Type Here to Get Search Results !

TNPSC 15th SEPTEMBER 2021 CURRENT AFFAIRS TNPSC SHOUTERS TAMIL PDF

 

ரஷியாவில் ‘எஸ்சிஓ' நாடுகளின் கூட்டு ராணுவப் பயிற்சி - இந்தியா பங்கேற்பு
  • பயங்கரவாதத்துக்கு எதிரான கூட்டு ராணுவத்தாக்குதல் பயிற்சி ஷாங்காய் ஒத்துழைப்பு நாடுகளிடையே இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெற்று வருகிறது. 
  • இதன் 6-ஆவது கட்டப் பயிற்சி செப்டம்பர் 13 முதல் 25-ஆம் தேதி வரை ரஷியாவின் ஆரன்பெர்க் பகுதியில் நடைபெறுகிறது. ஷாங்காய் ஒத்துழைப்பு கூட்டமைப்பின் உறுப்பு நாடுகள் இடையேயான உறவை மேம்படுத்துவதும், பல்வேறு நாடுகளின் ராணுவ வீரர்ளுக்குத் தலைமை தாங்கும் வகையில் ராணுவ தளபதிகளின் செயல்திறனை வலுப்படுத்துவதும் இந்தப் பயிற்சியின் நோக்கமாகும்.
  • இந்தியாவின் சார்பில் 38 இந்திய விமானப் படை வீரர்கள் உள்பட 200 ராணுவ வீரர்கள் இந்தப் பயிற்சியில் இடம்பெற்றுள்ளனர் என்று இந்திய ராணுவம் தெரி வித்துள்ளது.
  • ஷாங்காய் ஒத்துழைப்பு கூட்டமைப்பு நாடுகளின் ஆயுதப் படைகள் இடையே சிறந்த பயிற்சி முறைகளை பரிமாறிக்கொள்ள இந்தப் பயிற்சி ஏதுவாக இருக்கும்.
  • 2001-இல் உருவாக்கப்பட்ட ஷாங்காய் ஒத்துழைப்பு கூட்டமைப்பில் (எஸ்சிஓ) ரஷியா, சீனா, கிர்கிஸ்தான், கஜகஸ்தான், தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான் ஆகிய நாடுகள் முதலில் இடம்  பெற்றிருந்தன. 2017-இல் இந்தியா, பாகிஸ்தானும் நிரந்தர உறுப்பினர்களாக இணைந்தன.
கார்பன்டை ஆக்ஸைடு வெளியேற்றத்தை குறைக்க இந்தியாவின் அணு மின் உற்பத்தி10 ஆண்டில் 3 மடங்கு அதிகரிக்கும் - மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங்
  • இந்தியாவில் இப்போது அணு மின் நிலையங்களில் இருந்து 6,780 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. மேலும் கூடுதலாக அணு மின் நிலையங்கள் நிறுவப்பட்டு வருகின்றன. 
  • இதன் மூலம் அடுத்த 10 ஆண்டுகளில் அணு மின் உற்பத்தி இப்போதைய அளவைப் போல 3 மடங்குக்கு மேல் (22,480 மெகாவாட்) அதிகரிக்கும். கார்பன்டை ஆக்ஸைடு வெளியேற்றத்தைக் குறைக்க இது பேருதவியாக இருக்கும்.
  • பாரிஸ் ஒப்பந்தத்தின்படி, இந்தியாவின் மரபுசாரா எரிசக்தி உற்பத்தி படிப்படியாக அதிகரிக்க இது உதவிகரமாக இருக்கும். 2030-க்குள் நாட்டின் ஒட்டுமொத்த மின் உற்பத்தியில் மரபுசாரா எரிசக்தி உற்பத்தித் திறனை 40 சதவீதமாக உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் இப்போதே 39 சதவீத அளவு எட்டப்பட்டுள்ளது.
'ப்ளாரன்ஸ் நைட்டிங்கேல்' விருது 2021
  • நாடு முழுவதும் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிறப்பாகப் பணியாற்றும் செவிலியர்களை கவுரவிக்கும் வகையில் ஆண்டுதோறும் ஃபிளாரன்ஸ் நைட்டிங்கேல் விருதை மத்திய சுகாதாரத் துறை வழங்கி வருகிறது.
  • அதன்படி, 2020-ம் ஆண்டுக் கான விருது தமிழகத்தில் 3 பேர்உட்பட 51 செவிலியர்களுக்கு அறிவிக்கப்பட்டது. சென்னை கே.கே.நகர் அரசு புறநகர் மருத்துவமனையில் பணியாற்றும் செவிலியர் ஒ.வி.உஷா, 1,000-க்கும்மேற்பட்ட பிரசவங்கள் பார்த்துள் ளார். மேலும், சுகாதார திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தியதற்காக விருதுக்கு தேர்வு செய்யப்பட்டார்.
  • இதேபோல, எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனை செவிலியர் ஜி.மணிமேகலை, விழுப்புரம் மாவட்டம் சிறுவந்தாடு ஆரம்ப சுகாதார நிலைய செவிலியர் எஸ்.வேளாங்கன்னி ஆகியோரும் இந்த விருதுக்கு தேர்வு செய்யப்பட்டனர்.
  • `கை விளக்கேந்திய காரிகை' என்று முழுவதும் போற்றப்படும் ஃப்ளாரன்ஸ் நைட்டிங்கேல் அம்மையார், செவிலியர் சேவையின் முன்னோடி. இவர் பிறந்த நாளான மே 12-ம் தேதி சர்வதேச செவிலியர் தினமாகக் கொண்டாடப்படுகிறது. 
  • இவரது 200-வதுபிறந்த நாளைக் கொண்டாடும் வகையில் 2020-ம் ஆண்டை உலக செவிலியர் ஆண்டாக, உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
பாராலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்ற மாரியப்பனுக்கு 'மை ஸ்டாம்ப்' வெளியீடு
  • சேலம் மாவட்டம், ஓமலூா் அருகே உள்ள பெரிய வடகம்பட்டியைச் சோந்த மாரியப்பன் அண்மையில் டோக்கியோவில் நடைபெற்ற பாராலிம்பிக் போட்டியில் உயரம் தாண்டுதல் பிரிவில் இரண்டாவது முறையாக பதக்கம் வென்று இந்தியாவுக்கு பெருமை சோத்தாா்.
  • இந்நிலையில் சேலம் மாவட்டம், ஓமலூரை அடுத்த பெரிய வடகம்பட்டியில் மாரியப்பன் இல்லத்தில் மாரியப்பனுக்கு 'மை ஸ்டாம்ப்' வெளியிடப்பட்டது. 
ஏஜிஆர் நிலுவைத் தொகைக்கு கால அவகாசம், தொலைத்தொடர்புத் துறையில் 100% அன்னிய முதலீடு - மத்திய அமைச்சரவை ஒப்புதல்
  • பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை புதன்கிழமை கடுமையாக போராடி வரும் தொலைத்தொடர்புத் துறைக்கு நிவாரணத் தொகுப்பின் ஒரு பகுதியாக தொலைத்தொடர்பு நிறுவனங்களால் ஸ்பெக்ட்ரத்திற்கு செலுத்த வேண்டிய கட்டணத்திற்கு, நான்கு வருட கால அவகாசத்திற்கு ஒப்புதல் அளித்தது என்று தொலைத்தொடர்பு அமைச்சர் அஷ்வினி வைஷ்னா அறிவித்தார்.
  • மேலும், இந்தத் துறையில் 100 சதவீத அன்னிய நேரடி முதலீட்டை (FDI) அனுமதிக்க அரசு முடிவு செய்துள்ளது என்றும் கூறினார்.
  • இந்த நடவடிக்கை, தற்போது வரை ஆயிரக்கணக்கான கோடிக்கு மேல் நிலுவைத் தொகைகளைக் கொண்டுள்ள தொலைத்தொடர்பு நிறுவனங்களான வோடபோன் ஐடியா மற்றும் பாரதி ஏர்டெல் ஆகியவற்றுக்கு நிவாரணம் வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. 
  • தொலைத்தொடர்புத் துறைக்காக எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து பேசிய அமைச்சர் அஷ்வினி வைஷ்னா, சரிசெய்யப்பட்ட மொத்த வருவாயின் (ஏஜிஆர்) வரையறையை பகுத்தறிவு செய்ய அரசு முடிவு செய்ததாக கூறினார். ஏஜிஆரின் கீழ் தொலைத்தொடர்பு அல்லாத வருவாய் நீக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
'சன்சத்' டி.வி துவக்கி வைத்தார் பிரதமர் மோடி
  • பார்லிமென்ட் ஒளிபரப்புக்காக சன்சத் என்ற புதிய தொலைக்காட்சியை செப்.15 பிரதமர் மோடி துவக்கி வைத்தார்.பார்லி.லோக்சபா டி.வி.யையும், ராஜ்யசபா டி.வி.யையும் இணைத்து ' சன்சத்' டி.வி., என்ற பெயரில் துவக்க கடந்த சில மாதங்களுக்கு முன் முடிவு எடுக்கப்பட்டது.
  • இதில் பார்லிமென்ட் நடவடிக்கைகள் மற்றும் ஜனநாயக அமைப்புகள், ஆளுகை மற்றும் திட்டங்கள் , இந்தியா வரலாறு, கலாச்சாரம் மற்றும் சம காலத்திற்கு உரிய விஷயங்கள் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் குறித்தும், நான்கு பிரிவுகளில் நிகழ்ச்சிகள் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டது.
ஆட்டோ துறைக்கான உற்பத்தியை அதிகரிக்க 26,000 கோடி ஒதுக்கீடு
  • இந்தியாவின் ஆட்டோ, ஆட்டோ உதிரிபாகங்கள் உற்பத்தித் திறனை மேம்படுத்த மற்றும் ட்ரோன் துறைக்காக ரூ .26,058 கோடி ரூபாயை உற்பத்தி இணைக்கப்பட்ட ஊக்கத் திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை புதன்கிழமை ஒப்புதல் அளித்துள்ளதாக என்று மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் தெரிவித்துள்ளார்.
  • பிஎல்ஐ திட்டம் இந்தியாவில் மேம்பட்ட வாகன தொழில்நுட்பங்களின் உலகளாவிய விநியோகச் சங்கிலியை ஊக்குவிக்கும். இது 7.6 லட்சத்துக்கும் அதிகமான மக்களுக்கான கூடுதல் வேலைவாய்ப்பை உருவாக்க உதவும்.
  • மேலும்,பிஎல்ஐ திட்டம் ஐந்து ஆண்டுகளில் ரூ. 42,500 கோடிக்கு மேல் புதிய முதலீடுகளையும், ரூ .2.3 லட்சம் கோடிக்கு மேலான உற்பத்தியையும் அதிகரிக்கும், என்றார்.
  • 1.97 லட்சம் கோடி ரூபாய் செலவில் ஆட்டோமொபல் மற்றும் ட்ரோன் தொழில்களுக்கான பிஎல்ஐ திட்டம், 2021-22 பட்ஜெட்டின் போது 13 துறைகளுக்கான பிஎல்ஐ திட்டங்களின் ஒட்டுமொத்த அறிவிப்பின் ஒரு பகுதியாகும்.
  • ஆட்டோமொபைல் துறைக்கான இந்த திட்டம் தற்போதுள்ள வணிகங்கள் மற்றும் தற்போது வாகன வணிகத்தில் இல்லாத புதிய முதலீட்டாளர்களுக்கு திறந்திருக்கும். இது இரண்டு கூறுகளைக் கொண்டுள்ளது. ஒன்று சாம்பியன் OEM ஊக்கத் திட்டம் மற்றொன்று கூறு (காம்போனெண்ட்) சாம்பியன் ஊக்கத் திட்டம்.
  • சாம்பியன் ஓஇஎம் ஊக்கத் திட்டம் ஒரு 'விற்பனை மதிப்பு இணைக்கப்பட்ட' திட்டமாகும், இது பேட்டரி மின்சார வாகனங்கள் மற்றும் ஹைட்ரஜன் எரிபொருள் செல் வாகனங்களின் அனைத்து பிரிவுகளுக்கும் பொருந்தும் என்று அமைச்சர் தாக்கூர் கூறினார்.
  • காம்போனென்ட் சாம்பியன் இன்சென்டிவ் திட்டம் என்பது ஒரு 'விற்பனை மதிப்பு இணைக்கப்பட்ட' திட்டமாகும், முழுமையாக நாக் டவுன் (சி.கே.டி)/ அரை நாக் டவுன் (SKD) கிட்கள், 2 சக்கர வாகனங்கள், 3 சக்கரங்கள், பயணிகள் வாகனங்கள், வணிக வாகனங்கள் மற்றும் டிராக்டர்கள் போன்ற வாகனங்களின் மேம்பட்ட ஆட்டோமோட்டிவ் தொழில்நுட்பக் கூறுகளுக்கானது.
  • ட்ரோன்கள் மற்றும் ட்ரோன் பாகங்கள் தொழிலுக்கான PLI திட்டம் இந்த புரட்சிகர தொழில்நுட்பத்தின் வியூகங்கள், தந்திரங்கள் மற்றும் செயல்பாட்டு பயன்பாடுகளைக் குறிக்கிறது.
  • ட்ரோன்களுக்கான தயாரிப்பு சார்ந்த PLI திட்டம் ஆனது தெளிவான வருவாய் இலக்குகள் மற்றும் உள்நாட்டு மதிப்பு கூட்டலில் கவனம் செலுத்தும். மேலும், திறனை வளர்ப்பதற்கும் இந்தியாவின் வளர்ச்சி வியூகத்தின் முக்கிய உந்துசக்திகளை உருவாக்குவதற்கும் இந்த திட்டம் முக்கியமாகும்.
  • இந்த திட்டம் மூன்று வருட காலப்பகுதியில், 5,000 கோடி ரூபாய் முதலீடுகள், 1,500 கோடி ரூபாய் தகுதிவாய்ந்த விற்பனை அதிகரிப்பு மற்றும் சுமார் 10,000 வேலை வாய்ப்புகளை உருவாக்கும்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel