நீட் விலக்கு மசோதா
- நீட் தேர்வின் பாதிப்பு குறித்து ஆராய, தமிழக அரசால் அமைக்கப்பெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையிலான குழுவினர் ஆய்வு செய்து அறிக்கையை தாக்கல் செய்தனர். இந்த அறிக்கை அடிப்படையில் சட்டப்பேரவையில் நீட் விலக்கு மசோதாவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தாக்கல் செய்தார்.
- இந்த மசோதாவுக்கு ஆதரவு தெரிவித்து பேசிய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் நன்றி கூறினார்.
- இதையடுத்து, தமிழக சட்டப்பேரவையில் நீட் விலக்கு மசோதா நிறைவேற்றப்பட்டது. பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் மருத்துவ மாணவர் சேர்க்கையை நடத்தும் வகையில் சட்ட மசோதா நிறைவேறியது.
போட்டித் தேர்வுகளில் தமிழ் மொழி பாடத்தாள் கட்டாயம் - அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன்
- தமிழக அரசுத் துறைகளில் உள்ள பணியிடங்கள் மற்றும் மாநில பொதுத்துறை நிறுவனங்களில் உள்ள பணி இடங்கள் அனைத்திலும் தமிழக இளைஞர்களை 100 சதவீதம் நியமிப்பதற்காக அனைத்து போட்டித் தேர்வுகளிலும் தமிழ் மொழி பாட தகுதித் தேர்வு கட்டாயமாக்கப்படும் என்று தெரிவித்தார்.
- அரசுப் பணியிடங்களில், கொரோனா தொற்றால் பெற்றோர் இருவரையும் இழந்த இளைஞர்கள், முதல் தலைமுறை பட்டதாரிகள், அரசு பள்ளிகளில் தமிழ் மொழியில் பயின்ற நபர்கள் ஆகியோருக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
- கொரோனா பரவல் காரணமாக, பணியாளர் தேர்வு முகமைகளால் நடத்தப்படும் அரசு பணிகளுக்கான போட்டித்தேர்வுகள் தாமதமானதால், நேரடி நியமன வயது உச்சவரம்பு இரண்டு ஆண்டுகளாக உயர்த்தப்படும் என்று அமைச்சர் தெரிவித்தார்.
- அரசுப் பணி நியமனங்களில் பெண்களுக்கான ஒதுக்கீடு 30 சதவீதத்திலிருந்து 40 சதவீதமாக உயர்த்தப்படும் என்றும் அவர் கூறினார்.
1500 கி.மீ தூரம் வரை இலக்குகளை தாக்கும் - வட கொரியாவின் ஏவுகணை சோதனை வெற்றி
- நீண்ட தூரம் பயணித்து இலக்குகளை தாக்கக்கூடிய ஏவுகணை சோதனையில் வெற்றி கண்டுள்ளது வட கொரியா. தகவல்களின்படி இலக்குகளை தாக்குவதற்கு முன்னதாக 1500 கிலோ மீட்டர் தூரம் வரை இந்த ஏவுகணை பயணிக்கும் என சொல்லப்பட்டுள்ளது.
- வட கொரியாவுக்கு அண்டை நாடான ஜப்பானின் பெரும் பகுதி நிலத்தை இந்த ஏவுகணை தாக்கும் வல்லமை உள்ளதாகவும் சொல்லப்பட்டுள்ளது.
ஐசிசியின் ஆகஸ்ட் மாதத்துக்கான சிறந்த வீரராக ஜோ ரூட் தேர்வு
- மாதத்தின் சிறந்த வீரா்/வீராங்கனை என்கிற பெயரில் புதிய விருதை அறிமுகம் செய்துள்ளது ஐசிசி. சா்வதேச கிரிக்கெட்டில் அனைத்து வகை போட்டிகளிலும் சிறப்பாகச் செயல்படும் வீரா், வீராங்கனைகளை ஆண்டு முழுவதுமாக அங்கீகரிக்கும் வகையில் இந்த விருது வழங்கப்படவுள்ளதாக ஐசிசி தெரிவித்துள்ளது.
- ஆகஸ்ட் மாதத்தின் சிறந்த வீரர், வீராங்கனைக்கான பரிந்துரைப் பட்டியலை ஐசிசி வெளியிட்டது. மகளிர் பிரிவில் கேபி லூயிஸ், எமியர் ரிச்சர்ட்சன், நடாயா ஆகியோரும் ஆடவர் பிரிவில் ஜோ ரூட், பும்ரா, ஷாஹீன் அப்ரிடி ஆகியோரும் பரிந்துரைக்கப்பட்டார்கள்.
- இந்நிலையில் இங்கிலாந்தின் ஜோர் ரூட் சிறந்த வீரராகவும் அயர்லாந்து ஆல்ரவுண்டர் எமியர் சிறந்த வீராங்கனையாகவும் தேர்வாகியுள்ளார்கள்.
- இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் 64, 109, 180*, 33, 121, 21, 36 என அற்புதமாக விளையாடினார் ஜோ ரூட். அதனால் ஆகஸ்ட் மாதத்துக்கான சிறந்த வீரராக அவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.