இந்தியாவுக்கு மல்யுத்தத்தில் ஒலிம்பிக் வெண்கல பதக்கம் வென்ற பஜ்ரங் புனியா
- 65 கிலோ எடைப் பிரிவில், வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் கஜகஸ்தான் வீரர் தவ்லத் நியாஸ்பெக்கோவை எதிர்கொண்டார் பஜ்ரங் புனியா.
- இறுதியில் 8-0 என்ற புள்ளி கணக்கில் வென்று நடப்பு ஒலிம்பிக் தொடரில், மல்யுத்தத்தில் இந்தியாவுக்கு 3-வது வெண்கலப் பதக்கத்தை வென்று தந்தார்.
நீரஜ் சோப்ரா - ஒலிம்பிக்கில் தங்கம் வென்று சாதனை
- ஜப்பான் நாட்டின் தலைநகர் டோக்கியோவில் ஒலிம்பிக்-2020 போட்டிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்று டோக்கியோ ஒலிம்பிக் ஈட்டி எறிதலில் இந்தியாவின் நீரஜ் சோப்ரா தங்க பதக்கம் வென்றார்.
- டோக்கியோ ஒலிம்பிக்கில் நீரஜ் சோப்ரா வெற்றி பெற்றதன் மூலம் இந்தியாவிற்கு முதல் தங்கப் பதக்கம் கிடைத்துள்ளது.
- ஒலிம்பிக் வரலாற்றில் தனி நபர் பிரிவில் இந்தியா வெல்லும் இரண்டாவது தங்கப் பதக்கம் இதுவாகும்.
- டோக்யோ ஒலிம்பிக் போட்டித் தொடரின் ஆடவர் ஈட்டி எறிதல் இறுதிச் சுற்றுப் போட்டியில் அசத்திய இந்திய வீரர் நீரஜ் சோப்ரா 87.58 மீட்டர் தூரத்துக்கு ஈட்டி வீசி இந்தியாவுக்காக முதல் தங்கப் பதக்கத்தை வென்று புதிய புதிய வரலாறு படைத்திருக்கிறார்.
தமிழகத்தில் முதல்முறையாக கொடைக்கானலில் 100% மக்களுக்கு தடுப்பூசி செலுத்தி சாதனை
- கொரோனா மூன்றாம் அலை பரவும் அபாயம் ஏற்பட்டுள்ள நிலையில் ஒட்டுமொத்த மக்களுக்கும் தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் ஏற்கனவே கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது.
- இதனால் தமிழகத்திலும் மக்கள் தடுப்பூசி செலுத்திக்கொள்ள முன்வந்துள்ளனர். அதன்படி கொடைக்கானல் நகராட்சியில் 100% மக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக திண்டுக்கல் ஆட்சியர் விசாகன் தெரிவித்துள்ளார். இது தமிழகத்திலே முதன்முறையாக நடந்துள்ள சாதனையாக பார்க்கப்படுகிறது.