சர்வதேச சைகை மொழி தினம்
- ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 23ஆம் தேதி சர்வதேச சைகை மொழி தினம் கொண்டாடப்பட்டு வரும் நிலையில் இன்று உலகம் முழுவதும் அந்த தினம் கொண்டாடப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
- பேச்சு வழக்கிலும் எழுத்து வழக்கிலும் உள்ள மொழிகளில் மூத்த மொழி சைகை மொழியாகும். இந்த சைகை மொழியில் பேசிய பிறகுதான் வடிவ எழுத்துக்கள் தோன்றின என்பதும் அதன் பின்னரே அனைத்து மொழிகளும் தோன்றின என்பது குறிப்பிடத்தக்கது
- மௌனங்களின் மொழி சைகை மொழி என்பதும் இந்த மொழிக்கு பேச்சு, எழுத்து தேவை இல்லை என்பதும் கேட்க இயலாமல் பார்வையில் மட்டுமே மனதால் மட்டுமே இந்த மொழியை புரிந்துகொள்ள முடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது
- காது கேளாதோர் மற்றும் பேசும் திறனற்றோர் பிறரின் உணர்வுகளை கொண்டு அவர்கள் பேசுவதையும் அவர்களின் உணர்வுகளையும் புரிந்து கொள்வதற்கான மொழிதான் சைகை மொழி என்பது குறிப்பிடத்தக்கது
'பேட்ஸ்மேன்கள்' இனி 'பேட்டர்கள்' என்று மட்டுமே அழைக்கப்படுவர்
- கிரிக்கெட் சட்டங்களை நிலைநிறுத்தும் அமைப்பான லண்டனில் உள்ள மேரில்போன் கிரிக்கெட் கிளப் (MCC), அதிகாரப்பூர்வமாக கிரிக்கெட் சொற்களில் மாற்றத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
- MCC வெளியிடப்பட்ட அறிக்கையின்படி, 'பேட்ஸ்மேன்' மற்றும்/அல்லது 'பேட்ஸ்மென்' என்ற சொல் அதிகாரப்பூர்வமாக பாலின-நடுநிலை வார்த்தையான 'பேட்டர்கள்' என்று மாற்றப்படும்.
- கிரிக்கெட் வரலாற்றில் 'பேட்ஸ்மேன்/பேட்ஸ்மென்' என்ற வார்த்தைகள் 1744 முதல் பயன்பாட்டில் உள்ளன. கிரிக்கெட் விளையாட்டில் பாலினம் பாகுபாடின்றி பெண் வீரர்களுக்கு அதிக வரவேற்பு அளிக்க இந்த மாற்றம் செயல்படுத்தப்பட்டுள்ளது.
'ஏற்றுமதியில் ஏற்றம் - முன்னணியில் தமிழ்நாடு' என்ற பெயரில் தமிழ்நாடு ஏற்றுமதி மாநாடு
- இந்தியாவின் 75-வது சுதந்திர தினத்தை கொண்டாடும் வகையில் நாடு முழுவதும் செப்டம்பர் 20-ந்தேதி முதல் 26-ந் தேதி வரை 'வர்த்தகம் மற்றும் வணிக வாரம்' கொண்டாடப்பட்டு வருகிறது.
- தமிழ்நாட்டை பொறுத்தவரை, மாநிலத்தின் ஏற்றுமதித்திறனை வெளிப்படுத்தும் வகையில், சென்னை கலைவாணர் அரங்கில் 'ஏற்றுமதியில் ஏற்றம் - முன்னணியில் தமிழ்நாடு' என்ற பெயரில் தமிழ்நாடு ஏற்றுமதி மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
- அதன் பின்னர் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது, "ரூ.2120.54 கோடி மதிப்பீட்டில் 24 தொழில் முதலீடுகளுக்கு புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டன. 41,695 நபர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கிடும் வகையில் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. முதலீட்டாளர்கள், ஏற்றுமதியாளர்களுக்கு அரசு உறுதுணையாக இருக்கும்.
- சர்வதேச தொழில் நிறுவனங்கள் தமிழ்நாட்டை நோக்கி வர வேண்டும். இந்தியாவிலேயே தமிழ்நாடு ஏற்றுமதியில் 3-வது பெரிய மாநிலமாக உள்ளது. மோட்டார் வாகனங்கள் ஏற்றுமதியில் தமிழ்நாடு முன்னணி மாநிலமாக உள்ளது.
- உலகத்தின் அனைத்து பகுதிகளிலும் தமிழ்நாடு தயாரிப்புகள் (made in tamilnadu) என்ற நிலை உருவாக வேண்டும். மாவட்ட ஏற்றுமதி மையங்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன. பஞ்சுக்கான ஒரு சதவீத சந்தை நுழைவு வரி ரத்து செய்யப்பட்டுள்ளது.