உத்தராகண்ட் புதிய முதலமைச்சராக புஷ்கர் சிங் தாமி பதவியேற்பு
- பாஜக ஆளும் அம்மாநிலத்தில் 4 ஆண்டுகளாக முதலமைச்சராக இருந்த திரிவேந்திர சிங் ராவத் பதவி விலகியதையடுத்து, கடந்த மார்ச் மாதம் மக்களவை எம்.பி.யான தீரத் சிங் ராவத் முதல்வராக பதவியேற்றார்.
- அவருக்கு கடும் எதிர்ப்பு எழுந்த நிலையில், ஆளுநர் பேபி ராணி மவுரியாவை சந்தித்து தனது ராஜினாமா கடிததத்தை நேற்று முன்தினம் அளித்தார்.
- இந்நிலையில் டேராடூனில் மத்திய பார்வையாளர் நரேந்திர சிங் தோமர் முன்னிலையில் நேற்று மாலை நடைபெற்ற பாஜக எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில், புஷ்கர் சிங் தாமி கட்சித் தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.
- இதையடுத்து அவர் ஆளுநரை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரினார். ஆளுநரின் அழைப்பையடுத்து தாமி பதவியேற்கிறார்
சில்லரை வர்த்தகத்துக்கு புதிய சலுகை வரலாற்று சாதனை பிரதமர் பெருமிதம்
- `சில்லரை, மொத்த விற்பனை வர்த்தகங்களை, சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் பட்டியலில் சேர்க்கப்பட்டது வரலாற்று சாதனை,' என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
- கொரோனா தொற்று பரவலால் உலகளவில் பொருளாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. இதற்கு இந்தியா மட்டும் விதி விலக்கல்ல. தொழில் முனைவோர்கள் தங்கள் தொழில் முதலீட்டிற்கான நிதியை திரட்டுவதில் கடும் சிக்கல் நீடித்து வருகிறது.
- இதனிடையே, ஒன்றிய அமைச்சர் நிதின் கட்கரி, `நாட்டின் சில்லரை மற்றும் மொத்த விற்பனை வர்த்தகர்களும் சிறு, குறு, நடுத்தர தொழில் முனைவோருடன் இணைக்கப்படுவார்கள்.
- ரிசர்வ் வங்கி வழிகாட்டுதலின்படி, கடன் பெறுவதில் முக்கிய துறையின் கீழ் கொண்டு வரப்படுவதால் அவர்கள் பலன் அடைவார்கள்,' என்று தெரிவித்தார்.
காயகல்ப் விருது 2019
- ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே மேலராமநதி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. இந்த சுகாதார நிலையத்திற்கு கீழராமநதி, கிளாமரம், காவடிபட்டி உள்ளிட்ட கிராமங்களில் இருந்து தினமும் ஏராளமான பொதுமக்கள் சிகிச்சை பெற வருகின்றனர்.
- இந்த சுகாதார நிலையத்தில் சுத்தம் மற்றும் சுகாதார பணிகள் மிகவும் சிறப்பாக செயல்படுவதையொட்டி, மத்திய அரசின் 2019ம் ஆண்டிற்கான 'காயகல்ப்' விருது ழங்கப்பட்டுள்ளது.
நாசிக் வானொலிக்கு 2 தேசிய விருது
- மகாராஷ்டிராவின் நாசிக் நகரில் உள்ள விஷ்வாஸ் தியான் பிரபோதினி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தால் நடத்தப்படும் 'ரேடியோ விஷ்வாஸ் 90.8'. இது, நாள்தோறும் 14 மணி நேரம் நிகழ்ச்சிகளை ஒலிபரப்புகிறது.
- கோவிட் பெருந்தொற்று காலத்தில் ஸ்மார்ட் போன் இல்லாத மாணவர்களின் கல்வி பாதிக்கக் கூடாது என்பதற்காக, கடந்த ஆண்டு ஜூன் மாதம் பெருநிறுவன சமூக பொறுப்பு திட்டத்தின் கீழ், 'அனைவருக்கும் கல்வி' என்ற நிகழ்ச்சி தொடங்கப்பட்டது.
- இதில், மூன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு இலவசக் கல்வி வழங்கப்பட்டது. ஜில்லா பரிஷத் மற்றும் நாசிக் நகராட்சி பள்ளிகளில் படிக்கும் அனைத்து மாணவர்களையும் சென்றடையும் விதத்தில் ஹிந்தி, ஆங்கிலம், மராத்தி மற்றும் சமஸ்கிருதம் ஆகிய மொழிகளில் பாடங்கள் ஒலிபரப்பப்பட்டன.
- இந்த நிகழ்ச்சிக்காக, ரேடியோ விஷ்வாசுக்கு, தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்தால் நிறுவப்பட்ட, தேசிய சமுதாய வானொலி விருதுகளின் எட்டாவது பதிப்பில் இரண்டு விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.