- விண்வெளியில் நாம் கற்பனை செய்து பார்க்க முடியாத அளவுக்கு சிறுகோள்கள் நிறைந்துள்ளன. குறிப்பாக வியாழன் மற்றும் சனி கோள்களுக்கு இடையே சிறுகோள்கள் அதிகளவில் உள்ளதால், அவை ஏற்படுத்தும் மோதல்களில் இருந்து பூமி பாதுகாப்பாக இருக்கிறது.
- ஆனால், சிறுகோள்களால் முழுவதுமாக பாதிப்பு இல்லை என்று உறுதியாக கூற முடியாது. அவை எப்போது வேண்டுமானாலும் திசைமாறி பூமியின் மீது மோதி பெரும் அழிவுகளை ஏற்படுத்தலாம்.
- விஞ்ஞானிகளின் கூற்றுப்படி சுமார் 66 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு பூமியில் விழுந்த சிக்சுலப் (Chicxulub) சிறுகோள் மிகப்பெரும் அழிவை ஏற்படுத்தியதாக கருதப்படுகிறது. குறிப்பாக பறக்க முடியாத டைனோசர் இனங்கள் உள்ளிட்ட அரியவகை உயிரினங்களின் அழிவுக்கு இந்த சிறுகோள் காரணமாக இருக்கலாம் என கூறுகின்றனர்.
- ஐரோப்பிய விண்வெளி ஏஜென்சியின் கூற்றுப்படி, சூரியக்குடும்பத்தில் சுமார் 6,00,000 சிறுகோள்கள் இதுவரை அறியப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
- அவற்றில் பூமிக்கு நெருக்கமாக 10 ஆயிரம் சிறுகோள்கள் இருப்பதாகவும், அந்த சிறுகோள்களின் சுற்றுவட்டப்பாதை பூமியின் சுற்றுவட்டப்பாதைக்கு மிகவும் நெருக்கமாக உள்ளதாக விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.
அண்மைக்காலங்களில் பூமியின் மீது மோதலை ஏற்படுத்தும் வகையில் மிகவும் நெருக்கமாக வந்து சென்ற சில சிறுகோள்
- 2021 GW4 சிறுகோள்இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் 2021 GW4 சிறுகோள் பூமிக்கு மிக நெருக்கமாக வந்து 30,094 கிலோ மீட்டர் வேகத்தில் கடந்து சென்றது. இந்த சிறுகோள் முதலில் பூமியின் மீது மோதுவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாக கணிக்கப்பட்டது. நல்வாய்ப்பாக பூமியில் இருந்து சுமார் 19,312 கிலோ மீட்டர் தொலைவில் கடந்து சென்றதாக அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா கூறியுள்ளது. இந்த சிறுகோள் 3.5 முதல் 7.7 மீட்டர் தொலைவுடையது என விஞ்ஞானிகள் கூறினர்.
- 2001 FO32 சிறுகோள்இந்த ஆண்டு மார்ச் மாதத்தில், 2001 FO32 என்ற சிறுகோள் சுமார் 2 மில்லியன் கிலோ மீட்டர் தூரத்தில் பூமியை கடந்து சென்றதாக நாசா கூறியுள்ளது. 1,24,000 கிலோ மீட்டர் வேகத்தில் சென்ற இந்த சிறுகோள், மற்ற சிறுகோள்கள் பூமியை நோக்கி கடக்கும் வேகத்தைவிடவும் அதி வேகமாக இருந்ததாக கூறியுள்ளது. பூமிக்கு அருகாமையில் வருவதற்கான வாய்ப்பு என கருதப்பட்டாலும், அதன் தொலைவின் அடிப்படையில் எந்த அச்சுறுத்தலும் இல்லை என்பதில் விஞ்ஞானிகள் உறுதியாக இருந்தனர்.
- பால்வெளி அண்டத்தில் இருக்கும் தற்காலிக செயற்கைகோள் ஒன்று கடந்த 2006 ஆம் ஆண்டு 2006 RH120 என்ற சிறுகோள பூமிக்கு நெருக்கமாக வருவதை 2006 ஆம் ஆண்டு கண்டுபிடித்தது. அதன்பிறகு கடந்த ஆண்டு 2020 CD3 என்ற சிறுகோள் பூமியை நெருங்குவதை கண்டுபிடித்து கூறியது. இந்த சிறுகோள் சுமார் 1.9 முதல் 3.5 மீட்டர் வரையிலான விட்டதை கொண்டிருந்ததாக தெரிவித்துள்ள விஞ்ஞானிகள், 4,900 கிலோ எடை உடையது என்றும் தெரிவித்தனர்.
- கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் , 2020 கியூஜிவாஸ் (QGwas) என்ற கார் அளவிலான சிறுகோள் பூமியில் இருந்து சுமார் 2,950 கிலோ மீட்டர் தொலைவில் பறந்ததாகக் கூறப்படுகிறது. இதில் வியப்புக்குரிய விஷயம் என்னவென்றால், சிறுகோள் பூமியை நெருங்கி வருவதை நாசா கண்டுபிடிக்கவில்லை. கலிஃபோர்னியாவில் உள்ள பாலோமர் ஆய்வகம், சிறுகோள் பூமியை கடந்து ஆறு மணி நேரத்திற்குப் பிறகு இந்த தகவலை கண்டுபிடித்து கூறியது. சூரியனின் திசையிலிருந்து இந்த சிறுகோள் பூமியை நோக்கி வந்ததாக தெரிவிக்கப்பட்டது.
- 2020 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் 1998 OR2 என்ற சிறுகோள் பூமியை கடந்தது. இந்த சிறுகோள் பூமியில் இருந்து சுமார் 3.9 மில்லியன் தொலைவில் கடந்தது என்றாலும், அதன் அளவின் அடிப்படையில் அச்சுறுத்தல் இருக்கலாம் யூகிக்கப்பட்டது. இந்த சிறுகோளை அபாயகரமான சிறுகோள் என விஞ்ஞானிகள் வகைப்படுத்தியுள்ளனர். ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இருக்கும் இந்த சிறுகோள்களின் சுற்று வட்டப்பாதையில் சிறுமாற்றம் ஏற்பட்டால்கூட அவை பூமியை பாதிக்கும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.