பெட்ரோல் நிலையங்களில் மின்சார வாகனங்களுக்கான சார்ஜிங் வசதி - டாடா ஒப்பந்தம்
- முன்னணி ஆட்டோமொபைல் நிறுவனங்கள் தற்போது மின்சார வாகன தயாரிப்பில் இறங்கி உள்ளன. அமெரிக்கா, ஐரோப்பா நாடுகளில் பரவலாக மின்சார கார்கள், இருசக்கர வாகனங்கள் பயன்பாட்டுக்கு வந்துவிட்டன.
- இந்தியாவிலும் மின்சார வாகனங்கள் மீது மக்கள் ஆர்வம் காட்ட துவங்கியுள்ளனர். அரசும் பல ஊக்குவிப்பு திட்டங்களை தயாரிப்பு நிறுவனங்களுக்கு அறிவித்துள்ளது.
- ஆனாலும் போதிய சார்ஜிங் நிலையங்கள் இல்லாதது மக்களிடையே தயக்கத்தை ஏற்படுத்துகிறது.இந்நிலையில் டாடா பவர் நிறுவனமானது ஹிந்துஸ்தான் பெட்ரோல் நிலையங்களில் சார்ஜிங் வசதிகளை நிறுவ ஒப்பந்தம் போட்டுள்ளது.
- டாடா பவர் தற்போது நூற்றுக்கும் மேற்பட்ட நகரங்களில் 500-க்கும் மேற்பட்ட சார்ஜர் மையங்களை அமைத்துள்ளது. பெட்ரோல் நிலையங்கள் மட்டுமின்றி மால்கள், மெட்ரோ நிலையங்கள், தியேட்டர்கள், நெடுஞ்சாலைகளிலும் அவை உள்ளன. மின்சார பேருந்துகளுக்கான அதிவேக சார்ஜர்களையும் கொண்டுள்ளது.
16 ஐரோப்பிய நாடுகளில் கோவிஷீல்டிற்கு அங்கீகாரம் - சீரம் நிறுவனம்
- 16 ஐரோப்பிய நாடுகளில் கோவிஷீல்டு தடுப்பூசி அங்கீகாரம் பெற்றுள்ளது தங்களுக்கு பெருமை என்றும் கூறியுள்ளார். குறிப்பாக பெல்ஜியம் பின்லாந்து, அயர்லாந்து சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகள் உள்பட மொத்தம் 16 நாடுகளில் தங்களது கோவிஷீல்டு தடுப்பூசி அங்கீகாரம் பெற்று உள்ளதாகவும் இதனை அடுத்து வேறு சில நாடுகளிலும் அங்கீகாரம் பெறுவதற்கான முயற்சியில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்
இந்தியாவின் முதல் பெண் மருத்துவரை கவுரவப்படுத்திய கூகுள்
- முதல் இந்திய பெண் மருத்துவரான கடம்பினி கங்குலியின் 160வது பிறந்தநாளை ஒட்டி, டூடுல் வெளியிட்டு கவுரவப்படுத்தி இருக்கிறது கூகுள்
- பிரிட்டீஷ் இந்தியாவில் பீகார் மாநிலம் பகல்பூரில், 1861 ஆம் ஆண்டு பிறந்த கடம்பினியின் சொந்த ஊர், பங்களாதேஷில் உள்ள பாரிசல். பகல்பூர் பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றிய அவரது தந்தை பிரஜ கிஷோர் பாபுதான், கடம்பினியின் கல்வி மற்றும் முன்னேற்றத்திற்கு அனைத்து வகையிலும் உறுதுணையாக இருந்துள்ளார்.
- சீர்திருத்தவாதியான பிரஜ கிஷோர், அபய் சரண் மாலிக் என்பவருடன் இணைந்து, "பகல்பூர் மகிள சமிதி" என்ற பெண்கள் அமைப்பை நிறுவியவர். பிரிட்டீஷ் இந்தியாவில் உருவாக்கப்பட்ட முதல் பெண்கள் இயக்கம் இதுதான்.