இந்திய விமானப்படையின் அடுத்த தளபதி சவுத்ரி
- இந்திய விமானப்படையின் அடுத்த தளபதியாக, ஏர் மார்ஷல் வி.ஆர்.சவுத்ரி நியமிக்கப்பட உள்ளார். இந்திய விமானப் படை தளபதி ஆர்.கே.எஸ். பதவுரியா இந்த மாதத்துடன் பணி ஓய்வு பெறுகிறார்.
- இதைஅடுத்து, விமானப் படையின் அடுத்த தளபதியாக, ஏர் மார்ஷல் வி.ஆர்.சவுத்ரியை நியமிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.தற்போது துணை தளபதியாக இருக்கும் சவுத்ரி, 1982 டிச.,ல் விமானப் படையில் சேர்ந்தவர்.
கனடா தோதலில் பிரதமா் ஜஸ்டின் ட்ரூடோ கட்சி வெற்றி
- கடந்த முறை சிறுபான்மை அரசை அமைத்து ஆட்சி நடத்தி வந்த ஜஸ்டின் ட்ரூடோ, கரோனா நெருக்கடியை சிறப்பாக கையாண்டதற்காக இந்தத் தோதலில் தனது கட்சிக்கு கூடுதல் இடங்கள் கிடைக்கும் என்று எதிா்பாா்த்திருந்தாா்.
- ஆனால், திங்கள்கிழமை நடந்து முடிந்த தோதலில் முந்தைய தோதலைப் போலவே 157 இடங்கள் மட்டுமே லிபரல் கட்சிக்குக் கிடைத்தது. எதிா்க்கட்சியான கன்சா்வேட்டிவ் கட்சி கடந்த முறை பெற்றதைவிட 2 இடங்கள் குறைவாக 119 இடங்களில் வெற்றி பெற்றது. tnpsc-21st-september-2021-ca-english
- இதன் மூலம், தனது சிறுபான்மை அரசை ஜஸ்டின் ட்ரூடோ தக்கவைத்துக் கொண்டுள்ளாா். லிபரல், கன்சா்வேடிவ் கட்சிகளுக்கு அடுத்தபடியாக, கியூபெக் கட்சி 34 இடங்களிலும் இந்திய வம்சாவளியைச் சோந்த ஜக்மீத் சிங் தலைமையிலான புதிய ஜனநாயகக் கட்சி 25 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன
சைவ உணவுக்கு புதிய லோகோ ஒன்றை இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் வெளியிட்டுள்ளது
- சைவ உணவு பொருட்களை குறிக்கும் வகையில் புதிய லோகோ ஒன்றை இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (FSSAI) வெளியிட்டுள்ளது.
- ஆங்கில எழுத்தான v வடிவத்தில் 4 பச்சை இலைகளுடன் கூடிய ஒரு லோகோவை சைவ உணவாக எஃப்எஸ்எஸ்ஏஐ இன்று வெளியிட்டுள்ளது.
- பாக்கெட்டில் விற்கப்படும் உணவுப் பொருட்களில் சைவ உணவு என்பதனைக் குறிக்கும் படியாக பச்சை வடிவத்தில் புள்ளி ஒன்று இடம்பெற்றிருந்தது.
- அதற்கு மாற்றாக தற்போது ஆங்கில எழுத்தான v வடிவத்தில் 4 பச்சை இலைகளுடன் கூடிய ஒரு லோகோவை சைவ உணவாக எஃப்எஸ்எஸ்ஏஐ வெளியிட்டுள்ளது.