
- நல்லெண்ண அடிப்படையில் ஐரோப்பா மற்றும் ஆப்பிரிக்காவிற்கு பயணம் மேற்கொண்டுள்ள ஐஎன்எஸ் தாபார் கப்பல், அல்ஜீரிய கடற்படைக் கப்பலான 'எஸ்ஸட்ஜெர்' உடன் ஆகஸ்ட் 29-ஆம் தேதி கடல்சார் கூட்டுப் பயிற்சியில் கலந்து கொண்டது.
- முக்கியத்துவம் வாய்ந்த இந்தப் பயிற்சி அல்ஜீரியக் கடற்பகுதியில் நடைபெற்றது. ஒருங்கிணைந்த திட்டமிட்ட நடவடிக்கை, தொலைத்தொடர்பு நடைமுறைகள் போன்ற பன்முகத் தன்மை வாய்ந்த நடவடிக்கைகள் இந்திய மற்றும் அல்ஜீரியக் கப்பல்களுக்கு இடையே மேற்கொள்ளப்பட்டன.
"நீர்மிகை நகரம்” திட்டம்
- தூய்மை இந்தியா திட்டத்தைச் (Swatch Bharat campaigm) செயல்படுத்துவதில் இந்தூர் நகரம் (மத்திய பிரதேசம்) சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது. அந்நகரம் தூய்மை இந்தியா திட்டத்துக்கான தரவரிசையில் பல ஆண்டுகளாக முதலிடத்தில் இருந்து வருகிறது.
- "நீர்மிகை நகரமாக” (Water Plus City) மாறுவதற்கான நடவடிக்கைகளை இந்தூர் மேற்கொண்டு வருகிறது. அதன்படி, "கழிவுநீரை சுத்திகரிப்பு செய்யாமல் பொது நீர்நிலைகளில் வெளியேற்றுவதில்லை" என்ற தீர்மானத்தை அந்நகர மக்கள் ஏற்றுள்ளனர். அதன் காரணமாக நதிகளில் கலக்கும் மாசுபட்ட நீரின் அளவு கணிசமாக குறைந்துள்ளது.
"சுகேத் மாதிரி" திட்டம்
- பீகாரின் மதுபனியில் (Madhubani) உள்ள "ராஜேந்திர பிரசாத் விவசாயப் பல்கலைக்கழகம்”, "சுகேத் முன்மாதிரி” (Sukhet Model) திட்டத்தைச் செயல்படுத்தி வருகிறது.
- அதில், விவசாயிகளிடமிருந்து பசுஞ்சாணம், வயல்கள் வீடுகளிலிருந்து வெளிப்படும் குப்பைக் கழிவுகள் ஆகியவை சேகரிக்கப்பட்டு, அதற்கு ஈடாக சமையல் எரிவாயு சிலிண்டருக்கான பணம் வழங்கப்படுகிறது.
- திரட்டப்படும் கழிவுகளை மண்புழு உரமாக மாற்றும் பணியும் நடைபெற்று வருகிறது. இதன் மூலமாக இயற்கை உரமும் கிடைக்கிறது.
குப்பையிலிருந்து மின்சாரம் தயாரிக்கும் திட்டம் - சிவகங்கை
- தமிழகத்தின் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காஞ்சிரங்கால் ஊராட்சி" (Kanjirangal Panchayat), கழிவிலிருந்து செல்வம் ஈட்டுதற்கான திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. உள்ளூர் மக்களோடு இணைந்து குப்பைகளிலிருந்து மின்சாரம் தயாரிக்கும் செயல்திட்டத்தை பஞ்சாயத்து நிர்வாகம் அமல்படுத்தியிருக்கிறது.
- கிராமம் முழுவதும் இருந்து குப்பைகள் திரட்டப்பட்டு அதிலிருந்து மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. அது கிராமத்தின் தெரு விளக்குகளுக்கும் பிற தேவைகளுக்கும் பயன்படுத்தப்படுகிறது. மின்சார உற்பத்தியில் எஞ்சும் பொருள்கள் கிருமி நாசினியாக விற்கப்படுகின்றன.
பாரா ஒலிம்பிக் உயரம் தாண்டுதலில் வெள்ளி வென்றார் மாரியப்பன், சரத்குமாருக்கு வெண்கலம்
- டி42 பிரிவின் இறுதிச்சுற்றில் அமெரிக்காவின் சாம் கிரெவி 1.88 மீட்டா் உயரம் தாண்டி தங்கம் வெல்ல, மாரியப்பன் 1.86 மீட்டா் தாண்டி வெள்ளியும், சரத் குமாா் 1.83 மீட்டா் தாண்டி வெண்கலமும் வென்றனா்.
- இப்பிரிவில் பங்கேற்றிருந்த மற்றொரு இந்தியரான வருண் சிங் பாட்டி, 1.77 மீட்டா் உயரம் தாண்டி 7-ஆம் இடம் பிடித்தாா். இவா் ரியோ பாராலிம்பிக்கில் வெண்கலம் வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.