இந்தியாவிலேயே முதல்முறை சென்னை அருகே சித்தா மருத்துவப் பல்கலைக்கழகம்
- இந்தியாவிலேயே முதல்முறையாகச் சித்த மருத்துவத்தைப் போற்றும் வகையில் சித்த மருத்துவத்துக்கென தனிப் பல்கலைக்கழகம் அமைக்கப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் சட்டசபையில் அறிவித்துள்ளார்,
ஜல்லிக்கட்டுக்கு புதிய விதிகள் - சென்னை உயர் நீதிமன்ற தீர்ப்பின் 5 முக்கிய அம்சங்கள்
- சென்னை ஒக்கியம் துரைப்பாக்கத்தைச் சேர்ந்த சேஷன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். நாட்டு மாடுகள் இதற்காக வளர்க்கப்படாததால், அந்த மாடுகளின் இனமே அழிந்துவருவதாக அவர் தனது மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
- ஜல்லிக்கட்டு மாடு வளர்ப்போரும் விவசாயிகளும் நாட்டு மாடுகள் வளர்ப்பதை மானியம், ஊக்கத் தொகை போன்றவற்றை அளித்து அரசாங்கம் ஊக்குவிக்க வேண்டும்
- கிராமங்களில் வளர்க்கப்படும் நாட்டு மாடுகளின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்து வருவது வேதனை அளிக்கிறது.
- ஜல்லிக்கட்டுப் போட்டிகளில் மாடுகள் பங்கேற்பதற்கு முன்பாக அந்த மாடுகள் 'நாட்டு மாடுகள்' என்பதை கால்நடை மருத்துவர்கள் உறுதிசெய்ய வேண்டும். எந்த கால்நடை மருத்துவராவது, கலப்பின மாடுகளை 'நாட்டு மாடுகள்' என சான்றளித்தால் அவர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடரலாம்.
- மாடுகளுக்கு செயற்கை முறையில் கருத்தரிப்பதை முடிந்த அளவு அரசு கைவிட வேண்டும். இது 1960ஆம் ஆண்டின் மிருகவதை தடைச் சட்டத்தின் கீழ் குற்றமாகக் கருதப்படக்கூடும்.
- ஜல்லிக்கட்டுப் போட்டிகளுக்கு என 2017ஆம் ஆண்டில் சட்டம் இயற்றப்பட்டதன் காரணமே, புளியங்குளம், உம்பளச்சேரி, மலைமாடு, காங்கேயம் போன்ற நாட்டு மாட்டு இனங்களைக் காப்பதுதான்.
- வெளிநாட்டு மாடுகளுக்கும் கலப்பின மாடுகளுக்கும் திமில் பெரிதாக இல்லாத காரணத்தால் அவற்றைப் பிடிப்பது கடினமாக இருப்பதாக மனுதாரர் கூறியிருந்தார் அதை நீதிமன்றம் ஏற்றுக்கொள்கிறது.
மோசடி பத்திரத்தை ரத்து செய்ய பதிவுத்துறை அலுவலருக்கு அதிகாரம் - மசோதா நிறைவேற்றம்
- தமிழகத்தில் 575 சார் - பதிவாளர் அலுவலகங்கள் வாயிலாக பத்திரப்பதிவு நடவடிக்கைகள் நடக்கின்றன. இதில் பல இடங்களில், ஆள்மாறாட்டம், போலி ஆவணங்கள் வாயிலாக மோசடி பத்திரங்கள் பதிவு செய்யப்படுவதாக புகார்கள் வருகின்றன.
- இது தொடர்பாக பல்வேறு வழக்குகளில் நீதிமன்றம் எழுப்பிய கேள்விகளால் பதிவுத்துறைக்கு நெருக்கடி எழுந்துள்ளது. இதற்கு தீர்வாக பதிவு சட்டத்தில் இதற்கான வழிமுறைகளை ஏற்படுத்த, புதிய சட்டத்திருத்த மசோதா, வரும் பட்ஜெட் கூட்டத் தொடரில் தாக்கல் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது.
- இதையடுத்து மோசடி பத்திரத்தை ரத்து செய்ய அதிகாரம் வழங்கும் சட்ட மசோதாவை வணிகவரி மற்றும் பத்திரப் பதிவுத் துறை அமைச்சர் மூர்த்தி தாக்கல் செய்தார்.
- இந்த மசோதா இன்று சட்டசபையில் நிறைவேற்றப்பட்டது. இதன்படி மோசடி பத்திரங்களை இனி பதிவுத்துறை உயர் அலுவலர் ரத்து செய்ய அதிகாரம் அளிக்கும் வகையில் மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது.
23,000 ரன்களை எடுத்த வீரர்கள் என்ற மைல்கல்லை எட்டிய பட்டியலில், முதலிடத்தில் விராட் கோலி
- விராட் கோலி தனது 490 வது இன்னிங்ஸில் இங்கிலாந்திற்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியின் முதல் நாளில் தான் சந்தித்த முதல் ஓவரில் இந்த சாதனையை எட்டினார். 23,000 ரன்களை எடுத்த வீரர்கள் என்ற மைல்கல்லை எட்டிய பட்டியலில், முதலிடத்தில் விராட் கோலி உள்ளார்.
- இதுவரை ஏழு கிரிக்கெட் வீரர்கள் மட்டுமே 23000 ரன்களை கடக்க முடிந்தது. அந்த பட்டியலில் இரண்டாவது இடத்தில் கிரிக்கெட் கடவுள் சச்சின் டெண்டுல்கர் (522 இன்னிங்ஸ்), ரிக்கி பாண்டிங் (544), ஜாக் காலிஸ் (551), குமார் சங்கக்கார (568), ராகுல் திராவிட் (576) மற்றும் மஹேல ஜயவர்த்தனா (645) என அடுத்தடுத்து இடம் பெற்றுள்ளனர்.
உலக தேங்காய் தினம்
- உலகெங்கிலும் தென்னை சாகுபடி செய்யும் நாடுகள் ஒவ்வொரு வருடமும் செப்டம்பர் 2-ம் தேதியை உலக தேங்காய் தினமாக கடைபிடித்து வருகின்றன.
- தென்னை மரத்தின் பலன்கள், அதன் மூலம் விவசாயிகள் அடையக்கூடிய லாபம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகவே வருடந்தோறும் இந்த தினம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
- `கொரோனா பெருந்தொற்றுக்கிடையே பாதுகாப்பை உள்ளடக்கிய, நெகிழ்திறன் மற்றும் நிலையான தென்னை சமூகத்தை உருவாக்குவோம்' என்ற தலைப்பில் வேளாண் மற்றும் உழவர் நல அமைச்சகம் இந்த நிகழ்ச்சியை நடத்தியது.
- தவிர, இந்த வருடத்தின் உலக தென்னை தினத்தை, 75- வது சுதந்திர தின நினைவாக `ஆசாதி கா அம்ருத் மகோத்சவ்' திட்டத்துடன் இணைத்துள்ளனர்.
சர்வதேச அளவில் 111 கோல்கள் அடித்து உலக சாதனை படைத்த நட்சத்திர கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ
- போர்ச்சுகல் நாட்டு கால்பந்து அணியின் கேப்டனும், நட்சத்திர கால்பந்து வீரருமான கிறிஸ்டியானோ ரொனால்டோ, சர்வதேச அளவில் சிறந்த வீரராக விளங்கி வருகிறார்.
- 36 வயதான அவர், அயர்லாந்து அணிக்கு எதிரான உலகக்கோப்பை தகுதி போட்டியில் 2 கோல்களை அடித்தார். இதனையடுத்து 2 - 1 என்ற கோல் கணக்கில் போர்ச்சுகல் அணி வெற்றிபெற்றது.
- இதன் மூலம் சர்வதேச கால்பந்து அரங்கில் கிறிஸ்டியானோ ரொனால்டோ மொத்தம் 111 கோல்களை அடித்து சாதனை படைத்துள்ளார். அதோடு சர்வதேச அளவில் அதிக கோல்கள் அடித்த வீரர் என்ற புதிய சாதனையையும் ரொனால்டோ படைத்துள்ளார்.
விழுப்புரத்தில் 1987ல் உயிர்நீத்த 21 இடஒதுக்கீடு போராளிகளுக்கு மணிமண்டபம் - முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
- 1987ம் ஆண்டு இடஒதுக்கீடு போராட்டத்தில் காவல் துறையின் துப்பாக்கிச் சூட்டுக்குப் பலியான 21 சமூகநீதிப் போராளிகளுக்கு ரூபாய் 4 கோடி மதிப்பீட்டில், விழுப்புரம் மாவட்டத்தில் மணிமண்டபம் அமைக்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.