அமெரிக்க ஓபன் பட்டம் வென்றார் ரஷ்யாவின் டேனில் மெட்வடேவ்
- அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியின் ஆடவர் ஒற்றையர் இறுதி ஆட்டத்தில் ரஷ்யா வின் டேனில் மெட்வடேவ் மற்றும் உலகின் நம்பர் ஒன் வீரர் செர்பியாவைச் சேர்ந்த நோவக் ஜோகோவிச் மோதினர்.
- இந்த போட்டியில் தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடிய மெட்வடேவ், 6-4, 6-4, 6-4 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று ஜோகோவிச்சை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.
- இது அவருக்கு முதல் கிராண்ட்ஸ்லாம் பட்டம். கடந்த 2005ம் ஆண்டுக்கு பின்பு கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்ற ரஷ்யர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார்.
தமிழ்நாட்டில் ஒரே நாளில் 25 லட்சம் தடுப்பூசி செலுத்தி சாதனை - முதலமைச்சர்
- தமிழ்நாட்டில் ஒரே நாளில் 25 லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டிருப்பது இந்திய சாதனை என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
குஜராத் புதிய முதல்வர் பூபேந்திர படேல்
- கடந்த 2016 முதல் அந்த கட்சியின் மூத்த தலைவர் விஜய் ருபானி மாநில முதல்வராக பதவி வகித்து வந்தார். அடுத்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அவர் பதவியை ராஜினாமா செய்தார்.
- இந்நிலையில் பாஜக எம்எல் ஏக்களின் கூட்டம் காந்திநகரில் நேற்று நடைபெற்றது. இதில் பாஜக மேலிட பொறுப்பாளர் நரேந்திர சிங் தோமர், முதல்வர் பதவிக்கு பூபேந்திர படேலின் பெயரைமுன்மொழிந்தார்.
- பதவி விலகிய விஜய் ருபானி, துணை முதல்வர் நிதின் படேல் உட்பட அனைத்து எம்எல்ஏக்களும் அவருக்கு ஆதரவு அளித்தனர். இதைத் தொடர்ந்து புதிய முதல்வராக பூபேந்திர படேல் தேர்வு செய்யப்பட்டார்.
விஐடி பல்கலைக்கு அகில இந்திய விஸ்வகர்மா விருது
- அகில இந்திய தொழில் நுட்ப கல்வி இயக்ககம் சார்பில் சிறந்த கண்டுபிடிப்பாளர்களுக்கான போட்டிகள் இன்டெல்லி சென்ஸ் என்ற பெயரில் தில்லியில் நடைபெற்றன.
- அவர்கள் பார்வைத்திறன் குறைபாடு உள்ளவர்களுக்கு செயற்கை நுண்ணறிவு முறையில் சிறப்பான தீர்வு என்ற தலைப்பில் ஆய்வுக்கட்டுரையும், தங்களின் கண்டு பிடிப்பையும் காட்சிப்படுத்தினர்.
- இந்த கண்டுபிடிப்புக்கு விஸ்வகர்மா விருது 2020 வழங்கப்பட்டது. மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு போட்டிகளில் வென்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.