Type Here to Get Search Results !

TNPSC 24th SEPTEMBER 2021 CURRENT AFFAIRS TNPSC SHOUTERS TAMIL PDF

 

தமிழகத்தில் ரூ.100 கோடியில் நகர்ப்புற ஊதிய வேலைவாய்ப்புத் திட்டம்

  • மத்திய அரசின் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் மூலம் கிராமங்களில் லட்சக்கணக்கானோர் பயனடைந்து வருகின்றனர்.
  • இந்நிலையில், நகரங்களில் உள்ள ஏழை மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் வகையில், தமிழக அரசு சார்பில் தற்போது `நகர்ப்புற ஊதிய வேலைவாய்ப்புத் திட்டம்' அறிவிக்கப்பட்டுள்ளது.
  • இதில், பூங்காக்கள், விளையாட்டுத் திடல்கள், வடிகால்கள், சாலைகள், கட்டிடங்களை அமைத்தல், பராமரித்தல், நீர்நிலைகளைப் புதுப்பித்தல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படும். இந்த திட்டத்தை பரிசோதனை அடிப்படையில் செயல்படுத்த ரூ.100 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
  • நடப்பாண்டில் சென்னை மாநகராட்சியின் 2 மண்டலங்கள், இதர மாநகராட்சிகளில் தலா ஒரு மண்டலம், 7 நகராட்சிகள், 37 பேரூராட்சிகளில் இந்த திட்டம் செயல்படுத்தப்படும். இந்த திட்டத்தை செயல்படுத்த அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் தமிழக அரசு தற்போது அனுமதி அளித்துள்ளது.
  • முழுமையாக தமிழக அரசின் நிதியில் செயல்படுத்தப்படும் இந்த திட்டத்துக்காக, ஒவ்வொரு குடும்பத்திலும் உள்ள வேலைதேடுவோர் பதிவு செய்யப்பட்டு, அவர்களுக்கு பணியாளர் அட்டை வழங்கப்பட உள்ளது.
  • பெண்களுக்கு 50 சதவீதத்துக்கு குறையாமல் பணி வழங்கப்படும். அனைவருக்கும் ஒரே மாதிரியான ஊதியம், அவர்களது பணிகளின் அடிப்படையில் வழங்கப்படும். பணியாளர்களுக்கான குறைதீர் அமைப்பும் உருவாக்கப்படும்.

விமானப் படைக்கு சி-295 விமானங்கள் வாங்க முடிவு

  • இந்திய விமானப் படையில் பயன்படுத்தப்பட்டு வந்த ஆவ்ரோ-748 ரக விமானங்கள் காலாவதியானதால் அதன் பயன்பாடு முற்றிலுமாக நிறுத்தப்பட்டுவிட்டது. இதைத் தொடர்ந்து ஏர் பஸ் நிறுவனத்திடமிருந்து சி-295 ரக விமானங்களை வாங்க அரசு முடிவு செய்துள்ளது.
  • இதற்காக மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின்படி 16 விமானங்களை ஏர் பஸ் நிறுவனம் ஸ்பெயினில் உள்ள செவிலே எனுமிடத்தில் தயாரித்து அளிக்கும். எஞ்சிய 40 விமானங்களை இந்தியாவில் கட்டுமானம் செய்து அளிக்கும். இந்தியாவில் ஏர்பஸ் நிறுவனம் டாடா அட்வான்ஸ்டு சிஸ்டம் (டிஏஎஸ்எல்) நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளது.
  • இந்தியாவில் ஏர்பஸ் டிபென்ஸ் மற்றும் டாடா அட்வான்ஸ்டு சிஸ்டம் நிறுவனம் கூட்டாக தயாரித்து விமானங்களை அளிக்கும் முடிவுக்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.

குவாட் நாடுகளின் தலைவர்கள் பங்கேற்ற மாநாடு

  • அமெரிக்கா, இந்தியா, ஆஸ்திரேலியா, ஜப்பான் ஆகிய 4 நாடுகள் இணைந்து கடந்த 2007-ம் ஆண்டு குவாட் கூட்டணி என்ற அமைப்பை உருவாக்கின. 2017-ம்ஆண்டு இந்த அமைப்பில் ஆஸ்திரேலியா இணைந்தது.
  • முதல்முறையாக சம்பந்தப்பட்ட நாடுகளின் தலைவர்கள் பங்கேற்ற மாநாடு கடந்த மார்ச் மாதம் காணொலி மூலம் நடைபெற்றது. இதில், அமெரிக்க அதிபர் ஜோ பைடன், இந்திய பிரதமர் மோடி, ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன், ஜப்பான் பிரதமர் யோஷிகிடே சுகா ஆகியோர் காணொலி மூலம் பங்கேற்றனர்.
  • கரோனா தடுப்பூசி, பருவநிலை மாற்றம், தொழில்நுட்பம் குறித்து விவாதிக்கப்பட்டது. இந்நிலையில், குவாட் தலைவர்கள் நேரடியாக பங்கேற்கும் முதல் உச்சி மாநாடு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தலைமையில் நடைபெறுகிறது.
  • ஜோ பைடன் தலைமையில் நடைபெற உள்ள இந்த மாநாட்டில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி, ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்கார்ட் மோரிஸ் மற்றும் ஜப்பான் பிரதமர் யோஷிஹைட் சுகா ஆகியோர் பங்கேற்கின்றனர்.
  • தடுப்பூசிகள் முதல் சட்டவிரோத மீன்பிடித்தல் வரை பல்வேறு விஷங்கள் இந்த கூட்டத்தில் விவாதிக்கப்படுகிறது. இந்த நூற்றாண்டின் முக்கிய சவால்கள் இந்தோ-பசிபிக் பகுதியில் நிகழும் என்பதை அமெரிக்க அதிபர் ஜோ பிடன் புரிந்துகொண்டுள்ளார்.
  • உச்சிமாநாட்டில், குவாட் தலைவர்கள் இந்தோ-பசிபிக் எதிர்கொள்ளும் குறிப்பிட்ட பிரச்சினைகளில் கவனம் செலுத்த விரும்புகின்றனர். இது ஒரு பிராந்திய பாதுகாப்பு அமைப்பு அல்ல என்பதும் உண்மைதான். எனினும் இதில் பல துணைக் குழுக்கள் உள்ளன. தினசரி அடிப்படையில் இந்த நாடுகள் ஒத்துழைப்பை தீவிரப்படுத்தி வருகிறோம்.

60 ஆயிரம் புள்ளிகளை தாண்டியது சென்செக்ஸ்

  • மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் முதன்முறையாக 60 ஆயிரம் புள்ளிகளை கடந்தது. இன்றைய வர்த்தக தொடக்கத்தில் 400 புள்ளிகள் உயர்ந்து வணிகமாகிறது சென்செக்ஸ்.
  • முதன்முறையாக வர்த்தக தொடக்கத்தில் சென்செக்ஸ் 400 புள்ளிகள் உயர்ந்து 60,285 புள்ளிகளில் வர்த்தகமாகிறது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டியும் 122 புள்ளி அதிகரித்து 17,945 என்ற புதிய உச்சத்தை எட்டியது. 
  • கொரோனா காரணமாக கடந்த ஆண்டிலிருந்து தொழிற்சாலைகள் மூடப்பட்டு உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டிருந்தாலும் இந்த ஆண்டு பங்குச்சந்தைகள் தொடர்ந்து உயர்ந்துகொண்டே வருகின்றன. அதிலும் தற்போது பணப்புழக்கம் அதிகமாக இருப்பதால் இன்று புதிய உச்சத்தை தொட்டிருக்கிறது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel