பஞ்சாப் முதலமைச்சராக பதவி ஏற்கிறார் சரண்ஜித் சிங் சன்னி
- சண்டிகரில் நடைபெற்ற காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டத்தில், அடுத்த முதலமைச்சராக சரண்ஜித் சிங் சன்னி தேர்வு செய்யப்பட்டார். இவர் அம்ரீந்தர்சிங் அமைச்சரவையில், ஏற்கனவே தொழில்நுட்ப கல்வித்துறை அமைச்சராக பணியாற்றியவர்.
எல்லைப்புறச் சாலைகள் நிறுவனத்தில் முதல்முறையாக பெண் ராணுவ அதிகாரி ஒருவர் கமாண்டிங் அதிகாரியாக நியமனம்
- எல்லைப்புறச் சாலைகள் நிறுவனத்தில் முதல்முறையாக பெண் ராணுவ அதிகாரி ஒருவர் கமாண்டிங் அதிகாரியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
- உத்தராகண்ட்டில் செயல்பட்டு வரும் 75-வது சாலை அமைக்கும் நிறுவனத்துக்கு தளவாயாக மேஜர் ஆய்னா நியமிக்கப்பட்டுள்ளார். தளவாய் மேஜர் ஆய்னாவின் கீழ் கேப்டன் அஞ்சனா, பாவனா, ஜோஷி, விஷ்ணுமாயா ஆகியோர் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
- சீனா, பாகிஸ்தான், வங்கதேசத்துடனான எல்லைகளில் சாலைகள் அமைக்கும் நிறுவனம் (BRO) பாதுகாப்புத்துறையின் கீழ் உள்ளது.