Type Here to Get Search Results !

TNPSC 23rd AUGUST 2021 CURRENT AFFAIRS TNPSC SHOUTERS TAMIL PDF

 

மத்திய அரசின் சொத்துக்களை பயன்படுத்தி ரூ.6 லட்சம் கோடி திரட்ட புதிய திட்டம் அறிமுகம்

  • பல்வேறு உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு மத்திய அரசின் சொத்துக்களை பயன்படுத்தி 6 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு பணம் திரட்ட 'தேசிய பணமாக்கல் ஆதார வழிமுறைகள்' என்ற புதிய திட்டத்தை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராம் தொடங்கி வைத்துள்ளார்.
  • இந்த திட்டத்தின் மூலம் தனியார் முதலீட்டை ஈர்க்க சென்னை, வாரணாசி உள்ளிட்ட 25 விமானநிலையங்கள், 40 ரயில் நிலையங்கள், 15 ரயில்வே விளையாட்டு அரங்குகள் உள்ளிட்டவை அடையாளம் காணப்பட்டுள்ளன. 
  • இந்த திட்டத்தின் கீழ் தனியார் நிறுவனங்கள் ஒரு குறிப்பிட்ட வருவாய்க்காக திட்டங்களில் முதலீடு செய்யலாம். கிடங்குகள், விளையாட்டு அரங்குகள் போன்றவற்றை நீண்ட கால லீஸ் அடிப்படையில் எடுக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • இந்த திட்டத்தின் கீழ் அரசு- தனியார் பங்களிப்பு இருப்பதாக அமைச்சர் கூறினார். அதே நேரம் இதில் சொத்து உரிமையோ நிலமோ தனியாருக்கு சொந்தமாக வழங்கப்படுவதில்லை எனவும் அமைச்சர் தெளிவுபடுத்தினார். 
  • இந்த பணமாக்கல் திட்டம் 2022ஆம் ஆண்டு முதல் 2025ஆம் ஆண்டு வரை செயல்படுத்தப்படும் என்று நிர்மலா சீதாராமன் கூறினார்.

கர்நாடகாவில் தேசிய கல்வி கொள்கை அமல் - தர்மேந்திர பிரதான் தொடங்கி வைத்தார்

  • தேசிய கல்வி கொள்கையை அமல்படுத்தும் நிகழ்ச்சி கர்நாடக தலைநகர் பெங்களூருவில் நடைபெற்றது. இதில் கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை, கர்நாடக உயர் கல்வித் துறை அமைச்சர் அஷ்வத் நாராயண் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் காணொலி வாயிலாக இதில் பங்கேற்றார்.
  • நாட்டில் முதல் மாநிலமாக க‌ர்நாடகாவில் 'தேசிய கல்வி கொள்கை 2020' நடப்பு 2021- 22 கல்வி ஆண்டிலேயே அமல்படுத்தப்படுவதாக அறிவித்து, கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தொடங்கிவைத்தார்.

காற்று மாசுபாட்டை குறைக்க, இந்தியாவின் முதல் புகை கோபுரம் திறந்து வைத்த டெல்லி முதல்வர் கெஜ்ரிவால்

  • டெல்லியில் அதிகரித்து வரும் காற்று மாசுபாட்டை குறைப்பதற்காக கன்னாட் பிளேஸ் பகுதியில் உள்ள பாபா கரக் சிங்கில் ஒரு புகை கோபுரத்தை டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று திறந்து வைத்தார்.
  • உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதலின்படி கட்டப்பட்ட இந்த புகை கோபுரம் 20 மீட்டர் உயரம் கொண்டது, இதன் விலை 20 கோடி ஆகும். சுற்றுச்சூழல் அமைச்சர் கோபால் ராயின் கூற்றுப்படி,"இது நாட்டின் முதல் புகை கோபுரம்" ஆகும்.
  • மேலும்,கடந்த அக்டோபர் 2020 இல் டெல்லி அமைச்சரவை இந்த திட்டத்திற்கு ஒப்புதல் அளித்தது.ஒரு மீட்டர் சுற்றளவில் காற்றின் தரத்தை மேம்படுத்துவதற்காக அமைக்கப்பட்ட 20 மீட்டர் நீள அமைப்பிலான இந்த கோபுரம், மழைக்காலத்திற்குப் பிறகு முழுத் திறனுடன் செயல்படும்
பருவநிலை மாற்றத்தால் இந்திய சிறார்களுக்கு அதிக அச்சுறுத்தல் 
  • பருவநிலை மாற்றத்தின் விளைவுகளால் சிறார்களுக்கு ஏற்படும் அச்சுறுத்தல் குறித்து ஐ.நா.வின் யுனிசெப் (UNICEF) அமைப்பு ஆய்வு மேற்கொண்டது. இதையடுத்து, "சிறார்களுக்கான பருவநிலை அச்சுறுத்தல் குறியீட்டை” (Children's Climate Risk Index! (CCRI)) அந்த அமைப்பு முதல் முறையாக வெளியிட்டது.
  • சிறார்களுக்கு அதிக அச்சுறுத்தல் ('extremely high risk') காணப்படும் நாடுகளின் பட்டியலில் இந்தியா 26-வது இடத்தில் உள்ளது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel