சாய்ராம் பொறியியல் கல்லுாரிக்கு 'க்ளீன் அண்டு ஸ்மார்ட் கேம்பஸ்' விருது
- விருதுக்கான போட்டியில், நாடு முழுதும் உள்ள, 2,000 கல்வி நிறுவனங்கள் பதிவு செய்தன. இதில், சென்னை, மேற்கு தாம்பரத்தில் உள்ள சாய்ராம் பொறியியல் கல்லுாரிக்கு, அகில இந்திய பொறியியல் பிரிவில், இரண்டாம் இடத்திற்கான, 'க்ளீன் அண்டு ஸ்மார்ட் கேம்பஸ்- - 2020' விருது வழங்கப்பட்டது.
- எங்கள் கல்லுாரியில், தானியங்கி ஆய்வகம் உருவாக்கியது; சூரிய ஒளி மின்சாரத்தால், மின்சார நுகர்வை குறைத்தது; நீர்மேலாண்மை, மின்சார வாகனம் பயன்படுத்தியதற்காக, இவ்விருது வழங்கப்பட்டது.
- சமீபத்தில், டில்லியில் நடந்த விழாவில், மத்திய உயர்கல்வி துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானிடம் இருந்து, சாய்ராம் கல்வி குழும தலைவர் சாய்பிரகாஷ் லியோமுத்து மற்றும் முதன்மை தகவல் அதிகாரி நரேஷ் ராஜ் ஆகியோர் இவ்விருதை பெற்றனர்.
பாரதியாரின் நினைவு நாளான செப்.11 இனி ஆண்டுதோறும் மகாகவி நாள் - முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
- பாரதியார் நினைவை போற்றும் வகையில் அவர் மறைந்த நூற்றாண்டின் நினைவாக முக்கிய அறிவிப்புகளை வெளியிடுகிறேன்.
- பாரதியாரின் நினைவு நாளான செப்டம்பர் 11ம் நாள், அரசின் சார்பில் இனி ஆண்டுதோறும் 'மகாகவி நாளாக' கடைபிடிக்கப்படும். பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு மாநில அளவில் கவிதை போட்டி நடத்தி 'பாரதி இளங்கவிஞர் விருது' மாணவன் ஒருவருக்கும், மாணவி ஒருவருக்கும் தலா ரூ.1 லட்சம் பரிசுத் தொகை வழங்கப்படும்.
- பாரதியாரின் தேர்ந்தெடுக்கப்பட்ட பாடல்கள் மற்றும் கட்டுரைகளை தொகுத்து 'மனதில் உறுதி வேண்டும்' என்ற புத்தகமாக, அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்கள் சுமார் 37 லட்சம் பேருக்கு ரூ.10 கோடி செலவில் வழங்கப்படும்.
- பாரதியாரின் நூல்கள் மற்றும் அவரை பற்றிய ஆய்வு நூல்கள் அனைத்தையும் தொகுத்து, எட்டையபுரம் மற்றும் திருவல்லிக்கேணியில் உள்ள பாரதியார் நினைவு இல்லங்களிலும், சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்திலும், மதுரையில் அமைய உள்ள கலைஞர் நினைவு நூலகத்திலும் வைப்பதற்கு 'பாரதியியல்' என்ற தனிப்பிரிவு ஏற்படுத்தப்படும்.
- உலகத் தமிழ்ச் சங்கங்களை ஒருங்கிணைத்து பாரதி குறித்த நிகழ்வுகள் 'பாரெங்கும் பாரதி' என்ற தலைப்பில் நடத்தப்படும்.
- பெண் கல்வியையும், பெண்களிடம் துணிச்சலையும் வலியுறுத்திய மகாகவி பாரதியின் பெயர், ஊரக வளர்ச்சி துறையில் செயல்படுத்தப்படவுள்ள மகளிர் சுயஉதவிக் குழுக்கள் வாழ்வாதார பூங்காவிற்கு 'மகாகவி பாரதியார் வாழ்வாதார பூங்கா' என பெயர் சூட்டப்படும்.
புதிய எரிபொருள் துறையில் இந்தியா அமெரிக்கா கூட்டு
- டில்லியில், அமெரிக்க - இந்திய துாய்மை எரிசக்தி கூட்டுறவு திட்டத்தின் கூட்டம் நடைபெற்றது. இதில், பெட்ரோலியத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரி மற்றும் அமெரிக்க எரிசக்தி துறை அமைச்சர் ஜெனிபர் கிரான்ஹோம் ஆகியோர், 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக பங்கேற்றனர்.
- அமெரிக்க-இந்திய துாய்மை எரிசக்தி கூட்டுறவு திட்டத்தின் கீழ், மின்சாரம் மற்றும்எரிசக்தி, எண்ணெய் மற்றும் எரிவாயு, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மற்றும் ஸ்திரமான வளர்ச்சிக்கான செயல்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
- அடுத்து, இத்திட்டத்தில் சுற்றுச்சூழலை மாசுபடுத்தாத துாய்மையான எரிபொருள்களை கண்டுபிடிப்பதிலும் இந்தியா - அமெரிக்கா இணைந்து செயல்பட முடிவு செய்யப்பட்டு உள்ளது.
- ஐந்து அம்சங்கள்இதன் வாயிலாக, காற்று மாசற்ற, துாய்மையான புதிய எரிபொருள்களின் கண்டுபிடிப்பு, ஆய்வு, தயாரிப்பு ஆகியவற்றில் இரு நாடுகளும் பயன்பெறும்.
- இந்த ஐந்து அம்சங்கள் அடிப்படையில், உயிரிஎரிபொருள்கள் துறை பணிகளை கண்காணிக்க, கூட்டு செயல் திட்டக் குழு அமைக்கவும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டு உள்ளது.
- அத்துடன், இந்திய -அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பான பணிகள் குறித்தும் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. இந்தியா, 2030ல் 450 கிகாவாட் புதுப்பிக்க எரிசக்தி உற்பத்திக்கான இலக்கை நிர்ணயித்து, தீவிரமாக பணியாற்றி வருவதற்கு, ஜெனிபர் கிரான்ஹோம் பாராட்டு தெரிவித்தார்.
சர்வதேச கால்பந்து போட்டிகளில் மெஸ்சி புதிய சாதனை
- பியூனஸ் அயர்ஸ் நகரில் நடைபெற்ற உலகக்கோப்பை கால்பந்து தகுதிச்சுற்று போட்டியில் அர்ஜென்டினா மூன்றுக்கு பூஜ்யம் என்ற கோல்கள் கணக்கில் பொலிவியா அணியைத் தோற்கடித்தது.
- அர்ஜென்டினா அணிக்கான மூன்று கோல்களையும் கேப்டன் லயோனல் மெஸ்சியே அடித்து ரசிகர்களை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தினார். இவற்றையும் சேர்த்து சர்வதேசப் போட்டிகளில் அர்ஜென்டினாவுக்காக மெஸ்சி அடித்திருக்கும் கோல்களின் எண்ணிக்கை 79 ஆக அதிகரித்துள்ளது.
- இதன்மூலம் சர்வதேசப் போட்டிகளில் அதிக கோல்கள் அடித்த தென் அமெரிக்க வீரர் என்ற பெருமையும் மெஸ்சிக்கு கிடைத்துள்ளது. இதற்கு முன்னர் 77 கோல்கள் அடித்து பிரேசில் வீரர் பீலே படைத்திருந்த சாதனையை மெஸ்சி தற்போது முறியடித்துள்ளார்.
சர்வதேச நடுவர் நீதிமன்றத்தின் பிராந்திய இயக்குநராக இந்தியர் நியமனம்
- பிரான்ஸ் தலைநகரம் பாரிஸை தலைமையிடமாக கொண்டு இயங்கும் சர்வதேச நடுவர் நீதிமன்றத்தின் தெற்காசிய பிராந்திய இயக்குநராக வழக்கறிஞர் தேஜஸ் செளவுகான் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இப்பதவியை வகிக்க உள்ள இரண்டாவது இந்தியர் தேஜஸ் செளவுகான்.
- சர்வதேச நிறுவனங்களிடையே நிலவும் வணிக பிரச்னைகளுக்கு தீர்வு காணும் வகையில் கடந்த 1923ஆம் ஆண்டு, சர்வதேச நடுவர் நீதிமன்றம் தொடங்கப்பட்டது.