Type Here to Get Search Results !

TNPSC 11th SEPTEMBER 2021 CURRENT AFFAIRS TNPSC SHOUTERS TAMIL PDF

 

2,500 கோடி முதலீட்டில் தகவல் தரவு மையம் - முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்

  • முதல்வர் மு.க. ஸ்டாலின் சென்னை, முகாம் அலுவலகத்தில் இருந்து அம்பத்தூரில் 2,500 கோடி மதிப்பீட்டில் அமையவுள்ள என்டிடி க்ளோபல் டேட்டா சென்டர்ஸ் அன்ட் குளோட் இன்பிராஸ்டெக்சர் நிறுவனத்தின் தகவல் தரவு மையத்திற்கு வீடியோ கான்பரன்சிங் வாயிலாக அடிக்கல் நாட்டினார். 
  • இந்த தகவல் தரவு மையம் 5.89 ஏக்கர் பரப்பளவில், 8.25 லட்சம் சதுர அடியில் அமைக்கப்பட உள்ளது. என்டிடி க்ளோபல் டேட்டா சென்டர்ஸ் அன்ட் குளோட் இன்பிராஸ்டெக்சர் நிறுவனம் ஜப்பான் நாட்டினை தலைமையகமாக கொண்டு, 20க்கும் மேற்பட்ட நாடுகளில், 160 தகவல் தரவு மையங்களை நிறுவியுள்ளது. 
  • இந்நிறுவனம், தகவல் தரவு மையங்கள் அமைத்து செயல்படுத்துவதில் உலகளவில் ஒரு முன்னணி நிறுவனமாகும். இந்நிறுவனம் 2,500 கோடி முதலீடு செய்து, 700 பேருக்கு வேலைவாய்ப்பினை ஏற்படுத்தும் வகையில் தகவல் தரவு மையம் மற்றும் கேபிள் இறங்கு தளங்கள் அமைத்திடும். இந்த திட்டத்தில் 50 மெகாவாட் சூரிய மின்சக்தி பூங்கா நிறுவும் திட்டமும் அடங்கும். 
கன்டெய்னர் முனையம் அமைக்க அரபு நிறுவனத்துடன் ரூ.2,000 கோடி ஒப்பந்தம் - முதல்வர் அடிக்கல் நாட்டினார்
  • ஐக்கிய அரபு அமீரக நாடுகளைச் சேர்ந்த டிபி வேர்ல்டு குழுமம், தூத்துக்குடி, திருவள்ளூர், ஸ்ரீபெரும்புதூர், சேலம், ஈரோடு மற்றும் கோவையில் ரூ.2,000 கோடியில் கன்டெய்னர் முனையம், சிறு துறைமுகம், குளிர்பதனக் கிடங்கு, பல்பொருள் கிடங்கு பூங்கா மற்றும் தகவல் தரவு மையம் ஆகியவற்றை நிறுவத் திட்டமிட்டு, முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தமிழக அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.
  • தமிழகத்தில் ஏற்கெனவே டிபி வேர்ல்டு குழுமம் ரூ.2,000 கோடி முதலீடு செய்து, 4,000 பேருக்கு வாய்ப்பு அளிக்கும் வகையில், சென்னை, திருவள்ளூர், தூத்துக்குடி மற்றும் ஸ்ரீபெரும்புதூரில் கன்டெய்னர் முனையங்கள், சரக்கு நிலையங்கள், சுங்கக் கிடங்குகள், குளிர்பதனக் கிடங்குகள், உள்நாட்டுக் கிடங்குகள் போன்ற உட்கட்டமைப்பு வசதிகளை நிறுவியுள்ளது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்க ஓபன் டென்னிஸ் பட்டம் வென்றார் பிரிட்டனின் எம்மா ராடுகானு
  • அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடந்த யு.எஸ் ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டியில் பிரிட்டனைச் சேர்ந்த எம்மா ராடுகானுவும் கனடாவின் லேலா பெர்ணான்ஸும் மோதினர்.
  • இதில் பிரிட்டன் வீராங்கனை எம்மா ராடுகானு கனடாவின் லேலா பெர்ணான்ட்ஸை 6-4, 6-3 என்ற நேர் செட் கணக்கில் தோற்கடித்து பட்டம் வென்றார்.
  • 1968 க்கு பிறகு 53 ஆண்டுகளில் அமெரிக்க ஓபன் பட்டம் வென்ற முதல் பிரிட்டன் வீராங்கனை என்ற பெருமையை பெற்றுள்ளார் எம்மா ராடுகானு. இவர் 44 ஆண்டுகளில் கிராண்ட்ஸ்லாம் பட்டமும் பெற்ற பெருமையை அடைந்துள்ளார்.
ரஷிய, ஆப்பிரிக்க சிகரங்களின் உச்சியை எட்டி சிஐஎஸ்எஃப் வீராங்கனை சாதனை
  • 'சிஐஎஸ்எஃப் வீராங்கனை கீதா சாமோத்தா கடந்த ஆகஸ்ட் 13-ஆம் தேதி ரஷியாவிலுள்ள எல்பிரஸ் சிகரத்தின் உச்சியை அடைந்தாா். அவா் ஆப்பிரிக்க கண்டத்தின் மிக உயா்ந்த சிகரமான கிளிமாஞ்சாரோ உச்சியை எட்டினாா். 
  • இதன் மூலம் இரண்டு சிகரங்களின் உச்சியை குறுகிய கால இடைவெளியில் எட்டிய இந்தியா் என்ற சாதனையை அவா் படைத்துள்ளாா்.
  • ரஷியாவிலுள்ள எல்பிரஸ் சிகரம் கடல் மட்டத்திலிருந்து 5,642 மீட்டா் உயரம் கொண்டது. கிழக்கு ஆப்பிரிக்க நாடான தான்சானியாவிலுள்ள கிளிமாஞ்சாரோ சிகரம் 5,895 மீட்டா் உயரம் கொண்டது.
தமிழ் பயிற்றுமொழி மாநாடு கவர்னர் தமிழிசை துவக்கி வைப்பு
  • தமிழ் பயிற்று மொழி மாநாடு, அக்கார்டு ஓட்டலில் நடந்தது. கவர்னர் தமிழிசை, மாநாட்டை துவக்கி வைத்தார். மாநாட்டில், தமிழ் ஆய்வியல் அறிஞர்களுக்கு விருது வழங்கப்பட்டது.
  • டில்லி வேளாண் அறிவியல் தமிழ் இயக்கம், தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம், கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக் கழகம், ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகம் இணைந்து இதற்கான ஏற்பாடுகளை செய்தன.
குஜராத் முதல்வா் விஜய் ரூபானி ராஜிநாமா
  • கடந்த 2016-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 7-ஆம் தேதிமுதல் குஜராத் முதல்வராக விஜய் ரூபானி பதவி வகித்து வந்தாா். இந்நிலையில், அவா் தனது பதவியை திடீரென ராஜிநாமா செய்துள்ளாா். தனது ராஜிநாமா கடிதத்தை மாநில ஆளுநா் ஆச்சாா்ய தேவ்ரத்தைச் சந்தித்து அவா் வழங்கினாா். 
நூற்றாண்டு நினைவு நாளில் கவுரவம், பனாரஸ் பல்கலைக் கழகத்தில் பாரதி பெயரில் தமிழ் இருக்கை - பிரதமர் மோடி அறிவிப்பு
  • குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் மாணவர்கள் பயிற்சி மையம் திறப்பு விழா மற்றும் மாணவிகள் விடுதிக்கான பூமி பூஜை ஆகியவற்றில் பிரதமர் மோடி வீடியோ கான்பரன்ஸ் மூலம் பங்கேற்றார். நிகழ்ச்சியில் பேசிய அவர் பாரதியாரின் நூற்றாண்டு நினைவுகளை நினைவுகூர்ந்தார்.
  • அப்போது பிரதமர் மோடி, ''இன்று இந்தியாவின் மிகச்சிறந்த அறிஞர், தத்துவஞானி, சுதந்திர போராட்ட வீரர் சுப்பிரமணிய பாரதியின் நூற்றாண்டு நினைவுநாள். 'ஒரே பாரதம் அகண்ட பாரதம்' என்ற கண்ணோட்டத்துடன் பிரகாசமான, தெய்வீகமான தமிழ்ப் பாடல்களை எழுதியவர். 
  • அவருக்கு மரியாதை செலுத்தும் விதத்தில், உத்தரப் பிரதேசத்தின் காசி பனாராஸ் இந்து பல்கலைக் கழகத்தில் சுப்பிரமணிய பாரதி பெயரில் தமிழ் இருக்கை உருவாக்கப்படும். தமிழ் படிக்கவும், தமிழ் ஆய்வு மாணவர்களுக்கும் பாரதி தமிழ் ஆய்வு இருக்கை பயன்படும்'' என்று கூறினார். பிரதமரின் இந்த அறிவிப்பின் மூலம் இனி வட இந்தியாவிலும் தமிழ் தொடர்பான ஆய்வுகளை நடத்த முடியும்.
காற்று மாசுவை கட்டுப்படுத்த தமிழகத்துக்கு 181 கோடி - ஒன்றிய அரசு ஒதுக்கீடு
  • 'தூய்மை காற்று திட்டத்தின் கீழ் தமிழகத்தில் சென்னை, திருச்சி, மதுரை உள்ளிட்ட மொத்தம் 42 நகரங்களில் காற்று மாசுவை கட்டுப்படுத்தும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. 
  • இதற்காக முதல் கட்டமாக ரூ.181 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம், அடுத்த 3 ஆண்டுகளில், 30 சதவீத காற்று மாசுவை கட்டுப்படுத்த முடியும்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel