100 சதவீதம் முதல் தவணை தடுப்பூசி செலுத்தி நீலகிரி சாதனை
- தமிழகத்தில் அதிக பழங்குடியினர் வசிக்கும் மாவட்டமும் நீலகிரி மாவட்டம் தான். இங்கு தோடர், கோத்தர், பணியர் உட்பட 6 வகை பழங்குடியின மக்கள் 27 ஆயிரம் பேர் வசிக்கின்றனர்.
- இந்நிலையில், மாவட்ட நிர்வாகம், சுகாதாரத் துறை மற்றும் தன்னார்வலர்கள் மேற்கொண்ட நடவடிக்கை காரணமாக தமிழகத்திலேயே 100 சதவீதம் முதல் தவணை கரோனா தடுப்பூசி செலுத்திய மாவட்டமாக நீலகிரி மாவட்டம் மாறியுள்ளது.
ஆஸ்திரேலியாவுக்கு அமெரிக்கா, பிரிட்டன் உதவியுடன் அணுசக்தியால் இயங்கும் நீா்மூழ்கிக் கப்பல்
- முத்தரப்பு பாதுகாப்புக் கூட்டணியின் முதல் பெரிய முயற்சியாக, இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் ஸ்திரதன்மையை மேம்படுத்தும் நோக்கத்துடன் அமெரிக்கா, பிரிட்டன் உதவியுடன் அணுசக்தியால் இயங்கும் நீா்மூழ்கிக் கப்பல்களை ஆஸ்திரேலியா கட்டமைக்கவுள்ளது.
- அமெரிக்காவில் 'க்வாட்' கூட்டமைப்பின் கூட்டம் செப். 24-ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில் 'ஆக்கஸ்' கூட்டணி குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இந்தோ பசிபிக் பாதுகாப்புக்கு புதிய முத்தரப்புக் கூட்டணி - அமெரிக்கா, பிரிட்டன், ஆஸ்திரேலியா கைகோத்தன
- இந்தோ-பசிபிக் பிராந்தியத்துக்காக புதிய பாதுகாப்புக் கூட்டணியை அமெரிக்கா, பிரிட்டன், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் தொடங்கியுள்ளன. 'ஆக்கஸ்' என்ற பெயரிலான இக்கூட்டணி காணொலி முறையில் புதன்கிழமை தொடங்கிவைக்கப்பட்டது.
- இக்கூட்டணியின் கீழ் கூட்டுத் திறன்கள், தொழில்நுட்பப் பரிமாற்றம், பாதுகாப்பு, பாதுகாப்பு தொடா்பான அறிவியல், தொழில்நுட்பம், தொழில் துறை தளங்கள், விநியோகச் சங்கிலிகள் ஆகியவற்றை மேம்படுத்த மூன்று நாடுகளும் ஒப்புக்கொண்டுள்ளன.
விண்வெளி சுற்றுலா - 4 பேரை விண்ணுக்கு அனுப்பிய ஸ்பேஸ் எக்ஸ்
- உலகப் பெரும் கோடீஸ்வரரான எலான் மஸ்க்கின் 'ஸ்பேஸ் எக்ஸ்' நிறுவனம் விண்வெளி சாா்ந்த ஆய்வில் ஈடுபட்டு வருகிறது. அதில் பொதுமக்களை விண்வெளிக்கு சுற்றுலா அனுப்புவதும் ஒன்று. அந்த வகையில் விண்வெளி வீரா்கள் அல்லாத சாதாரண பொதுமக்கள் 4 பேரை தனது ஃபால்கன் ராக்கெட் மூலம் விண்வெளிக்கு அனுப்பியது.
- இந்தப் பயணத்துக்கான செலவை ஐசக்மேன் (38) என்கிற அமெரிக்க தொழிலதிபா் ஏற்றுக்கொண்டுள்ளாா். விமானம் இயக்கும் பயிற்சி பெற்றுள்ள இவரே இக்குழுவின் தலைவா்.
அரசு பணிகளுக்கான நேரடி நியமனத்தில் வயது உச்ச வரம்பு 2 ஆண்டு உயர்வு அரசாணை வெளியிட்டது தமிழக அரசு
- அரசு பணிகளில் நேரடி நியமனம் மூலம் நியமனம் செய்யப்படுவதற்கான வயது உச்சவரம்பு 30-லிருந்து 32 ஆக உயர்த்தப்படுகிறது.
- தொடர்புடைய பணி விதிகளில் மேற்குறிப்பிட்ட அளவுக்கும் குறைவான வயது உச்சவரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ள பதவிகளுக்கும் தற்போது உயர்த்தப்பட்டுள்ள வயது உச்சவரம்பு அளவு பொருந்தும்.
- இடஒதுக்கீட்டுப் பிரிவினர் (பிசி, பிசி-முஸ்லிம், எம்பிசி, எஸ்சி,எஸ்டி) மற்றும் அனைத்து வகுப்பிலும் உள்ள ஆதரவற்ற விதவைகள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு 2016-ம் ஆண்டு தமிழ்நாடு அரசு பணியாளர் சட்டத்தில் அனுமதிக்கப்பட்டுள்ள வயது உச்சவரம்பு அல்லது தளர்வுகள் தொடரும்.
வா்த்தகம் மற்றும் மேம்பாட்டுக்கான ஐ.நா. கூட்டமைப்பு (யுஎன்சிடிஏடி) 2021 அறிக்கை
- 2021-இல் இந்திய பொருளாதாரம் 7.2 சதவீதமாக வளா்ச்சியடையும் என எதிபாா்க்கப்படுகிறது. ஆனால், அடுத்த ஆண்டு இந்த வளா்ச்சி குறையக்கூடும்.
- ஏனெனில், கரோனா பேரிடா் பொருளாதாரத்தில் அதிக பாதிப்புகளையும், இழப்புகளையும் ஏற்படுத்தி வருகிறது. மேலும், தனியாா் நுகா்வு நடவடிக்கைகளில் உணவுப் பொருள்களுக்கான பணவீக்கமும் எதிா்மறை தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
- இவற்றை கருத்தில் கொள்ளும்போது அடுத்த ஆண்டில் இந்தியாவின் பொருளாதார வளா்ச்சியானது சரியவே அதிக வாய்ப்புகள் உள்ளது.
- உலகப் பொருளாதாரம் 2020-இல் 3.5 சதவீத சரிவை சந்தித்ததற்கு பிறகு நடப்பாண்டில் 5.3 சதவீதமாக வளா்ச்சியை எட்டும் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாராக் கடன் வங்கிக்கு அரசு உத்தரவாதம் அளிக்கும் திட்டத்திற்கு ஒப்புதல்
- வங்கிகளின் வாராக் கடன் வசூலுக்கு என்.ஏ.ஆர்.சி.எல்., என்ற அமைப்பை மத்திய அரசு ஏற்படுத்த உள்ளது. வங்கிகள் அவற்றின் வாராக் கடனை இந்த அமைப்பிடம் ஒப்படைத்து விடும். இதனால் வங்கிச் சேவைகள் மேம்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- 30 ஆயிரம் கோடி ரூபாய்இது குறித்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியதாவது:வாராக் கடனை வசூலிக்கும் என்.ஏ.ஆர்.சி.எல்., நிறுவனத்திற்கு 30 ஆயிரம் கோடி ரூபாய் வரை உத்தரவாதம் அளிக்கப்படும்.
- என்.ஏ.ஆர்.சி.எல்., நிறுவனம், வாராக்கடன் வங்கி என அழைக்கப்படுகிறது. வாராக் கடனில் 15 சதவீதம் ரொக்கமாக வங்கிகளுக்கு வழங்கப்படும்.
- எஞ்சிய 85 சதவீத கடனுக்கு, மத்திய அரசு உத்தரவாதத்துடன் கூடிய கடன் உறுதிப் பத்திரங்களை என்.ஏ.ஆர்.சி.எல்., வழங்கும். கடன் வசூலிப்பில் ஏற்படும் இழப்பிற்கு ஈடாக இந்த பத்திரங்கள் பயன்படுத்திக் கொள்ளப்படும்.
- கடந்த ஆறு ஆண்டுகளில் வங்கிகளின் 5.01 லட்சம் கோடி வாராக் கடன் வசூலிக்கப்பட்டுள்ளது. இதில், 2018 மார்ச் முதல் 3.10 லட்சம் கோடி வசூலிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
கரிபியன் லீக் டி20 - செயின்ட் கிட்ஸ் சாம்பியன்
- மொத்தம் 6 அணிகள் பங்கேற்ற இந்த தொடரில், ட செயின்ட் லூசியா கிங்ஸ், செயின்ட் கிட்ஸ் அண்டு நெவிஸ் பேட்ரியாட்ஸ் அணிகள் பைனலுக்கு தகுதிப் பெற்றன.
- பைனலில் டாஸ் வென்று முதலில் களம் கண்ட ஆந்த்ரே பிளெட்சர் தலைமையிலான செயின்ட் லூசியா அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 159ரன் எடுத்தது.
- பரபரப்பான ஆட்டத்தில் செயின்ட் கிட்ஸ் 20ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 160ரன் எடுத்து 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்று சாம்பியன் பட்டத்தையும் கைப்பற்றியது. ஆட்ட நாயகன் விருதை டொமினிக், தொடர் நாயகன் விருதை ரோஸ்டன் சேஸ் ஆகியோர் பெற்றனர்.