'பார்ச்சூன்' பட்டியல் - எஸ்.பி.ஐ., முன்னேறியது
- நடப்பு ஆண்டுக்கான, 'பார்ச்சூன் குளோபல் 500' நிறுவனங்கள் பட்டியலில், 'ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்' கடந்த ஆண்டைவிட 59 இடங்கள் சரிந்து, 155வது இடத்துக்கு வந்துள்ளது.
- அதேசமயம், எஸ்.பி.ஐ., 19 இடங்கள் முன்னேறி, 205வது இடத்தை பிடித்துள்ளது. முதலிடத்தில் 'வால்மார்ட்' நிறுவனமும், இரண்டாவது இடத்தில் 'ஸ்டேட் கிரிட் கார்ப்பரேஷன் ஆப் சீனா'வும், மூன்றாவது இடத்தில் 'அமேசான்' நிறுவனமும் உள்ளது.
- மார்ச் 31ம் தேதி நிலவரப்படி, நிறுவனங்களின் மொத்த வருவாய் அடிப்படையில், வரிசைப்படுத்தப்பட்டு உள்ளன.
'இ - ருபீ' பண பரிவர்த்தனை வசதி துவக்கி வைத்தார் பிரதமர் மோடி
- கொரோனா தொற்று பரவல் காலத்தில் இணையவழி பண பரிவர்த்தனை மேற்கொள்வது மிகவும் அதிகரித்துள்ளது. மத்திய அரசு யு.பி.ஐ., என்ற இணையவழி பண பரிவர்த்தனை வசதியை நடைமுறைப்படுத்தி உள்ளது.
- இணையவழி பண பரிவர்த்தனைக்காக, 'பீம்' என்ற மொபைல் செயலியையும் மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. அடுத்த கட்டமாக பண பரிவர்த்தனையை மேலும் எளிமையாக்கும் வகையில் இ - ருபீ என்ற வசதியை பிரதமர் மோடி நடந்த நிகழ்ச்சியில், 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக துவக்கி வைத்தார்.
- இ - ருபீ திட்டத்தை என்.பி.சி.ஐ., எனப்படும் தேசிய பரிவர்த்தனை கழகம், மத்திய அரசின் நிதி சேவைகள் துறை, மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம், தேசிய சுகாதார ஆணையம் இணைந்து உருவாக்கி உள்ளன.
- இ - ருபீ என்பது டிஜிட்டல் முறையிலான பணம் செலுத்துவதற்கான, ரொக்கமில்லா, மனிதர்கள் இடையே நேரடி தொடர்பு இல்லாத புதிய முறை. இது, 'க்யூஆர்' குறியீடு அல்லது எஸ்.எம்.எஸ்., அடிப்படையிலான மின்னணுச் -சான்றாக இருக்கும். இந்த திட்டத்தின்படி பயனாளியின் மொபைல் போன் எண் மட்டுமே தேவை.
- அந்த எண்ணுக்கு, பயனாளிக்கான 'வவுச்சர்' எனப்படும் டிஜிட்டல் வடிவிலலான உறுதிச் சீட்டு அனுப்பப்படும்.இந்த உறுதிச் சீட்டை, தான் பெறும் சேவையை அளிக்கும் அமைப்பிடம் காட்டினால் போதும். சேவையைப் பெற்றதும், அதை பயனாளிகள் உறுதி செய்ய வேண்டும்.
- பாரத ஸ்டேட் வங்கி உள்ளிட்ட பல வங்கிகள் இந்த புதிய வசதியில் இணைந்துள்ளன.
தமிழக சட்டசபை நூற்றாண்டு விழா - கலந்துகொண்ட ஜனாதிபதி
- தமிழக சட்டசபை நுாற்றாண்டு விழா சென்னையில் நேற்று நடந்தது.சென்னை மாகாண சட்டசபை 1921ல் துவக்கப்பட்டது. அதன் நுாற்றாண்டு விழா, நேற்று சட்டசபை கூட்டரங்கில் நடந்தது.
- கவர்னர் பன்வாரிலால் புரோஹித் தலைமை வகித்தார். முதல்வர் ஸ்டாலின் முன்னிலை வகித்தார். விழாவில் முன்னாள் முதல்வர் கருணாநிதி படத்தை திறந்து வைத்தார் ஜனாதிபதி ராம்நாத்கோவிந்த்
எல்ஐசி நிர்வாக இயக்குநராக மினி இபே பொறுப்பேற்பு
- எல்ஐசி நிர்வாக இயக்குநராக, மினி இபே பொறுப்பேற்றுள்ளார். மினி இபே, ஆந்திர பல்கலைக்கழகத்தில் வணிகவியலில் முதுநிலை படிப்பு படித்தவர். 1986ம் ஆண்டு எல்ஐசியில் பணியில் சேர்ந்தார். இந்த நிறுவனத்தில் இவருக்கு அதிக பணி அனுபவம் உண்டு.
- நிர்வாக இயக்குநராக பதவியேற்பதற்கு முன்பு, எல்ஐசி சட்டத்துறையின் செயல் இயக்குநராக பதவி வகித்தார். இந்த நிறுவனத்தின் மண்டல மேலாளர் பொறுப்பில் முதன் முதலாக பொறுப்பேற்ற பெண் அதிகாரி இவர் என்பது குறிப்பிடத்தக்கது.
மகளிர் ஹாக்கியிலும் அரையிறுதிக்கு முன்னேற்றம் இந்தியா வரலாற்று சாதனை
- ஒலிம்பிக் ஹாக்கியில் இந்திய ஆண்கள் அணி அரையிறுதிக்கு முன்னேறி அசத்திய நிலையில், மகளிர் அணியும் வலுவான ஆஸ்திரேலியாவை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி முதல் முறையாக அரையிறுதிக்கு தகுதி பெற்று வரலாற்று சாதனை படைத்துள்ளது.
காப்பீடு நிறுவனங்களை தனியார் மயமாக்கும் மசோதா - மக்களவையில் நிறைவேற்றம்
- பொதுத்துறை காப்பீடு நிறுவனங்களான, நேஷனல் இன்சூரன்ஸ், ஓரியண்டல் இன்சூரன்ஸ், யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் மற்றும் நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் ஆகிய நான்கு காப்பீடு நிறுவனங்களையும் தனியார்மயமாக்க முடிவு செய்த மத்திய அரசு, இதுதொடர்பான சட்ட திருத்த மசோதாவை வடிவமைத்தது.
- இந்த மசோதாவை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மக்களவையில் தாக்கல் செய்தார். இதன் மூலம் காப்பீடு நிறுவனங்களின் பங்குகளில் 51 சதவீதத்துக்கும் குறையாமல் மத்திய அரசிடம் இருக்க வேண்டும் என்ற விதியில் மாற்றம் ஏற்படுகிறது.
- மக்களவையில் பெகாசஸ் விவகார அமளிக்கு மத்தியில் எந்த விவாதமும் இன்றி குரல் வாக்கெடுப்பு மூலம் இந்த மசோதா நிறைவேறியது.