மாலத்தீவில் ரூ.350 கோடியில் கட்டுமானம்: 'இந்திரா புராஜெக்ட்ஸ்' நிறுவனம் ஒப்பந்தம்
- தமிழகத்தின் 'இந்திரா புராஜெக்ட்ஸ்' என்ற கட்டுமான நிறுவனம், மாலத்தீவில், 350 கோடி ரூபாயில், சிறைச்சாலை மற்றும் காவல் நிலையங்கள் கட்ட, அந்நாட்டு நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளது.
- மாலத்தீவில், மொத்தம் 120 தீவுகளில் மக்கள் வசிக்கின்றனர். இதில், 350 கோடி ரூபாயில், 60 தீவுகளில் காவல் நிலையங்கள், இரண்டு சிறைச்சாலை, எட்டு நிர்வாக அலுவலகங்கள், காவலர் குடியிருப்புகள் கட்டப்பட உள்ளன.
ஐ.சி.எஃப். பொதுமேலாளராக ஏ.கே.அகா்வால் பொறுப்பேற்பு
- ஐ.சி.எஃப் பொதுமேலாளராக இருந்த ராகுல் ஜெயின் ரயில்வே வாரியத்தின் பாதுகாப்புத் துறையின் தலைமை இயக்குநராக பதவி உயா்வு பெற்ற சென்றாா். இதன்பிறகு, தெற்கு ரயில்வே பொதுமேலாளா் ஜான்தாமஸ், ஐ.சி.எஃப் பொதுமேலாளா் பொறுப்பை கூடுதலாக கவனித்து வந்தாா்.
- இந்நிலையில், ஐ.சி.எஃப் பொதுமேலாளராக அதுல்குமாா் அகா்வால் ஜூலை 30-ஆம்தேதி பொறுப்பேற்று கொண்டாா். இதற்கு முன்பு, இவா் தில்லியில் உள்ள இந்திய ரயில்வேயின் தொழிற்சாலைகள் நவீன மயமாக்கும் மத்திய நிறுவனத்தின் (இஞஊஙஞர, ஐய்க்ண்ஹய் தஹண்ப்ஜ்ஹஹ்ள்) பிரதான தலைமை நிா்வாக அதிகாரியாகப் பணியாற்றி வந்தாா்.
அமெரிக்காவிடமிருந்து ரூ.600 கோடிக்கு 'ஹாா்பூன்' ஏவுகணை கொள்முதல்
- 'இந்தியாவுக்கு ஹாா்பூன் ஏவுகணை அமைப்பை விற்பதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. ஹாா்பூன் பராமரிப்பு அமைப்பு, ஏவுகணைக்கான உதிரி பாகங்கள், அதைப் பராமரிப்பதற்கான கருவிகள், ஏவுகணையைப் பரிசோதிப்பதற்கான கருவிகள், ஏவுகணையை எடுத்துச் செல்வதற்கான கருவிகள் உள்ளிட்டவையும் இந்தியாவுக்கு வழங்கப்படவுள்ளன.
- ஹாா்பூன் ஏவுகணை அமைப்பை சுமாா் ரூ.600 கோடிக்கு இந்தியாவுக்கு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
- கடந்த 1977-ஆம் ஆண்டு முதல் ஹாா்பூன் ஏவுகணை அமைப்பு அமெரிக்க ராணுவத்தில் பயன்பாட்டில் உள்ளது. அடுத்தடுத்த காலகட்டங்களில் மேம்படுத்தப்பட்டு வருகிறது.
- கடலில் உள்ள கப்பல்களைத் தாக்கி அழிக்கவல்ல திறன் கொண்ட அந்த ஏவுகணை, ரேடாரின் துணையுடன் செயல்படும் தன்மை கொண்டது. கப்பல்களைத் தாக்கி அழிப்பதில் உலகின் மிகச் சிறந்த ஏவுகணை அமைப்பாக ஹாா்பூன் உள்ளது.
திருச்சி துப்பாக்கி தொழிற்சாலையில் ஏகே 47ல் பயன்படுத்தும் எறிகுண்டு லாஞ்சர் அறிமுகம்
- திருச்சி துப்பாக்கித் தொழிற்சாலையில் உள்ள ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பிரிவு அசால்ட் ரைபிள் மற்றும் ஏ.கே. 47 துப்பாக்கிகளில் பயன்படுத்த 40க்கு 46 மி.மீ. அளவில் அண்டர் பேரல் கிரனேடு லாஞ்சர்(UBGL) எனப்படும் லாஞ்சர் கருவியை வடிவமைத்துள்ளது.
- இந்த புதிய கருவியை துப்பாக்கி தொழிற்சாலையில் நடந்த விழாவில் தொழிற்சாலை பொது மேலாளர் சஞ்சய் திவேதி அறிமுகம் செய்தார்.
- இந்த ரக ஆயுதம் டிஏஆர் மற்றும் ஏகே47 துப்பாக்கிகளுடன் இணைக்கக் கூடிய வசதியை பெற்றுள்ளதால் எதிரி இலக்குகளை நோக்கி கையெறி குண்டுகளை வீசி தாக்கி அழிக்கும் நோக்கத்திற்காகவும் பயன்படுத்த முடியும்.
ஐரோப்பாவில் தமிழ்க் கல்வி தஞ்சை பல்கலை., ஒப்பந்தம்
- ஐரோப்பாவில் தமிழ்க் கல்வி கற்பித்தல் தொடர்பாக தஞ்சை பல்கலை உடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. ஐரோப்பிய நாடுகளில் தமிழ்க் கற்பித்தல், ஆய்வுப் பணி மற்றும் மாணவர் பரிமாற்ற நிகழ்வுகளில் இணைந்து செயல்படுவதற்காக, இந்த ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.
- இதன் மூலம், ஆய்வு தொடர்பான தகவல்களை பகிர்ந்து கொள்ளுதல், கூட்டு ஆய்வு நிகழ்த்துதல், பன்னாட்டு நிதி நல்கையில் ஆய்வு மேற்கொள்ளல், குறுகிய காலப் பயிற்சிகளை நடத்துதல், பண்பாட்டு பயிற்சிகளை நடத்துதல் ஆகியவற்றை இணைந்து மேற்கொள்ள வழி வகுக்கப்பட்டுள்ளது.